வர்ணிப்பும் தற்கால அரசியலும்
--------------------------------------
சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகியவற்றில் வர்ணிப்பு பெருமளவில் காணப்படுகிறது. குறிப்பாக சிலப்பதிகாரம், மணிமேகலை, சங்கப் பாடல்களில் இயற்கை மற்றும் நகர வர்ணிப்புகள் மிகவும் புகழ்பெற்றவை.
"வாசகரின் மனதில் ஓவியம் வரைவது போல விவரித்து எழுதப்படும் இலக்கியமே வர்ணிப்பு இலக்கியம்."
இறை வர்ணிப்பு/வர்ணனைகள்- கடவுளின் உருவம், குணம், கருணை, வீரியம், பேராற்றல், அருள், தெய்வீகச் செயல்கள் ஆகியவற்றை கவித்துவமாகவும் உணர்வுபூர்வமாகவும் விவரிப்பதாகும்.
தமிழ் இலக்கியத்தில் இறை வர்ணிப்பு வெறும் மதப் புகழ்ச்சி அல்ல; அதையும் தாண்டிய உணர்வாகும்!
அதையே அரசியலில் புகுத்தி ஒரு
தலைவரை சாதாரண மனிதராக அல்லாமல், "மீட்பர்", "வரலாற்றை மாற்றியவர்", "தவறே செய்யாதவர்" என சித்தரித்தல் வர்ணிப்பின் தற்கால தொடர்ச்சியாகும்.
அவருடைய சாதனைகளை மிகைப்படுத்தி, குறைகள் அல்லது விமர்சனங்களை புறக்கணித்து,
பாடல்கள், போஸ்டர்கள், சமூக ஊடகப் பதிவுகள், பொதுக்கூட்ட உரைகள் மூலம் ஒரு "பெர்சனாலிட்டி கல்ட்" (Personality Cult)ஐ உருவாக்கி,
இயக்கத்தின் கொள்கைகளை விட தலைவரின் தனிப்பட்ட புகழை முன்னிறுத்தி -ஒரு இயக்க அரசியலை தலைவர் வர்ணிப்பு மூலம் மட்டுமே முன்னெடுப்பதே Personality Cult அல்லது Leader Worship என்று பெயர்.
தலைவரை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக காட்டுவது.
கொள்கை விவாதங்களை ஒதுக்கி வைத்து தனிநபர் வழிபாட்டை வளர்ப்பது.
ஜனநாயக நிறுவனங்களை விட ஒரே நபரின் புகழை மையப்படுத்துவது.
பகுத்தறிவு கேள்விகளை "விசுவாசம்" என்ற அடிப்படையில் தடுக்க முயல்வது - தலைவர் வர்ணிப்பை கடைபிடிப்போரின் செயல்பாடும் அணுகுமுறையும் இவ்வாறே அமைந்திருக்கும்!
பெரியார், கடவுள் வழிபாட்டை மட்டுமல்லாமல் மனிதர் வழிபாட்டையும் விமர்சித்தார்.
"கருத்துகளை மதிப்பிடுங்கள்; மனிதர்களை அல்ல."
எனவே, ஒரு தலைவரின் செயல்பாடுகளைப் பாராட்டுவது ஜனநாயகத்திற்குள் இயல்பானது. ஆனால் அவரை விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனித உருவமாக மாற்றுவது முற்போக்குச் சிந்தனையுடன் முழுமையாக ஒத்துப்போகாது என்றார் தெளிவாக!
இப்படி,
ஒரு தலைவரின் சாதனைகளை வர்ணிப்பது Progressive ஆக இருக்கலாம்; ஆனால் தலைவரை விமர்சிக்க முடியாத அளவுக்கு "விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராக" , அவருடைய குறைபாடுகளை மட்டும் "Selective Ignorance"ஐ கடைப்பிடித்து, அவரை உயர்த்தி மட்டும் தனிநபர் வழிபாட்டை உருவாக்குவது பொதுவாக Progressive அரசியல் கலாச்சாரத்தின் அடையாளமாகக் கருதப்படாது. அது கொள்கை மைய அரசியலிலிருந்து நபர் மைய அரசியலுக்குச் செல்லும் போக்காக பார்க்கப்படுகிறது.
தற்கால அரசியலில், முன்பு இறை வர்ணிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பல உத்திகள் அரசியல் தலைவர்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
அவர் அழகை பாருய்யா, ஸ்டையிலை பாருய்யா,
அவர் டேபிளை தூக்குகிறார் பாருய்யா
அவர் டிபன் பாக்ஸ் கொண்டு வரார் பாருய்யா
எல்லாம் வர்ணிப்பின் தொடர்ச்சி தான்!
வர்ணிப்புகள் அரசியல் செழுமைமிக்க ஒரு தலைமுறையை உருவாக்காது!
