பக்ரீத் பெருநாள்:
----------------
சோதனைகளைத் தாங்கும் உள்ளமும்
ஈகம் செய்யும் அர்ப்பணிப்பும் வளர வேண்டும்!
இசுலாமியப் பெருங்குடி மக்களுக்கு வாழ்த்துகள்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இசுலாமியப் பெருங்குடி மக்களால் போற்றப்படும் தியாகத் திருநாளாம் பக்ரீத் பெருநாளில் இசுலாமியர்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நபிகள் நாயகத்திற்கும் முன்னோடியான இப்ராஹிம் நபி அவர்கள் தன் வாழ்வில் நேர்ந்த சோதனைகளை எல்லாம் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட பெருமகன் ஆவார். தான் ஏற்றுக்கொண்ட இறைநம்பிக்கை கொள்கைகளுக்காக தனது ஆருயிர் மகன் இஸ்மாயில் நபி அவர்களையே பலியிடத் துணிந்தார் என்றும்; அப்போது இறைவன் இப்ராஹிம் நபி அவர்களைத் தடுத்தாட்கொண்டு அவரது மகனைப் பலியிடும் செயலைத் தடுத்துநிறுத்தியதோடு, மாறாக ஆட்டுக்கிடாவைப் பலியிடுமாறு ஆணையிட்டார் என்றும்; அந்த இறைநம்பிக்கை , இறைப்பற்று, மகனையே ஈகம் செய்திட முன்வந்த துணிச்சல் ஆகியவற்றை நினைவுகூர்ந்து போற்றிடும் வகையில், இசுலாமியர்கள் இந்த நாளை பக்ரீத் பெருநாளாக்க் கொண்டாடி வருகின்றனர். இதனை 'குர்பானி' எனவும் கொண்டாடுகின்றனர்.
இறைவனின் சோதனைகளைத் தாங்கும் நெஞ்சுறுதியும், தன் மகனையே தியாகம் செய்ய முன்வந்த ஈக உணர்வும் இப்ராகிம் நபி அவர்களிடத்தில் மேலோங்கியிருந்ததை நபிகள் நாயகம் முகமது நபி அவர்கள் உட்பட, அவரைத் தொடர்ந்து இஸ்லாமியப் பேரினம் என்றென்றும் நெஞ்சில் இருத்திப் போற்றி வருகிறது என்பது பக்ரீத் நாளின் மகிமையும் பெருமையும் ஆகும்.
எத்தகு சோதனைகளையும் தாங்கும் மனவலிமையும், தாம் ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காக எதனையும் இழக்கத் துணியும் அர்ப்பணிப்பும் நம்மைப்போன்ற யாவருக்கும் வளர்ந்திட வேண்டும் என்பதே நமக்கு இந்தப் பெருநாள் உணர்த்தும் அறமாகும்.
இத்தகைய போற்றுதலுக்குரிய ஈகத் திருநாளில், ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான 'ஹஜ் என்னும் புனித மெக்கா பயணத்தை' மேற்கொள்ளும் ஹாஜிகள் உள்ளிட்ட இஸ்லாமியர் யாவருக்கும் எமது ஈகைத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு. ஆர்.வீ.இரஞ்சித்குமார் அவர்கள் தலைமையில் வனத்துறையின் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் தலைமையில் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து தாட்கோ அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
#JustNow குன்னத்தில் நடந்த விசிக - திமுகவினர் மோதல் கவலை அளிக்கிறது, போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கவில்லை; தெரியாத கட்சியினரே பங்கேற்றனர் - திருமாவளவன்
த.வெ.க.வில் இணையும் அ.தி.மு.க.வினர், இது ஆரோக்கியமான அரசியல் இல்லை.
விமர்சனங்களுக்கு இடம்கொடுக்கும் வகையில் தவெக செயல்படக்கூடாது, 5 ஆண்டுகள் ஆட்சியில் நீடிப்போம் என்ற நம்பிக்கையில் செயல்பட வேண்டும்
ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.க்களை தவெகவில் இணைததால் கட்சியின் நம்பகத்தன்மை கெடும்
தவெக அரசுக்கான ஆதரவை திரும்பப்பெற மாட்டோம் - திருமாவளவன்
#Chenni #VCK #Thirumavalavan #DMK #TVK #ADMK
உதகமண்டலம் மாவட்டம் வெல்லிங்டன்னில் நடைபெற்ற
இந்திய பாதுகாப்புத் துறையின் கலந்தாய்வுக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை நாடாளுமன்ற குழு உறுப்பினர் என்கிற முறையில் பங்கேற்றேன்!
