#BREAKING | அரசின் மருத்துவக் கட்டமைப்பின் மீது மருத்துவப் பணியாளர்களின் திறமை மீதும் மக்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையைக் காட்டுகிறது!
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
#CMMKStalin | #Tngovt | #KalaignarSeithigal
கல்விக்கும் மருத்துவ சேவைக்கும் ஒதுக்கும் நிதி, செலவு அல்ல; வருங்காலச் சமுதாயத்துக்கான முதலீடு!
நம் #DravidianModel-இன் இருகண்களாய் விளங்கும் இத்துறைகளில் நாட்டுக்கே முன்னோடியான பல திட்டங்களை, பல கோடி மக்கள் பயனடையச் சிறப்புற நிறைவேற்றி வருகிறோம்.
இந்த வகையில், நாம் உருவாக்கிய கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை, அரிய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தி ஏழை, எளிய மக்களுக்குத் தரமான சிகிச்சை தருவதில் முத்திரை பதித்துள்ளது.
சிறிய நகரங்களிலும்கூட சிக்கலான அரசு மருத்துவமனைகளில் சவாலான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு உயிர் காக்கும் உயரிய பணியை, அர்ப்பணிப்பு மிகுந்த மருத்துவக் குழுவினர் செய்து வருவது நாளும் செய்திகளில் இடம்பெறுவது பெருமிதத்தை அளிக்கிறது!
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை - எளிய மக்களின் எண்ணிக்கை கடந்த நான்கரை ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்து இருப்பது, அரசின் மருத்துவக் கட்டமைப்பின் மீதும் - மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் திறமை மற்றும் அக்கறையின் மீதும் மக்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையைக் காட்டுகிறது.
மக்கள் தொண்டைத் தொய்வின்றித் தொடர்வோம்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் - சென்னை கிழக்கு மாவட்டம் - கொளத்தூர் சட்டமன்ற தொகுதி - “பெரியார் அரசு மருத்துவமனை”-யை திறந்து வைத்தல் நிகழ்ச்சிக்கு வரவேற்றபோது.
கலைஞர் உயர்சிகச்சை மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கென தனி புறநோயாளி பிரிவு செயல்படுவதை பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக உதவிகள் தேவைப்படும் என்பதை அறிந்து அரசு பிரத்யேக கவனம் செலுத்துவது பாராட்டுதலுக்குறியது @Subramanian_ma@CMOTamilnadu
ரொம்ப நல்லா கவனிக்கிறாங்க
Treat பண்ற விதத்திலே patient பாதி குணமாகிறார்கள்
இந்த Hospital கட்டுனதுக்கு ரொம்ப நன்றி சார் @mkstalin 🙏🙏
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு
உயர் சிறப்பு மருத்துவமனைக்கு மக்கள் பாராட்டு👏👏
#CMMKStalin#KalaignarCentenaryHospital
திறந்து வைக்கப்பட்டு ஓராண்டு கடந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இன்று ஆய்வு செய்தேன்.
மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து அங்கிருந்த நோயாளிகளும் - அவர்களது உறவினர்களும் தெரிவித்த கருத்துகள் மனநிறைவைத் தந்தன!
மேலும் மருத்துவமனைக்குத் தேவையானவை குறித்து மருத்துவர்கள் வைத்த கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
நான் தற்போது பணிபுரியும் அரசு கலைஞர் மருத்துவமனைக்கு என் உறவினர் சிறுநீரக சிகிச்சைக்காக நேற்று என்னிடம் வந்திருந்தார். மனிதரோ திராவிட கொள்கைகளை நகைப்பவர். பெரும் செல்வந்தர். அவர் செல்லும்போது என்னிடம் கூறியவற்றை எந்த மாற்றமும் இல்லாமல் தருகிறேன் :
1. என்ன இப்படி இழைத்து இழைத்து கட்டியிருக்கிறாங்க? மிகச்சிறந்த தனியார் மருத்துவமனைகளை விட Grand ஆக உள்ளதே! என்ன தூய்மை! கலைநயம்! பிரம்மாண்டம்!
2. இங்கு அனைத்து பரிசோதனைகள், மாத்திரைகள், இலவசமாகத் தருகிறார்கள்?!!
3. இன்முகத்துடன் வரவேற்றனர். மரியாதையுடன் OPக்கு வழி சொன்னார்கள். சுற்றிப்பார்த்தேன். வார்டுகளில் என்ன தூய்மை! இலவசமாகத் தரும் உள்நோயாளி உணவில் என்ன தரம்!
4. நிமிடங்களில் சோதனை முடிவுகளை இன்முகத்துடன் தருகிறார்களே?!
5. Emirates விமானத்தில் சென்றிருக்கிறேன். அந்த Feel இங்கும் கிடைத்தது.
நான் மேலும் இங்குள்ள அதிநவீன இலவசப் பரிசோதனைக் கருவிகள், நாங்கள் செய்யும் உயர் அறுவை சிகிச்சைகளை விவரித்தேன். எனது A/C அறையில் மனிதர் மயங்கியே விட்டார்.
"இது எப்படி சாத்தியம்?" என்றார்.
"மருத்துவமனையின் பெயர் என்ன?"- கேட்டேன்.
"அரசு கலைஞர் மருத்துமனை"
"அதுதான் உங்கள் கேள்விக்கு பதில் அண்ணே! இந்தத் தரம் எல்லா தமிழக அரசு மருத்துவனைகளிலும் கிடைக்கும். இதுதான் திராவிட மாடல் அரசு என்பார்கள் என்றேன்."
அவர் விடைபெரும்போது இனம்தெரியாத பூரிப்பு மனதை நிறைத்தது!
கடந்த இரண்டு நாட்களாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை,கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை பார்வையிட்ட ஒன்றிய அரசின் சுகாதாரத்துறையின் செயலாளர் SUDHANSH PANT.I.A.S அவர்கள்,தமிழக அரசின் மருத்துவ ச்சேவை திட்டங்களையும்,கட்டமைப்பையும் வெகுவாக பாராட்டியுள்ளார். #Masubramanian #TNHealthminister #DMK4TN #கலைஞர்100
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் மதிய உணவு. சிகிச்சைக்கு மட்டுமல்ல உணவிற்கும் கூட கட்டணம் கிடையாது.
Guess What ? Lunch for inpatients at Kalaignar Centenary Super Speciality Hospital. Patients don't have to pay for the treatment as well as the diet
#KCSSH
And still we have people in Twitter saying that there are no govt hospitals in India
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிறுநீரக டயாலிசிஸ் பிரிவில் அதிநவீன டயாலிசிஸ் இயந்திரங்கள் தொடங்கி வைக்கப்பட்டது. @mkstalin#கலைஞர்100#Masubramanian#TNHealthminister#DMK4TN
மாண்புமிகு அமைச்சர் எ.வ வேலு அவர்கள், சென்னை, கிண்டியில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டடத்தினை மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் திறக்கப்படவுள்ளதை தொடர்ந்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
விரைவில் திறக்கப்பட உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை மாண்புமிகு தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.