EU banned this in 2008. Indian households still buy it by the dozen in 2026. And it has been sitting inside your cupboard, slowly releasing chemical fumes into the air your children breathe every single day. 😔 What makes this worse — the manufacturers print “keep away from children” right on the packaging. They know exactly what is inside. They just keep selling it anyway. ⚠️ Your grandmother never needed petrochemicals to keep her sarees safe. Neem, cloves, eucalyptus — nature already gave us everything we need. We just replaced wisdom with convenience without asking why. 🧬 The switch takes five minutes. The protection lasts a lifetime. 🌿 Your family’s health should be in your control.
மனசெல்லாம் பந்தலிட்டு
மல்லிக் கொடியாக ஒன்ன விட்டேன்
உசிருக்குள் கோயில் கட்டி
ஒன்னக் கொலு வச்சுக் கொண்டாடினேன்
நேற்றில் இருந்து இந்தப் பாடலை என் அடி மனது முணுமுணுத்துக் கொண்டே இருந்தது.
பாடல் வரிகளைக் கட்டிய ரவிசங்கர் நினைப்பும் வந்து போனது.
இன்று மனோஜ் பாரதிராஜாவின் முதலாவது நினைவு தினம்.
“வருஷமெல்லாம் வசந்தம்" படம் மனோஜுக்குப் பேர் சொல்ல வாய்த்த படம். ஒப்பீட்டளவில் அவருக்கு வெற்றிப் படமே.
ஆனால் அந்தப் படத்தை இயக்கிய ரவிசங்கர், நாயகன் மனோஜ், உப நாயகன் குணாள் மூவருவே அகால மரணத்தை எதிர்கொண்டதொரு துர்பாக்கியம்.
“புத்திர சோகம் பெருஞ்சோகம்" என்பார் என் அப்பா.
பாலசந்தரும், பாரதிராஜாவும் மகனார் இழப்போடு உடைந்து போய் விட்டார்கள்.
ரவிசங்கர் ஒரு திறமையான எழுத்தாளர் என்பதை பத்திரிகையாளர் கல்யாண்குமார் அவர்கள் அடையாளம் கண்டு கொண்டது “குதிரை” என்ற சிறுகதையை அவர் சார்ந்த வார இதழிலுக்கு அனுப்பிய போது கண்டு கொண்டது. அந்தக் கதையை கே.பாக்யராஜிடம் படிக்கக் கொடுக்கவும், அவர் ரவிசங்கரைப் பாராட்டி விட்டு “இது நம்ம ஆளு" படத்தில் இருந்து உதவி இயக்குநராக வைத்துக் கொண்டராகவும், கல்யாண்குமார் சார் அவரது நினைவுப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆராரோ ஆரிரோ படத்தில் வசன உதவி இரா.ரவிசங்கர் என்று எழுத்தோட்டத்திலும் அங்கீகாரம் பெற்றார்.
பின்னர் இயக்குநர் விக்ரமன் அவர்களின் பாசறையில் ரவிசங்கர் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.
தன்னுடைய இசையமைப்பாளர்கள் எஸ்.ஏ.ராஜ்குமார் போன்றோரின். மெட்டுக்கு அழகான வரிகளை இட்டுக் கட்டுவதில் சமர்த்தர் என்று தன் உதவி இயக்குநர் ரவிசங்கரைப் பாராட்டியிருக்கிறார்.
விக்ரமனே ஆர்.பி.செளத்ரியிடம் ரவிசங்கருக்கான “வருஷமெல்லாம் வசந்தம்" படத்தைத் தயாரிக்க அறிமுகப்படுத்தி வைத்தவர்.
“சூர்ய வம்சம்" படத்தில் “ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ” என்ற மெல்லிசைப் பாடலுக்கு நேரெதிராக “சலக்குச் சரிகைச் சேலை” பாடலையும் எழுதி இரு பாடல்களிலும் புகழ் பூத்தவர்.
“காற்றுக்குத் தூது விட்டு
கவிதைகள் பாடச் சொல்லு...”
அந்த வரிகளைச் சிலாகிக்காதோர் உண்டோ?
அத்தோடு இன்னொன்றாக
“வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்"
என்று விக்ரமன், எஸ்.ஏ.ராஜ்குமாரின் இன்னொரு மாபெரும் வெற்றிப் படைப்பான “உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்" படத்திலும் தன் பாடல் வரிகளால் அணி சேர்த்தவர்.
