அமுதன் எனும் ஆவணப்பட இயக்குனர் எழுதியுள்ள இப்பதிவு தமிழ்நாட்டின் அப்பட்டமான கள எதார்த்தங்களை முழுமையாய் தனக்குள் உள்வாங்கி இப்பதிவை எழுதியுள்ளார் ❤❤
பதிவு...👇👇👇👇
தமிழ்நாட்டில் திமுகவிற்கு எப்போதுமே 30 சதவீதத்திற்கும் கீழ் தான் ஆதரவு. இத்தனை வெற்றிகளை அக்கட்சி பெற்றதே அதிசயம் தான். திமுக முன்மொழியும் அரசியல் சிக்கலானது. திமுகவை ஆதரிப்பது எளிதல்ல. இடதுசாரியாகவோ, தமிழ்த்தேசியவாதியாகவோ அம்பேத்கரியவாதியாகவோ இருந்துவிடலாம். அக்கொள்கைகளுக்கெல்லாம் எல்லோருக்கும் புரிய வைக்கும் எளிமை இருக்கிறது. ஆனால் திமுகவின் கொள்கை அப்படியல்ல.
இந்தியாவிலேயே பார்ப்பனர் அல்லாதோர் அரசியல் நடத்தி வன்முறையைக் கையில் எடுக்காமல், அறவழியில், அறிவு வழியில். தேர்தலில் தொடர் வெற்றி கண்ட கட்சி திமுக மட்டும் தான். இந்தக்கொள்கையை எல்லோரும் எதிர்ப்பார்கள். ஏனெனில் இது எல்லாவற்றையும் மறுக்கிற கட்சி. புரட்டிப் போடுகிற கட்சி. இந்தியாவிலேயே அரியவகை ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை (EWS) நடைமுறைப்படுத்தாத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். அதற்குக் காரணம் திமுக தான். அதை மிகவும் எளிதாக வெறுப்பரசியல் என்று சொல்லிவிடலாம். அது பயன்படுத்தும் 'நடைமுறைவாதத்தை' சமரசம் என்று எள்ளி நகையாடலாம். அதன் வெளிப்பாட்டுத் தன்மையை முரட்டுத்தனம் என்றோ, பண்ணையார்த்தனம் என்றோ சொல்லிவிடலாம். அதன் தன்னம்பிக்கையை, ஆணவம் என்று எல்லோரும் தவறாகக் குறிப்பிடுவர்.
திமுகவிற்கு நெருக்கடி எங்கிருந்தும் வரலாம். பார்ப்பனர் முதல் ஒடுக்கப்பட்டோர் வரை எல்லோருக்கும் திமுகவின் மீது விமர்சனம் இருக்கும். உயர்ஜாதியினர், திமுகவை தமது கட்சி என்று பார்ப்பதில்லை. சூத்திரர்கள் இதை தலித்துகளுக்கு ஆதரவான கட்சி என்பார்கள். தலித்துகள் இதை சூத்திரர்கள் கட்சி என்பார்கள். இந்துக்கள் திமுகவை சிறுபான்மையினர் கட்சி என்பார்கள். கடவுள் நம்பிக்கை கொண்டோர் நிந்திப்பார்கள். பெண்கள் இதை முரட்டு ஆண்களுக்கான கட்சி என்பார்கள். பிறமொழி பேசுவோர் இவர்களைத் தமிழின வெறியர்கள் என்பார்கள். தமிழ்த்தேசியர்கள் இதை தெலுங்கர் கட்சி என்பார்கள்.
அதே போல திமுகவை ஆதரிப்போருக்குக் குழப்பம் வரலாம், தடுமாற்றம் வரலாம். திமுகவை யாரும் வெளிப்படையாகச் சொந்தம் கொண்டாடுவதில்லை. ஒரு கள்ளக்காதலைப் போல இந்த உறவைப் பாவிப்பார்கள். இத்தனைக்கும் இது தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல.
