“நாங்க இருக்கோம். மீண்டும் வருவோம்!” - இதுதான் அறிவாலயத்தில் நான் கேட்கும் உடன்பிறப்புகளின் குரல்.
நாள்தோறும் அறிவாலயத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் புது உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கின்றனர்.
உடன்பிறப்புகளின் உணர்வுகளை உள்வாங்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தி��் அடுத்த நூறாண்டுகளுக்கான பயணத்தைத் திட்டமிடும் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், இருவாரப் பயணமாக நாளை அயலகம் செல்கிறேன்.
அயலகத்தில் இருந்தாலும் அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும்!
#LetterToBrethren
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சினிமா ஆக்���ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைய���ம் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?
வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர்.
“ஆணவம் அழிவிற்கு வழி!”
முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான திரு. @ARROffice அவர்களை, தவெக அரசின் காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்க��்தக்கது.
எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர், தனது தொகுதியில் ஆய்வுப் பணியில் இருக்கையில் அராஜகமான முறையில் அவரை கைது செய்திருக்கிறது, இந்த தவெக அரசு. இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் ஒருபோதும் தி.மு.க அடிபணியாது.
'ஆளுநர் ஆய்வு செய்தார்' என்ற கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது.
மதுரை சென்றிருந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தான் நியமன பதவியில் - அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தி இருக்கிறார்.
அரசியலமைப்புக்கும் - மாநில உரிமைக்கும் எதிரான இந்த செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கும், இத�� அனுமதித்த #SofaModel அரசிற்கும் கடும் கண்டனங்கள்.
ஆளுநர் மாளிகையின் பராமரிப்பே தமிழ்நாடு அரசிடம் இருக்கும் போது, வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களம் இறங்கும் என்று அடாவடியாக பேசி இருக்கிறார். ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்.
ஆளுநர் பங்கேற்ற அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படும் அளவுக்கு, என்ன Compromise செய்யப்பட்டது என்று சட்டமன்றத்தில் கேட்டிருந்தோம்.
அதற்கு உரிய பதிலைச் சொல்லாத ஆளுங்கட்சியினர், இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்ட���, மாநில உரிமைகளை compromise செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
சட்டத்துக்குப் புறம்பாக அடுத்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களை Panic buying செய்யும் ஆளுங்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற anxiety-யில் அவரது ஆய்வை அனுமதிக்கிறதா?
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆய்வுகளில் ஈடுபட்ட போது, அவர் சென்ற இடங்களில் எல்லாம் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித��தோம். கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் அனுமதித்ததில்லை.
ஆகவே, மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரை வார்க்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களின் உயிர்காக்கும் மகத்தான மனிதநேயத் தொண்டில் அர்ப்பணிப்போடு ஈடுபடும் மருத்துவர்கள் அனைவரையும் #NationalDoctorsDay-இல் போற்றுகிறேன்.
இந்தியாவின் சிறப்பான மருத்துவக் கட்டமைப்பைத் தமிழ்நாடு கொண்டிருப்பதிலும், மருத்துவத் தலைநகராகத் த��கழ்வதிலும் நம் மருத்துவர்களின் பங்கு தலையாயது.
#NEET போன்ற சதிகளால் இதனைத் தகர்த்திடப் பார்க்கும் முயற்சிகளை வெற்றிகொள்ள இந்நாளில் உறுதியேற்போம்.
@MedicalwingDMK
Heartfelt birthday wishes to @samajwadiparty President, dear brother @yadavakhilesh.
Your unwavering commitment to safeguard the Constitution, democracy, and social justice continues to inspire across the nation.
Wishing you good health, happiness, and continued success in all your endeavors.
அன்பு உடன்பிறப்புகளே… உங்கள் உணர்வுகளை நான் உணர்ந்திருக்கிறேன். காலத்திற்கேற்ற மறுசீரமைப்புக்கும் - மறுகட்டுமானத்திற்கும் ���துவே தருணம்!
#UdanpirapinKural
*சினிமாவை மிஞ்சிய பரபரப்பு,🛑 பல லட்சம் மதிப்பிலான குட்கா பொருளுடன் சிக்கிய ஆளுங்கட்சி நிர்வாகி*
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாய்க்கால் மேடு தில்லைநகர் நெல்லை ஸ்டோர் உரிமையாளர் தமிழக வெற்றி கழக நிர்வாகி 10 லட்சம் மதிப்பீட்டில் போதை பொருட்கள் குட்கா உள்ளிட்ட பொருட்களை கடத்தி வந்த போது காவல்துறையினர் தகவல் தெரிந்து அவர்களை விரட்டிப் பிடிக்��ும் போது மெயின் அக்யூஸ்ட் டிரான்ஸ்போரத்தில் காரை மோதி விட்டு தப்பி ஓட்டம் இரண்டாவது குற்றவாளியான தமிழக வெற்றிக் கழக நிர்வாகி நெல்லை ஸ்டோர் உரிமையாளர் இல்லத்தில் 150 கிலோ பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றியது. ஆளுங்கட்சி நிர்வாகிய இச்ச சம்பவத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது...