மக்களின் அன்பும், நம்பிக்கையும் வென்ற நாள்!
தமிழகத்தின் வரலாற்றை மாற்றிய நாள் இந்த மே 04. மக்களின் பணத்தை கொள்ளையடித்து, குடும்ப ஆட்சியை நடத்தி வந்த கொள்ளை கூட்டத்தை மக்கள் வீட்டிற்கு அனுப்பிய நாள். தமிழக அரசியல் வரலாற்றையே மாற்றி எழுதியுள்ளார் தமிழக முதல்வர் நம் தலைவர் தளபதி அவர்கள். தமிழக வெற்றிக் கழகம் ஒரு அசைக்க முடியாத சக்தி என்பதை ��ந்த தேர்தல் வெற்றி உறுதி செய்துள்ளது.
என்னை உங்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து, 2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அளித்த காரைக்குடி தொகுதி மக்களுக்கும், என் மீது நம்பிக்கை வைத்து என்னை வேட்பாளராக நிறுத்திய தமிழக முதல்வர் தலைவர் தளபதி அவர்களுக்கும், அன்புக்குரிய அண்ணன் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த வெற்றி தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி மட்டும் அல்ல… இது ஒவ்வொரு தமிழக மக்களின் வெற்றி! மாற்றத்தை விரும்பிய ஒவ்வொருவரின் வெற்றி! ஊழலற்ற ஆட்சி அமைந்திட வேண்டும் என்று நினைத்தவர்களின் வெற்றி. பெண்கள் பாதுகாப்பை நிலைநிறுத்தபோகும் வெற்றி. பணத்தை வைத்து எளிதாக வென்று விடலாம் என்று நினைத்த ஒவ்வொருவரின் முகத்திலும் தமிழக மக்கள் கரியை பூசி உள்ளனர்.
இந்த நேரத்தில் தேர்தல் காலத்தில் இரவும் பகலும் பாராமல் உழைத்த கட்சி நிர்வாகிகள், தொ��்டர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் ஒவ்வொரு வியர்வைத்துளியும் இந்த வெற்றியின் அடித்தளமாக அமைந்துள்ளது. என்னை நம்பி வாக்களித்தவர்களுக்கு கடைசி வரை உண்மையாக இருப்பேன். தலைவர் தளபதி அவர்களின் தலைமையிலும், பொதுச்செயலாளர் என். ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலிலும், மக்களின் ஆதரவுடனும், நம் தொகுதியை வளர்ச்சியின் புதிய உயரத்���ிற்கு கொண்டு செல்வேன் என்று உறுதி அளிக்கிறேன். வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள், இளைஞர் முன்னேற்றம் என எல்லா துறைகளிலும் மாற்றத்தை கொண்டு வர நான் முழு உழைப்புடன் செயல்படுவேன். இந்த வெற்றி ஒரு தொடக்கம் மட்டுமே… தமிழக வெற்றிக் கழகம் இன்னும் பல சாதனைகளை படைக்க உள்ளது!
இது வெற்றி அல்ல… இது மக்கள் எழுச்சி!
இது முடிவு அல்ல… இது புதிய தமிழகத்தின் தொடக்கம்!
டாக்டர். TK.பிரபு,
காரைக்குட�� சட்டமன்ற உறுப்பினர்,
சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.
அறிவால் உயர்ந்து, தனது எளிமையால் மக்களின் மனங்களை வென்று, இளைஞர்களின் கனவுகளில் நம்பிக்கையை விதைத்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சார்பிலும், மாண்புமிகு ஊரக வளர்ச்சி & நீர்வளத்துறை அமைச்சர் திரு.N. ஆனந்த் அவர்களின் சார்பிலும் அவரைப் போற்றி வணங்குகிறேன்!
இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிக்கும், இளைஞர்களின் முன்னேற்றத்திற்கும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த மாமனிதரின் சிந்தனைகள் என்றும் நமக்கு வழிகாட்டும்!
கனவு காணுங்கள்… கனவுகளை இலட்சியமாக்குங்கள்… இலட்சியங்களைச் செயலால் வென்றெடுங்கள்!
டாக்டர். TK. பிரபு
இயற்கை வளங்கள் துறை அமைச்சர்
இன்று (10.10.2026), சிவகங்கை மாவட்டம், காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கலைக்கல்லூரியில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நா���ு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினேன்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப. ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேவகோட்டை சார் ஆட்சியர் திரு. ராகுல் குமார், இ.ஆ.ப., அவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலில், இளைஞர்களின் திறமைக்கும் கல்வித் தகுதிக்கும் ��ற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் எதிர்காலத்தை வளமாக்குவதும், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் நமது முக்கிய நோக்கமாகும்.
