@ptrmadurai@mkstalin Corporates and Governments world over are concentrating on Digital.......however TN government is the leader on simulatenous development of Human resources.
Absolutely amazing speech by @FionaAndrews7 at The Globe, Stokesley on Dementia and caring for those with dementia and the yeoman service delivered by dementia forward. Was a pleasure and privilege.
அன்னைத் தமிழின் அரும்புதல்வர் - நவீன தமிழகத்தின் சிற்பி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்!
அடித்தட்டு மக்களுக்கும் அனைத்து வளமும், வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்கிற சமூகநீதி கண்ணோட்டத்துடன் அவர் கட்டமைத்த வளர்ச்சிப் பாதையே தமிழகத்தை இன்று பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் முன்னோடியாய் திகழச் செய்திருக்கிறது...
பதவி, அந்தஸ்து, செல்வாக்கு என ��னைத்தையும் விட ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் முதன்மையானது அன்பும் பாசமும் தான் என்று உணர்த்திய அன்பாளர் தலைவர் கலைஞர்...
பேரன்பும் - பேராளுமையும் ஒருங்கே அமையப்பெற்ற தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவில், அவர் கட்டியமைத்த தமிழகத்தை மேன்மேலும் வளர்த்தெடுக்க கழகத் தலைவர், மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் தலைவர் கலைஞரின் புகழை மேலும் பல நூற்றாண்டு நிலைத��திருக்கச் செய்யும் என்கிற நம்பிக்கையைப் பதிவு செய்து, முத்தமிழ் அறிஞரின் புகழைப் போற்றுகிறேன்.
வாழ்க தமிழ்! வெல்க கழகம்! ஓங்குக கலைஞர் புகழ்!
On Earth Day, worthwhile to remind ourselves of the need for sustainability and its importance in healthcare in general and mental healthcare in particular. This short yet impactful video from RCPsych is a great start. https://t.co/oJUvn1FHlN
The hallmark of a true democracy is the ability of its citizens to disagree and engage in continued discussion. History has repeatedly taught us that asking the right questions has led to important answers and contributed to our development as a better society.
@Udhaystalin is entitled to his views on Sanatana. If you disagree with his viewpoint, it is important to engage in a discussion based on the merits of Sanatana instead of resorting to threats of violence or legal intimidation tactics, or distorting his words to evoke emotional responses for narrow political gains.
Tamil Nadu has always been a safe space for healthy debates, and it will continue to remain so. It is crucial to critically evaluate our traditions, ensuring inclusivity, equality, and progress. Let's embrace constructive discussions to foster a harmonious and inclusive society.
ஆகஸ்ட் மாதம் முதல் சமூக வலைதளங்களில், கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பு மற்றும் சிறப்பு அம்சங்களை Reels ஆக உருவாக்கி பதிவிட வேண்டும். #கலைஞர்100 Hashtag-ல் Reelsகளை ஜூன் மாதம் 2024 வரை பதிவு செய்ய வேண்டும். மாவட்டங்களில் உள்ள தி.மு.க. கழகப் பக்கங்களிலும், Whatsapp குழுக்களிலும் பதிவு செய்யப்பட்டு பகிரப்பட வேண்டும்.
- கழகத் தகவல் தொழில்நுட்ப அணிக்கு தலைமைக் கழகம் வழிகாட்டுதல்.
ஒரு இயக்கம் மறைந்த பின்பு வாழ்ந்து என்ன பயன்? ஆனால், அந்த இயக்கம் உயிர்ப்புடன் இருந்து, அது எங்கும் பரவினால், நீங்கள் என்றென்றும் வாழ்கிறீர்கள்.
- பி.டி.ராஜன், 1929 பிப்ரவரி 17-ம் தேதி செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டில் கொடியேற்றி ஆற்றிய உரை.
கலைஞர் என்றென்றும் நம்முடன் வாழ்கிறார்.
