பழநி ஆண்டவருக்கே மொட்டை போடும் தவெக ரியல் எஸ்டேட் அரசு!
பழநி ஆண்டவன் பூங்கா சாலையில், கடந்த கால சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு திமுக ஆட்சியில் 2025-ம் ஆண்டு மீட்கப்பட்டு, பக்தர்களின் வாகன நிறுத்தமாக மாற்றப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் கோயில் நிலத்தை, வெறும் ரூ.2 கோடிக்குத் தாரை வார்த்திருக்கிறது தவெக அரசு!
கடந்த ஜூலை 6-ம் தேதி, பழநி இணை சார்பதிவாளர் பணி மாறுதலான அந்த ஒருநாள் இடைவெளியைத் தந்திரமாகப் பயன்படுத்தி, நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி இந்த இமாலய முறைகேடு அரங்கேற்றப்பட்டுள்ளது; இது தவெக அரசின் நிர்வாகச் சீர்கேட்டை அப்பட்டமாகக் காட்டுகிறது.
நிலப் பதிவு முடிந்த அடுத்த நொடியே, அந்த அதிகாரிக்குப் பதவி உயர்வு வழங்கி வெகுமதி அளிக்கப்பட்டிருப்பது, இது அரசின் நேரடித் துணையோடு திட்டமிட்டு நடத்தப்பட்ட 'கொள்ளை' என்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களே! கேமரா முன்னால் கோயில் ஆய்வுகளை ரீல்ஸாகப் படம்பிடித்து நாடகமாடும் நீங்கள், திரைக்குப் பின்னால் நிலத் தரகராகச் செயல்பட உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
முந்தைய ஆட்சியில் சுமார் ரூ.1,316 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்ட நிலையில், இன்று நீங்கள் ஒரு ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் போலக் கோயில் நிலங்களைத் தனிநபர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுப்பது எந்த வகையில் நியாயம்?
பொறுப்பேற்ற இரண்டே மாதத்தில் பழநி ஆண்டவருக்கே மொட்டை போடும் உங்கள் இந்த அட்ராசிட்டியை ஆன்மீக பக்தர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
Going as per Plan till now
நேற்றைய அண்ணாமலை பேச்சு ஒன்றைதான் குறிக்கிறது
வழக்கம் போல திராவிட எதிர்ப்பு திமுக எதிர்ப்பு
விஜய்க்கு time குடுங்கனு மட்டும் சொல்லி நிருத்திட்டார்
அவர்களின் திட்டம் ஒன்றுதான் தமிழ்நாட்டில் திராவிட அரசியலை அப்புறப்படுத்திவிட்டு
Apolitical vs Right wing state ஆக மாற்றுவது
விஜய் ரசிகர்களை வைத்து அனைத்து உரிமைகள் பறிப்போவதையும் உளவியலாக Normalize செய்வார்கள்
பிறகு இதெல்லாம் ஒரு மேட்டரா என்று மக்கள் மனம் Normalize ஆனப்பின்பு RSS பாஜக பட்டுக்கம்பளத்தில் வலம்வரும்
இடதுசாரிகள், தலித் இயக்கங்கள் காணாப்பொணமாக ஆக்கப்படும்
Narrative : Vijay & Annamalai சயமாக அரசியலுக்கு வந்தவர்கள் என்று project செய்து Udhay dynasty politics என்ற ஒற்றை புள்ளியில் சுருக்கி தமிழ்நாட்டை டெல்லிக்கு அடிமை ஆக்குவது.
காங்கிரஸ் இதை வேடிக்கை பார்க்கும் ஏன் என்றால் அவர்கள் எதிர்ப்பார்ப்பதும் இதுதான்
Randomly noticed this while watching the movie
~ கலைஞர் மறைவுக்கு பிறகு நடந்த நினைவஞ்சலி கூட்டத்துல Dr. Mohan பேசும்போது கலைஞர்தான் இந்தியாவுல முதல்முறையா Cochlear Implant அரசாங்கத்தோட நிதியில பண்ணாரு, அந்த நேரத்துல ஒரு குழந்தைக்கு பண்ண ஆகுற செலவு கிட்டத்தட்ட 6 லட்சம். அதுக்காக WHO -ல நடந்த கூட்டத்துல கலைஞர் Standing ovation வாங்குனாருனு, கிட்டத்தட்ட 2019 வரைக்கும் 2000+ குழந்தைகள் பயனடைந்து இருக்காங்கனு பேசியிருந்தாரு..