கண்மூடித்தனமான மூடநம்பிக்கை உடைய பக்தர்களை/ரசிகர்களை மட்டுமே உருவாக்கும்!
நிர்வாகத்துக்கு டைம் சரி!
ஒரு கருத்து சொல்ல கூட டைம் வேணுமா?
அதுவும் பக்கத்து ஸ்டேட் முதல்வர் சரமாரியா மோகதாது பத்தி பேசிட்டு இருக்கப்ப?
என்ன லாஜிக் கோ?
அதுவும் நீங்க இப்படி முட்டு கொடுக்கறது எல்லாம் என்ன மாதிரி அரசியலோ?
தூத்துக்குடியில் தன் சொந்த கட்சி பெண் நிர்வாகிய, வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்று, மயக்க மருந்து கலந்த கூல்ரிங்ஸ் கொடுத்து பாலியல் குற்றம் புரிந்துள்ளனர் தவெக கட்சியின் 2 நிர்வாகிகள்!
எம்.எல்.ஏ விடம் சொல்லியும் பயனில்லை என ஊடகத்தின் முன் அந்த பெண் கூறுகிறார்!
அந்த நிர்வாகிகளை கைது செய்வதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்!
பாலியல் குற்றங்களையே நர்மலைஸ் செய்யும் ஒரு MLAவை என்ன சொல்வது, அந்த MLA க்கு தெரிந்தே இதெல்லாம் நடந்திருக்கும் கோணத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!
மக்கள் மத்தியில் மாற்றம் என்ற எண்ணம் நாளுக்கு நாள் முழுங்கி வரும் நிலையில், செய்திகளை திசை திருப்பி ஒரு கபடதாரி நாடக அரங்கேற்றம் தான் சென்னை மாநகராட்சியில் நடந்த குத்துவிளக்கு NARRATIVE!
மின்தடை, விவசாய கடன், மேகதாது, அமைச்சர்களின் செயல்பாடு என எல்லாத்தையும் ஒரு LONG JUMP-ல தாண்டி நேரா உள்ளாட்சி தேர்தலுக்கு வண்டாங்க - 25மேயரும் நாங்க தான்னு!
நன்றி சொல்ற திருச்சி கிழக்குத் ஆரம்பிச்சு, போடுற திட்டம் எல்லாம் பேசுற பேச்சு எல்லாம் இடைதேர்தல்-உள்ளாட்சி தேர்தல நோக்கி தான், ஆல்ரெடி ஜெயிச்சு கொடுத்த தேர்தல் வாக்குறுதில ஒன்ன கூட உருப்படியா நிறைவேத்தல, மக்கள் பிரச்சனை பத்தில அட்ரஸ் பண்ணல - ஆனா மக்கள தேர்தல நோக்கி பயன்படுத்துறதுல நரேட்டிவ் செட் பண்றதுல கில்லாடி ஆயிட்டீங்க- ஆனா நிர்வாகத்துக்கு மட்டும் டைம் வேணும்!
துரோகங்களுக்காக தனது வாழ்க்கையையும் தன் குழந்தை வாழ்க்கையையும் கேள்விக்குறி ஆக்காதீர்கள்!
தன்னை ஏமாற்றியவர்/ஏமாற்றியவள் நல்லா இருக்க கூடாது என்ற எண்ணம் மிகுந்தால் பழிவாங்கும் குறுகிய மனப்பான்மை நம் வாழ்வை சிதறடிக்கும்!
சட்டப்படி விவாகரத்து செய்துவிட்டு தங்கள் குழந்தைகளுடன் இன்னொரு திருமணம் செய்தோ/செய்யாமலோ மகிழ்வான வாழ்வை வாழுங்கள், கள்ளத்தொடர்புல இருக்கவங்களே சந்தோசமா இருக்கப்ப நமக்கு என்ன? அவ/அவன் எக்கெடு கெட்டு போனா போகட்டும்-னு மனநிலையை கொண்டு வந்து குழந்தைய பாருங்க!
விவாகரத்தும் tough process தான், ஆனா அதுல இருந்து கூட ஒரு கட்டத்துல மீளலாம், இதுல இருந்து நீங்க மீள்வதும் கஷ்டம், வாழ்க்கை பூரா இது துரத்தும், இந்த Trauma உங்க குழந்தையையும் கடைசி வரை நோகடிக்கும்!
கணவன்/மனைவி சரியில்ல, கவனிக்கவில்லை, ஏன் இல்லற சுகம் கிடைக்கலை-னு கூட வச்சுக்கோங்க, பிரிஞ்சு போய் அந்த உறவ முடிச்சுட்டு அடுத்த உறவ தொடருங்க, இப்படி Complicate பண்ணி Traumatize பண்ணி Crime வர கொண்டு வந்து எல்லாரோட வாழ்க்கையும் சீரழிக்கும் கள்ளத்தொடர்பு எதுக்கு?