முன் மாதிரிகள், உதாரணங்கள் இல்லாத அரசியலை இந்த இயக்கம் கடைபிடிக்கிறது. மாநில உரிமை பேசும் (ஆனால் பிரிவினை பேசாது), மொழி உரிமை பேசும் (ஆனால் மொழி வெறி இல்லை), பெண்ணுரிமை பேசும் (ஆனால் பெண்கள் ஆதரவு இருக்காது), ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அதை வெளியே சொல்ல முடியாது, ஏனெனில் யாராவது ஒருவர் நீதிமன்றத்திற்குப் போய் அதைத் தடுத்துவிடுவர்கள். நீதிமன்றம், ஊடகம், அதிகாரிகள், அரசியல் கட்சிகள், சிவில் சமூகம், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், படைப்பாளிகள் என எதிரிகளை எங்கும் கொண்டிருக்கும் கட்சி இது.
திமுக 2026 மாநில சட்டசபைத்தேர்தலில் தோற்றதற்கு வெளியே சொல்லப்படும் காரணங்கள் நிறைய இருக்கலாம். ஊழல், போதை, பெண் பாதுகாப்பு என்பன யாவும் ஆதாரமற்றவை என்று ஏற்கனவே பலர் நிரூபித்துவிட்டனர். இந்தக் குற்றங்கள் இல்லாத நாடோ மாநிலமோ இல்லை. இவை எல்லாம் நிர்வாகக் காரணங்கள். அவற்றை வெளியில் சொல்லிவிடலாம். வெளியில் சொல்லப்படாதது அரசியல் காரணங்கள் தான்.
கடந்த ஆட்சியில் நாம் பயன்படுத்திய திராவிட மாடல் என்ற சொல் மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கிற அனைத்து எதிரிகளையும் ஒன்றிணைத்துவிட்டது. தமிழ்நாடு தவிர இந்த வார்த்தை இந்த அர்த்தத்தில் எங்கும் புழக்கத்தில் இல்லை. ஒரு எல்லை மாநிலம் இப்படியான ஒரு உறுதியான கொள்கையுடன் வளர்ச்சி பெறுவது இந்தி, இந்து, இந்தியா என்று பேசுவோரைப் பயமுறுத்திவிட்டது.
பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள் அனைவரையும் சங்கடப்படுத்திவிட்டது. குடும்ப அமைப்பே கேள்விக்குள்ளாகும் என்ற கிலி (paranoia) ஆண்களையும் ஆணாதிக்கத்தை உள்வாங்கிய பெண்களையும் உலுக்கிவிட்டது. மகளிர் விடியல் பயணமும், கலைஞர் உரிமைத் தொகையயும் ஆணாதிக்கத்திற்கு விடப்பட்ட பெரும் சவாலாகும். இதற்கு முன்பு ஆண்கள் மட்டுமே அனுபவித்து வந்த எந்தக் காரணமும் இன்றி ஊர் சுற்றும் (loitering) உரிமையை விடியல் பயணம் பெண்களுக்கும் கொடுத்தது. அதனால் அவர்களால் பல இடங்களுக்கு சுதந்தரமாகப் போக முடிந்தது. பல நண்பர்களை, உறவினர்களைச் சந்திக்க முடிந்தது. பொருளாதாரச் சுமையின்றி வேலைக்குப் போக முடிந்தது.
கலைஞர் உரிமைத் தொகை இன்னும் கூடுதலாக எளிய பெண்களுக்கு பொருளாதார விடுதலையைக் கொடுத்தது. தமது குடும்பத்தினருக்காக கடன் வாங்கும், சேமிக்கும், கடுமையாக உழைக்கும் பெண்களை இந்தத் திட்டம் வலுவூட்டியது. ...1/3
சென்னை.
இதனால் தமிழர்களுக்கும் மேலும் தாழ்வு மனப்பான்மை கூடும். நம்மால் நம்மைப் பற்றி பெருமையாக வெளியே பேசமுடியாது. நம்மை இழித்துப் பேசிய பிற மாநிலத்தவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.
இப்போது திமுக ஆதரவாளர்கள் சோர்வு அடைந்திருக்கலாம். ஆனால் அவர்களுக்கு இந்தச் சதியை முறியடிக்கவேண்டிய தேவை இருக்கிறது. நவீன தமிழ்நாட்டைக் கட்டிய இயக்கம் இது. இதற்கென்ற கடமை இன்னும் இருக்கிறது.
இந்தியாவை பார்ப்பனிய ஆதிக்கத்திலிருந்து தேர்தல் வழியில் மீட்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக பாஜகவைத் தோற்கடிக்க முடியாமல் இந்தியா தடுமாறிக்கொண்டிருக்கும் போது திமுக தான் பிற கட்சிகளை வழிநடத்தவேண்டும். மு.க. ஸ்டாலின் அவர்கள் தேசிய அரசியலில் கவனம் செலுத்தவேண்டும். கலைஞரைப் போல காங்கிரஸ் அல்லாத தேசிய முன்னணியைக் கட்டவேண்டும். அதன் மூலம் பாஜகவைத் தோற்கடிப்பதற்கான வேலைகளில் இறங்கவேண்டும். இது ஒரு நல்வாய்ப்பு.
திமுகவின் சேவை இந்த நாட்டுக்குத் தேவை.
அமுதன் ஆர்.பி
ஆவணப்பட இயக்குனர்
மீண்டு வருவோம்
————————-
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எனது நண்பர்களிடம் பெரிய வெறுமையை பார்க்க முடிகிறது. இவர்களுக்கு தோல்வி ஒன்றும் புதிதல்ல. இன்னும் சொல்லப்போனால் வெற்றியை விட நிறைய தோல்விகளை சந்தித்து வந்தவர்கள் இவர்கள். ஆனாலும் இந்த தோல்வி ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. கொண்ட கொள்கைகளின் மீதும், தேர்ந்தெடுத்த பாதையின் மீதும், மக்களின் மீதும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவதாக இந்த தோல்வி இருக்கிறதாக அவர்கள் நினைக்கிறார்கள்.
“இது தோல்வி இல்லை. ஏமாற்றம். தோல்வியை ஏற்றுக்கொள்ளலாம் அதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், ஏமாற்றத்தை எப்படி ஏற்றுக்கொள்வது? அதனால் தான் சுலபமாக மீண்டு வரமுடியவில்லை” என நண்பர் ஒருவர் சொன்னார்.
உண்மைதானே!
நம் மக்களின் மீதும், மாணவர்களின் மீதும், பெண்களின் மீதும் அக்கறை கொண்ட எத்தனை திட்டங்கள்!.
“நீங்கள் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை. உங்களின் பின்னால் இந்த அரசு இருக்கிறது. நீங்கள் எந்த கனவு வேண்டுமானால் காணுங்கள், நாங்கள் நிறைவேற்றி தருகிறோம்” என்ற வகையில் தானே நலிவடைந்த, பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட குடும்பத்தினருக்கான, அவர்களின் பிள்ளைகளுக்கான நமது அரசின் திட்டங்கள் இருந்தன? பிறகு ஏன் தோற்றோம்?
இந்த கேள்விகள் தொடர்ந்து தொந்தரவு செய்கின்றன. ஐந்தாண்டு மக்கள் பணிக்கு எந்த அங்கீகாரம் இல்லையென்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக தலைவரின் தோல்வி கொடுங்கனவாக அவர்களின் இரவெல்லாம் வந்து போகிறது.
இவை அத்தனையிலிருந்தும் மீண்டு வருவது சுலபமானது இல்லை என்பது புரிகிறது. ஆனால், இது தோல்வி அல்ல சூழ்ச்சி, திட்டமிட்ட சூழ்ச்சி. மக்கள் பணியே போதும் என்று நாம் மக்களின் மீது நம்பிக்கை கொண்டிருந்த வேளையில், மக்களின் அறியாமையை பயன்படுத்தி பின்வாசல் வழியாக களவாடிய சூழ்ச்சியை நாம் எதிர்பார்க்கவில்லை. அறுபதாண்டு கண்ட இயக்கம் இது போன்ற எத்தனையோ சூழ்ச்சிகளால் வீழ்த்தப்பட்டிருக்கிறது. அப்படி ஒரு சூழ்ச்சியாக தான் நாம் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
“இந்த தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக்கொள்கிறேன்” என தலைவர் சொல்கிறார்.
“அவர் ஏன் பொறுப்பேற்க வேண்டும்?, நாம் ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும், எங்கு நாம் தோற்றோம்? எப்படி இத்தனை பெரிய யானையை குடிசைக்குள் வைத்துக்கொண்டு அதை கவனிக்க தவறினோம்? தலைவர் கொண்டிருந்த நம்பிக்கையும், அவரின் கடின உழைப்பும் தான் நம் கண்ணை மறைத்து விட்டதா? என விரக்தியில் தினம் தினம் புலம்பும் நண்பர்களை பார்க்கிறேன். அவர்களுக்கு சொல்வதற்கு ஒன்றே ஒன்று தான் இருக்கிறது.