அப்படியே கட் பண்ணா, Yatra படத்துல கலைஞர் இடத்துல YS ராஜசேகரரெட்டியா மம்முட்டி இந்த திட்டத்தை ஆந்திராவுல இருக்குற ஒரு சின்ன பொண்ணுக்கு செய்ற மாதிரி ஒரு சீன், அதுக்கு பணம் இல்லைனு செக்ரட்டரி சொல்லும்போது, என்ன சிக்கலா இருந்தாலும் அத ஸ்டேட் முழுக்க பண்ணியே ஆகணும்னு சொல்ற மாதிரி சீன் முடியும்.
ஆத்தா இறந்த கொஞ்ச நாள்ள படம், வெப்சீரிஸ்னு வெள்ளையடிக்க ஆரம்பிச்சி அன்னை தெரேசாவோட மறுஉருவம்னு சொல்ற அளவுக்கு வேல பாத்தானுங்க, இத எதுக்காக சொல்றேன்னே, கலைஞர் இறந்து இத்தனை வருசம் ஆகியும் இவ்வளவு Production கம்பெனி சொந்தமா வச்சிருந்தும் ஒரு Biopic இல்ல ஒரு Documentary பண்ணக்கூட துப்பில்லாம இருக்கோம்னு ஒரு கோவம்தான்.🤧
கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School
🔴ஒரே நாளில் ஆன்லைனில் அனுமதி கொடுத்த 1,000 தனியார் பள்ளிகளுக்கு ஆள் சேர்க்க - //அரசுப் பள்ளி தரமற்றவை// என குழந்தைகளின் பெற்றோரை மைண்ட் செட் பண்ணுவதற்காக - தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா இப்படிச் செய்தாரா?!
Abilash Chandran அவர்களின் பதிவு 👇🏽
🔴அமைச்சர் கீர்த்தனாவின் முன்னெண்ணமும் திமிரும்
அமைச்சர் கீர்த்தனாவின் காணொளி ஒன்றைக் கண்டேன். அவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தன் காமிரா டீமுடன் ஆய்வுக்குப் போய் ஒரு வகுப்பறைக்குள் நுழைகிறார். மாணவிகளைக் காட்டுவது, கீர்த்தனாவிடம் மிட் ஷாட், குளோஸ் அப், லாங் ஷாட் என காமிரா பாய்ந்து பாய்ந்து படம் பிடிக்கிறது. கீர்த்தனாவிடம் ஏற்கனவே ஒரு திரைக்கதை இருந்தது தெரிகிறது - அவர் ஒரு மாணவியை அழைத்து அவரிடம் உள்ள பாடநூலில் இருந்து ஒரு ஆங்கில வார்த்தைக்குப் பொருள் கேட்கிறார். மொத்த மாணவர்களும் பதிலளிக்கிறார்கள். ஓக்கே என்று இன்னொரு சொல்லை எடுக்கிறார். சற்று நேரம் அமைதி நிலவுகிறது. பார்த்தீங்களா என்றவாறு கீர்த்தனா ஆங்கில ஆசிரியைப் பார்க்கிறார். முதல் வரிசைப் பெண் குழந்தை எழுந்து அதற்கு ஒருவாறு பதில் சொல்கிறார். இப்போது கீர்த்தனா தன் திரைக்கதையில் இருந்து விலக விரும்பாமல் "இப்படி புத்தகத்தில் உள்ளதை மட்டும் படிச்சு பதில் சொன்னா போதாது. ஸ்போக்க இங்கிஷ் தெரியுமா?" என்கிரார். அப்பெண் குழந்தை தயங்குகிறது. அதான் சொல்றேன் எனும் கணக்கில் பேசிவிட்டு கீர்த்தனா அடுத்து அக்குழந்தையிடம் "வாட் இஸ் யுவர் பாதர்" என்று கேட்கிறார். குழந்தை விழிக்கிறது. உடனே கீர்த்தனா மீண்டும் "பார்த்தீங்களா? ஸ்போக்கன் இங்கிலிஷ் தெரியல" என்கிறார். ஆசிரியை வந்து "தைரியமா பேசும்மா" என்று அக்குழந்தையை ஊக்கப்படுத்தி விட்டு "வாட் இஸ் யுவர் பாதர்ஸ் புரொபஷன்?" என்று கேட்கிறார். அக்குழந்தை உடனே சொல்கிறார். அவருக்கு ஒரு தன்னம்பிக்கை வந்து எந்தக் கேள்விக்கும் தயார் எனும் கணக்கில் நிற்கிறார். உடனே கீர்த்தனா குறுக்கிட்டு "இதெல்லாம் சரிங்க. ஆனால் பின் வரிசையில் இருப்பவர்களிடம் கேட்டால் ஒருத்தருக்கும் பதில் தெரிஞ்சிருக்காது." என்று சொல்லிவிட்டு பேச்சு ஆங்கிலத்தை முன்னேற்ற வேண்டிய அவசியம் பற்றி உரையாற்றுகிறார்.
