இயற்கை எப்பவுமே ஆச்சரியங்கள் நிறைந்தது தான்! 🤯 ஒரு நாரை (Black-crowned Night Heron) மிக ஆபத்தான நச்சுப் பாம்பை அசால்ட்டாக வேட்டையாடும் திக் திக் நிமிடங்கள். 🦅🐍
இறுதி வரை போராடும் பாம்பு, விடாமல் பிடிக்கும் நாரை! வாழ்க்கைப் போராட்டம்னா இதுதான்! 👇
அதே ஆளு 5 வருஷம் முடிஞ்சளவு மில்க் பண்ணிட்டு கட்சிய வளக்காம தன்னை மட்டும் வளத்துக்கிட்டு, தேர்தல் தோல்வின்னதும் கட்சிய அம்போன்னு விட்டு வரட்டா மாமே டூர்ர்ர்ன்னு தனிக்கடை போடக் கெளம்பிட்டா செலவு பண்ணின கட்சி சும்மா விட்ருமா?
ஆனாலும் விடுப்பு கடிதத்தை வாங்கிட்டு ஸ்லோ மோஷன்ல டாட்டா காட்டுது கட்சின்னா என்ன அர்த்தம். பெருசா ஏதோ பிளான் பண்றானுங்கன்னு அர்த்தம்!
யாரோ ஒரு அமைச்சர் அவமரியாதை பண்ணிட்டாரு…
எவனோ ஒரு driver bus நிறுத்தாம போயிட்டான்னு சுயமரியாதை மிதிமிஞ்சி கோபப்பட்டாங்க 😏
ஆனா ஒரு நிமிஷம் கூட நின்று,
இந்த திட்டம் யாருடைய பணம்? யாருக்கு பயன்?ன்னு யோசிக்கல.
Bus-லாம் வேண்டாம்… அதெல்லாம் எங்க பணம்தானே, எடுத்து எங்களுக்கே கொடுக்குறாங்கன்னு சொன்னாங்க.
சரி, அவங்க நினைச்ச மாதிரியே நடக்கட்டும் 🤷♀️
இப்போ free bus இல்ல…
Bank locker-ல பணமும் சேரட்டும் 😌
Car-ல போற elite-க்கு எந்த அரசு வந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது.
ஆனா தினமும் வேர்வை சிந்தி உழைக்குற மக்கள் தான் ஒவ்வொரு கொள்கையோட தாக்கத்தையும் உணரணும்.
நாம் எப்படி முன்னேறுவோம்?ன்னு யோசிக்காம…
ஊழலை ஒழிச்சா நாளைக்கே தமிழ்நாடு Singapore ஆகிடும்னு நம்பி…
குடிகாரன் குடிக்குற bottle-ல பத்து ரூபாய் போகுதேன்னு கவலைப்பட்டு…
Condition-ஆ whistle-க்கு ஓட்டு போட்டாங்க 😏
நமக்காக வந்த நடிகனுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம்னு நினைச்சாங்க.
இப்போ அவர் அவங்களுக்கு நல்லதுதான் பண்ணுவார்.
அதை ஏன் திமுக தடுக்கப் பார்க்கணும்? 🤷♀️
தமிழ்நாட்டு அரசியலில் இந்த கவர்ச்சி நடிகனிடம் தேசியக் கட்சிகள் உட்பட எல்லா லெட்டர்பேடுகளும் ஓட்டு வங்கியை இழந்துவிட்டன.
பாமக, அமமுக போன்ற கட்சிகளுக்கு Counter Polarisation கதவுகள் திறந்திருக்கின்றன என்பதால் தவெக எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கின்றனர்.
அவை தவிர மற்றெல்லா லெட்டர்பேடுகளும் தொலைத்த இடத்தில் தான் தேட முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டன.
எனவே இந்த லெட்டர்பேடுகளின் யோக்கியதையை, இரட்டை நிலைப்பாட்டை, துரோகத்தை எல்லாம் அம்பலப்படுத்தி சாதிக்கப்போவது ஒன்றுமில்லை.
வரலாறு காணாத சட்டம் ஒழுங்கு சீர்கேடும் அதற்கு நேரடிக் காரணமான குரங்கு கை பூமாலை அரசும் தான் தொடர்ச்சியாக மக்கள் முன்பு அம்பலப்படுத்தப்பட வேண்டும். அதைச் செய்வோர் பக்கம் தான் இந்த அவல ஆட்சியால் பாதிக்கப்படும் மக்கள் கவனம் திரும்பும்.