என்றாவது ஒருநாள் திடீரென ஊருக்குள் சர்க்கஸ் கூடாரங்கள் திறக்கப்பட்டால் மக்கள் தங்களின் அன்றாட வேலைகளை விட்டுவிட்டு வேடிக்கை பார்க்க கூடிவிடுவார்கள். ஆனால், ஒரு சில நாளில் தங்களின் அன்றாடங்களுக்கு மீண்டும் திரும்பிவிடுவார்கள். வேடிக்கையை விட வாழ்வாதாரம் தான் அவர்களுக்கு அவசியமானது. அதை நம்மால் தான் கொடுக்க முடியும். அப்படி அவர்கள் திரும்ப வரும்போது நாம் அவர்களுக்காக காத்திருக்காக வேண்டும். இன்னும் உறுதியாக, இன்னும் பலமாக நாம் அதற்குள் நம்மை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். அதனால் மக்கள் வேடிக்கை மன நிலையில் இருக்கும் இந்த அவகாசத்தில் நாம் நம்மை புணரமைத்துக்கொள்வோம்.
ஒரு சமூகம் முன்னோக்கி செல்லும் போது அது தங்களது புழுதி படிந்த கடந்த காலத்தை திரும்பி பார்க்க விரும்புவதில்லை, அதற்காக கடந்த காலத்தில் தாங்கள் பெற்றவைகளையும் இழக்க விரும்புவதில்லை, இன்றைய சவால்களும், எதிர்கால பாதுகாப்புமே முதன்மையானதாக மாறிவிடுகிறது. அதற்கு ஏற்றவாறு நமது திட்டங்களை இனி வகுத்துக்கொள்ள வேண்டும். கழகத்தின் வரலாற்று தியாகங்களையும், சாதனைகளையும் தேடி தெரிந்து கொள்ள வேண்டிய சூழலை உருவாக்க வேண்டுமே தவிர, அதை கட்டாயமாக இந்த தலைமுறைக்கு புகட்ட முடியாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய தலைமுறையினரிடம் அவர்களின் மொழியில் நாம் உரையாட நம்மை தயார் செய்ய வேண்டும். மொழி என்றால் மொழி மட்டுமல்ல, அவர்களின் புதிய மதிப்பீடுகள், வாழ்க்கை முறைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றை உள்வாங்கி அதற்கு ஏற்றவாறு நமது உரையாடலை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்.
நிறைய நண்பர்களிடம் பேசும் போது “இனி களத்தில் வேலை பார்ப்பது உதவாது, நாமும் சமூக வலைதளங்களில் தான் கவனம் செலுத்த வேண்டும். நமது மரபான தேர்தல் வழிமுறைகள் இனி எந்த பயனுமில்லை” என்கிறார்கள்.
இந்த தேர்தல் முடிவுகள் குறித்த விரக்தியில் இப்படி சொல்வதாக நான் புரிந்து கொள்கிறேன். ஆனால், உண்மை அதுவல்ல. தேர்தலில் நமது பலம் களம் தான். “மக்களிடம் செல்” என்பது தான் இன்றளவும் சிறந்த வழிமுறை. நமது பலமும் இந்த வழிமுறை தான். எதிரிகளின் வழிமுறை என்பது, சமூக வலைதளங்களில் பொய் கருத்தை உருவாக்குவதும், அதற்கு ஒரு போலியான உண்மைத்தன்மையை நிறுவுவதும் அதை நிறுவனமாக்கிய சமூக வலைதளங்களில் பரப்புவதுமே. அதைதான் இந்த தேர்தலில் அவர்கள் கையாண்டார்கள்.
இதையே நாமும் வழிமுறையாக கொள்வதில் இரண்டு சிக்கல்கள் இருக்கின்றன. ஒன்று, நமக்கு சில அற மதிப்பீடுகளும், விழுமியங்களும் இருக்கின்றன. அவர்களை போல பொய்யான கருத்தை நம்மால் உருவாக்க முடியாது, அதற்கு நமது கூட்டு மனசாட்சி இடம் கொடுக்காது. இரண்டாவது, நீண்ட நாட்கள் இந்த வழிமுறை பலன் தராது, ஒருமுறை தான் இந்த கிளர்ச்சி மக்களிடம் எடுபடும். அதனால் இந்த தற்காலிக கிளர்ச்சியை நாமும் நிரந்தர வழிமுறையாக கொண்டால் சரியானதாக இருக்காது. அதனால், “மக்களிடம் செல்” என்ற அண்ணாவின் முழக்கம் காலத்திற்குமான தேர்தல் செயல்பாடு, அதை இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். அதே வேளையில், சமூக வலைதளங்களில் எதிரிகளின் பொய் பிரச்சாரங்களை நாம் முறியடிக்க வேண்டும், அதை மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்.