அமைச்சர் கீர்த்தனா செய்தது சுத்த அயோக்கியத்தனம் - அந்த மாணவர்களைச் சரிவர சோதிக்காமல் அவர்களுடைய கல்வியில் ஒரு இடைவெளி (learning gap) இருப்பதாக அவரே ஒரு முன்முடிவுக்கு வந்து தன் திடீர் ஆய்வில் அதைக் கண்டுபிடித்ததாக காமிராவில் பதிவு பண்ணி அக்குழந்தைகளை அவமதிக்கிறார். இதை அவரால் ஒரு தனியார் பள்ளியில் போய் செய்ய இயலுமா? லதா ரஜினிகாந்தின் பள்ளிக்குச் சென்று அங்குள்ள மாணவர்களிடம் உங்களுக்கு அறிவு போதவில்லை என்று கூற முடியுமா? ஒரு தொழில்துறை அமைச்சருக்கு இத்தகுதி எங்கிருந்து வருகிறது? மேலும், ஒரு வகுப்பில் எல்லா மானவர்களும் சமமான ஆற்றலுடன் இருக்க இயலாது. தனியார் பள்ளிகளிலும் கூட இப்படித்தான் இருப்பார்கள். எல்லாருக்குமான கல்வியை அளிப்பதையே differentiated instruction என்கிறார்கள். பலவிதமான மாணவர்களை அடையாளம் கண்டு தனித்தனியாக கவனம் செலுத்தி முன்னேற்றுவது. எல்லா மாணவர்களையும் ஒரே போல பாவிப்பது அல்ல. கல்வியல் மட்டுமல்ல காமன் சென்ஸே இல்லாதவராக அமைச்சர் இருக்கிறார்.
நான் ஒரு ஆசிரியராக அங்கு இருந்திருந்தால் மாணவர்களை இப்படி காமிரா முன்னால் அவமதித்து ஊக்கமிழக்கச் செய்யக் கூடாது என்றும், அதற்கு அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்று சொல்லி இருப்பேன். ஏனென்றால் ஒரு வகுப்பில் ஆசிரியருக்கு உள்ள இறையாண்மை கேள்விக்கு அப்பாலானது. அடுத்து பேச்சு ஆங்கிலத்தை மேம்படுத்த வேண்டுமெனில் அதற்கு ஒரு தனி ஆசிரியரை நியமித்து அதற்கென ஒரு பாடத்திட்டத்தைத் தயார் பண்ண வேண்டும். அதற்கென நேரத்தை ஒதுக்க வேண்டும். அதற்கென்ன நடைமுறைகள் உள்ளன. சும்மா வந்து ஆங்கில ஆசிரியரை மிரட்டினால் ஒன்றும் நடக்காது. அடுத்து, ஒரு வகுப்பறைக்குள் இப்படியான ஆய்வுகளைக் காணொளியாகப் பதிவு பண்ணுவது ஒரு அத்துமீறல். மாணவர்களை இது கடுமையாகப் பாதிக்கும்.