ஒரு கலைஞனின் அனல் பறக்கும் உணர்வுடன், தன் எழுத்துக்களால், தமிழ்ச் சமூகத்தை மாற்ற முயன்றார்; ஐந்து முறை முதலமைச்சராகவும் நிரந்தரச் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து மாற்றங்களை கொண்டுவந்தார். மடமையும் மூடநம்பிக்கையும் புரையோடிக்கிடந்த தமிழ்ச்சமூகத்தில், ஒரு கோபம்கொண்ட இளைஞனாக அரசியல் களத்தி���் நுழைந்தார். முதுபெரும் தலைவராய் நம் மனதைவிட்டு நீங்கா, நினைவில் நிற்கிறார். ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஒரு மொழியின் இலக்கணங்களோடு விளையாடி, அதில் பெண்ணியம் மற்றும் சமத்துவம் என்ற பரிமாணங்களைப் புகுத்தினார். சாதி அமைப்பின் அநீதிகளைத் தகர்த்து, சமத்துவத்தின் தீவிர நம்பிக்கையை முன்வைத்தார். ஒரே சொற்றொடரில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த இந்தச் சிலேடை கலைஞனுக்கு, பழைமை��ளைக் களையெடுப்பது மட்டும் போதாது. டிஜிட்டல் சகாப்தத்திற்குத் தமிழ்நாட்டைக் கைபிடித்து அழைத்துச்சென்று, உண்மையிலேயே ஒரு நவீன தமிழகத்தின் சிற்பி.
கலைஞர் என்றென்றும் நம்முடன் வாழ்கிறார்.
#என்றென்றும்கலைஞர்
ஆயிரமாயிரம் ஆண்டுக���ாக ஒடுக்கப்பட்ட தமிழ்ச்சமூகம் சனாதனப் பண்பாட்டு ஆதிக்கத்தை எதிர்த்து உறுதியாய் எழுந்து நின்றது. இந்த மண்ணுக்கான - மக்களுக்கான திராவிட இயக்கம் தோன்றியது. புத்தர் முதல் வள்ளலார் வரை இந்த மண்ணில் விதைத்த புரட்சியின் அடித்தளத்தில் திராவிட இயக்கம் வேரூன்றியது.
அத்திப்பாக்கம் வெங்கடாசலனார் - பண்டித அயோத்திதாசர் - தாத்தா இரட்டைமலை சீனிவாசன் - பிட்டி தியாகராயர் - நடேசனார் - டி.எம்.நாயர் - ஏ.பி.பாத்ரோ - எம்.சி.இராஜா - பனகல் அரசர் - தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா எனத் தமிழினத்தின் இனமான - பகுத்தறிவு - சுயமரியாதை உணர்வைக் காத்திட உருவான தலைவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து - தலைமை தாங்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள்!
எண்ணற்ற சமூகநலத் திட்டங்களால் இன்றைய நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய சிற்பி அவர்!
தமிழ்நாட்டின் அடையாளமாக விளங்கும் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடங்கும் இந்நாளில், அவரது புகழைப் போற்றி, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்து, நம் இயக்க இலக்குகளை அடைய உறுதியோடு அவர் வழி நடப்போம்!
#கலைஞர்100
A leading torchbearer of the Social Justice & Self Respect ideal of the Justice Party and the Dravidian Movement, the life story of Kalaignar is deeply intertwined with the post-independence history of Tamil Nadu. A five-time Chief Minister of the state, he worked tirelessly to uplift women, backward classes, Dalits, minorities, and marginalised people across all sections of society. Kalaignar Karunanidhi must be considered the Architect of Modern Tamil Nadu because he transformed the ideology of the Dravidian Movement into policy and programmes – over five decades - which have ensured that his legacy will live on. In doing so, he has left an indelible imprint in the hearts and minds of Tamil society.