நாம் பலமாக இருக்கும் களத்தில் நம்மை மேலும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும், அவர்கள் வலிமையாக இருக்கும் சமூக வலைதளங்களில் அவர்களை பலவீனமாக்க வேண்டும். இந்த இரண்டு செயல்முறைகளையும் அடுத்து வரும் ஆண்டுகளில் நாம் சரியாக திட்டமிட்டு செயல்படுத்தினாலே போதும் அத்தனை சூழ்ச்சிகளையும் மீறி நாம் மீண்டு வருவோம். நாம் மீண்டு வருவது நம்மை விட நம் மக்களுக்கு தான் அவசியமானது.
அதனால், நண்பர்களே!
உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வாருங்கள். இன்னும் உறுதியாக, இன்னும் பலமாக, இன்னும் புதிதாக உங்களை மாற்றிக்கொண்டு வாருங்கள். அதுவரை நடக்கும் எதற்கும் சோர்ந்து போகாமல் அத்தனையும் ஒரு பார்வையாளராக இருந்து கவனியுங்கள். நீங்கள் மீண்டு வரும் போது இந்த சூழலை எதிர்கொள்ளவும், அதை எதிர்த்து போராடவும், மக்களுக்கு அரணாக இருக்கவும் உங்களுக்கு யாரும் சொல்லித்தர தேவையில்லை, இந்த இயக்கம் இயல்பிலேயே அதை உங்களுக்கு கொடுத்திருக்கிறது.
மீண்டு வருவோம், மீண்டும் வருவோம்!
சிவபாலன் இளங்கோவன்
@gopinathvijay91 ""அண்ணா ""
தமிழ்நாடு தனித்து போராடும், தமிழ்நாடு வெற்றி பெரும்.
திமுக தனித்து விடபடும் போதும் அழுத்தத்திற்கு உட்படுத்தப்படும் போதும் தான் அடிமட்ட தொண்டனிலிருந்து தலைவன் வரை அதி ஆக்ரோஷத்துடன், முழு பலத்துடன் வெளிவருவான்.
Wait and see the "OG" is back
இந்த தேர்தலில் திமுகவின் வீழ்ச்சியைக் கண்டு, "சனாதனத்தை ஒழிப்போம்" என்றவர்களும் அவர்களின் முழக்கம் ஓய்ந்துவிட்டதாக பாடகர் கிருஷ் உள்ளிட்ட பல சனாதனிகள் எள்ளி நகையாடி மகிழ்ந்தனர்.
அவர்களுக்கு தற்போது இதை சொல்லிக் கொள்வது சரியாக இருக்கும் என்று கருந்துகிறேன்.
அந்த முழக்கம் எங்களிடமிருந்தும் ஓயாது, மேலும் காலம் மீண்டும் சனாதனக் கொள்கைகளை வேரறுப்பதில் சமரசமற்ற உறுதி கொண்ட தொல். திருமாவளவன் அவர்களின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பேராதரவுடன்தான், புதிய கூட்டணி ஆட்சி இன்று மலர்ந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன்பொருட்டு சார்ந்ததோருக்கு வாழ்த்துக்களையும், இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கள யதார்த்தம் என்ன தெரியுங்களா?
நடிகர் விஜய் ஆட்சிக்கு வந்து விடுவார் என கருதி யாரும் வாக்களிக்கவில்லை!
எல்லோரும் திமுகவுக்கு தானே போடுவார்கள் நாம் விஜய்க்கு போடலாம் ஓர் 20 தொகுதியாவது வரட்டும் என்கிற எண்ணத்தில் தான் வாக்களித்திருக்கிறார்கள்!
இப்படி இதையே எல்லோரும் நினைத்து வாக்களித்திருக்கிறார்கள் என்பது தான் கொடுமை!!
இப்போது எளிய உழைக்கும் மக்களில் இருக்கிற பெண்கள் ஏக்கத்துடன் சொல்கிறார்கள்..,
" ஸ்டாலின் வரமாட்டாரா அந்த 8000 ரூபாய் கூப்பன் வராதா?"