அரசுப் பள்ளிகள் குறித்து தவெக அமைச்சர்கள் கொண்டுள்ள தாழ்வான எண்ணத்தையே இது காட்டுகிறது. தனியார் பள்ளிகளில் மட்டுமே மாணவர்கள் படிக்கிறார்கள், அரசுப் பள்ளிகளில் தரமற்ற கல்வியே உள்ளது எனும் கீழான எண்ணத்தையே அவர் அங்கு நிறுவ முயல்கிறார். பள்ளியை மேம்படுத்த முயன்றதாக பாவிப்பது ஒரு பாசாங்கு மட்டுமே. அவரது உடல்மொழியில் தென்பட்டது திமிர்த்தனம், நடத்தையில் தெரிந்தது கல்வி குறித்த அறிவீனம்.
ஒரே ஒரு விசயத்துக்காக கீர்த்தனாவைப் பாராட்ட வேண்டும் - அவர் மாணவர்களிடம் விஜய் பாடல்களுக்கு நடனமாடச் சொல்லவில்லை.
🔴 அபிலாஷ் சந்திரன்
A. Raja worked tirelessly to prevent this, but despite his efforts, you all lobbied against him, blocked his initiatives, and ousted him from the government. Now, the West Indian Company is profiting from this.
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?
வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர்.
“ஆணவம் அழிவிற்கு வழி!”
#தவெக அரசில் முதல் கடன் ₹2,130 கோடி ஆசிய வளர்ச்சி வங்கியில் இருந்து
₹11,560 கோடி கஜானாவுக்கு வந்திருச்சு என கதை சொன்ன #தவெக நண்பர்கள்.. இந்த ₹2,130 கோடிக்கு எதுக்கு கடன் வாங்கினாங்கனும் சொல்லி இருக்கலாம் 😌😌😌
The Dravida Munnetra Kazhagam (DMK), through its Organising Secretary, Thiru R.S. Bharathi, has filed Petition before the Hon'ble Supreme Court seeking action against the irresponsible, misleading, malicious, and disrespectful speech made by Minister Adhav Arjuna in relation to Karur stampede, which seek to create a false narrative against the DMK, its President Thiru M.K. Stalin, and the Tamil Nadu Police, while simultaneously attempting to influence public opinion and interfere with an investigation being conducted pursuant to the orders of the Hon'ble Supreme Court.
The DMK has approached the Hon'ble Supreme Court seeking, inter alia, the following relief:
“Direct that, pending completion of the investigation by the Central Bureau of Investigation pursuant to the orders of this Hon’ble Court, no person, including any accused or person connected with the investigation, shall make public statements attributing criminal liability, threatening political opponents, or otherwise commenting upon the merits of the pending investigation in a manner likely to prejudice or interfere with the fair and independent investigation directed by this Hon’ble Court;
Direct the State of Tamil Nadu, its Chief Minister, Ministers, officers, agents and all persons acting on its behalf, that no monetary assistance, compassionate appointment, Government Order, ex gratia payment, benefit, largesse or any other form of State benefit shall be conferred upon the families of the deceased or injured victims, or upon any material witness connected with Crime No.855 of 2025, during the pendency of the CBI investigation ;
Direct the Central Bureau of Investigation to examine the impact, of the public statements made by Thiru Aadhav Arjuna on 02.07.2026, as well as the distribution of monetary benefits and any subsequent conferment of Government benefits upon material witnesses, on the fairness of the ongoing investigation, and to place an appropriate report before this Hon’ble Court and take appropriate action;
Pass such further or other order(s) as this Hon’ble Court may deem fit and proper in the facts and circumstances of the present case, in the interests of justice, to preserve the fairness, independence and integrity of the investigation.”
The pattern is getting familiar… Not sure if it’s by design or coincidence…
Whenever the DMK initiates legal or political action against the TVK, the spotlight quickly shifts to action against DMK leaders.
The pattern isn’t just the arrests. It’s the optics like public parading, widely circulated visuals and a rapid shift in the news cycle.
So what is it? A pattern of diversion, or a pattern of intimidation?
I’ll leave that for people to decide.