மாநகராட்சி சார்பாக அழைப்பு விடுக்கப்பட்ட பங்சனுக்கு டைம்க்கு போகாம லேட்!
இப்படி Punctuality உம் தெரியாது!
எல்லா Wait பண்ணி இவங்க வந்த அப்பறம் பங்சன ஆரம்பிச்சா,
பின்னாடி இருந்து கையை நீட்டி ரிப்பனை வெட்டுவது!
இப்படி Morality, Manners உம் தெரியாது!
ப்ரோட்டோகால் படி ஆட்சியருக்கு பிறகு எம்.எல்.ஏ என்றால் வெளிநடப்பு செய்து ஒப்பாரி வைப்பது!
இப்படி Legality உம் தெரியாது!
எல்லாத்துலயும் ஸ்டிக்கர் ஒட்டனும்-னு ஆர்வம்!
அமலில் இருப்பதை அமல்படுத்துவது போல!
திமுக ஆட்சிக்காலத்தில் உருபெற்ற எல்லாவற்றுக்கும் தான் செய்ததை போல சுயதம்பட்டம் அடிக்கும் விளம்பர மாடல் அரசு!
திமுக கடந்த 5 ஆண்டுகளில் கொண்டு வந்த புதுமைப் பெண், நான் முதல்வன், தவப் புதல்வன் , மகளிர் உரிமைத் தொகை இது போன்ற ஒரு திட்டத்தை யோசிக்கவே இவர்களுக்கு 5 ஆண்டுகள் போதாது!
இவை அடித்தட்டு மக்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கமும் முன்னேற்றமும் என்ன என்று காலம் பதில் சொல்லும்!
அரசன் (ஆட்சியாளன்) என்பவன் வெறும் அதிகாரத்தைச் செலுத்துபவன் அல்லன்; மாறாக, மக்களின் ஒட்டுமொத்தப் பொறுப்பையும் தன் தோள்களில் சுமப்பவனே!
Accountability-ஏ எடுத்துகாத, மற்றவர் மீது பழிகளை மட்டும் சுமத்தி கொண்டிருப்பவன் நல்லாட்சியை தர இயலாது!
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்." (குறள்: 388)
அதிகாரம் செய்வது அரசனின் வேலை அல்ல; குடிகளைக் 'காப்பாற்றும்' பொறுப்பை ஏற்பதே அவன் தகுதி.
எவ்வித உழைப்பும், தியாகமும், போராட்டமும், கொள்கையும் இல்லாத இயக்கமும் தலைவனும் வெறும் தனிமனித ஈர்ப்பால் வெல்வானேயானால் அஃது கவர்ச்சியன்றி ஏதுமில்லை!
உதய் அண்ணா மிக யதார்த்தமான - புரிதலோடு -பொறுப்போடு ஒரு சிறப்பான உரை ஆற்றி இருக்கிறார் சேப்பாக்க நன்றி அறிவிப்பில்🖤❤️
நல்லது மட்டும் தான் நமக்கு நடக்கனும்-னு நினைக்கிறது Positivity!
நல்லது நமக்கு மட்டும் தான் நடக்கனும்-னு நினைக்கறது
Toxicity!
Just rearrangement of words determine the Attitude!
RSS, BJP-யின் சித்தாந்தங்களுடன் ஒரு மாநில கட்சி - Hindutva Party
BJP-யை பெரிதாக எதிர்த்து அரசியல் செய்யாத கொள்கை தெளிவு இல்லாத ஒரு மாநில கட்சி - Personality Cult Party
இதை இருதுருவ அரசியலாய் நிறுவ வேண்டும்
ஓட்டுகளை சிதறடிக்க வேண்டும் (Fragmentation of votes)
மாநில கட்சிகளை, திராவிட கட்சிகளை அழித்தொழிக்கும் திட்டத்தின் அடுத்த படி தான் அண்ணாமலை அவர்களின் தனிக்கட்சி!
இதை எல்லாம் எத்தனையோ மேடைகளில் எடுத்துரைத்த அண்ணன் திருமாவளவன் அவர்கள், அவர் RSSன் பிள்ளை என சாடிய அதே கட்சியோடு ஆட்சியில் பங்கு என்ற கொள்கைக்கு தன் அடிப்படை கொள்கையை விட்டு கொடுத்து அமர்ந்துள்ளார்!
அதிமுக பிள்ளையார் சுழி போட்டு அனைத்தையும் தொடங்கி வைத்து, தன்னையே பாஜக திட்டங்களுக்காக காவு கொடுத்துவிட்டு ஜீவனற்று அமர்ந்திருக்கிறது!
Tough Times Ahead!
