Climate Activist, Environmentalist, Independent weather blogger, a pioneer in hype less forecasts, provides Iconic forecasts on agriculture, fishermen..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay அவர்களுக்கு மற்றும் நீர்வளத்துறை @BussyAnand & பேரிடர் மேலாண்மைத் துறை @KASengottaiyan அமைச்சர் அவர்களுக்கு
#பொருள்: சூப்பர் எல் நினோ 2026 – வறட்சி, வெள்ளப்பெருக்கு மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான சிறப்புக் குழு அமைத்தல் தொடர்பாக – உடனடி நடவடிக்கை கோரிக்கை
மதிப்பிற்குரிய அவர்களுக்கு,
==> உலக அளவில் சூப்பர் எல் நினோ 2026 நிகழ்வு பெரும் காலநிலை அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது.
==> அக்டோபர் மாதத்தில் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த சூப்பர் எல் நினோவின் ஆரம்ப தாக்கங்கள் ஏற்கெனவே உணரப்படத் தொடங்கியுள்ளன.
==> தற்போதுஉலகின் பல பகுதிகளில் வெப்பநிலை கணிசமாக உயர்ந்து வருகிறது.
==> தமிழ்நாட்டில் மேட்டூர் அணை 79 அடிக்கும், முல்லைப் பெரியாறு அணை 111 அடிக்கும் சரிந்துள்ளது. வைகை அணை வறண்டு காணப்படுகிறது.
==> இந்திய அளவில் தென்மேற்கு பருவமழை இயல்புக்கு குறைவாகவும், வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இயல்புக்கு அதிகமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
==> 2027-ஆம் ஆண்டு மார்ச் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியா, தமிழ்நாட்டில் கடுமையான வெப்ப அலைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
==> அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் வறட்சி, வெப்ப அலைகள், பருவமழை மாற்றங்கள்,பெருமழை, வெள்ளப்பெருக்கு, விவசாயப் பாதிப்பு மற்றும் பேரிடர் சூழல்களை தமிழ்நாடு சந்திக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
==> எனவே, இந்த இயற்கைப் பெருநிகழ்வை முன்கூட்டியே எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக “சூப்பர் எல் நினோ 2026 – வறட்சி & பேரிடர் மேலாண்மை சிறப்புக் குழு” ஒன்றை அமைக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இக்குழு மூலம்:
1.அடிப்படை செயல்திட்டம் விரைவாக தயாரித்தல்
2. நீர் மேலாண்மை, விவசாயப் பாதுகாப்பு, குடிநீர் தட்டுப்பாடு தீர்வு
3. பெருமழை மற்றும் வெள்ளபாதிப்பு முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்த முடியும்.
இந்த முக்கியமான கோரிக்கையை பரிசீலித்து, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களையும், நீர்வளத்துறை & பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களையும் மிகப் பணிவுடன் வேண்டுகிறேன்.
நன்றி
உண்மையுள்ள,
ஹேமச்சந்தர் இரா
(டெல்டாவெதர்மேன்),
சுயாதீன வானிலை ஆய்வாளர்,
+91 8939412147
[email protected]
தேதி: 05.06.2026
சூப்பர் எல் நினோ தாக்கம் - இன்று கடலில், நாளை நம் வயல்களில்...
DWM DAILY WEATHER UPDATE DATED 16TH JUNE, 2026
#Casefile: Southwest Monsoon Missing!
==> The Arabian Sea has gone silent with the complete absence of the Somalia Jet. Monsoon progression is also stalling. It has been more than 10 days since onset, yet the first monsoon low has still not formed over the Bay of Bengal.
==> Reservoir levels continue to reduce at many states of India.
==> This is just the beginning El Nino is yet to couple with the atmosphere and is expected to reach super El Niño status only by the end of September. If this massive suppression builds up over the North Indian Ocean, what can we expect in July and August?
#Indianmonsoon #Rains #monsoon
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் நிகழ்நேர வானிலை நிலவரம் தேதி: 14.06.2026| மாலை 4 மணி நிலவரம்
#தலைப்பு: வெயில் சுட்டெரித்த நிலையில் ஆங்காங்கே இடிமழை!
==> தமிழ்நாட்டில் காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில், கடல்க்காற்று உள் நுழைந்து ஆங்காங்கே இடி மழை மேகங்கள் உருவாகியுள்ளது.