பக்ரீத் பெருநாள்:
----------------
சோதனைகளைத் தாங்கும் உள்ளமும்
ஈகம் செய்யும் அர்ப்பணிப்பும் வளர வேண்டும்!
இசுலாமியப் பெருங்குடி மக்களுக்கு வாழ்த்துகள்!
~~~~~~~~~~~~~~~~~~
இசுலாமியப் பெருங்குடி மக்களால் போற்றப்படும் தியாகத் திருநாளாம் பக்ரீத் பெருநாளில் இசுலாமியர்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நபிகள் நாயகத்திற்கும் முன்னோடியான இப்ராஹிம் நபி அவர்கள் தன் வாழ்வில் நேர்ந்த சோதனைகளை எல்லாம் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட பெருமகன் ஆவார். தான் ஏற்றுக்கொண்ட இறைநம்பிக்கை கொள்கைகளுக்காக தனது ஆருயிர் மகன் இஸ்மாயில் நபி அவர்களையே பலியிடத் துணிந்தார் என்றும்; அப்போது இறைவன் இப்ராஹிம் நபி அவர்களைத் தடுத்தாட்கொண்டு அவரது மகனைப் பலியிடும் செயலைத் தடுத்துநிறுத்தியதோடு, மாறாக ஆட்டுக்கிடாவைப் பலியிடுமாறு ஆணையிட்டார் என்றும்; அந்த இறைநம்பிக்கை , இறைப்பற்று, மகனையே ஈகம் செய்திட முன்வந்த துணிச்சல் ஆகியவற்றை நினைவுகூர்ந்து போற்றிடும் வகையில், இசுலாமியர்கள் இந்த நாளை பக்ரீத் பெருநாளாக்க் கொண்டாடி வருகின்றனர். இதனை 'குர்பானி' எனவும் கொண்டாடுகின்றனர்.
இறைவனின் சோதனைகளைத் தாங்கும் நெஞ்சுறுதியும், தன் மகனையே தியாகம் செய்ய முன்வந்த ஈக உணர்வும் இப்ராகிம் நபி அவர்களிடத்தில் மேலோங்கியிருந்ததை நபிகள் நாயகம் முகமது நபி அவர்கள் உட்பட, அவரைத் தொடர்ந்து இஸ்லாமியப் பேரினம் என்றென்றும் நெஞ்சில் இருத்திப் போற்றி வருகிறது என்பது பக்ரீத் நாளின் மகிமையும் பெருமையும் ஆகும்.
எத்தகு சோதனைகளையும் தாங்கும் மனவலிமையும், தாம் ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காக எதனையும் இழக்கத் துணியும் அர்ப்பணிப்பும் நம்மைப்போன்ற யாவருக்கும் வளர்ந்திட வேண்டும் என்பதே நமக்கு இந்தப் பெருநாள் உணர்த்தும் அறமாகும்.
இத்தகைய போற்றுதலுக்குரிய ஈகத் திருநாளில், ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான 'ஹஜ் என்னும் புனித மெக்கா பயணத்தை' மேற்கொள்ளும் ஹாஜிகள் உள்ளிட்ட இஸ்லாமியர் யாவருக்கும் எமது ஈகைத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
“பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரே இருக்கவேண்டும் என்ற முந்தைய அரசின் நிலைபாட்டைப் பின்பற்றவேண்டியதில்லை” என உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பது மாநில உரிமைகளுக்காகத் தமிழ்நாடு போராடிப் பெற்றதைக் கைவிடுவது மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் அவமதிப்பதாகும். மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் இதை முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் ஒப்புதலோடுதான் சொல்கிறாரா?
மே 20, பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் பிறந்தநாளான இன்று சென்னை கிண்டியில் அமைந்துள்ள திராவிடப் பேரொளி அயோத்திதாசர் மணிமண்டபத்தில் அவரது திருஉருவச் சிலைக்கு புகழ்வணக்கம் செலுத்தினோம்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தம்பி வன்னிஅரசு அவர்கள் இன்று அமைச்சராகப் பொறுப்பேற்றார். மாண்புமிகு அமைச்சர் வன்னிஅரசு அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!