நாமக்கல் கிழக்கு மாவட்டம், இராசிபுரம் நகரத்தில் கடந்த மார்ச் 2021 முதல் தற்பொழுது வரை மறைந்த 10 கழக நிர்வாகிகளின் குடும்பத்தாருக்கு அஞ்சலி செலுத்தி தலா ரூ.5000/ வீதம் ரூ.50,000/- முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் குடும்ப நல நிதியாக வழங்கினேன்.
@arivalayam
#VPSingh#MandalCommision இந்தியாவில் சமூகநீதியை நிலைநாட்ட, மண்டல் கமிஷன் பரிந்துரையை சட்டமாக்கி, செயல்படுத்தியதன் மூலம், ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், பிற்படுத்தபட்டோருக்கான இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்த சமூகநீதிக் காவலர் முன்னாள் பிரதமர் வி. பி. சிங் அவர்களின் பிறந்தநாளில், அவர்தம் கொள்கை பிடிப்பை நினைவு கூறுவோம். நன்றி 🙏
#TrichyZoo திருச்சி வனக் கோட்டத்தில் உள்ள திருச்சி வன உயிரியல் பூங்கா சிறிய அளவில் இருந்து, நடுத்தர அளவு கொண்டதாக, அடுத்த நிலைக்கு தரம் உயர்த்தப்பட உள்ளது. அது தொடர்பாக விரிவாக ஆலோசிக்க வனத்துறை அதிகாரிகளுடன் இன்று திருச்சிக்கு நேரில் சென்று, பூங்கா அமைந்துள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன். உடன் துறையின் தலைவர் திரு. சுப்ரத் மகபத்ரா IFS., திரு. ஶ்ரீநிவாஸ் ரெட்டி IFS., உள்ளிட்ட மண்டல, மாவட்ட வனச் சரக அலுவலர்கள் மற்றும் ஒன்றிய கழக செயலாளர் திரு. ஶ்ரீநிவாஸ குமார், ஹேமலதா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நன்றி 🙏
நாமக்கல் கிழக்கு மாவட்டம், வெண்ணந்தூர் ஒன்றியம், அத்தனூர் பேரூரில் கடந்த மார்ச் 2021 முதல் தற்பொழுது வரை மறைந்த 23 கழக நிர்வாகிகளின் குடும்பத்தாருக்கு அஞ்சலி செலுத்தி தலா ரூ.5000/ வீதம் ரூ.1,15,000/- முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் குடும்ப நல நிதியாக வழங்கினேன்.
@arivalayam
நாமக்கல்லில் தமிழின தலைவர், சமூகநீதி காவலர், முத்தமிழறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா தொடக்க நாளில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தினோம் !
#கலைஞர்100#Kalaignar100
#கலைஞர்100 முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தினமான இன்று, கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடம் சென்று, மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நானும் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தி, ஒப்பற்ற தலைவர் நூற்றாண்டு நாயகர் கலைஞர் அவர்களின் ஓய்விடத்தில் மரியாதை செலுத்தி வணங்கி வந்தேன். நன்றி 🙏
#KolliHills#BloodBank#FirstDonor இன்று மாண்புமிகு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அண்ணன் திரு. மா. சுப்ரமணியன் அவர்களால் கொல்லிமலையில் திறந்து வைக்கப்பட்ட இரத்த வங்கியில், முதல் கொடையாலனாக முன்வந்து, இரத்தக் கொடை (350ml) வழங்கி சிறப்பித்தேன். நன்றி 🙏
#KolliHills#Ellaikiraipatti#Hemoglobinopathy மலைவாழ் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏற்படும் ஹீமோகுளோனோபதி நோய் கண்டறியும் பரிசோதனை சேவையை இன்று கொல்லி மலையில் உள்ள எல்லைகிராய்பட்டியில் தொடங்கி வைத்து, அதற்கான பரிசோதனை முடிவுகளையும், மாண்புமிகு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அண்ணன் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள் வழங்கி சிறப்பித்தார். உடன் நானும் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் திரு. KRN Rajeshkumar MP., அவர்களும் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றி வந்தோம். சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. K. பொன்னுசாமி, மருத்துவ குழுவினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நன்றி 🙏
#WorldTurtleDay இன்று உலக ஆமைகள் தினம். கடலின் துப்பறிவாளன் என்று அறியப்படும் ஆமைகள், கடல்வளத்தை பாதுகாக்கும் அரணாக இருக்கின்றன. நாம் 60% கடல் வளத்தை நம்பியே வாழ்கிறோம். கடல் வளத்தை காக்க, ஆமைகளை பாதுகாப்போம். அனைவருக்கும் "உலக ஆமைகள் தின வாழ்த்துகள் " நன்றி
#TNSecretariat#TNForest தமிழ்நாடு வனத்துறையின் ரப்பர் தோட்டக் கழகம், தேயிலை தோட்டக் கழகம் மற்றும் தோட்ட கலை தொடர்பான ஆலோசனை கூட்டம், இன்று மாலை நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் "என்றென்றும் கலைஞர், எங்கெங்கும் கலைஞர்" முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை துறை சார்ந்து சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், ரப்பர் மற்றும் தேயிலை தோட்ட கழகத்தை லாபகரமாக கொண்டு செல்வது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. உடன் துறையின் முதன்மை தலைமை செயலாளர் திருமதி. Supriya Sahu IAS., துறையின் தலைவர் திரு. சுப்ரத் மஹாபத்ர IFS., உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நன்றி
இரா.புதுப்பட்டி பேரூராட்சியில் 30 பயனாளிகளுக்கு இணையவழி இலவச வீட்டுமனை பட்டாக்களை எனது முன்னிலையில் கழக தலைவர், மாண்புமிகு.தமிழ்நாடு
முதலமைச்சர் தலைவர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசியுடன் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் @MMathiventhan அவர்கள் வழங்கினார்.