==> குறிப்பாக விழுப்புரம் மாவட்டம் #செய்யூர், #மரக்காணம், #கூனிமேடு, கடலூர் மாவட்டம் #நெய்வேலி, #வடலூர், #பரங்கிப்பேட்டை, #காட்டுமன்னார்கோயில் மற்றும் சிதம்பரம்-சீர்காழி இடைப்பட்ட பகுதிகள், அரியலூர் மாவட்டம் #அரியலூர், #செந்துறை, புதுக்கோட்டை மாவட்டம் #அறந்தாங்கி சுற்றுவட்டாரங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழை பதிவாகி வருகிறது.
#குறிப்பு: சாதரண வெப்பச்சலன மழை என்பதால் ஒரு மாவட்டம் முழுதும் மழை இருக்காது, ஒதுக்கி, ஒதுக்கி தான் பெய்யும்.
என்றும் இயற்கையுடன்
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர்
DWM Daily Weather Report | Date: 14.06.2026
#Topic: Chance of evening/night convective thunderstorms in Tamil Nadu.
==> The Southwest Monsoon has subdued over southern peninsular India. Monsoon progression expected to stall for next few days.
==> Light to moderate rain occurred last night in isolated coastal and interior districts of Tamil Nadu.
==> Today and tomorrow, evening/night convective thunderstorms (thundershowers) are expected in Tamil Nadu.
==> Particularly, there is a chance of thunderstorms with lightning in the #Ranipet, #Vellore, #Tiruvannamalai, #Kallakurichi, #Villupuram, #Cuddalore, #Mayiladuthurai, #Thanjavur, #Trichy, #Pudukkottai, and #sivagangai
==> In Chennai and its suburbs, there is a possibility of thundershowers at night in some places.
==> From June 16 onwards, the impact of heat will increase again across Tamil Nadu.
#ImportantNote:
==> No rain expected during daytime. Rainfall will not be widespread across the entire district. During rain, strong lightning and thunder can be expected, along with gusty winds before the rain.
Stay tuned and connected with @deltarains on X for real-time updates as the weather system evolves! 🌨️🌧️
Thanks & Regards
R.Hemachander https://t.co/jAwt1q9Cyd., M.E
Climate Activist, Independent Weather Blogger.
Email: [email protected]
#Disclaimer: This update represents my personal analysis and interpretation.
#Chennai #hottemperature #summerrains #lightning #chennairains #thunderstorm
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் நிகழ்நேர வானிலை அறிக்கை| தேதி: 13.06.2026| நேரம் இரவு 8 மணி 30 நிமிடங்கள்
==> தமிழ்நாட்டில் மாலை முதல் ஆங்காங்கே இடிமழை மேகங்கள் காணப்படுகிறது. தற்போது #வேலூர் #காஞ்சிபுரம், #கடலூர், #அரியலூர், #புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆங்காங்கே இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
==> நள்ளிரவில் கடலோர மாவட்டங்களில் இடிமழைக்கு வாய்ப்பு உள்ளது.
==> தமிழ்நாட்டில் அடுத்த 2-3 தினங்களுக்கு மாலை/இரவு நேரத்தில் இடி,மின்னலுடன் கூடிய வெப்பச்சலன மழையை எதிர்ப்பார்க்கலாம்.
என்றும் இயற்கையுடன்
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர்
DWM DAILY WEATHER FORECAST DATED 10TH JUNE, 2026
#Topic: Widespread conventional thunderstorm activity chances during June 11-14th, 2026.
Super El Nino impact - Today's in ocean, Tomorrow's in our farm
==> After weeks of scorching 40°C+ temperatures, Chennai finally received much needed light to moderate showers yesterday. Though not heavy, it brought welcome relief from the intense heat.
==> There is good hope for further respite over the next few days. Favourable wind patterns and sufficient moisture in the atmosphere are likely to trigger widespread conventional thunderstorms between June 11 and 14.
==> North coastal Tamil Nadu including #Chennai, North interior Tamil Nadu, Cauvery Delta region and Parts of South Tamil Nadu likely to see conventional thunderstorm activity for next few days.
#ImportantNote:
==> Rains are unlikely during daytime hours and also it unlikely to cover entire district within a day. However, intense lightning and thunder activity is expected with these thunderstorms.
Stay safe and keep umbrellas handy! ⚡🌧️
Stay tuned and connected with @deltarains on X for real-time updates as the weather system evolves! 🌨️🌧️
Thanks & Regards
R.Hemachander https://t.co/jAwt1q9Cyd., M.E
Climate Activist, Independent Weather Blogger.
Email: [email protected]
#Disclaimer: This update represents my personal analysis and interpretation.
#Chennai #hottemperature #summerrains #lightning
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் மேட்டூர் அணை குறித்தான சிறப்பு பதிவு தேதி: 12 ஜூன், 2026
#தலைப்பு: தள்ளிப்போகும் மேட்டூர் திறப்பு ஒர் பார்வை. பயிர் காப்பீடு கைக்கொடுக்குமா?