எத்தனை தாமதமான தீர்ப்பு
அன்று குண்டுகட்டாக அப்பாவு அவர்கள் எப்படி வெளியேற்றபட்டார்? அந்த காட்சிகள் இன்னும் நிழலாடுகிறது!
தான் பெற்ற வெற்றியை தட்டி பறிப்பது எத்தகைய வலியை ஏற்படுத்தும்.,
தான் பட்ட அத்தனை அவமானத்திற்கும் காலமும், கழகமும், தலைவரும் - அய்யா @AppavuexSpeaker அவர்களை அந்த 234 எம்.எல்.ஏக்கள் கூடும் சட்டசபையின் சபாநாயகராக்கி தக்க பதிலை தந்தனர்!
இடையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எல்லாம் எடப்பாடி அரசு மயிரிழையில் தப்பி பிழைத்தது!
அப்போது இந்த பறிக்கப்பட்ட வெற்றி திமுக விற்கு 1 MLA வை கூட்டி அதிமுக விற்கு 1 MLAவை குறைத்து அரசியல் தலையெழுத்தை கூட மாற்றி இருக்கும்!
இந்த தேர்தலில் ஐயா @OfficeOfKRP அவர்களின் 1 ஓட்டு வழக்கு உடனடியாக நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதே கழகத்திற்கு எனது தாழ்மையான வேண்டுகோள்!
@nrelango_dmk
போராட்டங்களும் உழைப்பும் ஒரு வரலாற்றை உருவாக்கும்
அவ்வரலாறும் அயர்ந்து போகும் ஒரு சரித்திரம் தான் கலைஞர்
ஓய்வறியா சூரியனே உன் புகழ் நீடித்திருக்கும் தமிழ்நாடு உள்ளவரை!
#KalaignarForever#Kalaignar103
இன்று 32 அகவையில் அடியெடுத்து வைக்கிறேன்!
இத்துணை ஆண்டுகளில் இது ஒரு நிலையான நிறைவான பிறந்தநாள்!
2016ம் ஆண்டு Campus-ல் கிடைத்த TCS வேலையில் வெளிநாடு வாய்ப்பு வந்த நிலையில்,அதனை விட்டுவிட்டு Group-1, ஒரு ரிஸ்க் எடுத்தேன், UPSC தேர்வுகளுக்கும் முயற்சி செய்தேன்!
2017-2021 வரை வேலையில்லை
பல தேர்வுகளில் கடைசி வரை சென்று திரும்பி இருக்கிறேன்!
2019ல் குரூப்-1ல் சில மதிப்பெண் இடைவெளியில் மெயின்ஸ் தேர்வில் வெளியேறினேன்!
இடைப்பட்ட காலத்தில் சட்டம் படித்தேன்!
முதுகலை சட்டமும் முடித்தேன்!
2021 ஜுனியராக 27 வயதில் என் கேரியரை தொடங்கினேன்!
UPSC பயிற்சியில் கற்றதும் எனது Drafting Skillsக்கு உறுதுணையாக இருக்க, படிப்படியாக தொழிலை கற்றேன்!
ஜுனியராக பொருளாதார அளவில் கொஞ்சம் மத்தியில் இருக்கும் போதே திருமணம், குழந்தை, மனைவியும் குழந்தை பராமரிப்புகாக வேலையை விடவேண்டிய சூழல்!
திடீரென்று வழக்கு வரும் வராமல் கூட போகும், காலை 9 முதல் இரவு 10 வரை கேஸ் கட்டுகளுடன் தான் என 4 வருடங்கள் ஓடி முடிந்தன.
கடந்த 2025-ல் தனி ஆபிஸ் என்ற அடுத்த ரிஸ்க், ஆனால் இம்முறை நான் நினைத்தது சாத்தியமானது!
இந்த பிப்ரவரியில் பெரிய அலுவலகம், ஒரு நல்ல டீம் என இன்று 10+ வழக்கறிஞர்களுடன் எங்கள் அலுவலகம் வளர்ந்துள்ளது!
தற்போது வரை 200+ வழக்குகள் வந்துள்ளன!
தொழிலில் பொருளாதார தன்னிறைவு மற்றும் வாழ்வில் குடும்ப மகிழ்ச்சி என இரண்டிலும் நிலையான நிறைவுடன் இந்த 32 வயதில் அடியெடுத்து வைக்கிறேன்!
திராவிட கொள்கை சிறு வயதிலிருந்தே உண்டு
படித்த புத்தகங்கள் பேசும் வாதங்கள் எங்கும் அதுவே கொள்கை!
கலைஞர் பிறந்தநாளோடு என் பிறந்தநாளும்
பெரியார் பிறந்தநாளோடு என் மனைவி பிறந்த நாளும் வருவது
ஒரு தனி மகிழ்ச்சி!
32❤️🌟