Dr. ஆர்.எம்.அழகப்பா செட்டியார், Jupiter Airways பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா?
வெற்றி கிடைக்குமா என்று மட்டும் யோசிக்காமல், விதையை விதைக்கத் துணியுங்கள். ஆரம்பத்தில் யாருக்கும் தெரியாத முயற்சிகள், அடுத்த தலைமுறைக்கு மிகப்பெரிய வாய்ப்புகளாக மாறலாம்.
தவெக அரசு ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து மாதங்களில், அரசு எடுத்த பல முடிவுகள், பின்னர் திரும்பப் பெறப்படுவது, உண்மையில் தமிழக அரசில் என்ன நடக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.
முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி நியமனம் முதல், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் மாற்றம், ஆவின் பால் மொத்த விற்பனையாளர்களுக்கான விலை உயர்வு, மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடு, மற்றும் தற்போது சட்டம் ஒழுங்கு தொடர்பான RTI விலக்கு வரை, ஒரு முடிவு எடுக்கப்படுகிறது, அந்த முடிவுக்கு எதிர்ப்பு எழுந்ததும், உடனே அந்த முடிவு திரும்பப் பெறப்படுகிறது.
இந்த ஒவ்வொரு முடிவும் முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் கவனத்திற்கும், ஒப்புதலுக்கும் சென்றுதான் எடுக்கப்படுகிறதா? இல்லை, முதலமைச்சருக்கு தெரியாமல் அரசு நிர்வாகத்தில் இத்தகைய முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றனவா?
அவசர அவசரமாக முடிவுகளை அறிவித்துவிட்டு, எதிர்ப்பு வந்த பிறகு திரும்பப் பெறுவது, நிர்வாகத்தில் தெளிவின்மையையும், இந்த முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
ஒரு அரசு கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு முன், அதன் சட்டரீதியான, நிர்வாகரீதியான மற்றும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்வது அவசியம். தவெக அரசு, இத்தகைய முடிவுகளை அவசரமாக எடுத்து, பின்னர் எதிர்ப்பு எழுந்தவுடன் திரும்பப் பெறுவதற்குப் பதிலாக, முடிவெடுக்கும் முறையில் அதிக கவனமும், வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணர்வும் காட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
வரும் ஆகஸ்ட் 15 அன்று, கிராம சபையில் நமது குரல் ஒலிக்கட்டும்.
கருத்துகளை முன்வைப்போம். தீர்வுகளை உருவாக்குவோம். கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்போம். நமது கிராமத்தின் வளர்ச்சிக்குப் பணியாற்றுவோம்.
நமது கிராமம், நமது பொறுப்பு!
எனக்கு பிஜேபி மேல் உள்ள பெரும் கோவம் பெரும் குற்றச்சாட்டே இதுதான்...
நான் Atleast ஒரு நாளை க்கு 4 மணிநேரம் ஆவது twitter ல இருக்கேன் ..8 வருஷமா இருக்கேன்..எனக்கே இதெல்லாம் புதிய செய்தி
social mediaல account இல்லாதவனுக்கு இது போய் சேர இன்னும் 10 வருஷமாகும்..
இதையெல்லாம் நீங்க இந்தியாவின் ஒவ்வொரு மூலை க்கும் எட்டும் விதத்தில் பிரச்சாரம் பண்ணிருக்க வேண்டாமா...???
EVM பற்றி இவர் சொல்லும் infos எல்லாம் யாராவது எளிய மக்களுக்கு கொண்டு போங்கப்பா..
ராகுல் காந்தி எல்லாம் வெக்கமே இல்லாம இன்னும் evm மீது தான் பழி போடுறான்