#சிபா_ஆதித்தனார்
பத்திரிகையாளராக, சட்டமன்ற உறுப்பினராக, பேரவைத் தலைவராக என பல்வேறு வழிகளில் தமிழர்களின் அடையாளத்தையும், தன்னம்பிக்கையையும் வலுப்படுத்த தன்னுடைய எழுத்துக்களாலும், செயல்பாடுகளாலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஐயா சி.பா ஆதித்தனார் அவர்களின் அரும்பெரும் பணிகளை எந்நாளும் நினைவில் வைத்துப் போற்றுவோம்.
கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்கள்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 11 வயது சிறுமி - குழந்தைகள் மற்றும் பெண்களின் ��ண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் என்ற முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் வீரவசனம் என்ன ஆனது?
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வண்டிப்பாளையம் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து துன்புறுத்திய நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட செய்தி ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, தற்போ��ு மரக்காணத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த சம்பவம் தமிழகத்தில் ஒட்டுமொத்த பெண் குழந்தைகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்வைக் கண்டு கொதித்தெழுந்து தங்கைகள் அனைவருக்கும் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் எனக் கடிதம் எழுதிய திரு ஜோசப் விஜய் அவர்கள், தான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் அன்றாடம் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைக் கண்டும் காணாமல் வாய்மூடி மௌனம் காப்பது ஏன் ?
எனவே, சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கைதான குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையை பெற்று தருவதோடு, தனது ஆட்சியைப் பாதுகாப்பதில் செலுத்தும் கவனத்தைக் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிலும் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வ���ியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
#வீரவசனம்_என்னஆனது_விஜய்
குழந்தைகள் மற்றும் பெண்களின் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் என்ற முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் வீரவசனம் என்ன ஆனது?
கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்கள்
#AMMKupdates
வேலூர் மாநகர் மற்றும் புறநகர், ராணிப்பேட்டை, திருப்பூர் மாநகர், மாவட்ட கழக செயலாளர்கள் நியமனம்.
கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்கள் அறிவிப்பு
தலைமைக் கழக அறிவிப்பு:இராமநாதபுரம் மாவட்டக் கழகம், கழக அமைப்பு ரீதியாக இனி இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் மற்றும் இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் என இரண்டு மாவட்டக் கழகங்களாக மறுசீரமைப்பு. இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளராக திரு.S.கணேசன் அவர்களும் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளராக திரு. பொ. பாண்டியன் அவர்களும் நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: செங்கல்பட்டு மத்திய மாவட்டக் கழகம், மற்றும் செங்கல்பட்டு தெற்கு மாவட்டக் கழகம் மறு சீரமைப்பு. செங்கல்பட்டு மத்திய மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் டாக்டர்.A.சதீஷ்குமார், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் திரு.T.S. அறிவகம் நியமனம்.
காவிரி நதிநீர் ���ிவகாரத்தில் தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் - மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திடும் வகையில் தொடர் சட்ட நடவடிக்கைகள் எடுத்திட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் அ���ிவுறுத்தியிருப்பது, கடந்த காலங்களைப் போல வெறும் சம்பிரதாய அறிக்கையாக அமைந்திடக் கூடாது.
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கும் முரணாகத் தமிழகத்திற்கான உரிய நீரை வழங்காமலும், காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதத்தைக் கடந்த ஆட்சியாளர்கள் எளிதாக எதிர்கொண்டதன் விளைவே தற்போது மேகதாது அணைக்கான பூமி பூஜை குறித்துப் பேசும் அளவிற்கான துணிச்சலை கர்நாடக அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக காங்கிரஸ் அரசின் மேகதாது அணைத் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், காவிரி டெல்டா பகுதிகள் முழுவதும் பாலைவனமாவதோடு, விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும், தமிழகத்தின் பல மாவட்ட மக்களுக்கான குடிநீர் தேவையும் கேள்விக்குறியாகிவிடும்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தயவால் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தவெக அரசு, தன் ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்க காவிரி விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையைக் கர்நாடக அரசிடம் தாரைவார்க்குமேயானால், தமிழக மக்களுக்கு அதைவிட மிகப்பெரிய துரோகம் இருக்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே, மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக மட்டுமல்லாது, தவெகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மேலிடம் மூலம் அரசியல் ரீதியாகவும் அழ���த்தம் கொடுத்து தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதோடு, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழகத்திற்கான உரிய நீர் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் எனவும் தமிழக அரசையும், முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ
அதிமுக சார்பில் வெற்றி பெற்று, தவெகவில் இணைந்ததை கூட மன்னிக்கலாம்..
