தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிதான் நடைபெறுகிறது !!
சாட்சிகள் !!
அண்ணாமலை அலறவில்லை
திருப்பதி நாரயணன் கதறவில்லை
வானதி வாய் திறக்கவில்லை
நயினார் காணவில்லை
சவுக்கின் புரோக்கிங் வேலை துவங்கவேயில்லை
ஆளும் தவெகவை எதிர்த்து யாருமே பேசவில்லை
வன்புணர்ந்து கொலை செய்யப்படும் செய்திகள் கடைசி பக்கத்தில் சிறு பெட்டிச்செய்தி
கஞ்சா இளைஞர்களின் பயங்கரக் கொலை அரைநாள் தகவல்
காவல் நிலையம் தாக்கப்பட்ட தகவலே எங்குமில்லை
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை (நார்மலைஸ்) இயல்பாக்குகிறார்கள்
சட்டமன்ற உறுப்பினர்களின் தவறுகள் கண்டுக் கொள்ளப்படுவதேயில்லை
கை மாறும் பணம் குறித்து எதிர்கட்சித் தலைவரும் பேசாவிட்டால்,
"புஷ்பா மாடல்" குறித்து யாருக்குமே தெரிந்திருக்காது
திமுககாரனின் ஒன்று விட்ட அத்தை மகனின் மருமகனுக்குப் பிறந்த மகள்வழி பேரன் பிரியாணி கடையில் சண்டை போட்டால் தலைப்புச் செய்தி!
தவெக MLA அறிவாள் எடுத்து கேக் வெட்டினாலும் நகைச்சுவை செய்தி!!
ஊடகங்கள் மக்களின் மனங்களில் விளையாடுகிறது,
மூளைகளில் விலங்கிடுகிறது!
ஊடகங்கள்,
இணையம்,
சனாதனவாதிகள்,
சாதியம்,
மதவாதிகள்,
பிற்போக்கு சோதிடக் கூட்டம்,
விலைபோனக் கூட்டம் என அத்தனைபேரின் கள்ள மௌனத்தில்
ஒரு காட்டு தர்பார் துளிர்கிறதென அறிகுறிகள் தெளிவாக தென்படுகின்றன. உண்மை யா இல்லையா #pls_comment
இவர் இருந்திருந்தால் இந்நேரம் பொம்மையும் ஆட்சிக்கு வந்திருக்க வாய்ப்பில்லை .,
விஜய் கட்சி தொடங்கவும் வாய்ப்பில்லை !!
நிதர்சனமான உண்மை 👍
Accept >>>>>>>>>
"எங்கு போனாலும் துப்பட்டா போடாமல் போகக் கூடாது என்கிறார்களே. அது தான் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்து விடுகிறதா?" என்று கேள்வி எழுப்புகிறார்; சகமாணவியரின் பலத்த கரவொலி.
பட்டிமன்றப் பேச்சாளராக இருப்பதாலோ என்னவோ மாணவியின் கேள்விக்குப் பொறுப்புடனும் ஆழமாகவும் பதிலளிப்பதை விடவும் பதிலுக்குக் கரவொலி வாங்குவது தான் பர்வீன் சுல்தானா அவர்களின் நோக்கமாகி விடுகிறது.
தான் "ஒழுங்காக" ஆடை அணிந்து வந்திருந்தாலும் தனக்குப் பொன்னாடை போர்த்திச் சிறப்பு செய்வது தனக்கான மரியாதை என்பதைக் குறிப்பிட்டு "அவ்ளோ தான் போ" என்கிறார். மிகவும் சாதுர்யமாகப் பதிலளித்து அவரது வாயை அடைத்து விட்டதாக நமட்டுச் சிரிப்பு வேறு சிரிக்கிறார்.
மாணவியும் சளைத்தவரில்லை. "நான் கேட்டது வேறு..." என்று அவர் உறுதியாய் நிற்கவும்
ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்ட வரலாற்றை எடுத்துச் சொல்லி நூதனமாக இன்னொரு ஒடுக்குமுறைக்கே ஆதரவாய்ப் பேசுவது எப்பேர்ப்பட்ட நகைமுரண்!!
..தோளின் மீது சீலை போடக் கூடாது என்று கட்டுப்படுத்துவது மட்டும் ஒடுக்கு முறை இல்லை.