தொடர்ந்து அதே கூட்டணியின் மிலேனியத்தின் திறவுகோலாய் அமைந்த “வானத்தைப் போல" படத்தில்
“மைனாவே மைனாவே...” என்று படத் தொடக்கப் பாடலிலேயே அவர் வரிகளோடு தான் அந்த வெற்றிச் சித்திரம்.
இந்தப் படங்களில் எல்லாம் வசன ஒத்துழைப்பு என்று இவர் பெயரும் கூடவே வந்தது.
விக்ரமன் & சிற்பி கூட்டணி மீண்டும் இணைந்த “உன்னை நினைத்து" வழியாக “யார் இந்த தேவதை”யோடு வந்தார் ரவிசங்கர்.
தன் குரு நாதருக்கு லட்டு லட்டாய்ப் பாட்டெழுதியவர் தன் படத்தில் இல்லாமலா? வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் சிற்பியோடு கை கோர்த்தவர், “அனார்க்கலி அடியே அனார்க்கலி", முதன் முதலாய்" ஆகிய வெற்றிப் பாடல்களோடு ஐந்து பாடல்களை வரவில் வைத்தார்.
இங்கே தான் படத்தின் அடி நாதமாய் அமைந்த
“எங்கே அந்த வெண்ணிலா...
எங்கே அந்த வெண்ணிலா”
பாடலையும் தன் படைப்பின் கருவூலமாகக் கொடுத்தார்.
“ஒரு தேவதை வந்து விட்டாள்
உன்னைத் தேடியே...”
தன் சகா ராஜகுமாரனின் முதற்படமான “நீ வருவாய் என" விலும் ரவிசங்கர் தொடர்ந்தார்.
தேவாவின் இசைப் பாசறையில்
“பாரதிக்கு கண்ணமா நீ எனக்கு உயிரம்மா” (ப்ரியமுடன்),
“லட்ச லட்சமா” ( வெற்றிக் கொடி கட்டு)
உள்ளிட்ட பாடல்கள் பலவற்றை எழுதியிருக்கிறார்.
ஆகோஷ் கூட்டணியில் பிறந்த
“நாடோடிப் பாட்டுப் பாட" (அரிச்சந்திரா)
இன்னொரு வெற்றிக் கதை பேசும்.
“யார் இந்த தேவதை” பாடலுக்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெற்ற ரவிசங்கர் இந்தப் பாடல்களையெல்லாம் மீளக் கேட்கும் போது உயிர் பெற்று வருகிறார்.
காத்தில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக....
கானா பிரபா
25.03.2026
ஒரு டயலாக் இருக்கு. "அவன் பொருளை எடுத்து அவனையே போடுறது"-னு. இத காமெடியா கேட்டுருப்போம், ஆனா AI விஷயத்துல இதையே ஒரு செம "ஸ்மார்ட் ட்ரிக்"-ஆ யூஸ் பண்ணலாம்! 😎
நமக்கு AI கிட்ட இருந்து ஒரு விஷயம் தேவைப்படும், ஆனா அத எப்படித் தெளிவா கேக்குறதுனு (Prompt writing) தெரியாம முழிப்போம். அங்கதான் இந்த லாஜிக்கை யூஸ் பண்ணனும்.
உங்களுக்கு என்ன வேணுமோ அத அரைகுறையா, உங்களுக்கு தெரிஞ்ச மொழியில AI கிட்ட சொல்லி, "இதுக்கு ஒரு நல்ல Prompt எழுதி குடு"-னு கேளுங்க. அதுவே பக்காவான ஒரு Prompt ரெடி பண்ணி தரும். அப்புறம் அந்த Prompt-ஐ காப்பி பண்ணி அதுகிட்டயே கொடுங்க. வேலை முடிஞ்சது!
உதாரணத்துக்கு, எனக்கு என்னோட இட்லி கடைக்கு Logo வேணும். எனக்கு designing தெரியாது. AI-கிட்ட சிம்பிளா “i want to create logo for my "Idly Kadai" business. write detailed prompt” இப்படி கொடுத்தேன். அதுவே detailed prompt கொடுத்துச்சு (படம் 1).
