நான் 1967 ல் பிறந்தவன். ஏறக்குறைய 60 வயதை நெருங்குகிறேன். நான் பிறந்து வளர்ந்த இராமநாதபுரத்தில் அன்றைய காலத்தில் சுற்றிச்சுற்றி கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டக் காலம்.
இதுவரை எவ்விதப் போதைப் பழக்கத்திற்கும் நான் ஆளாகியதில்லை. அதை ஒருமுறை கூட தொட்டுப் பார்த்ததில்லை. அதற்கு முக்கிய காரணம் 17 வயதிலேயே மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் கற்கத் தொடங்கியது தான். ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை உருவாக்க நம்மால் இயன்ற பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற மாற்றம் குறித்த விழிப்புணர்வு உருவாகியது தான்.
நடிகரின் 69 திரைப்படங்களும் பாலியல் சீண்டல்களுக்கு ஆதரவான காட்சிகள், போதைக் காட்சிகளில் தோன்றி, குடிகாரன் என்று இழிவாகப் பார்த்த சமூகத்தையே வீக்கெண்ட் பார்ட்டி என்று நார்மலைஸ் செய்ததில் முக்கியப் பங்குண்டு.
நடிகனின் நிஜ வாழ்விலும் கூட எப்போதும் போதையில் இருக்கிறார் என்று விமானப் பயணம் முதல் கார் ஓட்டும் காட்சிகள் வரை செய்திகள் வந்துள்ளது. போதை பயன்படுத்தாதவர்கள் போதை ஒழிப்பு பேசுவதைவிட, போதையைப் பயன்படுத்துபவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துவது நாட்டுக்கும், வீட்டுக்கும், தியாகத்தலைவி திரிஷாவுக்கும் நல்லது. பாராட்டுக்குரியது.
நடிகரின் அரசியல் பேச்சு முழுவதும் போதை, போதை என்றே இருக்கிறது. போதையில் தமிழ்நாடு தள்ளாடுகிறது என்ற தவறான தோற்றத்தை உருவாக்குகிறார். புள்ளி விபரப்படி அது முழுமையான பொய். ஊடகவிலாளர் அரவிந்தாக்ஷன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.
ஒன்றிய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரப்பகிர்வுத்துறை அமைச்சகம் "Magnitude of Substance Use in India" என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை வெளியிடுகிறது.
அதன்படி, தமிழ்நாட்டில் கஞ்சா பயன்பாடு 0.1 சதவீதம்,
ஓபியாய்ட்ஸ் 0.26 சதவீதம்,
மயக்க மருந்துகள் 0.3 சதவீதம்,
உள்ளிழுக்கும் மருந்துகள் 0.2 சதவீதம் மட்டுமே. இவை அனைத்தும் தேசிய சராசரியை விட மிகக் குறைவு.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடும் புழக்கமும் இல்லை என்று கூறவில்லை, இருக்கிறது. ஆனால்,போதைப் பொருள்களைக் குறைவாக நுகரும் மாநிலமாகவே தமிழ்நாடு எப்போதும் இருக்கிறது.
குறிப்பாக தொழில்முறையாக கஞ்சா பயிரிடுவது, காவல்துறையின் நடவடிக்கையால் தமிழ்நாட்டில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது.
மேலே கூறப்பட்டுள்ள தரவுகள் அனைத்தும்
National Drug Dependence Treatment Centre (NDDTC), All India Institute of Medical Sciences (AIIMS) இணைந்து நடத்திய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரங்கள்
ஆனால்,,
தமிழ்நாட்டில் தாறுமாறாக போதைப்பொருள் பரவியுள்ளது என நடிகன் சட்டமன்றத்தில் கூறியது எந்த தரவுகளின் அடிப்படையில் ?
எந்த ஆதாரங்களும்/தரவுகளும் இல்லாமல் மாநிலத்தை கேவலப்படுத்தி இருக்கிறார்.
இந்த குற்றசாட்டை எதிர்க்கட்சிகள் வைத்தாலும்,தமிழ்நாடு அரசு மறுக்க வேண்டும்.ஆனால், நடிகன் இந்த விஷயங்களைப் பேசும் போது அமைச்சர்களும்,சட்டமன்ற உறுப்பினர்களும் சபாநாயகரும் ரசிக்கின்றனர். உண்மையில் மிகவும் வருத்தமாக உள்ளது
சில கேள்விகள் ?
