கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு நாளான இன்று காலை வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் அவரது படத்திற்கு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினோம்.
இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகரில் எனது மணிவிழா, ஜெய்பீம் 2.0 - அம்பேத்கரியம் 50 நூல் தொகுப்பு அறிமுகம், அம்பேத்கரின் மனிதர் நூல் வெளியீடு ஆகிய நிகழ்��்சிகள்
செப்டம்பர் 14 மாலை 3 மணிக்கு, Mayfield School, Pedley Road, Dagenham, RM8 1XE என்னுமிடத்தில்
Jaibhim foundation, VCK-UK-London, PA Study Circle , DSN UK, Art of Socio Publication, ITWA, Powwai, NRTIA UK, WTO, Vimbam, FebTa UK, Mamalas, Asso of International Tamil
ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நடைபெறுகிறது.
யானையை கொசுக்கள் கடிக்கின்றன என்பதால் யானைக்கும் கொசுவுக்கும் மோதல் என்று பொருளல்ல !
உறங்கும்போது சில மூட்டைப்பூச்சிகள் நம் ரத்தத்தை உறிஞ்சி விடுவதால் ம���ிதனுக்கும் மூட்டை பூச்சிக்கும் சண்டை என்று பொருளல்ல !
சிங்கத்தின் கர்ஜனையில் மிரண்ட சிறுநரிகள் ஊளையிடுவதால் சிங்கத்தை சிறுநரிகள் எதிர்ப்பதாக பொருளல்ல !
ஞான சூரியனைப் பார்த்து எச்ச நாயின் ��லந்தின்னும் மிச்ச நாய்கள் குரைப்பதால் சூரியனுக்கும் நாய்களுக்கும் போட்டி என்று பொருளல்ல !
தலைவர் திருமா….
ஞான சூரியன் !
தாகம் தீரா எரிமலை !
சம காலத்தில் வாழும் எவராலும்
முழுமையாக புரிந்து கொள்ள முடியாத
ஆழ்கடல் !
தோழர்களே !
திருவிழா கும்பலில் திருடும் கூட்டம்
தெய்வத்திற்கே சவால் விட்டு சாதித்ததாக
எண்ணிக்கொள்ளலாம் !
அம்பலப்பட்டு அடி வாங்கும்போது
காப்பாற்று தெய்வமே எ���
தாயுமான தலைவரின்
காலில் விழுந்து
அந்த கும்பல்
கதறும் காலம் வரும் !
ஆக17-தமிழர் எழுச்சிநாள்.
'மதச் சார்பின்மை காப்போம்' என்னும் கருப்பொருளை மையப்படுத்தி இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்படுகிறது.
ஆக-16 மாலை 4.00 மணி முதல்
நள்ளிரவு 12.00 மணி வரை
இவ்விழா நடைபெறவுள்ளது.
கீழ்க் காணும் அழைப்பிதழில் உள்ளவாறு இசைப்பொழிவு, கவிப்பொழிவு, கருத்துப்பொழிவு மற்றும்
வாழ்த்துப்பொழிவு என தொடர் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
உலகநாயகன்-கலைஞானி @ikamalhaasan அவர்கள் பங்கேற்கிறர்.
நிறைவாக,திண்டுக்கல் லியோனி உரையாற்றுகிறார்.
#தமிழர்_எழுச்சிநாள்
#திண்டுக்கல்_லியோனி
தலைநகரில் தொடரும் துப்புரவு பணியாளர்களின் உரிமைப் போராட்டம்.
தமிழக அரசே தாயுள்ளத்துடன் அவர்கள் கோரிக்கையை நிறைவேற்று.
வீதியை பெருக்கிய எம் உறவுகளை குப்பையென கருதும் மாநகராட்சி ஆணையரை வெளியேற்று.
பார்வையாளராய் கடந்து போக
இது காலில் தைத்த முள் அல்ல. !
சிறுத்தைகளுக்கு இது கண்ணில் தைத்த முள்!
மாநகராட்சி நிர்வாகமே…
அர்ச்சகர்கள் அரசு ஊழியர்களாக இருக்கும் போது ….
தூய்மைப்பணியாளர்கள்
அரசு ஊழியர்களாக இருக்க கூடாதா?
@CMOTamilnadu@mkstalin@Udhaystalin@thirumaofficial
ஏழை எளிய மக்களின் வீட்டை இடிக்கும் அதிகார வர்க்கம்.!
உச்ச நீதிமன்றம் போடப்பட்டுள்ள ஆணவ கொலை தடுப்பதற்கு
என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்.!
தலைவர் எழுச்சித்தமிழர்.MP அவர்கள்
@thirumaofficial
கவின் படுகொலைக்கு நீதி கேட்டு ��ிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமையில் இன்று (31-07-2025) திருநெல்வேலியில் நடைபெற்றது...
#JusticeForKavin
நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் அவர்களின் பெற்றோர் சந்திரசேகர் - தமிழ்செல்வி ஆகியோரை தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தில் இன்று சந்தித்து ஆறுதல் கூறினேன்
"எல்லா போட்டோவுலயும் ஆய்தத்தோட தான் இருக்கான்.. இவன எப்படி வளத்துருக்காங்கனு பாருங்க.." ஆணவப்படுகொலையை தடுக்க உடனே தனி சட்டத்தை போடனும்.. சமூகநீதி அறக்கட்டளை கௌசல்யா, வி.சி.கவினர் ஆவேச பேட்டி
#Thoothukudi | #Murder | #VCK | #Kavin | #PolimerNews
திருநெல்வேலியில் மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் சாதி ஆணவக் கொலை:
உடந்தையாக இருந்த பெற்றோரைக் கைது செய்ய வேண்டும்!
ஆணவக் கொலைகளைத் தடுப்பதற���கான சட்டத்தை உடனடியாக மாநில அரசு உருவாக்க வேண்டும்!
@thirumaofficial
#AloorShanavas #VCK
வெளியுறவுத் துறை அமைச்சருடன் சந்திப்பு
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள பாளையங்கோட்டையைச் சேர்ந்த சரவணன் ரஷ்யாவில் மருத்துவம் பயிலச் சென்றார். அங்கு பகுதி நேரமாக கூரியர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துள்ளார். அப்போது போதைப் பொருள் டெலிவரி செய்ததாக அவர் மீது பொய் வழக்கு போட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக அவரது பெற்றோர் அவரது வழக்குக்காகப் போராடி வந்தனர். இந்நிலையில் சிறையில் இருந்த சரவணன் தன்னைப் பலவந்தமாக ராணுவத்தில் சேர்த்து உக்ரேன் போருக்கு அனுப்புகின்றனர். ��னது உயிருக்கு ஆபத்து எனப் பெற்றோருக்கு வாய்ஸ் தகவல் அனுப்பியுள்ளார்.
சரவணனை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர் அவர்களிடம் நேரில் கடிதம் அளித்து வலியுறுத்தினேன்!