அந்த prompt-ஐயே AI-கிட்ட கொடுத்து Image உருவாக்க சொன்னேன். அது எனக்கு நல்ல Logo உருவாக்கி தந்துடுச்சு (படம் 2).
அந்த logo பிடிக்கலை, வேற வேணும்னா, AI-கிட்ட சொன்னா அது rewrite பண்ணி கொடுக்கும். வேலை முடிஞ்சது!
AI-ஐ யூஸ் பண்றது பெரிய விஷயம் இல்ல, அதை உங்களுக்காக வேலை செய்ய வைக்கிறதுதான் ஒரு கலை!" 🎨
உங்க துணை/கணவர்/மனைவி இரவு முழுக்க உரத்த குறட்டை போட்டு, திடீர் திடீர்னு மூச்சு நின்னு திடுக்கிட்டு எழுந்துட்டு இருக்காங்களா?
நீங்களே காலையில எழுந்ததும் தலைவலி, பகலில் எப்பவும் தூக்கம் வருது, கவனம் செலுத்த முடியல, எரிச்சல் அதிகமா இருக்கா?
இதெல்லாம் தூக்க மூச்சுத்திணறல் (Sleep Apnea) அறிகுறிகள் தான்! இது சாதாரண குறட்டை இல்ல... இது உயிருக்கு ஆபத்தானது!
இதனால வரும் பிரச்சினைகள்:
- உயர் இரத்த அழுத்தம்
- இதய நோய், மாரடைப்பு ஆபத்து
- பக்கவாதம் வர வாய்ப்பு அதிகம்
- சர்க்கரை நோய் கண்ட்ரோல் ஆகாம போகுது
- கார் ஓட்டும்போது தூக்கம் வந்து விபத்து...
ஆனா நல்ல விஷயம் என்னன்னா... இதுக்கு மிகச் சிறந்த சிகிச்சை இருக்கு → CPAP மெஷின் (Continuous Positive Airway Pressure)
CPAP எப்படி வேலை செய்யுது?
- சின்ன மெஷின் + முகமூடி (மூக்கு அல்லது மூக்கு+வாய்)
- தூங்கும்போது மெஷின் மென்மையான காற்றை தொடர்ந்து அழுத்தத்தோடு அனுப்பும்
- இந்த காற்றழுத்தம் தொண்டையில் உள்ள தசைகள் சரிந்து அடைக்காம காற்றுப்பாதையை திறந்தே வைக்கும்
- அதனால மூச்சு நின்னு போகாம, ஆக்ஸிஜன் சரியா கிடைக்கும்
- குறட்டை நின்னு போகும், தூக்கம் ஆழமா வரும்!
CPAP பயன்படுத்தினா என்ன நடக்கும்?
✅ முதல் வாரத்திலேயே பகல் தூக்கம் குறையும்
✅ காலை தலைவலி போயிடும்
✅ இரத்த அழுத்தம் குறையும்
✅ இதயத்துக்கு, மூளைக்கு பாதுகாப்பு அதிகரிக்கும்
✅ மனசு சந்தோஷமா, எனர்ஜி ஃபுல்லா இருக்கும்
நான் கடந்த சில வருடங்களாக குறட்டை மற்றும் sleep apnea எனப்படும் பிரசனையினால் பாதிக்கப்பட்டு இருந்தேன். எங்க ஊரில் மருத்துவம் இலவசம் என்பதால் அவர்கள் என்னை முழுக்க diagnose செய்து CPAP சிகிச்சைக்கு பரிந்துரை செய்தார்கள். CPAP என்பது வேறு ஒன்றும் இல்லை. தூங்கும்போது நாம் மூக்கு வழியாக காற்றை உள்ளிழுத்து விடாமல் வாய் வழியாக வெளியிடுகிறோம். அதனை சரி செய்ய, cpap machine மூலமாக மூக்குக்கு தேவையான காற்றை குடுப்பதன் மூலம், வாய் வழியாக சுவாசிப்பது நிற்கிறது மற்றும் குறட்டை சத்தமும் வருவதில்லை.
மிக சிறப்பான தூக்கமும், tiredness குறைகிறது. இந்த machine ல சிறிது அளவு சுத்தமான தண்ணீர் ஊற்றி, humidifier pipe மூலம் மூக்கில் சிறிய மாஸ்க் அணிந்து கொண்டால் நல்ல தூக்கம் உறுதி.