எத்தனை கனவுகளோடு இருந்திருப்பார்கள்!
"அட, அது கூட போகட்டும் உரிமை தொகை 15 ஆம் தேதி வந்துவிடுமா?" என அப்பாவியாய் கேட்கிறவர்களும் உண்டு.
என்னவென்று சொல்வது???
அரசு ஊழியர்களுக்கு, ஓய்வூதியதாரர்களுக்கு கொடுக்கப்படுகிற சம்பளப் பணம் கூட ஒரு 4 மணி நேரம் 5 மணி நேரம் தாமதமாகவோ கூட வரும்.
ஆனால் மகளிர் உரிமைத் தொகை 15ஆம் தேதி காலை 10 மணிக்கு மிகச் சரியாக பெண்களின் வங்கி கணக்கில் வந்து சேரும்.
இந்தப் பணத்தை எதிர்பார்த்து நம் பெண்கள் காத்திருப்பார்கள் என கண்ணும் கருத்துமாக தன் மேற்பார்வையிலேயே இதை பின்பற்றி வந்தவர் நம் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!
தேர்தல் காலத்தில் யாராவது வழக்கு போட்டு தடுத்து விடுவார்களோ என கருதி 5 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தி அடுத்து நாங்கள் பதவியேற்கும் வரை சிக்கனமாகவும் கவனமாகவும் செலவிடுங்கள் என அறிவுறுத்திய அண்ணனாக எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னாரே...
பட்ட காயம் ஆறவில்லை!
உங்கள் மீதும் கோபமில்லை!!
வாக்களித்த உரிமைத் தொகையை அரசு உங்களுக்கு தராமல் இருக்க முடியாது, அதற்கான சட்டப் பாதுகாப்பை செய்தவர் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வேண்டுமானால் தற்குறிகள் பொறுப்பற்று தாமதப்படுத்த வாய்ப்பிருக்கிறது.
களத்தில் போராடி பெற்றுத் தர நாங்கள் இருக்கிறோம்.
உங்களுக்காக எங்கள் தலைவர் இருக்கிறார்.
உங்களுக்காக திமுக இருக்கிறது!!
மறுபடி அழுத்தி சொல்றேன்...
கலைஞரை போல உண்மை நிலவரங்களை மறைக்காமல் சொல்பவர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
வியூக கும்பலை நானூறு அடி தூரத்தில் தள்ளி வையுங்கள்.
வியூக கும்பல் தான் நீங்கள் சொல்வதை கேட்கணும். அந்த கும்பல் சொல்வதை நீங்க கேட்க கூடாது.
@mkstalin
எனக்கு இரவு முழுவதும் உறக்கமில்லை இந்த முகமே என் கண்களை மூடினாலும் வந்துகொண்டே இருக்கிறது.
அப்பழுக்கற்ற அரசியல் தலைவர்!
யாருக்கும் தீங்கு நினைக்காத தலைவர்!
குழந்தை உள்ளம் கொண்ட தலைவர்!
தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பது இயற்கை இவை இரண்டின் உச்சத்தையும் பார்த்த இயக்கம் திமுக.
ஆனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தலைவரின் தொகுதியை கவனிக்கத்தவறியவர் மீது தயவு தாட்சன்யம் இன்றி தலைமைக்கழகம் நடவடிக்கை எடுத்தால் தான் உண்மை திமுக தொண்டன் நிம்மதியாய் இருப்பான்.
தலைவர் தோல்விக்கு காரணமானவர் எப்படி கொஞ்சமும் வெட்கம், பயம், அச்சம், கூச்சம் எதுவும் இல்லாமல் தலைவர் முன்பு வந்து முகத்தைக்காட்டி நிற்கிறார்?
நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னது இதைத்தானா @PKSekarbabu ?
