சீர்காழி தவெக ஒன்றிய துணைச் செயலாளர் ஜில்லா மணியும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து, ஒரு வயதான முதியவரைக் காரில் கடத்தி, தலையைப் பிடித்து இழுத்து, கொடூரமாகத் துன்புறுத்திச் சிரித்துக்கொண்டே செல்பி வீடியோ வெளியிட்டுள்ள இந்த மனிதநேயமற்ற வன்கொடுமைச் செயல் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!
சமூக வலைதளங்களில் சாதாரண மக்கள் சிறு விமர்சனம் செய்தால் கூடப் போதும், உடனே பாய்ந்து சென்று கைது செய்யும் காவல்துறை, தவெகவினர் நடத்தும் இந்த அப்பட்டமான ரவுடியிசத்தைக் கண்டுகொள்ளாமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்?
பழனி கோயில் நில விவகாரத்தில் என் பெயரை இணைத்து சில ஊடகங்கள் வெளியிட்டு வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை; ஆதாரமற்றவை என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நிலத்தை வாங்கியதாகக் கூறப்படுபவர்கள் யார் என்பதே எனக்குத் தெரியாது. அவர்களுடனோ, சம்பந்தப்பட்ட அறக்கட்டளையுடனோ, கிரயப் பத்திரத்துடனோ எனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்த விவகாரத்தை ஊடகங்கள் வழியாகவே நானும் அறிந்தேன்.
கோடிக்கணக்கான மதிப்புள்ள கோயில் நிலம் பதிவு செய்யப்பட்டதை முதலில் கேள்விக்கு உட்படுத்தியதே திமுக தான்; நடுநிலையான விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியதும் திமுக தான். மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே என் மீது வீண் வதந்தி பரப்பப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியில் பழனி முருகன் கோயிலுக்குச் செய்யப்பட்ட பணிகள் மக்கள் அறிந்ததே. பக்தர்களின் உரிமைகளுக்காகவும், கோயில் சொத்துகளைப் பாதுகாப்பதற்காகவும் திமுக தொடர்ந்து போராடும்.
அவதூறு பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. முறையான விசாரணையில் உண்மை வெளிவரும். ஆதாரம் இல்லாமல் என் மீது பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான எந்த செய்தியாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
#WATCH | TNPSC தேர்வில் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப திமுகவிற்கு கோரிக்கை வைத்த மாணவர்கள்;
திமுக மாணவர் அணி செயலாளர் வீரமணி பேட்டி
#SunNews | #DMK | #TNPSC
"இதே தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணாலேயே குற்றஞ்சாட்டப்பட்ட த.வெ.க MLA, கைது ஏதும் செய்யப்படாமல் லாரி டயர்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்." - உதயநிதி ஸ்டாலின்
#UdhayanidhiStalin | #Saravanan | #TVK | #DMK
பெயர் : ஜில்லா மணி
பொறுப்பு : TVK கட்சி சீர்காழி ஒன்றிய கழக துணை செயலாளர்..
இவனெல்லாம் மனுஷனா?
வீடியோ விவகாரத்தை விசாரித்து கைது நடவடிக்கை என்று ஒன்று நடந்துள்ளதா என தேடி பார்த்தால் எதையும் காணவில்லை..
யார் கண்டா நாளை இவனே சமூக நலன் மேம்பாட்டு துறை அமைச்சராக வந்தாலும் வருவான்..
#WATCH | "உங்க பையன்தான் உங்க கூட இல்ல சார்.. ஆனா என் அப்பா எனக்காகவும், விளாத்திகுளம் மக்களுக்காகவும் ரொம்ப காலமா உழைக்கிறார்.."
கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனின் மகன் பேட்டி.
#SunNews | #Markandeyan | #TVKVijay