1.எத்தனை பேரிடம் ஆய்வுகள் மேற்கொண்டு தாறுமாறாக போதைப்பொருள் நடமாட்டம் பரவிக்கிடப்பதை முதலமைச்சர் அலுவலகம் கண்டுபிடித்தது ?
2)ஆய்வை நடத்தி ஆதாரங்களை முதலமைச்சர் அலுவலகத்திற்கு வழங்கியது காவல்துறையா ? சுகாதாரத்துறையா ?
3)வயது வாரியாக ஆய்வு மேற்கொண்டு,தாறுமாறாக போதைப்பொருள் பரவியிருப்பது கண்டறியப்பட்டதா ?
4)எந்தெந்த மாவட்டத்தில் போதைப்பொருள் அதிகம் பரவியுள்ளது ?
5)எத்தனை மாவட்டங்களில் போதைப்பொருள் பரவல் குறைவாக உள்ளது ?
6)என்ன வகையான போதைப்பொருள் அதிகம் பரவியுள்ளது ?
7)மதுபானம் தவிர்த்து தமிழ்நாட்டில் அதிகமாக பரவியுள்ள போதைப்பொருள் எது ?
8.கஞ்சாவா,மாத்திரைகளா,சிந்தெட்டிக் வகைகளா,ஓபியம் மூலம் தயாரிக்கப்படும் போதைப்பொருளா? மூக்கு வழியாக உள்ளிழுக்கும் பவுடர் மருந்துகளா? எது அதிகம் பரவியுள்ளது ?
இக்கேள்விகளுக்கு நடிகரிடம் பதில் இருக்கிறதா? இப்படியான போதை உளறல்களை நடிகர் தவிர்ப்பது மிகவும் நல்லது.
தமிழ்நாடு தனிநாடு அல்ல. இந்தியாவின் ஒரு மாநிலம் தான். போதையில்லாத இந்தியா என்ற முழக்கத்தை நடிகன் சொல்ல தயாரா? உலகமயக் கொள்கையில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. உலகச்சரக்கு முழுவதும் இங்கு வருவதை தடுக்க இயலாது.
தமிழ்நாடு பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. இங்கிருக்கும் குறைந்தபட்ச போதை பழக்கத்தை ஒழிக்க அனைவரும் போராடுவோம். போதையில்லாத இந்தியாவை உருவாக்க இணைந்து செயல்படுவோம். வடக்கில் இருப்பவர்களுக்கு அன்பான வேண்டுகோள். வாயில எதையோ வச்சு கொதிப்பிட்டு புளிச்சின்னு பொது இடத்தில் துப்பி, இந்தியாவை காவிமயமாவதை நிறுத்துங்கடே!
கோயம்புத்தூரில் இப்போது இருக்கிறேன். பல சுவர்கள் காவிமயமாயிருப்பதைக் காண்கிறேன்.
சூர்யா சேவியர்
26-06-26
🛣️ NH-32: பக்தி, பண்பாடு, வளர்ச்சியை இணைக்கும் NH-32!
கிழக்கு கடற்கரை வழித்தடத்தின் முக்கிய அங்கமாகத் திகழும் NH-32 இன் #பூண்டியாங்குப்பம் – #சட்டநாதபுரம் பகுதி, #சிதம்பரம், #சீர்காழி மற்றும் புகழ்பெற்ற #நவகிரகத் திருத்தலங்களை இணைக்கும் சாலை ஆகும்.
Big...🚨
Pharmaceutical Major 🇬🇧Astra Zeneca further leases 229,000 Sq.ft to expand its Global Innovation Technology Center (GITC) at TRIL. Total area now stands at ~804,000 Sq.ft making it the firm's largest such centre globally... #InvestInTN#GCC
GROUP I, II & IIA, IV ஆகிய தேர்வுகளில் பொது அறிவுப் பகுதிகளை Syllabus வாரியாக எங்கு படிப்பது?
• இதில் மொத்தம் 6 UNIT உள்ளன. அவற்றின் #WHERE_TO_STUDY 👇
🌟 UNIT - 1: SCIENCE 🌟
• GROUP 1 PRELIMS - 10 QUESTIONS
• GROUP 2 & 2A, GROUP 4 - 5 QUESTIONS
RT 🔄 Maximum 👍