நேத்து காலையில என்னோட பையன் காலேஜ் க்கு வண்டியில (TVS Jupiter) போகும்போது, அகரம் மெயின் ரோடு ல பின்னாடி வந்த பைக் இடிச்சி, கையில சிராய்ப்பு மற்றும் கால் முட்டியில கொஞ்சம் அடி. (நீங்களெல்லாம் கேட்பதற்கு முன்னர் - அவனுக்கு 18 வயசு ஆயிடிச்சு. லைசென்ஸ் எடுத்து குடுத்தாச்சு. கார், பைக் ரெண்டும் ஓட்டுவான்.)
பக்கத்துல இருக்குற Bhaarath Hospital க்கு கூட்டிட்டு போய் வைத்தியம் பார்த்தோம்.
அங்க , Accident ரிப்போர்ட் ஒன்னு record பண்ணிக்கிட்டாங்க. எதுக்கு ன்னு கேட்டதுக்கு அரசு ஆணைப்படி எல்லா accident கேஸ் ம் register பண்ணனும்ன்னு சொன்னாங்க. வைத்தியம் முடிஞ்சி வீட்டுக்கு வந்துட்டோம்.
இன்னைக்கு காலையில பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் இருந்து phone வந்துச்சு. பேசியவர் அந்த காவல் நிலையத்தின் அதிகாரி. எல்லா விவரங்களையும் கேட்டு verify பண்ணிக்கிட்டாரு. பையனோட உடல்நலத்தை அக்கறையோடு விசாரிச்சார். கூடவே, ஏதும் கேஸ் file பண்ண உதவி வேணுமா ன்னும் கேட்டுக்கிட்டாரு. ஏதாவது உதவி வேணும்னாலும் தயங்காம கேளுங்க ன்னு சொல்லிட்டு முடிச்சாரு.
முன்ன எல்லாம் ஏதாவது காவல் நிலையத்துக்கு accident கேஸ் க்கு போனா அந்த process ரொம்ப tedious ஆ இருக்கும். இப்போ @tnpoliceoffl / @chennaipolice_ / @COPTBM இதை ரொம்ப சுலபமா ஆக்கிட்டாங்க போல. ரொம்பவே வசதியாவும், அவங்க சைடுல இருந்து ரொம்ப அக்கறையாவும் இருக்கு.
Many thanks to everyone in the Police Department for this initiative, and heartfelt appreciation for executing the same flawlessly.
மக்களே, accident ன்னு மருத்துவமனைக்கு போனீங்கன்னா இதெல்லாம் கேப்பாங்க. உங்களுக்கு தெரிஞ்ச தகவல் எல்லாத்தையும் சொல்லுங்க, காவல் துறையில் இருந்து உதவி, உங்கள் வீடு தேடி வருகிறது.
🙏🙏🙏🙏
EV பயனர்களுக்கான மின்சாரப் பாதுகாப்புடன் சோலார் பவர் பிளாண்ட் நிறுவி மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான வழிகாட்டி #SinglePhase
EV Car / EV Scooter வீட்ல charge பண்றீங்களா? ⚡🚗🛵
அப்படின்னா இது உங்களுக்கு ரொம்ப முக்கியமான திரட். குறிப்பா #Single_Phase கனெக்ஷன் உள்ளவங்க இதை கண்டிப்பா படிங்க!
சமீபத்தில் நண்பர் ஒருத்தர் வீட்ல Solar Power Plant அமைக்கச் சொல்லி கேட்டிருந்தாங்க. அதுக்காக Site visit போயிருந்தோம். அங்க Solar inspection முடிச்சிட்டு மொத்த லோட் (Connecting load) செக் பண்ணோம்.
அங்க ஒரு EV Car + ஒரு EV Scooter இருந்துச்சு. சிங்கிள் பேஸ் கனெக்ஷன் இருக்குற வீடுகள்ல, EV சார்ஜர் வரும்போது அது ஒரு 'Heavy Load' ஆக மாறுது. இதை சரியான பிளானிங் இல்லாம பயன்படுத்துறது ஆபத்து.
ஆனா அங்க கனெக்ஷன்ல பல குறைபாடுகள், குறிப்பா பாதுகாப்பு (Safety) சம்பந்தமான நிறைய பிரச்சனைகள் இருந்துச்சு. இது பல சிங்கிள் பேஸ் வீடுகள்ல நடக்குற ஒரு பொதுவான விஷயம்.
அதனால #MG_Comet, #Tiago_EV போன்ற குறைவான kW கொண்ட EV கார்களை வீட்ல #Single_Phase லைன்ல சார்ஜ் செய்ய வேண்டிய எலக்ட்ரிக்கல் முறைகள் இதோ.