விஜய் அவருக்கு வர வேண்டிய ராஜ்யசபா எம் பி பதவியை காங்கிரஸூக்கு குடுத்து இருக்காரு. காரணம் அவரு கட்சி எம் பி ஆனா நாடாளுமன்றத்துல பி ஜே பி கொண்டு வர்ற மக்கள் விரோத மசோதாவை எல்லாம் “நேரடியா” கடுமையா எதிர்த்து பேசணும். காங்கிரஸ்கிட்ட தள்ளி விட்டா அவங்க பார்த்துக்குவாங்க. எதுக்கு நம்ம நேரடியா பகைச்சிகிட்டு!!
சினிமாலதான் சண்டையெல்லாம்!! ரியல் லைஃப்ல பார்ட்டிக்கு கொஞ்சம் “பேஸ்மெண்ட்” வீக்கு.
இந்தியன் 2 ல ஒரு சீன் வரும் , ஹீரோயின் தம்பிய பெருமைக்கு டாக்டர் ஆக்கிருக்கும் அந்த குடும்பம், அவனுக்கு ஒரு எழவும் தெரியாது. அவன் ஆப்ரேசன் பண்ணி ஒரு ஆள் செத்துரும்,அப்பவும் அந்தக் குடும்பம் இதெல்லாம் நடக்குறதுதானனு அவன காப்பாத்தும். இவன் கிட்ட நீ ஆப்ரேசன் பண்ணிப்பியானு ஹீரோயின் கேக்கும், அப்பதான் அதுங்களுக்கு பயம் கலந்த கடுப்பு வரும், விஜய் ஃபேன்ச அந்த பேரண்ட் கூட ஒப்பிட முடியாது. ஏன்னா ஆப்ரேசன் பண்ணிக்கிட்டா தளபதி கை என்மேல படும்லனு யார் முதல்ல ஆப்ரேசன் பண்ணிக்கிட்டு சாகுறதுன்னு சண்டையே நடக்கும்.
நாட்டுமக்களுக்கான செய்தி:
போக்குவரத்து நெரிசல், பயணிகள் அவதி என்பதற்கு பதிலாக "அணிவகுத்து சென்ற வாகனங்கள்" "அழகிய ஊர்வலம்" போன்ற பதங்கள் இனி பயன்படுத்தப்படும்.
#மாற்றம்
One Trillion Dollar economy target வச்சு இரட்டை இலக்கு வளர்ச்சியோட போயிட்டு இருந்த மாநிலத்த Scam பண்ணி புடிச்சிட்டு இப்பதான் கத்துக்கிட்டு இருக்கோம்னு பொறுத்துக்கோங்கனு சொல்றானுங்க
எந்த உழைப்பும் இல்லாம direct ah உட்கார வச்சா இதுதான் நடக்கும்
வாய்ப்பு குடுக்கனும்னு நினைச்ச மக்கள் முதல்ல எதிர்கட்சியா உட்கார வச்சு அடுத்த தேர்தல்ல வாய்ப்பு குடுத்துருந்தாகூட பின்னடைவ தவிர்த்திருக்கலாம்
10 வருஷம் கூப்புலயே இருந்தாலும் பரவால்ல ஒரு ஒடுக்கப்பட்ட மனிதர் மேல போய் இருக்கிறார். அவர் மேல் நாம் சந்தேகப்பட்டு கட்சியை விட்டு நீக்கினால் நாளைக்கு எந்த தலித்க்கும் அந்த பதவியை ராசாவை காரணம் காட்டி தர மாட்டாங்கன்னு நினைச்ச இயக்கம் திமுக நினைச்சவன் என் தலைவன் கட்டுமரம் 🔥🔥
ஒரே வாரம் தான் ஆட்சி பண்ணிருக்கானுக. அதுக்குள்ள பின் வரும் கேள்விகளை கேட்டுவிட்டனர் திருட்டுத்தற்குறி கட்சி.
1. குற்றங்கள் மீது நடவடிக்கை தான் எடுக்க முடியும்?! எப்படி நடக்காமல் தடுப்பது ?
2. டாஸ்மாக்கில் கூடுதல் பணம் வாங்குவதை உடனடியாக நிறுத்துவது சிரமம். அது ஊழியர்களுக்கு தேவையான தொகை.
3. டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாரயம் கஞ்சா புழக்கம் அதிகமாகும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்
4. கஸ்டோடியல் டார்ச்சர் மரணங்களுக்கு காவல்துறை சீர்திருத்தம் தான் தீர்வு
5. ஆணவக்கொலைகளைத் தடுக்க சமூகம் தான் திருந்த வேண்டும்.
Sanghis are at least half human!
These TVK supporters are not human at all!
To save their actor’s image, they won’t hesitate to even malign the mother’s character. The last thing a grieving mother has to endure!😓
கொஞ்சங்கொஞ்சமா நியூஸ்ல போட்டு நார்மலைஸ் பண்றானுவ. இனி தந்தி பாலிமர்னு சிலபல சேனல்கள்ல இந்த மாதிரியான நியூஸ் அடிக்கடி பாக்கலாம்.
ஒருகட்டத்துல மக்களே லாட்டரி வித்தா இன்னா தப்புன்னு தெருல இறங்கும். அப்ப ஜபர்தஸ்தா லாஞ்ச் ஆகும் லாட்டரி.
அரசுக்கு அனுபவமில்லாம வருபவர்கள் செய்ய கூடாத தவற்றை தவெக அரசு செய்திருக்கு, கடந்த அரசில் பணியாற்றிய அதிகாரிகளை உடனே தடாலடியாக ரெண்டு வாரத்துல மாத்தி விட்டதே அது. அரசு நிர்வாகம் செயல்படுவதை படிப்படியாக கற்று ஆறுமாதம் ஒருவருடம் கழித்து கூட மாற்றி பிறகு தாங்கள் விரும்பிய அரசு நிர்வாகத்தை அமைக்கலாம்.
இப்ப மீண்டும் அதே அதிகாரிகளை திரும்ப கொண்டு வந்தா திறமையின்மை வெளிபட்டுவிடும். இடுக்குல மாட்டுன எலியாக இப்ப தவெக அரசு இருக்கு..
வட மாநிலங்களைவிட உட்கட்டமைப்பு, மருத்துவம், கல்வியில் முன்னேறியிருக்கிறோம் ஆனால் சிவிக் சென்ஸ், கும்பல் மனநிலை, தனி மனித வழிபாடு போன்ற பலவற்றில் அவர்களுக்கு இணையாகவோ அல்லது அவர்களைவிட கீழோதான் உள்ளோம்.. தன் குழந்தைகளை இழந்த இரு தாய்மார்களின் பேட்டியை காண நேர்ந்தது.. இருவருமே ஒரு மனிதரை தேவதூதன் ரேஞ்ச்ல வச்சுதான் பேசுறாங்க..இது ரொம்ப ஆபத்தான மனநிலை😖
நீங்க ஏக்சன் ஹீரோனு நம்பிதானே ஓட்டுப் போட்டோம். ஏன் இப்போது பஞ்ச் டயலாக் பேச மாட்டிரீங்கனு கேட்கிறார்கள்?
விஜயை விட இவர்களை நினைத்தால் தான் அச்சமாக இருக்கிறது.
தோழர் @sivasankar1ss அவர்கள் மின் வெட்டு பிரச்சினைக்கான உண்மையான காரணத்தைத் துல்லியமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். வழக்கமாக வெயில் காலங்களில், மின் அழுத்த ஏற்ற இறக்கங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பெரிய தொழிற்சாலைகளும் வணிக வளாகங்களும் தங்களின் சொந்தத் தேவைக்கு ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படும்.
இதன் மூலம் பொதுமக்களுக்கான மின் விநியோகம் தடையின்றி வழங்கப்படுவதை Tangedco உறுதி செய்யும்.
ஆனால், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இந்த அரசுக்கு பொதுமக்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லை. வெயில் காலங்களில் வணிக வளாகங்களின் வேலை நேரத்தைக் கட்டுப்படுத்தவோ அல்லது அவர்களைக் கட்டாயமாக ஜெனரேட்டர்களைப் பயன்படுத்த வைக்கவோ இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேர்தலுக்கு முன்னால், விவாகரத்து பிரச்சினையிலிருந்து திரைப்பட வெளியீடு வரை எல்லாவற்றிற்கும் திமுக தான் காரணம் என்று எப்படிப் பொய்ப் பிரச்சாரம் செய்தார்களோ, அதே உத்தியை இப்போதும் இந்தத் திறமையற்ற அரசு கையில் எடுத்துள்ளது. தன் சொந்தத் தோல்விகளை மறைக்க, முந்தைய திமுக அரசின் மீது பழி போட்டு பொதுமக்களைத் தவிக்கவிட்டுள்ளது.