#Rasipuram#MyConstituency எனது இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள இரா. புதுப்பட்டி பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டிமுடிக்கப்பட்ட, இரண்டு நியாய விலைக் கடைகளை இன்று நானும் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் திரு. KRN Rajeshkumar MP., அவர்களும் திறந்து வைத்து சிறப்பித்தோம். உடன் பேரூராட்சித் தலைவர் மற்றும் கழக செயலாளர் திரு. P. ஜெயக்குமார் உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நன்றி 🙏
#TNSecretariat தமிழ்நாடு அரசின் 2023 - 2024 நிதிநிலை அறிக்கைக்கு பிறகாக நடைபெற்று வரும் அனைத்து துறை மானியக் கோரிக்கை விவாதங்களில், வரலாற்று சிறப்புமிக்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் 13-04-2023 அன்று வனத்துறையின் விவாதத்தில் பங்கேற்று பதிலளித்து உரையாற்றியதன் காணொளி.
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.
இந்தக் குறள்கொடுக்கும் பொருளானது,
நாம்செய்யும் அனைத்து செயல்களும் அறிவை மட்டுமல்ல, இயற்கை கண்கொண்டு செய்யவேண்டும் என்பதாகும். நன்றி.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசியுடன் எனது பாராளுமன்ற மாநிலங்களவை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கினேன்.
@CollectorNmkl
##TNSecretariat தமிழ்நாடு அரசின் வனத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறையும் இணைந்து நடத்திய முதல் ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள வனத்துறை கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் அண்ணன் திரு. @PKSekarbabu அவர்களுடன் நானும், அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி. சுப்ரியா சாகு IAS., இந்து சமய அறநிலையத்துறையின் முதன்மைச் செயலாளர் திரு. சந்திர மோகன் IAS., மற்றும் இரு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். நன்றி 🙏
#ChennaiEastDMK கழக தலைவர் அவர்களால் செயல் பாபு என்று பாராட்டை பெற்ற மாண்புமிகு தமிழ்நாடு இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் அண்ணன் திரு. PK. @PKSekarbabu அவர்களால் செயல்வடிவம் பெற்ற "எங்கள் முதல்வர், எங்கள் பெருமை" சரித்திர வாழ்வின், நீண்ட நெடிய பயணப் பக்கங்களை, படங்கள் மூலம் காட்சிப்படுத்தி, காணவரும் அனைவரும் அதிசயித்து, பேராற்றல் பெற்று திரும்பும் படியாக, மிசா சிறையை கட்டமைத்து, வியப்பில் ஆழ்த்திய கண்காட்சியை, கண்டு மகிழ்ந்து, மெய்சிலிர்த்து திரும்பியதன் காணொளி.
#Chennai#GuindyNationalPark தமிழ்நாடு வனத்துறையின் கிண்டி தேசிய பூங்காவை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன். 270 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்கா, சுற்றுப்பயணிகளின் தவிர்க்க முடியாத இடமாக இருந்து வருகிறது. 30க்கும் அதிகமான வகையில் மரங்கள், அரிய வனவிலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்விடமாக, இந்தப் பூங்கா திகழ்கிறது. நன்றி 🙏
#TNSecretariat#NamakkalKavingarMaaligai முதுமலை யானை ரகு பற்றிய "The Elephant Whisperers" ஆவண குறும்படம் ஆஸ்கார் விருது வென்றுள்ளதை தொடர்ந்து, அனைத்து யானைப் பாகன்கள் மற்றும் உதவியாளர்களை சிறப்பிக்கும் வகையில், வனத்துறையில் பணியாற்றி வரும் 91 யானை பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தலா ஒரு இலட்சம் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவு பிறப்பித்தார். அந்த சிறப்பு ஊக்கத் தொகையை, தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று வழங்கி சிறப்பித்தோம். மேலும், அவர்கள் அனைவருக்கும் தலா பத்து இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் கட்டித் தரவும் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பித்தக்கதாகும். உடன் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி. சுப்ரியா சாகு அவர்களும், வனத்துறை அதிகாரிகளும், பொம்மன், பெல்லி உள்ளிட்ட பாகன்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நன்றி 🙏
#PollachiPapyrus#TheElephantMountains தென்னிந்தியாவின் உயர்ந்த மலைச் சிகரமாக விளங்கும் ஆனைமலை அற்புத வீச்சை, தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் படம் பிடித்துள்ளதன் காணொளி. நன்றி
#Namakkal நாமக்கல்லில் உள்ள அழகுநகர் நகராட்சித் துவக்கப் பள்ளியில், மாண்புமிகு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அண்ணன் திரு. Udhayanidhi Stalin அவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாட்டை இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுடன்..