நீ துப்பட்டா போடா விட்டால் விடலை முதல் வயோதிகன் வரை உன்னை வெறிப்பான். பார்வையாலேயே உனை வன்புணர அவனுக்கு எல்லா அதிகாரமும் உண்டு என்பதும் ஒடுக்கு முறை தான்.
பாதுகாப்பு, புனிதம், மரியாதை எனும் பெயரில் பெண்களின் உணர்வுகள் புரிந்தும் புரியாத மாதிரி திணிக்கப்படும் இந்த நூதனமான ஒடுக்குமுறைகளைத் தாம் நாம் உடைத்துப் பேச வேண்டியுள்ளது.
Boys will be boys என்று அசடு வழிய சிரித்துக் கொண்டு ஆணின் சல்லித்தனங்களை ஒரு புறம் கொண்டாடிக் கொண்டே இருப்பதும், பெண்ணுடல் கோயில், அது புனிதம் என்று தேவைக்கும் அதிகமாய் மூச்சு முட்டும் அளவுக்குக் கட்டுப்பாடுகளைத் திணிப்பதும் நடந்து கொண்டே இருக்கிறது.
"என்ன பேசுறீங்க. பொண்ணுங்க இப்பல்லாம் எப்டி ட்ரஸ் பண்றாங்க தெரியுமா. பாலிவுட் நடிகைகளைப் பாருங்க. சினிமாவுல பாருங்க. அதப் பார்த்துக் கெட்டுப் போய்த் தான் இப்டிலாம் கேட்குறாங்க" என்கிறீர்கள் என்றால் நான் அதை முற்றிலும் மறுக்கிறேன்.
புடவை தான் அணிய வேண்டுமா? கண்டிப்பாய் துப்பட்டா போட வேண்டுமா என்று கேட்கும் பெண்கள் யாரும் உடலைப் பண்டப் பொருளாக்கும் நோக்கத்தில் கேட்கவில்லை என்று முதலில் நம்ப வேண்டும். புரிந்து கொள்ளும் அறிவு வேண்டும். ஸ்கூட்டர் சக்கரத்தில் மாட்டி கழுத்து முறியாமல் இருக்கவும், ஓடும் பஸ்ஸில் சிரமமின்றி ஏறவும் "நான் ஒரு பெண்" என்று கணப்பொழுதும் மறந்துவிடாதபடி துப்பட்டாவை இழுத்து இழுத்து விட்டுக் கொண்டிருக்கும் சள்ளையிலிருந்து தப்பிக்கவும் மட்டுமே அதைக் கேட்கிறார்கள்..
பெண் உடல் ஆணின் பார்வைக்கு ஆனது என்று நம்பும் மனப்பான்மையின் மறுபக்கம் தான் அதனைக் காட்சிப் பொருளாக்கி, போகப்பண்டமாக்கி, வக்கிரமாய் நுகரும் போக்குக்கு வழி வகுக்கிறது என்பதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்.
"என் உடல், என் உடை என் உரிமை" எனும் எண்ணம் பெண்கள் அனைவருக்கும் வரும் போது தான் அவளைத் தொடவே அஞ்சும் மனப்பான்மையும் ஆணுக்கு வரும்.
சீருடையாகச் சுடிதாரும் அதன் மீது ஒரு கோட்டும் அணிந்த இந்த மாணவி கேட்ட கேள்விக்கு வருவோம்.
ஏன் துப்பட்டாவைக் கட்டாயமாக்குகிறீர்கள் என்று அந்தப் பெண் கேட்டதில் என்ன தவறு?
வெளியில் போகும் போது கூட அல்ல, வீட்டில் அழைப்புமணியை அழுத்தப் படும் போது கூடப் பெண்கள் முதலில் உள்ளே தான் ஓடுகிறார்கள். ஒரு சால்வையை எடுத்து வந்து தங்கள் மார்பகங்களை மறைத்துக் கொள்ளாமல் தங்கள் வீட்டுக் கதவைக் கூடத் திறக்க அஞ்ச வேண்டுமென்றால் என்ன அர்த்தம்?
எந்த வீட்டுக்குள் வேண்டுமானால் புகுந்து, அந்த வீட்டுப் பெண் துப்பட்டா அணியாவிட்டால் அவள் மீது பாய்ந்து குதறக் கூடிய காமுகர்கள் தாம் நம் ஆண்கள் என்பதா?