டாக்டர். TK. பிரபு
இயற்கை வளங்கள் துறை அமைச்சர்
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களிலும், மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ளது. "மக்களின் சக்தியே மகத்தான சக்தி; ஜனநாயகத்தின் முன்னால் பணநாயகமும் சதிகளும் எடுபடாது" என்பதை த���ிழக மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் சார்பில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள திருமதி. K. மரகதம் குமரவேல் அவர்களுக்கும், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள திருமதி. பி. சத்தியபாமா அவர்களுக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் இதற்கு முன்பு நடைபெற்ற இடைத்தேர்தல்கள் எப்படி நடைபெற்றன என்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். ஆனால், இந்த முறை நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், சட்டம்-ஒழுங்கு காக்கப்பட்டு, முற்றிலும் சுதந்திரமாகவும் நேர்மையான முறையிலும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களுக்குள் ரகசிய கூட்டணி அமைத்துக் கொண்டு, தமிழக மக்களை மீண்டும் ஏமாற்றிவிடலாம் என்று கனவு கண்டன. அந்த சுயநலக் கூட்டணி சதிகளுக்கு, தமிழக வாக்காளப் பெருமக்கள் இந்த இடைத்தேர்தல் தீர்ப்பின் மூலம் தகுந்த பாடத்தை புகட்டியுள்ளனர்.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களப்பணி செய்ய எனக்கு வாய்ப்பளித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், களத்தில் எங்களை அரவணைத்து வழிநடத்திய மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N. ஆனந்த் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த இரண்டு இடைத்தேர்தல்களிலும் பணியாற்றி தமிழக வெற்றிக் ���ழகத்தின் வெற்றிக்கு வித்திட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பூத் கமிட்டி தோழர்கள் அனைவருக்கும் நன்றி.
மக்கள் சக்தி வென்றது! பொய் பிரச்சாரங்கள் வீழ்ந்தது!
சமூகநீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் துணிச்சலுடன் போராடிய தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாளில், அவரது தியாகத்தையும் சமூகப் பங்களிப்பையும் போற்றி வணங்குவோம்!
சாதி வேறுபாடுகளற்ற சமத்துவச் சமுதாயம் மலர அவரது கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் தலைமையில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N. @BussyAnand அவர்களின் வழிகாட்டுதலில் சமூகநீதிப் ப��தையில் தொடர்ந்து பயணிப்போம்!
தியாகி இமானுவேல் சேகரனார் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்!
டாக்டர். TK. பிரபு
இயற்கை வளங்கள் துறை அமைச்சர்
இத்தனை நாட்களாக திமுகவைச் சேர்ந்த சில நிர்வாகிகள் பெண்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசிய சம்பவங்கள் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள��ளாகி வந்தன. அதற்கெல்லாம் தமிழக மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பதிலடி கொடுத்துவிட்டார்கள். ஆனால், தேர்தல் தோல்விக்குப் பிறகும் பெண்களை இழிவுபடுத்தும் அரசியல் கலாசாரம் தொடர்ந்து திமுகவை சேர்ந்த நபர்களால் அரங்கேறி வருகிறது. திமுக நிர்வாகிகளை தாண்டி, நானும் சளைச்சவன் இல்லை என்று எதிர்கட்சி தலைவர் அவர்கள் பெண்களை ஆபாசமாக பேச தொடங்கினார். தற்போது திமுக தலைவர்.
ஒரு பெண் வேட���பாளரை அவரது உருவத்தை வைத்து கேலி செய்வது என்ன மாதிரியான அரசியல் நாகரிகம்? அதுவும் முன்னாள் முதலமைச்சர் ஒருவர் இத்தகைய கருத்தை வெளியிடுவது அரசியல் நாகரிகத்தின் மீதான மிகப்பெரிய கேள்வியை எழுப்புகிறது. அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், ஒரு பெண்ணின் தோற்றத்தை கேலி செய்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள் மதிப்பிற்குரிய முன்னாள் எம்எல்ஏ அவர்களே!!
"யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு."
பெண்களின் பயணச் செலவை குறைத்து, அவர்களின் பொருளாதார சுதந்திரத்தையும், சமூக முன்னேற்றத்தையும் உறுதி செய்யும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்த ‘வெற்றி பயணத் திட்டம்’ வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் நலத் திட்டமாகும்.