#DMK #TVK #DiversionOrIntimidation #TamilNaduPolitics #AnitaRadhakrishnan
இந்திராகாந்தி 404 இடங்கள் வெற்றிபெற்றார் out of 545. இந்தியா என்றால் இந்திரா, இந்திரா என்றாலே இந்தியா தான் என்றார்கள் காங்கிரஸ்காரர்கள். அதன் பின் இந்திராகாந்தியே ஒரு எம்பி தொகுதியில் தோற்றும் போனார்.
டெல்லி ஷீலா தீட்ஷித் மூன்று முறை முதலமைச்சர். அதன் பின் அவரே தோற்று, காங்கிரஸும் காணாமலேயே போனது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் வந்தபின் இந்த கெஜ்ரிவால், தான் நடத்துவது தூய ஆட்சி என உருட்டாத உருட்டு இல்லை டெல்லியில். இரண்டு முறை வென்றவர், கடந்தத் தேர்தலில் தோற்றார்.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, அண்ணா என்று அழைக்கப்பட்டு மாபெரும் வெற்றியைப் பெற்றார்.
கிட்டத்தட்ட தெலுங்கு தேச கட்சியை சின்னாபின்னமாக்கினார்.
ஆந்திரா முழுவதும் இனியொரு 30 வருடங்களுக்கு எவரும் அசைக்க முடியாது என எல்லாப் பத்திரிக்கைகளும், கட்சி கடந்து அனைவருமே நம்பினர். ஆனால் இன்று எதிர்க்கட்சி கூட கிடையாது.
இங்கு விஜய் வெற்றி பெற்றதாக சொல்லும் 107 இடங்கள் தனி மெஜாரிட்டி அளவு கூட இல்லை.
அதுவும் பேக்கரி டீலிங் மூலம் பெற்றது.
இது ஒன்றும் புரட்சியோ புண்ணாக்கோ அல்ல. இது ஒரு அரசீயல் பேரிடர்.
இன்னொரு 500 ஆண்டுகளுக்கு விஜய் தான் ஜெயிப்பார் என்கிற ரேஞ்சில் உருட்டுவது, அவர் கட்சிக்கு ஓடுவது, ஒளறிப் பிதற்றுவது, வரலாறு அறியாமல் வார்த்தைகளை வீசுவது, என எல்லாமே, ஒரு 'அரைவேக்காட்டுதனமான வெற்றியின்' விளைவுகளால் வெளிப்படுபவை. இந்தத் தேர்தலோடு இனி உலகமெல்லாம் அழிந்து விடாது இனிமேலும் தேர்தல் நடக்கும்.
#பகிர்வு
🔹VB-RAM G திட்டம் நாளை முதல் அமல்
🔹புதிய கல்வி கொள்கை அடிப்படையில் PMShri பள்ளிகளுக்கான பேச்சுவார்த்தை என மத்திய அமைச்சர் சொல்லி இருந்தார்
🔹மாநில கல்வி பாடத்திட்டங்கள் ஆலோசனை குழு மாற்றி அமைப்பு
🔹PM eBus sewa திட்டத்தை நோக்கிய நகர்வுகள்
🔹கோவில்களில் TNHRCE அதிகாரங்கள் குறைப்பு
🔹மாணவர்கள் அடையாள அட்டையில் சாதி விவரங்கள் சேர்ப்பு
🔹FCRA சட்ட திருத்தம் குறித்து கருத்து எதுவும் சொல்லாமல் மௌனம்
🔹NEET தேர்வு முறைகேடு குறித்து எந்த கண்டனமும் இல்லை
பாஜக நேரடியாக ஆட்சி செய்து இருந்தால் கூட இப்படியான நிலைப்பாடுகளை எடுக்கும் ஒரு அரசு கிடைத்து இருக்காது அவர்களுக்கு
நாளொரு அறிக்கை பொழுதொரு கண்டனம் என இயங்கி கொண்டு இருந்த பாஜக இப்போது மொத்தமாக அமைதியாக இருப்பதற்கு.. அவர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்ளும் அரசு அமைந்தது தான் காரணமா இருக்குமோ? 🤔🤔🤔