@mkstalin@Udhaystalin@DMKITwing@DMK_Chennai@arivalayam
தோல்விக்கான காரணம் சட்ட ஒழுங்கு பிரச்சினை அதற்கு மூலக் காரணம் கஞ்சா புழக்கம் இதை தடுக்க நடவடிக்கை எடுக்காதது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ப்திபை ஏற்படுத்தியது தூய்மை பணியாளர்கள் போராட்டம் செவிலியர்கள் போராட்டத்தை உதாசினப் படுத்தினது இதையெல்லாம் ஆரம்பத்தில் தலைமை கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்த போது கடிச்சு வச்சாங்க சோசியல் மீடியா சரியா பயன்படுத்தாது நல திட்டங்களை மலுங்கடித்து விட்டது என்பதே உண்மை முக்கியமாக நாகரிக அரசியல் என்ற பெயரில் அவதூறுகளை கண்டு கொள்ளாமல் விட்டது 😔
Un official IT wing எதிர்கட்சியாக கழகத்துக்காக என்னுடைய பணி தொடரும் இரவு பகல் பாராமல் உறுப்பினராக கூட இல்லாமல் பணி ஆற்றிய கலைஞர் விசுவாசப்படை தோழர்களுக்கு நன்றி 🙏
ஊடகங்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்
"கணிக்கத் தவறிவிட்டோம்" என்று கூறும் பல செய்தி ஆசிரியர்கள் மற்றும் சில பத்திரிகையாளர்கள் கூறுவதை பார்க்க முடிகிறது. இது தங்களை தற்காத்துக் கொள்ளப் பயன்படுத்தும் ஒரு மென்மையான கேடயம். ஆனால் உண்மை அதுவல்ல. நீங்கள் கணிக்கத் தவறவில்லை. கண்மூடித் தூங்கினீர்கள்.. ஒரு பத்திரிகையாளராக நீங்கள் தோல்வியடையவில்லை. ஒரு குடிமகனாக நீங்கள் உண்மையை எதிர்கொள்ள அஞ்சினீர்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் ஒலித்த சாமானிய மக்களின் அழுகுரல் உங்கள் காதுகளில் விழவில்லை.
ஊழல் என்பது ஒரு நிர்வாகப் பிழையாகவோ அல்லது ஒரு செய்தியாகவோ கூடப் பார்க்காமல், அதை ஒரு வாழ்வியல் முறையாக மாற்றி 'நார்மலைஸ்' (Normalise) செய்தீர்கள்.
மக்கள் வீதியில் இறங்கிப் போராடியபோது, அவர்கள் மீதான அடக்குமுறைகளை நியாயப்படுத்த 'முட்டுக் கொடுத்த' உங்களின் விவாதங்கள் வரலாற்றில் அழியாத கறைகள். அதிகாரத்தின் நிழலில் அறம் மறந்த காலம்.
அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய பேனாக்கள், ஆளும் கட்சியின் நரேட்டிவ்களை (Narrative) எழுதும் தூரிகைகளாக மாறின. எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பதற்கு முன்பே, செய்தி அறைகளில் அமர்ந்துகொண்டு நீங்களே ஆளும்கட்சிக்கு வக்காலத்து வாங்கினீர்கள்.
மக்கள் சந்தித்த விலைவாசி உயர்வு, நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் அன்றாடத் துயரங்கள் உங்கள் விவாத மேடைகளில் இடம்பிடிக்கவில்லை. அரசின் அடக்குமுறைகளுக்கு முட்டுக் கொடுப்பதிலும், எதிர் கருத்துக்களை ஒலிக்கவிடாமல் தடுப்பதிலுமே நீங்கள் கவனமாக இருந்தீர்கள். மக்களின் உண்மையான பிரச்சினைகள் 30 நொடித் துணுக்குகளாகக் கடந்து போகையில், அதிகாரத்தின் சாதனைகள் மணிநேர நேரலைகளாக (Live Coverage) ஆக்கிரமித்தன. செய்தியாளர்களாக அல்லாமல் ஆளுங்கட்சியின் செய்தித் தொடர்பாளர்களாக மாறி போனீர்கள்.
இன்று ஒரு சக பத்திரிகையாளர் வெளிப்படையாக ஒரு கசப்பான உண்மையை உடைக்கிறார்.
"அரசுக்கு எதிராக அவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டால், அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து PEN நிறுவனம் அவர் வேலை செய்யும் அலுவலகத்திற்கு அனுப்பி அதை நீக்குமாறு நிர்பந்திக்குமாம்."
PEN நிறுவனம் போன்ற அதிகார அமைப்புகள் உங்கள் அலுவலகங்களுக்கு அழுத்தம் கொடுத்தபோது, முதுகெலும்பை நிமிர்த்தி கேள்வி கேட்கத் துணிவின்றி மண்டியிட்டீர்கள்.