"அண்ணன் இருக்கான், ஷால் போடு. அப்பா இருக்கார் ஷார்ட்ஸ் போடாதே." அஞ்சு வயசுத் தம்பி முதல் அறுபது வயசுத் தாத்தா வரை வீட்டுப் பெண்களின் உடைகளை உற்றுப் பார்ப்பது தான் ஒரு நாகரிக சமூகத்தின் அழகா? இந்த வன்முறையை அம்மாக்களே மகள்களுக்குச் செய்வது எவ்வளவு கொடுமை? இன்னொரு புறம் இதே அம்மாக்கள் தேவைக்கும் அதிகமாய் அலங்காரத்துக்கும் நேரத்தையும் மூளையையும் செலவு செய்யக் கற்றுத் தருவார்கள்..
புர்கா அணிந்தே ஆக வேண்டும் என்று ஒரு பெண் ஒடுக்கு முறைக்கு ஆளானாலும் சரி, புர்கா அணியக் கூடாது என்று மிரட்டப்பட்டாலும் சரி அவருக்காக நாம் போராட வேண்டும்.
இங்கே பிரச்னை துப்பட்டாவோ புர்க்காவோ அல்ல. நாம் பெண்ணைப் பார்க்கும் பார்வை தான். பெண் தன்னைத் தானே பார்க்கும் பார்வை தான்.
பேச்சின் தொடக்கத்தில் "நான் ஒழுங்கா டிரஸ் பண்ணி இருக்கேனா" என்று சிறுமியைக் கேட்கிறார் பர்வீன். "இல்ல மேடம், உங்க இடுப்பு தெரிகிறது" என்று அந்த மாணவி சொல்லி இருந்தால் பருத்தி மூட்டை குடோன்லியே இருந்திருக்கும்.
- Deepalakshmi
@knrsivaraj80 அப்படியே உங்க ஆட்சில கொண்டுவந்த மெட்ரோ திடடங்கள் பத்தியும் சொல்லிருக்கலாம்.. குறிப்பாக ஊதுபத்தி உருட்டுவோர் நல வாரியம் பத்தியும் சொல்லிருக்கலாம்
@PriyankaSmile01@mkstalin டாஸ்மாக்கைக் கொண்டு வந்த எம்.ஜி.ஆரையும் அதில் சாராயத்தி வித்த ஆயாவையும் சேர்த்துக்கோங்க , அப்புறம் ஆறு மணிக்கு மேல குடிக்காம இருக்கமுடியாதுன்ற தற்குறித் தலைவனையும் சேத்துக்கோங்க
இது வரைக்கும் எத்தனையோ Status Whats app ல வச்சிருக்கேன்..
ஆனால் இந்த ஒரு வீடியோ க்கு அத்தனை பேர் Good னு Response reply பண்ணிருக்காங்க..
இந்த மாதிரி திட்டங்கள் தான் Nutural ஆ இருக்க மக்களுக்கு ரொம்ப பிடிக்குது..
நீயா நானா Show வில் ஒரு அம்மா திமுக ஆட்சியில் பயன் பெற்றதை குறிப்பிட்டு பேசும் போது,
கோபி நாத் ஒன்னு சொல்லுவாரு..
இந்த ஏழை அம்மாவின் கண்ணீரை துடைத்தவர் அரசன் தான் என்று..
அப்படி இந்த திட்டமும் வைரல் ஆக வேண்டிய அளவிற்கு மிக முக்கியமான திட்டம்
இதை முதலில் மக்களுக்கு கொண்டு போய் சேருங்க 🙏🏻
@arivalayam@mkstalin@Udhaystalin@Anbil_Mahesh@rajiv_dmk@KN_NEHRU@DrSenthil_MDRD@ptrmadurai@isai_@sunnewstamil@GunasekaranMu@skpkaruna@karupalaniappan
@polimernews பரீட்சை எழுதி பாஸ் பண்ணி வேலைக்கு வாங்கடா... அத விட்டுட்டு நீ இன்னொருத்தனுக்கு நியாயமா போக வேண்டிய வேலைய தானே காசு கொடுத்து வாங்க பாத்துருக்க.... ரெண்டு பேருமே குற்றவாளிகள் தான்