ஒன்றரை வருடமாக பயன்படுத்தி வருகிறேன். சிறப்பான அனுபவமாக, அந்த நாள் முழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்க முடிந்தது.
பலருக்கு முதல்ல "முகமூடி போடுறது சிரமமா இருக்கும்"னு தோணும்... ஆனா 1-2 வாரம் பழகினா சூப்பர் கம்ஃபர்ட்டபிள் ஆயிடும்! (மாஸ்க் டிப்ஸ், ஹ்யூமிடிஃபையர் எல்லாம் இருக்கு)
உங்களுக்கு இந்த அறிகுறி இருந்தா... தயவு செஞ்சு "இது சும்மா குறட்டை தானே"னு விட்டுடாதீங்க!
தூக்கம் எல்லாம் ஒரு பிரச்சினை யா ?? என்றால் அது கிடைக்காத பலர் உண்டு.இங்கே இந்த machine, மற்றும் மாஸ்க் அனைத்தையும் இலவசமாக கொடுத்தார்கள். நம்ம ஊரில் எவ்ளோ வரும் என்று பார்த்தால் 40-50 ஆயிரம் வருகிறது. வொர்த் ஆன investment தான். கண்டிப்பாக மருத்துவர் ஆலோசனையுடன் செய்யலாம்.
உங்க தூக்கத்தை காப்பாத்துனா... உங்க உயிரையும் காப்பாத்துறீங்க ❤️
குலதெய்வம் கோபமாக இருப்பதை காட்டும் அறிகுறிகள்!
குடும்பத்தின் அதிர்ஷ்டமும் அமைதியும் ஏன் குலதெய்வ அருளோடு இணைந்திருக்கிறது?
தமிழர் மரபில் “குலதெய்வம்” என்பது ஒரு சாதாரண தெய்வம் அல்ல.
அது ஒரு குடும்பத்தின் காவல் தெய்வம்.
பெரியவர்கள் சொல்வார்கள்:
“குலதெய்வம் காக்காமல் வேறு தெய்வம் காக்காது.”
இது பயமுறுத்தும் வாசகம் அல்ல — பொறுப்பை நினைவூட்டும் உண்மை.
குலதெய்வம் என்றால் என்ன?
ஒரு குடும்பத்தின் தலைமுறைகள் வழிபட்டு வந்த,
அந்த வம்சத்தை பாதுகாக்கும் தெய்வமே குலதெய்வம்.
திருமணம்
முதல் குழந்தை
வீடு கட்டுதல்
முக்கிய முடிவுகள்
எதற்கும் முன் குலதெய்வம் நினைவில் கொள்ளப்படுவது இதனால் தான்.
குலதெய்வ வழிபாடு ஏன் அவசியம்?
நம் குடும்பம்:
ஆரோக்கியமாக
மகிழ்ச்சியாக
சண்டை சச்சரவில்லாமல்
வளமாக
இருக்க, முன்னோர்கள் கடைப்பிடித்த வழிபாடு தொடர வேண்டும் என்று மரபு கூறுகிறது.
“நேர்த்திக்கடன்” (வாக்குப்பிரார்த்தனை) செய்திருந்தால், அதை நிறைவேற்றுவது அவசியம்.
அதை மறந்து விட்டாலோ, தொடர்ந்து தவிர்த்து வந்தாலோ — மனஅமைதி குலையும்.
குலதெய்வம் கோபமாக இருப்பதை காட்டும் அறிகுறிகள் (மரபு நம்பிக்கை)
இவை அனைத்தும் பக்தி மரபில் சொல்லப்படும் அறிகுறிகள்.
அதை அச்சமாக அல்ல — சிந்தனைக்கு வழிகாட்டியாக பார்க்க வேண்டும்.
1️⃣ கோவிலுக்கு செல்ல தடங்கல்கள்
குலதெய்வ கோவிலுக்கு செல்ல திட்டமிட்டால் திடீர் பிரச்சினைகள்.
பயணம் ரத்து ஆகுதல்.
எதிர்பாராத தடைகள்.
சென்றாலும்:
பூஜை செய்ய முடியாமல் போவது.
அர்ச்சகர் இல்லாமை.
ஏதாவது சின்ன விபரீதம்.
