பிரதமர் அலுவலகத்தில் மன்மோகன் சிங்கை 2012ல் சந்தித்தேன் விவசாயி என்றதும் வாசலில் வந்து வரவேற்று பெருமைப்படுத்திய பெருமகன் . அவர் மறைவு மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கிறது
EVKS இளங்கோவன் இந்த தலைமுறையின் லஞ்சம் வாங்காத உத்தமத் தலைவன் என் குடும்ப திருமணத்தை முன்னின்று நடத்திக் கொடுத்த குடும்ப நண்பர் உள் ஒன்றும் புறம் ஒன்றும் பேசத் தெரியாத புனிதன் எல்லோரையும் சமமாக மதிக்க தெரிந்த மாமனிதன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது
லாட்டரி சீட்டு ஆன்லைன் சீட்டாட்டம் தொழில்கள் மூலம் மக்களை சுரண்டி பல ஆயிரம் கோடிகளை கொள்ளையடித்த வர்கள் அரசியலில் குதித்து ஏதாவது ஒரு கட்சியை கைப்பற்றி ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முயற்சிக்கிறார்கள் பலியாக போவது எந்த கட்சியோ ?
விசிக வின் தொண்டர்களை கவர்ந்து அக்கட்சியை உடைத்து போட்டி விசிகா வை உருவாக்கி பின் தமிழகம் முழுவதும் உள்ள தலித்களை திரட்டி மிகப் பெரிய தலித் தலைவராகும் முழு முயற்சியில் ஆதவ் அர்ஜுனா ஈடுபட்டு உள்ளார் . இவரின் சூழ்ச்சி வலையில் திருமா சிக்கிக் கொண்டார்
புயல் வெள்ளத்தை தமிழ்நாடு அரசு
திறம் பட கையாண்டது முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையாக ஓய்வில்லாமல் உழைத்தார் அரசு அதிகாரிகள் ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டனர்
பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது . பாராட்டுக்கள். நன்றிகள்
வட தமிழ் நாட்டில் புயலால் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் தேவையான நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் பாதிக்கபட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் சென்று சேர வேண்டும்
எப்பொழுது வெள்ளம் வந்தாலும் பயிர்கள் மூழ்குகின்றன அந்த இடங்கள் கண்டறியப்பட்டு மீண்டும் தண்ணீரில் பயிர்கள் மூழ்காத வகையில் துரித நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்
சென்னையில் புயல் மழை, காற்று கடுமையாக உள்ளன. வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அரசு அறிவித்துள்ளது பொறுப்பற்ற மக்கள் விபரீதத்தை உணராமல் வேடிக்கை பார்க்க கடற்கரையில் பெருங் கூட்டமாய் கூடுகிறார்கள் வேதனையாக உள்ளது