மேடைதோறும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற குறளை முழங்கும் @CMOTamilNadu அவர்களே,
உங்கள் கட்சியைச் சேர்ந்த நாமக்கல் மாவட்டச் செயலாளர், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சொந்தக் கட்சி நிர்வாகியை சாதியைக் குறிப்பிட்டு, மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் வசைபாடும் ஆடியோ வெளியாகி, தமிழக வெற்றி கழகத்தின் லட்சணத்தை பட்டவர்த்தனமாக எடுத்துக்காட்டியுள்ளது.
உங்கள் கட்சியில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிக்கே இந்த நிலை என்றால், தமிழகத்தில் வசிக்கும் பிற தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை என்ன?
இதுபோன்ற கீழ்த்தரமான நபர்களின் கூடாரமாக விளங்கும் 'தமிழக வெற்றி கழகம்', ஒரு தலைமுறையை அழிக்க வந்த தமிழகத்தின் சாபக்கேடு.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க
திருச்சி மாவட்டம் சிறுகளப்பூரில் கடந்த 30.06.2026 அன்று இயற்கை உபாதை கழிக்கச் சென்ற செந்தமிழ்ச்செல்வி எனும் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இக்கொடூரச் சம்பவம் நடைபெற்று 18 நாட்களைக் கடந்தும் குற்றவாளிகளைக் கைது செய்யத் தவறிய காவல்துறையைக் கண்டித்தும்; பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாத தவெக அரசைக் கண்டித்தும் திருச்சி புறநகர் கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான கோவில் நிலம், வெறும் ரூ. 2 கோடி மதிப்பிற்கு தனியார் பெயருக்கு மாற்றப்பட்டிருக்கும் விவகாரத்தில் தவறு நடந்திருப்பதை அமைச்சரே ஒப்புக்கொண்டு இருப்பதால், இது மிகப்பெரிய ஊழல்!
இதனை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள CBCID விசாரிப்பது என்பது, இந்த கேள்விகளுக்கு உண்மையான பதிலைத் தராது.
நேர்மையான விசாரணை நடைபெற, பழனி முருகன் கோவில் சொத்து முறைகேடு வழக்கை CBI விசாரிக்க உடனடியாக இந்த அரசு மாற்றிட வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
தமிழக விவசாயிகளுக்குப் பயனளிக்கும் அம்மா அரசின் கனவுத் திட்டமான 'நடந்தாய் வாழி காவேரி' திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட தவெக அரசை வலியுறுத்தல்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
அரசுக்கு கூடுதல் வருவாய் வந்தாலும், உதயநிதி மற்றும் ரதீஷ் ஆசி பெற்ற அதே கால்ஸ், எஸ்.என்.ஜெ, என்ரிக்கா நிறுவங்களிடம் கொள்முதல் ஆணைகளை தொடர்ந்து வழங்குவது ஊழல் இல்லையா ?
வேறு மதுபான உற்பத்தியாளர்கள் இல்லையா ?
இதர மாநிலங்களில் கிடைக்கும் மது வகைகள் ஏன் தமிழகத்தில் கிடைப்பதில்லை ?
ஜூனியர் விகடனில் வந்தது போல, ரதீஷின் ஆதிக்கம் தொடர்கிறதா ? @TVKVijayHQ
நல்லா இருப்போம், நல்லா இருப்போம், நல்ல்ல்லா இருப்போம் ன்னு சொன்னீங்களே @actorvijay….
உங்க ஆட்சில தமிழகப் பெண்கள் பாதுகாப்பாக இல்லையே..??!!
உங்க பணியை செய்ங்க னு சொன்னா வேற பழி போடுறாங்க ன்னு புலம்புவீங்க..!!
ரீல் உலகத்தில் இருந்து வெளியே வந்து ரியல் Action-ல் எப்போ தான் இறங்குவீங்க?
#பொய்க்கால்_குதிரை_அரசு
சென்னை கோடம்பாக்கத்தில் காவலர் உள்ளிட்ட மூவர் சிறுவனுக்கு வாயில் மது ஊற்றி, கொடும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
சிறுவன் தன்னை தற்காத்துக் கொள்ள
டிவி ரிமோட்டால் காவலரைத் தாக்கிவிட்டு தப்பி ஓடி, அசோக் நகர் காவல் நிலையத்திற்கு நடந்தே வந்து புகார் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
தமிழகத்தில் நாள்தோறும் பரிணமிக்கும் குற்றச் செயல்களின் தன்மை ,
மிகுந்த அச்சமூட்டுகிறது.
@CMOTamilNadu அவர்களே -
எந்த குழந்தைகளை வைத்து நீங்கள் வாக்கு சேகரித்தீர்களோ, அதே குழந்தைகள் உங்கள் ஆட்சியில் பாதுகாப்பு இன்றி நிற்கின்றனர். இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
“சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்” என ஒன்றை நீங்கள் நடத்தியதாக ஒரு வீடியோவை உங்கள் அரசு வெளியிட்டது. அது மற்றுமொரு சம்பிரதாயத்திற்காண கூட்டமாக மாற்றி விடப்பட்டு உள்ளதோ என்ற சந்தேகங்கள் வலுப்பெறுகிறது.