2️⃣ நினைப்பது ஒன்று – நடப்பது வேறு
வாழ்க்கையில்:
திட்டங்கள் முறியடித்தல்.
நல்ல வாய்ப்புகள் கைவிடுதல்.
தொடர்ந்து தடைகள்.
3️⃣ குடும்பத்துடன் செல்ல முடியாத சூழ்நிலை
மரபு கூறுவது:
குலதெய்வ தரிசனம் குடும்பத்தோடு சேர்ந்து செய்ய வேண்டும்.
ஆனால்:
ஒருவருக்கு உடல்நிலை பிரச்சினை
வேலையால் வர முடியாமை
திடீர் சச்சரவு
போன்ற சூழ்நிலைகள் உருவாகலாம்.
4️⃣ கனவில் தோன்றும் அறிகுறிகள்
குலதெய்வம் கோபமாக தோன்றுதல்.
கோவில், தீ, அல்லது அச்சமான காட்சிகள்.
தீய சக்திகள் போன்ற கனவுகள்.
இவை அனைத்தும் மனஅழுத்தத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.
ஆனால் மரபு அதை “அழைப்பு” எனப் பார்க்கிறது.
5️⃣ தரிசனம் பின் சின்ன அசம்பாவிதங்கள்
கோவிலில் கால் வழுக்குதல்
சிறிய காயம்
வீடு திரும்பிய பின் சண்டை
இதனை “தெய்வம் நினைவூட்டுகிறது” என பெரியவர்கள் கூறுவர்.
6️⃣ உடல் நல பாதிப்புகள் & தொடர்ந்த பிரச்சினைகள்
மருத்துவ காரணமின்றி உடல் சோர்வு
குடும்பத்தில் அடிக்கடி சண்டை
பிரச்சினை மேல் பிரச்சினை
இவை அனைத்தும் ஏற்பட்டால், “குலதெய்வத்தை நினைவில் கொள்ள வேண்டும்” என்றே மரபு கூறுகிறது.
என்ன செய்யலாம்?
பயம் வேண்டாம். பரிகாரம் எளிது.
🪔 வீட்டில் விளக்கு ஏற்றுதல்
தினமும் அல்லது வெள்ளிக்கிழமை:
குலதெய்வத்தை நினைத்து ஒரு விளக்கு ஏற்றுங்கள்.
மனதார சொல்லுங்கள்:
“நாங்கள் தெரியாமல் செய்த தவறுகளை மன்னித்து,
உன் சன்னதிக்கு வந்து வழிபட அருள் புரியுங்கள்.”
இதுவே மிகப் பெரிய பரிகாரம்.
🙏 ஆலய தரிசனம்
குடும்பத்துடன் சேர்ந்து செல்லுங்கள்.
பஞ்சாங்க பூஜை செய்யுங்கள்.
நேர்த்திக்கடன் இருந்தால் நிறைவேற்றுங்கள்.
முக்கியம்:
ஒருதலைமுறை கூட தவறாமல் குலதெய்வ வழிபாடு தொடர வேண்டும்.
ஒரு முக்கியமான திருத்தம்
“குலதெய்வம் கோபம் கொண்டு தண்டிக்கும்” என்ற எண்ணத்தை விட
“குலதெய்வம் நினைவூட்டுகிறது” என்ற எண்ணம் சரியானது.
தெய்வம் தண்டிக்க அல்ல —
வழிநடத்த.
பெரும்பாலும் நாம் குலதெய்வத்தை மறந்து விட்டால்,
அதை மீண்டும் நினைக்கச் செய்யும் வாழ்க்கைச் சம்பவங்களாக இதை பார்க்கலாம்.
ஒரு சிறிய உண்மை
குலதெய்வம் என்பது
வீட்டின் மூதாதையரின் ஆசீர்வாதத்தின் தொடர்ச்சி.
அந்த வழிபாடு தொடரும் வரை
குடும்பம் வேரோடு நிலைத்து நிற்கும்.
SIR 2026 UPDATE ONLINE
#Thread
https://t.co/OPkuJfZpzq
இதில் Indian Resident option selection செய்து Login செய்து Fill Enumeration Form உள் சென்று மீண்டும் ஒருமுறை EPIC No கொடுத்து Search செய்து கொள்ளுங்கள்
இதற்கு உங்கள் Mob No முக்கியம். OTP verification தேவைப்படும்