இந்த நாடகங்கள் அனைத்தும் மின்சாரத் துறையைத் தனியார்மயமாக்குவதற்காகவே திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன. தற்போதைய மின்சாரத் துறை அமைச்சரின் பின்னணியும், அவருக்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுடன் இருக்கும் நெருக்கமும் நாம் அனைவரும் அறிந்ததே.
தேசிய அரசியலின் சூழல் கருதி திமுக. வுடன் கூட்டணி வைத்தோம்.
வென்றோம்... அங்கீகாரம் பெற்றோம்...
எத்தனையோ வன்கொடுமைகள் நீங்கழ்ந்த போதும் கொள்கை காக்க சமரசம் செய்தோம்...
ஆதவ் கட்சியில் இருந்து கூட்டணியை பிளவு படுத்த முயன்ற போது...
இந்த கூட்டணியை எவராலும் பிரிக்க முடியாது என்றார் தலைவர்...
ஆதவை இடைநீக்கம் செய்தார்...
திக, திமுக, விசிக மூன்று குழல் துப்பாக்கி என்றார்...
8 தொகுதி கொடுத்தார்கள்...
தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை...
தலைவர் ஒப்புக்கொண்டார்...
பிரச்சாரங்களில்
விஜயை RSS பிள்ளை என்றார்...
Rss ன் ஒட்டு புழு விஜய் என்றார் நம் இன்றைய அமைச்சர்...
ம. சா. மு. கூ தோற்றுப் போனது...
தவெக வென்றது...
மசாலா வெற்றி என்றார் நம் அமைச்சர்..
பெரும்பான்மை சிக்கல் நேர்ந்த போது.. குடியரசுத் தலைவர் ஆட்சி நிகழ்ந்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம் என்றார்...
திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்றார்...
ஆதவ் சொன்னதும் சினிமா மோகத்தை மட்டுமே வைத்து வெற்றிபெற்ற விஜய் கையை பிடித்து உயர்த்தினார்...
விசிக அலுவலகம் முன்பு Tvk.. Tvk...என முழங்கினார்கள்...
மீண்டும் ஆதவிடம் இருந்து அமைச்சராக அழைப்பு வந்தது...
தலைவர் ஒப்புக்கொண்டார்...
அன்றைக்கு உங்க கட்சில வெறும் 20 பேர் தான் இருக்காங்க னு சொன்ன ஆதவ்... இன்று ஒட்டு மொத்த கட்சியையும் தன் வசப்படுத்தியுள்ளார்...
அவர் சானக்கியர் தான்..
தொண்டர்கள் அதிகாரம் கிடைத்து விட்டதாக குத்திக்கிறார்கள்...
திமுக. வை விமர்சிக்கிறார்கள்...
நாங்கள் கேட்ட தொகுதியை கொடுக்கவில்லை.. குறைவான தொகுதிகள் என கொந்தளித்து எழுதுகிறார்கள்...
ஆனால் நல்ல perform செய்த எனக்கு சீட் கொடுக்கவில்லை... அதற்கு அவர் ஆதங்கப்பட உரிமை இல்லை... திமுக விற்கு போய்விடுங்கள் என்று விரட்டுகிறார்கள்...
என்னென்னமோ நடந்தாகிவிட்டது...
இப்போது என்னை கட்சிக்கு எதிரானவன்...
திமுக முட்டு.. என எழுதுவார்கள்...
தோழர்களே..
அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பது தான் விசிக வின் இலக்கு என்றால் ...
அந்த இலக்கை எப்படி அடைந்தோம் என்பது தான் நாளைய வரலாறு...
கொள்கையால் உடன்பட்டு கூட்டணி வைத்தோம்... மக்களின் நம்பிக்கையை பெற்றோம்... தனித்து நின்றோம்... அதிகாரம் பெற்றோம் என்பதாக இருந்தால் மட்டுமே நாளைய தலைமுறை கொண்டாடும்...
இன்று அடைந்திருக்கும் அதிகாரம் கொள்கையை மறந்து... அரசியல் சூழலில் ஏற்பட்ட ஆசாதாரன சூழலை பயன்படுத்தி பெற்றது... இது வராலாற்று பிழை என்றே நாளை பதிவு செய்யப்படும்....🙏
ஆளுர் ஷாநவாஸ்