ஆனால் புதிய ஆட்சி பதவியேற்ற 15 நாளிலயே, அது அம்மாவின் ஆட்சி போல இருக்குனு சொன்னீங்க பாரு,
அதுக்கு தான் செருப்பை தேடனும்னு தோணுது ☺
#AMMKcaresTN
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் - ��ேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்கள்
ஆளுநர் மாளிகை முன் நடுநிசியில் நான் வெளிக்கொணர்ந்த தவெக வின் குதிரைபேர அரசியல் தொடர்ந்து வெட்ட வெளிச்சமாகி வருகிறது.
அம்மாவின் தொண்டர்களை குதிரை பேரத்தின் மூலம் அழிக்க நினைக்கும் நாசகார சக்திக்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதும் காலம் விரைவில் வரப்போகிறது.
@TVKVijayHQ@TVKPartyHQ
தலைமைக் கழக அறிவிப்பு: தஞ்சாவூர் மாநகர், தஞ்சாவூர் வடக்கு மற்றும் தஞ்சாவூர் தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்கள் தஞ்சாவூர் மத்தியம், தஞ்சாவூர் கிழக்கு மற்றும் தஞ்சாவூர் தெற்கு என மறுசீரமைப்பு- தஞ்சாவூர் ��த்திய மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பில்
திரு.P.ராஜேஸ்வரன், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பில்
அக்ரி திரு.G.சரவணகுமார், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பில்
திரு.V.M.பாண்டியராஜா நியமனம்.
தலைமைக் கழக அறிவிப்பு: திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகம், மற்றும் வடசென்னை மேற்கு மாவட்டக் கழகம் கழக அமைப்பு ரீதியாக மறுசீரமைக்கப்படுகிறது. திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில்
திரு.S.லோகநாதன், வடசென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில்
திரு.பி.ஆனந்தன் ந��யமனம்.
#TVKFails
ஆளுநர் மாளிகை முன் நடுநிசியில் நான் வெளிக்கொணர்ந்த தவெக வின் குதிரைபேர அரசியல் தொடர்ந்து வெட்ட வெளிச்சமாகி வருகிறது.
கழகப் பொதுச்செயலாளர் திரு. #TTVDhinakaran அவர்கள்
#வேண்டுமா_இப்படியொரு_பிழைப்பு
மூன்று எம்எல்ஏக்களும் பதவியை ராஜினாமா செய்து விட்டுத்தானே வந்தார்கள், அது எப்படி குதிரை பேரமாகும் என்கிறார்கள் சிலர்...
பதவி ஏற்ற முதல் நாளிலயே, "வாக்குறுதிகளை நிற��வேற்ற எனக்கு அவகாசம் வேண்டும்", என சொல்லி, இதுவரை கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட முழுமையாக நிறைவேற்ற கைழுத்திடாத ஆட்சி,
பதவியேற்ற 15 தினங்களுக்குள் 30க்கும் அதிகமான கொலைகள், பாலியல் குற்றங்கள் என சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு,
அதிகரிக்கும் மின்வெட்டு, அரசு நிர்வாகத்தில் ஆளும்கட்சியினரின் அத்துமீறல், பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்ட குழந்தையின் மரணத்தை கூட சிரிப்��ால் கடக்கும் அமைச்சர்கள், அதிகாரிகள் என ஆதரித்து வாக்களித்தவர்கள் முன்பு கூட தலைகவிழ்ந்து நிற்கிறது இந்த ஆட்சி.
அப்பேற்பட்ட ஆட்சியை கண்டு வியந்து, உச்சி குளிர்ந்து, மனமெங்கும் மகிழ்ச்சி பொங்கி, வெற்றி பெற்ற 21 நாட்களிலயே, அதுவும் எல்லோருக்கும் கிடைத்திடாத சட்டமன்ற உறுப்பினர் என்கிற பெரும்பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆளும்கட்சியில் இணைந்தது பணத்திற்கும், பதவிக்கும் இல்ல��யென அந்த மூவரும் சொல்வதை, அவர்கள் வீட்டு அம்மாவும், அப்பாவும், மகன்களும், மகள்களும் உண்மை தான் என முதலில் சத்தியம் செய்யட்டும், விமர்சனத்தை நிறுத்திக் கொள்கிறோம்.