At a personal level, it was his warm affection and his insistence and invitation to take the plunge into public life, following the footsteps of my forefathers, that led me to quit a global professional career and enter the turbulent world of politics. I remain eternally grateful.
As we observe the birth centenary of this Dravidian legend, let us resolve to work for the people on the path followed by Kalaignar under the leadership of our Hon’ble CM @mkstalin, who now carries the torch.
#Kalaignar100 3 outstanding examples of empowerment. 1. Getting equal property rights for women 2.Uplifting disabled 3. Transforming the lives of transgender. Truly unparalleled in the scale of upliftment achieved amidst a million devious designs of his detractors
சொற்களுக்கு உயிர் இருக்கிறது. இனமான - பகுத்தறிவு உணர்ச்சியைத் தட்டியெழுப்பும் வல்லமை கொண்டது பேச்சுக்கலை. அதனால்தான் #தமிழ்ப்பேச்சு_எங்கள்மூச்சு நிகழ்ச்சியை @vijaytelevision தொடங்கும்போது, "பேச்சுக்கலை என்பது பழைய மூடநம்பிக்கைகளைப் பாடி, பிற்போக்குத்தனத்தைப் போற்றுவதற்க���ப் பயன்படக் கூடாது. நகைச்சுவை என்ற பெயரில் அடுத்தவரை மட்டம் தட்டுவதாக இருக்கக் கூடாது. பகுத்தறிவையும், அறவுணர்வையும் வளர்த்து, முற்போக்கான சமூகத்துக்கு வழிவகுப்பதுதான் சிறந்த பேச்சுக்கு இலக்கணம்! பயனற்றவற்றைத் தவிர்த்து, பகுத்தறிவை வளர்க்கும் நோக்கத்தை இந்த நிகழ்ச்சி பின்பற்றும் என்று நான் மனதார நம்புகிறேன்" என வாழ்த்தினேன்.
எனது நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையி��் "இடஒதுக்கீடு எனது உரிமை" என்ற தலைப்பில் உரையாற்றிய திருமிகு தே.நர்மதா அவர்களின் உரை அமைந்திருந்தது. கருத்து செறிந்த அவரது உரை ��ீச்சில் நூற்றாண்டுகால இடைவெளியைச் சுட்டிக்காட்டிய அவரது சொற்களுக்கு உயிர் இருக்கிறது. என் திருவாரூர் மண் ஈன்றெடுத்த அவரை வாழ்த்துகிறேன்!
அனைவரும் சொல்வோம் #ReservationIsOurRight!
நம்மைச் சுற்றி நாள்தோறும் பலர், தங்களது பணியை வெறும் கடமையாகக் கருதாமல் சமூகத் தொண்டாக, உள்ளார்ந்த அன்புடனும் அக்கறையோடும் ஆற்றுகின்றனர்.
ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் வெளியில் தெரியும் மலர் என்றால், அடிமட்டத்தில் பணியாற்றும் இத்தகைய நல்லுள்ளங்கள்தான் நமது வளர்ச்சியின் வேர்!
இன்றைய #களஆய்வில்_முதலமைச்சர் பயணத்தில், விழுப்புரம் - கடலூர் - கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த,
ரா.பாண்டியன்
பெ.சிவக்குமார்
கத்தீஜா
பா.வளவன்
ந.ஆறுமுகம்
ஆனந்தன்
பாபு
முருகேசன்
நாகேஸ்வரன்
வேளாங்கண்ணி
பத்மஸ்ரீ
ராமச்சந்திரன்
மணிகண்டன்
நடராஜன்
ஆகிய 14 பேரைப் பாராட்டி ஊக்கமளித்தேன்.
இது இவர்களுக்கான ஊக்கம் மட்டுமல்ல; இவர்கள���ப் போல் இன்னும் பலர் உருவாவதற்கான உரம்!
@ptrmadurai@ptrmadurai very interesting article, the country would have to adopt tamilnadu aka dravidian model for 40% of women engaged in MSME are from tamilnadu.