ஒரு பத்திரிகையாளனின் தனிப்பட்ட கருத்தைக் கூடக் கண்காணிக்கவும், அவன் வேலையைப் பறிக்கச் சூழ்ச்சி செய்யவும் ஒரு நிறுவனத்திற்கு அதிகாரம் கிடைக்கிறது என்றால், அதற்கு உங்கள் மௌனமே களம் அமைத்துக் கொடுத்தது. அவ்வளவு இடம் கொடுத்து வைத்திருந்தீர்கள்.
தனக்காக, தனது நிறுவனத்திற்காக வேலை செய்யும் சக பத்திரிகையாளர் தாக்கப்பட்ட போதும் கூட வெட்கமே இன்றி, அன்று இரவு தொலைக்காட்சியில் "கருத்துரிமை காக்கும் ஆளும்கட்சி" என்று நீங்கள் வாசித்த பாராட்டுப் பத்திரம், ஒரு பத்திரிகையாளனின் சாவுமணி.
அதிகார வர்க்கத்தின் வெற்றுக் கொண்டாட்டங்களை மணிக்கணக்கில் நேரலையாக ஒளிபரப்பிய நீங்கள், எளிய மக்களின் பக்கம் நின்று அதிகாரத்தை நோக்கிக் கேள்வி கேட்கத் தவறினீர்கள்.
சுயபரிசோதனை யாருக்கு?
தேர்தல் முடிவுகள் வந்த பிறகு "மக்களின் நாடித் துடிப்பை அறியத் தவறிவிட்டோம்" என்று சொல்வது ஒரு மோசமான நடிப்பு. நீங்கள் நாடித் துடிப்பைப் பார்க்கவில்லை, மாறாக அதிகாரத்தின் காலடியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தீர்கள்.
சுயபரிசோதனை செய்ய வேண்டியது அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, நடுநிலை என்ற போர்வையில் நயவஞ்சகம் செய்த நீங்களும்தான்.
இறுதியாக ஒன்று. மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். ஆனால் நீங்கள் இழந்த 'நம்பகத்தன்மையை' மீண்டும் பெறுவதற்கு ஒரு யுகமே தேவைப்படலாம். கணிக்கத் தவறியது உங்கள் புத்தி அல்ல, உங்கள் மனசாட்சி!
திமுக தோல்விக்கு முக்கியக்காரணம் எங்கள் அண்ணன் @TRBRajaa முழு பொறுப்பு...
IT wing a சரியா நிர்வகிக்க முடியாமல் திணறியது முக்கிய காரணமாக இருக்கிறது..
வாழ்த்துக்களை ஏற்கும் அண்ணன் வசவுகளையும் ஏற்று தான் ஆக வேண்டும் @mkstalin@Udhaystalin
திமுக தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தோற்றுவிட்ட இப்பொழுது இது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. திமுகவினர், திமுக ஆதரவாளர்கள் நம்முடைய திராவிட தலைவர்களுக்கும், கொள்கைக்கும் மட்டும் ஃபயர் விடுவது போதுமானது என்று நினைக்கிறேன். இனி ஒருபொழுதும் ராகுல் காந்தி அவர்களுக்கோ, திருமாவளவன் அவர்களுக்கோ, அல்லது இன்ன பிற கூட்டணி தலைவர்களுக்கோ நிபந்தனையற்ற அன்பும் ஆதரவும் வழங்க வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது. கூட்டணி என்பது தேர்தல் நேர கணக்கீடு மட்டுமே. தொடர்ந்து 9 ஆண்டுகள் ஒரே கூட்டணியை தக்க வைத்ததே பெரும் சுமையாகிப் போனதோ என்று தோன்றுகிறது. இந்த நிமிடம் வரை கொளத்தூரில் முதல்வரின் தோல்வி குறித்து ராகுலோ திருமாவோ மௌனமாக இருப்பது என் கருத்திற்கு வலு சேர்க்கிறது. செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன, தொடர்ந்து களமாடுவோம்!
7 days 7 juices
எது எப்படி ஆனாலும் வெயிலில் இருந்து மிகப்பெரிய பாதுகாப்பு.! ஆனா பாருங்க இது எங்களுக்கெல்லாம் சுலபமா கிடைக்கும் என்னா எங்கள சுத்தி விவசாய கிராமங்கள் இருக்குது.