==> உருவாகும் சூப்பர் எல் நினோ வின் தாக்கத்தினால், மேட்டூர் அணை இந்தாண்டு நிரம்புமா என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது...
==> கடந்த 25 ஆண்டுகளில் அதாவது 2000 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில் 9 முறை 2000, 2001, 2006, 2011, 2020, 2021, 2022, 2023, 2025 ஆகிய ஆண்டுகளில் சரியாக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது.
==> இந்த 9 ஆண்டுகளிலும் மேட்டூர் அணை திறக்கப்பட்ட அன்று நீர் மட்டம் ஏறத்தாழ 100 அடியை ஒட்டியும், நீர் இருப்பு 70 டி.எம்.சியை ஒட்டியும் இருந்துள்ளது குறிப்பிடதக்கது.
==> சமீபத்திய ஆண்டில் 2024 ஆம் ஆண்டு ஜூன் 12ம் தேதி போதுமான நீர் இருப்பு இல்லாததால் தாமதமாக ஜூலை 28ம் தேதி அன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது.
==> இன்று (12.06.2026) நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 79.67 அடியாகவும், நீர் இருப்பு 41.07 டி.எம்.சியாகவும் உள்ளது.
==> இந்நிலையில் தாமதமாக துவங்கிய தென்மேற்கு பருவமழை தற்போது வரை காவிரி நீர் படிப்பு பகுதிகளில் தீவிரமடையும் சூழல் இல்லை.
==> காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இயல்பைவிட குறைவாக பதிவாகும் என்றும், மழை பற்றாக்குறை ஏற்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
==> தற்போதைய நிலவரப்படி கர்நாடகா முக்கிய அணைகளான கே.ஆர்.எஸ், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி போன்ற அணைகளின் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 3ல் ஒரு பங்கு நீர் இருப்பு தான் உள்ளது.
==> முந்தைய எல் நினோ ஆண்டுகளை எடுத்துக்கொண்டால் 2016 ஆம் ஆண்டு 69 TMC, 2023 ஆம் ஆண்டு 81 TMC என மிக குறைந்த நீர் தான் கர்நாடகா அணைகளிலிருந்து கிடைக்கப்பட்டுள்ளது.
==> மேட்டூர் அணையை திறக்க 60 டி.எம்.சி நீர் இருப்பு இருந்தால் தாரளமாக அச்சமின்றி இன்று அணையை திறந்திருக்கலாம், அதற்கு நமக்கு மேலும் 20 டி.எம்.சி நீர் தேவை.
==> தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடையும் சூழல் காணப்படாததால் இன்றைய தினம் தண்ணீர் திறக்காதது அரசின் நல்ல முடிவாகவே கருதுகிறேன்.
==> இதுபோன்ற தண்ணீர் தட்டுப்பாடு உள்ள காலங்களில் குறைந்தது சம்பா பட்டம் மற்றும் குடிநீர் தேவைக்கு தண்ணீரை உறுதி செய்வது மிகவும் அவசியமாகும்.
==> இருந்தபோதிலும், இந்தாண்டு தமிழ்நாடு அரசு குறைந்தது 150 TMC நீரை கர்நாடகாவிடமிருந்து கேட்டு பெற வேண்டும் அப்போது தான் அடுத்த ஆண்டு கோடையில் தமிழ்நாட்டின் 22 மாவட்டங்கள் குடிநீர் பிரச்சனை இல்லாமல் சமாளிக்க முடியும்.
==================================
மேட்டூர் அணை பாசனத்தை மட்டும் நம்பி விவசாயம் விவசாயி நீங்களா?
#தலைப்பு : உறுதி செய்யப்பட்ட பாசன பகுதிகளில் சாகுபடி செய்ய இயலவில்லை என்றால் *25* % காப்பீடு கிடைக்க வாய்ப்பு.
==> இன்று மேட்டூர் அணை திறக்கவில்லை ஆயினும் உறுதி செய்யப்பட்ட பாசனப்பகுதிகளில் உரிய நீர் உரிய நேரத்தில் திறக்கவில்லை எனில் 25 சதவீதம் காப்பீடு தொகை காப்பீடு நிறுவனங்கள் மூலம் கிடைக்க வாய்ப்பு உண்டு ஆகவே விவசாயிகள் தங்களது பகுதி வேளாண் அதிகாரிகளை சந்தித்து பயிர்க்காப்பீடு திட்டத்தில் பயன்பெற உரிய முறையை கேட்டறிந்து காப்பீடு செலுத்தவும்.