வேலியே பயிரை மேயும் கொடூரம் நடப்பது உங்கள் மனதை உறுத்தவில்லையா?
சிறுவனுக்கு நேர்ந்துள்ள இந்த கொடுந்துயருக்கு காரணமான காமுகர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனியேனும் “கோட்-சூட்-போட்டோஷூட்” மாடல் ஆட்சியை கைவிட்டு, சட்டம் ஒழுங்கைக் காக்க உணர்வோடு செயல்பட வேண்டும் என பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் #பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த 'பக்ரீத்' திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில், உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்கிட, அனைவரும் மனிதநேயத்துடனும், சகோதரத்துவத்துடனும், தியாகச் சிந்தனையுடனும் வாழ்ந்திட வேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன்.
#EidMübarek
@AIADMKOfficial
ஒரே ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில், இருமுறை விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்து, தமிழக உழவர்களின் வாழ்வாதாரத்தை அரணாக இருந்து காத்த வரலாற்றுச் சாதனை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு மட்டுமே உரியது!
2021-ல் கழகம் ஆட்சிப் பொறுப்பை இழந்தது முதல் இன்றுவரை, இந்த இயக்கத்தை கட்டிக் காப்பதற்காக பல்வேறு போராட்டங்களை நான் சந்தித்து வருவதை, கழகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் நன்கு அறிவார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடனான எனது செயல்பாட்டை கழகத் தொண்டர்களும், தமிழக மக்களும் நன்கு அறிவார்கள்.
“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்' என்று சூளுரைத்த இதய தெய்வம் அம்மா அவர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். கழகம் தற்போது வெற்றி வாய்ப்பை இழந்தாலும், நாம் உணர்வுப்பூர்வமாக செயல்பட்டு மீண்டும் கழகத்தின் நல்லாட்சி அமைந்திட அரும்பணியாற்றுவோம்.
தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக தொடங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மேலும் மேலும் வலுப்பெற உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கழக நிர்வாகிகளையும், கழக உடன்பிறப்புகளையும் அன்போடும், பாசத்தோடும் கேட்டுக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எழுச்சியுடன் முன்வந்து ஜனநாயகக் கடமையாற்றிய அனைத்து மக்களுக்கும் எனது வணக்கத்தையும், நன்றியையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் தான் இங்கு நீதிபதிகள். மக்களுக்காகத் தான் ஆட்சி. எனவே, மக்கள் வழங்கிய முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். புரட்சித் தலைவியின் வழியில், இந்தப் பின்னடைவில் இருந்து விரைவில் மீண்டு வருவோம்.
@AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு பிரச்சாரம் செய்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கும், மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய அமைச்சர்களான திரு. @PiyushGoyal, திரு. @JPNadda, பா.ஜ.க. தேசியத் தலைவர் திரு. @NitinNabin ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
நம் கூட்டணியின் வெற்றிக்கு அயராது உழைத்த, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான, தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு. @NainarBJP அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் (@draramadoss) அவர்களுக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. @TTVDhinakaran அவர்களுக்கும், அக்கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்களுக்கும்;
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. @GK__VASAN அவர்களுக்கும், புதிய நீதிக் கட்சித் தலைவர் டாக்டர் @DrACSOfficial அவர்களுக்கும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் டாக்டர் @PaarivendharTR அவர்களுக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. @JohnPandianTMMK அவர்களுக்கும், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை டாக்டர் M. ஜெகன்மூர்த்தி அவர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதோடு, நமக்கு நிபந்தனையின்றி பேராதரவு அளித்த கட்சிகள், அமைப்புகள் மற்றும் சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருக்கும் நன்றி.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு அயராது உழைத்திட்ட தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள், கிளை, வார்டு, வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த, வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியுடன் ஃபீனிக்ஸ் பறவை போல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும்.
“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று சூளுரைத்த நம் புரட்சித் தலைவி அம்மாவின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பணியில் என்றென்றும் ஈடுபடும் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
#AIADMK_ForeverForTN
சபாநாயகர் அப்பாவுவை தூக்கி வெளியே எறிந்த CRPF வீரர்கள்..நீ யாரா வேணா இரு உள்ள அத்துமீறினா குப்பை தான்..போ வெளியே என்று தூக்கி வெளிய எறிந்த ஜவான்கள்..சிறப்பான சம்பவம்..
அதிமுகவில் பல பதவிகளை அனுபவித்துவிட்டு திமுகவின் B TEAM ஆக செயல்பட்டவர்கள் இன்று குப்பைக்கு சென்று விட்டார்கள்!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026