பொதுவா இந்த கார்களோட 3.3kW AC Charger (16A/20A plug) வரும். இதை சிங்கிள் பேஸ்ல சரியா செட்டப் பண்ண இந்த 5 விஷயங்கள் ரொம்ப முக்கியம்:
✅ Cable Size
✅ Switchgear (MCB/RCCB)
✅ Earthing
✅ Sanctioned Load
✅ Voltage Management
#Cable_Size
3.3kW லோடு எடுக்கும்போது கரண்ட் 15A–16A வரை இருக்கும்.
📌 Best: 6 https://t.co/uN2E4PHM0m 3 Core Copper Cable.
தூரம் அதிகமா இருந்தா வோல்டேஜ் குறையாம இருக்க (Voltage Drop தவிர்க்க) 6 https://t.co/uN2E4PHM0m தான் மிகச்சிறந்தது!
#Switchgear
சாதாரண 15A சாக்கெட்ல சார்ஜ் போடாதீங்க!
🔸 MCB: 25A Single Pole C-Curve.
🔸 RCCB/ELCB: Type-A RCCB பயன்படுத்துவது கட்டாயம். இது EV-ல் ஏற்படும் DC கசிவுகளில் இருந்தும் உங்களைப் பாதுகாக்கும்.
#மிகமுக்கியம்
16A/20A Industrial Socket (Metal Clad Box) தான் பெஸ்ட். சாதாரண பிளாஸ்டிக் சுவிட்ச் பாக்ஸ்ங்க அதிக நேரம் சார்ஜ் ஆகும்போது ஹீட் ஆகி உருகிடும் (Melt), அப்புறம் Short circuit ஆக வாய்ப்பு அதிகம்!
#Earthing
எர்த் வசதி சரியா இல்லனா கார் சார்ஜ் ஆகாது, Dashboard-ல எர்ரர் காட்டும்.
📌 Earth voltage 2V-க்குள்ள (Max 3V) இருக்கணும். EV சார்ஜருக்குன்னு தனியா ஒரு பிரத்யேக Earth Pit போடுவது 100% பாதுகாப்பானது.
#Sanctioned_Load
உங்க சிங்கிள் பேஸ் லோடு குறைந்தது 5kW இருக்கணும்.
2kW கனெக்ஷன்ல 3.3kW சார்ஜர் போட்டா:
❌ ஒயர் சூடாகி மெல்ட் ஆகும்
❌ மெின் ஃப்யூஸ் போகும்
❌ EB Fine வரலாம்!
#WiringPlan
சரியான முறை இதுதான்:
EB Meter ➡️ Main DP Switch ➡️ SPD (பாதுகாப்பிற்கு) ➡️ RCCB (Type A) ➡️ 20A MCB ➡️ Industrial Socket ➡️ EV Charger.
#லோடுமேனேஜ்மென்ட்
கார் சார்ஜ் போடும்போது (3.3kW), வீட்டின் மற்ற அதிகப்படியான லோடுகளை (AC, Geyser, Water Pump) பயன்படுத்துவதை தவிர்க்கவும். சிங்கிள் பேஸ் லைனில் மொத்த லோடும் ஒரே ஒயரில் செல்வதால் ஹீட் அதிகமாகும்.
#வோல்டேஜ்செக்
மின்னழுத்தம் 210V - 230V சீரா இருக்கணும். வோல்டேஜ் ரொம்ப கம்மியா இருந்தா சார்ஜிங் கட் ஆகும். சோலார் பிளான்ட் அமைக்கும்போது மின்னல் வெட்டினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க Lightning Arrester அவசியம்.
EV சார்ஜர்ங்கிறது வெறும் மொபைல் பிளக் மாதிரி கிடையாது. இது "Continuous High Load". அதனால ஒயரிங், சாக்கெட், எர்த் எல்லாமே தரமா இருந்தா கார் பேட்டரியும் சார்ஜரும் பல வருஷம் நல்லா இருக்கும்.
#சோலார்தீர்வு
பாதுகாப்பா ஒயரிங் பண்ணிட்டு, 5kW Solar Plant போட்டீங்கன்னா... உங்க EB பில்லை 85% குறைக்கலாம்! பகல் நேரத்துல கார் சார்ஜ் பண்ணுவது இன்னும் லாபகரமானது.
#Charge பண்ணுங்க… ஆனா #Safety-யோட.🙏
#KanaliTech #SolarPower #SinglePhase
#EVIndia #ElectricVehicle #SafetyFirst #EVCharging