==> காப்பீடு தொகை கிடைக்கப்பெற்றால் விவசாயிகளுக்கு ஓரளவு பொருளாதார நெருக்கடி குறைய வாய்ப்பு உள்ளது. விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்தையும், வேளாண் துறையையும் அணுகி 25 சதவீத காப்பீடு தொகை கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுகிறேன்.
==> தமிழ்நாடு அரசு உடனடியாக அந்தந்த மாவட்டத்திற்கான காப்பீடு நிறுவனத்தை நியமித்து பாசன விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்ய ஏதுவான சூழலை ஏற்படுத்துவதுடன், பயிர்க்காப்பிட்டிடுடன் சேர்த்து குறைந்தப்பட்ச குறுவை நிவாராண தொகுப்பும் அறிவிக்குமாறு விவசாயிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
#முக்கியகுறிப்பு:
1. இந்த காப்பீடு நிலத்தடி நீர் வளம் இல்லாமல் மேட்டூர் அணையை மட்டுமே நம்பி இருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே பொறுந்தும்.
2. மானாவாரி விவசாயிகள் பெற முடியாது.
3. தெற்கு டெல்டாவில் பல கிராம விவசாயிகள் பயன்பெறலாம்.
4. வயல் புழுதி அடித்து விவசாயம் செய்வதற்கு தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.
என்றும் இயற்கையுடன்
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர்
#மேட்டூர்அணை #டெல்டாபாசனம் #குறுவைசாகுபடி
சூப்பர் எல் நினோ விழுப்புணர்வு கருத்தரங்கு - 3
"சூப்பர் எல் நினோ தாக்கம் - இன்று கடலில், நாளை நம் வயல்களில்"
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (11.06.2026) மாவட்ட ஆட்சியர் திரு. ஷேக் அப்துல் ரஷ்மான் IAS @DistrictColVpm அவர்களது தலைமையில் மாவட்ட நிர்வாகம் & வேளாண்துறை இணைந்து முன்னெடுத்த விழிப்புணர்வு கருத்தரங்கு மிக சிறப்பாக நடைப்பெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் கலந்துக்கொண்டனர். சூப்பர் எல் நினோ நிகழ்வை எதிர்க்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறிப்பாக மரம் வள்ர்த்தல், நீர் நிலைகளை தூர்வாறுதல், மழை நீர் சேகரிப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தார்.
மேலும், முந்தைய எல் நினோ 2015-2016, 2023-2024, 1997-1998 போன்ற ஆண்டுகளில் விழுப்புரம் மாவட்டத்தில் தாக்கம் எப்படி உணரப்படிருந்தது என்பதை அறிந்து அதற்கு தகுந்த திட்ட வரைவை முன்னெடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், மாவட்ட நிர்வாகம் & வேளாண்மை துறை அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
என்றும் இயற்கையுடன
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர்
#superelnino
#elnino
@CMOTamilnadu@BussyAnand@AadhavArjuna
DWM DAILY WEATHER FORECAST DATED 11TH JUNE, 2026.
#Topic: Cloudy skies, any chances of rain in Chennai?
==> Due to high clouds formed from the thunderstorms that developed over central Andhra Pradesh last night, the North Tamil Nadu is currently cloudy.
==> As the Southwest Monsoon is weakening over Kerala, from today until the next 3 days (until June 14), coastal districts (including Chennai) and interior districts of Tamil Nadu are likely to receive evening/night thunderstorms with lightning and rainfall activity.
==> For chennai rain chances, clouds to clear off and make sure essential heat during the day.
#ImportantNote: No rain expected during the day. Rain is likely only in the evening/night. During the rain, there will be strong thunder and lightning. Before the rain starts, strong gusty winds (surface level winds) are expected.
Stay tuned and connected with @deltarains on X for real-time updates as the weather system evolves! 🌨️🌧️
Thanks & Regards
R.Hemachander https://t.co/jAwt1q9Cyd., M.E
Climate Activist, Independent Weather Blogger.
Email: [email protected]
#Disclaimer: This update represents my personal analysis and interpretation.
#Chennai #hottemperature #summerrains #lightning #chennairains #thunderstorm
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் சுற்றுச்சூழல் குறித்த சிறப்பு பதிவு
#தலைப்பு: பச்சை பாசி பரவுதல்- எல் நினோ காலக்கட்டத்தில் உலகளாவிய பிரச்சனை..
==> பச்சை பாசி படர்தல் பெரிய நீர் தேக்கங்கள் துவங்கிய சிறிய குளம், குட்டைகள் வரை ஏற்படக்கூடிய பிரச்சனை.
