‘கழக அரசு விரைவில் மலர்ந்தே தீரும் என கரூரில் முரசு கொட்டிய கழக தலைவர்’
தலைவரின் கூற்றை உண்மையென கட்டியங்கூறி விண்ணதிர ஆர்ப்பரித்த சிம்மக்கூட்டம்!
கழக தலைவர் @mkstalin முன்னிலையில் மாற்றுக்கட்சிகளை சேர்ந்த 30,450 பேர் @SenthilbalajiV தலைமையில் திமுகவில் இணைந்த மாபெரும் விழா.
இரத்தம் கொதிக்கிறது!
இந்த ஊழல் அரசின்கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா என்ன?
உடனடியாக அனைத்து அரசு மருத்துவம��ை இரத்தங்களும் பரிசோதனை செய்யப்பட வேண்டும்!
குட்கா விஜயபாஸ்கர் இனியாவது மக்கள் நல்வாழ்வுதுறை பணிகளில் ஈடுபடுவாரா?
"தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட காரணமான அராஜக மத்திய - மாநில அரசுகளை அடியோடு அகற்றிடுவோம்”
- கழகத் தலைவர் @mkstalin#Sterlite
அமைச்சர் விஜயபாஸ்கரும், DGP ராஜேந்திரனும் ஒரே மாதிரியான சிறகுகள் கொண்ட கரும்பறவைகள்! இருவரையும் குட்கா வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க சிபிஐ முயற்சிக்குமேயானால் திமுக உச்சநீதிமன்றத்தை நாட தயங்காது!
ஊழல் கறைபடிந்து வெட்ட வெளிச்சமாகிய பின்னும், இருவரும் பதவியில��� நீடிப்பது நியாயமா?
தென்திசை நோக்கி இந்தியாவின் திருமுகத்தை பலமுறை திரும்பிடச் செய்த தலைவர் கலைஞர், தன் திருவுருவச் சிலை திறப்பு விழாவிலும் இந்திய அரசியலின் ஒட்டுமொத்த பார்வையையும் தன் பக்கம் திருப்பி விட்டார்.
நிகழ்வைச் சிறப்பித்த, அதற்காக உழைத்திட்ட அனைவருக்கும் என் நன்றி! #StatueOfKalaignar
பிஜேபியின் பினாமி ஆட்சி என்ப���ு இதுதான். தாய்மொழி தமிழின் இடத்தில் சமஸ்கிருதத்திற்கு என்ன வேலை? இதே போல தான் சமஸ்கிருதத்திற்காக தமிழின் தொன்மையை வெளிப்படுத்தும் கீழடி ஆய்வு இடையில் நிறுத்தப்பட்டது. தமிழையும், தமிழர்களையும் பின்வாசல் வழியாக பிஜேபிக்கு அடகுவைப்பதே அதிமுகவின் வேலை
மத்தியப்பிரதேச காங்கிரஸ் முதல்வருக்கு அடுத்து, சத்தீஷ்கர் மாநில காங்கிரஸ் முதல்வரும் பதவியேற்பு முடிந்த கையோடு விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளார். தமிழகத்தில் இருக்கிற பிஜேபியின் பினாமி அரசு என்ன செய்யப்போகிறது?!
கழக தலைவர் @mkstalin அவர்களை இன்று சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த அமமுக அமைப்பு செயலாளர் - முன்னாள் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜி அவர்கள், பூங்கொத்து அளித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அவரது தலைமையில் ஏராளமானோர் கழக தலைவர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே ஊழல் வழக்கு இருக்கிறபோதே, சாலைகள் மற்றும் மழைநீர்க் கால்வாய்கள் அமைப்பதற்கான 740கோடி ரூபாய் மாநகராட்சி டெண்டரில் புதிய ஊழல் புரிந்திருக்கிறார் அமைச்சர் வேலுமணி!
லஞ்ச ஊழல் தடுப்புத்துறை உரிய நடவடிக்கை எடுக்காவிடில்,திமுக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும்!
“கழக தலைவர் திரு. @mkstalin அவர்கள் நாட்டிலேயே மிக உயரமாக, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 114 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பத்தில் கழக இருவண்ணக் கொடியை ஏற்றி வைத்து வீர வணக்கம் செலுத்தினார்”
திரண்டிருந்த கழக செயல்வீரர்கள் உற்சாகத்துடன் ஆர்ப்பரித்து முழங்கினர்.
ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 74 கிலோ எடைப்பிரிவினருக்கான இறுதிப்போட்டியில் மங்கோலியாவின் பேட்-எர்டனை வீழ்த்தி இந்தியாவின் சச்சின் ரதி தங்கப்பதக்கம் வென்றார் #Wrestling
��ிமுக மேற்கு மாவட்டம், திமுக வழக்கறிஞர் அணி, கலைஞரின் 95 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொத்தனுர் இன்று மாலை பொதுக்கூட்டம், இதில் அண்ணன் சட்டமன்ற உறுப்பினர் K.S.மூர்த்தி அவர்கள் சிறப்பு உரையாற்றினர், அவர்களுடன் திமுக வழக்கறிஞர்கள் திமுக உறுப்பினர்கள @mkstalin
@ksmoorthy990
ஜனநாயக மாண்பினை காப்பதில் நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், தெளிவான-நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்கவேண்டும். தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதுடன் பெரும் காலதாமதத்தால் பயனற்றதாகிவிடும். அதனை நீதிமன்றம் தவிர்க்கும் என நம்புகிறேன்.
எடப்பாடியும் சம்பந்தியும் மொத்த 4000கோடியை முழுங்கிவிட்டதாக வெளியில் தெரிந்தாலும் அதில் சரிபாதியை உலக உத்தமர் ஓபிஎஸ், சேகர் ரெட்டி மூலமாக சரிகட்டியிருக்கிறார். கூட்டுக்கொள்ளையே கொள்கை. #EPS4000CrScam#ADMKLoots
மக்களின் உயிரை வேட்டையாடி விட்டு, கண்துடைப்பு அரசாணையை வெளியிட்ட அதிமுக அரசுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவெடுத்து புதிய அரசாணை வெளி���ிட்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு நிரந்தர மூடுவிழா நடத்த வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.