நீல டிக்கிற்குக் காத்திருக்கும்
"தூங்கிட்டியா?"
அனுப்பத் தடுமாறி கிடப்பிலிருக்கும்
"என்ன பண்ற?"
You deleted this message என்பதற்கு முந்தைய "கொஞ்சம் பேசணும்"
ஒரு இரவு எத்தனையைத்தான் தாங்கும்!
"சரி வா படுத்துக்கோ"
அன்பின் சரணாகதிக்கு அழமட்டுமே தெரியும்.
"இந்த வழியா ப்ரெண்டை பார்க்க வந்தேன்"
"இந்த புக் நல்லாருக்கும், அதான் உனக்கு குடுக்கலாம்னு வந்தேன்"
"இந்த கடைல டீ நல்லாயிருக்கும், அதான்"
"சும்மா அப்டியே நடந்துவந்தேன்"
"ஏதோ சொல்லவந்து மறந்துட்டேன்"
"பார்க்கணும்போல இருந்துச்சு" என்பது தவிர்த்து மற்றெல்லாமே பிரியத்தின் சாக்கு.