==> நீரில் அதிகபடியான நைட்ரஜன், பாஸ்பரஸ் அளவின் காரணமாகவும், நீரோட்டம் குறைந்தும், நீர் அதிக வெப்பத்துடன் இருப்பது மற்றும் குறைந்த அளவு நீர் தேக்கம் போன்றவை முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது.
==> குறிப்பாக அனையிலிருந்து குறைவான நீர் வெளியேற்றும் போது விவசாய நிலங்களிலிருந்து வெளியேற்றப்படும் நீர், கழிவு நீர் கலக்கும் போது பாஸ்பரஸ், நைட்ரஜன் அளவு தண்ணீரில் அதிகரித்து ஆக்ஸிசன் அளவு குறைவதால் இப்பிரச்சனை ஏற்படுகிறது.
பச்சை பாசி படர்தலின் தாக்கம்:
1. நீர் மாசடைதல்
2. நீரில் ஆக்ஸிசன் குறைவது.
3. மீன்கள் & நீர் தாவரங்கள் இறப்பு.
4. குடிநீர் & விவசாயத்திற்கு நீர் பயன்படுத்தமுடியாத நிலை.
==> வறட்சி ஆண்டுகளில் இந்த பச்சை பாசி படர்ந்தல் உலகளவில் பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும்.
==> எல் நினோ ஆண்டுகளில் ஆஸ்திரேலிய, தெற்கு ஆசியா, போன்ற நாடுகளில் இதன் தாக்கம் அதிகம் இருக்கும்.
==> தற்போது மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரில் இப்பிரச்சனை காணப்படுவது கவலையளிக்கிறது.
==> தங்களது ஊராட்சிகளில் உள்ள நீர் நிலைகளில் (ஏரி, குளம், கண்மாய்) பச்சை பாசி பரவுதலை பார்த்தால் உடனடியாக சுண்ணாம்பு கரைசல் கலந்து ஆரம்ப காலக்கட்டதிலேயே தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.
என்றும் இயற்கையுடன்
டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர்
DWM DAILY WEATHER FORECAST DATED 10TH JUNE, 2026
#Topic: Widespread conventional thunderstorm activity chances during June 11-14th, 2026.
Super El Nino impact - Today's in ocean, Tomorrow's in our farm
==> After weeks of scorching 40°C+ temperatures, Chennai finally received much needed light to moderate showers yesterday. Though not heavy, it brought welcome relief from the intense heat.
==> There is good hope for further respite over the next few days. Favourable wind patterns and sufficient moisture in the atmosphere are likely to trigger widespread conventional thunderstorms between June 11 and 14.
==> North coastal Tamil Nadu including #Chennai, North interior Tamil Nadu, Cauvery Delta region and Parts of South Tamil Nadu likely to see conventional thunderstorm activity for next few days.
#ImportantNote:
==> Rains are unlikely during daytime hours and also it unlikely to cover entire district within a day. However, intense lightning and thunder activity is expected with these thunderstorms.
Stay safe and keep umbrellas handy! ⚡🌧️
Stay tuned and connected with @deltarains on X for real-time updates as the weather system evolves! 🌨️🌧️
Thanks & Regards
R.Hemachander https://t.co/jAwt1q9Cyd., M.E
Climate Activist, Independent Weather Blogger.
Email: [email protected]
#Disclaimer: This update represents my personal analysis and interpretation.
#Chennai #hottemperature #summerrains #lightning
DWM DAILY WEATHER FORECAST DATED 9TH JUNE, 2026
#Topic: Chennai brazing unbearable hot conditions during June.
Super El Nino impact - Today's in ocean, Tomorrow's in our farm
==> Today, the highest temperature in Tamil Nadu was recorded at #Chennai (Meenambakkam) with 40.7°C, followed closely by Chennai (Nungambakkam) at 40.4°C.
==> Meenambakkam has now crossed the 40°C mark for the 19th time in the last 40 days. It's really rare & unwanted recorded keep ticking on boxes.
==> While there is some hope of relief from possible thunderstorms between June 11–14, the overall outlook for June remains difficult for coastal Tamil Nadu, including Chennai, with continued hot and humid conditions expected during second half of June.
Stay tuned and connected with @deltarains on X for real-time updates as the weather system evolves! 🌨️🌧️
Thanks & Regards
R.Hemachander https://t.co/jAwt1q9Cyd., M.E
Climate Activist, Independent Weather Blogger.
Email: [email protected]
#Disclaimer: This update represents my personal analysis and interpretation.
#Chennai #hottemperature #summer