இதன் மூலம் மாநகர மற்று��் நகர்ப்புறங்களில் இயங்கும் எக்ஸ்பிரஸ், LSS, டீலக்ஸ் பேருந்துகள், மாவட்டங்களுக்கு இடையேயான புறநகர் சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கி.மீ.-க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் வாய்ப்பு விரிவுபடுத்தப்படுகிறது.
நம் அக்காக்கள், பாட்டிகள், தாய்மார்கள் மற்றும் திருநங்கையர்களின் அன்றாடப் பயணத்தை எளிதாக்கும் இந்த சிறப்பான திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று தொடங்கி வைத்ததில் பெருமிதம் கொள்கிறேன்.
இது மக்களுக்கான ஆட்சி… மக்களின் பயணத்திற்கும் துணை நிற்கும் ஆட்சி!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், “வெற்றிப் பயணம்” திட்டத்தை தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான இன்று (2.10.2026), சென்னை, கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணச்சீட்டை வழங்கித் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
#VettriPayanam
அகிம்சை, சத்தியம், எளிமை ஆகிய உயரிய கொள்கைகளால் உலகையே வழிநடத்திய தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சார்பிலும், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N. ஆனந்த் அவர்களின் சார்பிலும் அவரை போற்றிப் வணங்குகிறேன்.
சமத்துவம், சகோதரத்துவம், சமூக நல்லிணக்கம் மற்றும் அனைவருக்குமான நீதி ஆகிய அவரது கனவுகளை நனவாக்கும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகள் என்றும் நமக்கு வழிகாட்டியாகத் திகழட்டும்.
அனைவருக்கும் இனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துகள்!
டாக்டர். TK. பிரபு
இயற்கை வளங்கள் துறை அமைச்சர்
சொன்னதை செய்து காட்டிய நம் தளபதி!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, மக்கள் நலத் திட்டங்களை வெறும் அரசு அறிவிப்புகளாக மட்டும் இல்லாமல், மக்களின் வ��ழ்வியலோடும் உணர்வுகளோடும் இணைத்து செயல்படுத்தி வருவதற்கு “தாய் மாமன் தங்க மோதிரம்” திட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
நமது தமிழர் பண்பாட்டில் தனிச்சிறப்பு வாய்ந்த தாய்மாமன் உறவைப் போற்றுவதோடு, குழந்தையின் பிறப்பை குடும்பத்துடன் இணைந்து கொண்டாடும் இந்தத் திட்டம், அரசின் மனிதநேய அணுகுமுறையையும், குடும்ப நலன் மீதான அக்கறையையும் வெளிப்படுத்துகிறது.
ஒரு குழந்தையின் பிற��்பு என்பது ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சி மட்டுமல்ல; சமூகத்தின் எதிர்காலத்திற்கான புதிய நம்பிக்கையின் தொடக்கம். அந்த மகிழ்ச்சியில் அரசும் பங்கேற்கிறது என்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
பாரம்பரியத்தைப் பாதுகாத்து, ��ாசத்தைப் போற்றி, குழந்தைகளின் நலனை முன்னிறுத்தும் தமிழ்நாடு அரசின் இந்த முன்னெடுப்பு ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரு எடுத்துக்காட்டு..!
மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அவர்களின் வாழ்க்கையோடு பயணிக்கும் மக்கள் நல அரசாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படும்.
கடந்த ஆண்டு இதே நாள்… தமி��்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் ஆறாத வலியையும், என்றும் அழியாத சோகத்தையும் ஏற்படுத்திய கரூர் துயரச் சம்பவம் நிகழ்ந்த நாள். ஒரு வருடம் கடந்துவிட்டாலும், அன்று நம்மை விட்டு பிரிந்த 41 உயிர்களின் நினைவுகள் இன்னும் நம் மனதை விட்டு அகலவில்லை.
அவர்களை நம்பி வாழ்ந்த குடும்பங்கள் இன்று சந்திக்கும் வலியையும், இழப்பையும் வார்த்தைகளால் அளவிட முடியாது. மீண்டும் திரும்பி வர முடியாத அந்த உயிர்களின் நினைவுகளை நெஞ்சில் சுமந்து, அவர்களின் குடும்பத்தினரின் துயரில் என்றும் நம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் துணை நிற்பார்.
அவர்களின் நினைவுகள் என்றும் நம்முடன் வாழும்.அவர்களை என்றும் மறக்கமாட்டோம்.
��ன் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம்.
இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.
என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.
இன்று சென்னை புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி, புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் பணிகள், மாவட்ட அலுவலர்களின் செயல்பாடுகள் மற்றும் வருவாய் இலக்குகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டோம்.
இயற்கை வளங்களை முறையாகப் பாதுகாத்து, பொதுமக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, அரசின் வருவாயை அதிகரிக்கும் வகையில் துறை செயல்பாடுகளை மேலும் சிறப்பாக முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டது.
மேலும், கனிம வளங்களின் உற்பத்தி, அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் மற்றும் சட்டவிரோத கனிம நடவடிக்கைகளைத் தடுப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மாவட்ட வாரியான இலக்குகளை உரிய காலத்திற்குள் எட்டுவதுடன், இயற்கை வளங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரப்படுத்துவோம்.
டாக்டர். TK. பிரபு
இயற்கை வளங்கள் துறை அமைச்சர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு இயற்���ை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டிகே.பிரபு அவர்கள் தலைமையில் இன்று (21.09.2026) சென்னை கிண்டியில் அமைந்துள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரகத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இயற்கை வளங்கள் துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) திரு. சுன்சோங்கம் ஜடக் சிரு, இ.ஆ.ப., மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் மரு. த. பிரபுசங்கர், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர். (1/2)
#TNNRDepartment | #GeologyandMining
@CMOTamilnadu | @drtkprabhu_TVK | @sjchiru | @prabhusean7 | @TNDIPRNEWS
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அ��ர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டிகே.பிரபு அவர்கள் தலைமையில் இன்று (21.09.2026) சென்னை கிண்டியில் அமைந்துள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரகத்தில் மாவட்ட அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இயற்கை வளங்கள் துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) திரு. சுன்சோங்கம் ஜடக் சிரு, இ.ஆ.ப., புவியியல் மற்றும் சுரங்க��்துறை இயக்குநர் மரு. த. பிரபுசங்கர், இ.ஆ.ப., மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர். (1/2)
#TNNRDepartment | #GeologyandMining
@CMOTamilnadu | @drtkprabhu_TVK | @sjchiru | @prabhusean7 | @TNDIPRNEWS
சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளையும், சாதி பாகுபாடுகளையும் எதிர்த்து, சமத்துவம், சமூகநீதி, சுயமரியா��ை மற்றும் பகுத்தறிவு ஆகிய கொள்கைகளுக்காக தனது வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்ட நமது கொள்கைத் தலைவர்களில் ஒருவர் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில் அவரை போற்றிப் பெருமிதம் கொள்வோம்.
பெண்களுக்கு சம உரிமை, கல்வி மற்றும் சமூக முன்னேற்றம், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்திற்காகவும் தந்தை பெரியார் அவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தார். மனிதர்கள் அனைவரும் சாதி, மதம், பாலினம் உள்ளிட்ட எந்த வேறுபாடுகளுமின்றி சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற அவரது சிந்தனைகள் இன்றும் சமூகநீதிக்கான பயணத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
அவரது சுயமரியாதை மற்றும் சமத்துவக் கொள்கைகளை மனதில் ஏந்தி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலில் மனிதநேயமும் சகோதரத்துவமும் நிறைந்த சமத்துவ சமூகத்தை உருவாக்க தொடர்ந்து பயணிப்போம்.
டாக்டர். TK. பிரபு
இயற்கை வளங்கள் துறை அமைச்சர்
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் அழியாத தடம் பதித்து, சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை மற்றும் மாநில உரிமைகளுக்காக தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், அவரை போற்றி வணங்குவோம்.
தமிழ் மொழி, தமிழர் நலன், ஏழை எளிய மக்களின் முன்னேற்றம் என மக்கள் நலனையே தனது அரசியலின் அடித்தளமாகக் கொண்டு செயல்பட்ட அண்ணாவின் கொள்கைகளையும் சிந்தனைகளையும் நெஞ்சில் ஏந்தி, அவர் கண்ட சமத்துவமான சமூகத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் உருவாக்கி தொடர்ந்து பயணிப்போம்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சார்பிலும், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N. ஆனந்த் அவர்களின் சார்பிலும் அவரைப் போற்றி வணங்குகிறோம்!
டாக்டர். TK. பிரபு
இயற்கை வளங்கள் துறை அமைச்சர்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சார்பிலும், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் அவர்களின் சார்பிலும் அனைவரு��்கும் என் மனமார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!
கணபதி பெருமானின் அருள் பெற்று, உங்கள் வாழ்வில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கி, செல்வமும், நிம்மதியும், தொட்ட காரியங்களில் வெற்றியும் பெருகட்டும்.
இனிய விநாயக சதுர்த்தி திருநாள் நல்வாழ்த்துகள்!