திமுக ஆட்சில ஏதோ ஒரு ஊர்ல பேனர் வச்சிருந்தா கூட அறப்போர் இயக்கத்துக்கு தெரிஞ்சிருக்கும்,
ஆனா இங்க இப்போ ஒரு உயிரே போயிருக்கு, எதுவுமே தெரியாத மாதிரி ஊமையா இருக்காங்க.
அருட்பெருஞ்ஜோதியாய், தனிப்பெருங்கருணையாய்த் திகழ்ந்த திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் பிறந்த இந்நன்னாளில், அவரது உயரிய சிந்தனைகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்.
பசித்த உயிர்க்கு உணவளிப்பதே இறைப்பணி; சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து அனைத்து உயிர்களையும் தம்முயிர்போல் நேசிப்பதே சன்மார்க்கம்; ஜீவகாருண்யமே வாழ்வியல் நெறி என்ற வள்ளலார் அவர்களின் உயரிய கொள்கைகள், மனிதநேயத்தின் மாபெரும் விழுமியங்களாகத் திகழ்கின்றன.
உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகக் கருதி, அன்பு மற்றும் கருணையின் வடிவமாகத் திகழ்ந்த வள்ளலார் அவர்களின் வழியில் தொடர்ந்து பயணிப்போம்!
#CMJosephVijay
Wishing our Honourable CM, @TVKVijayHQ Anna and candidates Mrs. P. Sathyabama and Mrs. K. Maragatham Kumaravel a thumping victory in the upcoming Tamil Nadu Assembly by-elections.
#Dharapuram#Maduranthakam
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம்.
இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.
என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ளும், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி நாளை (25.09.2026, வெள்ளிக்கிழமை), செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே மாலை 3.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
QR குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, QR குறியீடு அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
என்.ஆனந்த்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்
பொதுச் செயலாளர்,
தலைமை நிலையச் செயலகம்
(Party Headquarters Secretariat),
தமிழக வெற்றிக் கழகம்
இனி அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் அதிகம் வரவிருக்கின்றன.
பிற மாவட்டங்களுக்கு மக்கள் செல்ல போதிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
கோயில்களில் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்துதல்,
மின்வெட்டு பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணுதல் என பல முக்கிய பணிகள் இருக்கின்றன.
வறட்சி, விவசாய பாதிப்புகள், கடும் வெயில் தாக்கம், அதைத்தொடர்ந்து வரவிருக்கும் மழைக்காலத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என அரசுக்கு அடுத்தடுத்து பல சவால்கள் காத்திருக்கின்றன.
முன்கூட்டியே திட்டமிட்டு, மக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
@CMOTamilnadu 🙏🏻🙏🏻
@BussyAnand@RameshOffcl@vinothravi11@TamilanParthib1@CTR_Nirmalkumar
மதுரையின் உலகப் புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் வரலாறு, கட்டிடக்கலை மற்றும் ஆன்மிகப் பெருமையைப் பதிவு செய்யும் The Hindu குழுமத்தின் சிறப்பு புத்தகத்தை வெளியிட்டதில் மகிழ்ச்சி.
மதுரையின் பெருமை… தமிழ்நாட்டின் பெருமை!
-
Delighted to launch The Hindu Group’s special coffee table book on the world renowned Meenakshi Sundareswarar Temple, beautifully documenting its rich history, architecture and spiritual heritage.
The pride of Madurai. The pride of Tamil Nadu!
@CMOTamilnadu | @TVKVijayHQ |
@the_hindu
ரத்தன் பண்டிட் இனிமேல் தமிழ்நாட்டில் கால் வைக்க மாட்டாராம்.
“என்னை பக்கத்தில் இருக்க விட்டிருந்தால் இதை செய்திருப்பேன், அதை செய்திருப்பேன்… எனக்கென்ன குறை? எங்கு வேண்டுமானாலும் போவேன், வேலை செய்வேன், அமெரிக்கா போவேன், சிங்கப்பூரில் மீட்டிங் வைப்பேன்” என்று ஏகத்துக்கும் உளறி வைத்திருக்கிறார்.
பெரியார் முதல் வீரமணி, வன்னி அரசு, பிரேமலதா வரை யாரையும் விட்டு வைக்கவில்லை.
சரி… இருக்கட்டும்.
அரசாங்கத்தில் இவருக்கு இடம் கிடைக்குமா கிடைக்காதா என்பதையே சரியாக கணிக்க முடியாத இவர், தவெக வெற்றி பெறும், தளபதி முதல்வராக வருவார் என்று கணித்து வைத்திருப்பதாக சொல்லி வியாபாரம் செய்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது.
ரத்தன் இல்லை, வேறு எந்த தனி நபராலும் இந்த ஆட்சி மாற்றம் உருவாகவில்லை.
இது முழுக்க முழுக்க தளபதிக்கும் தமிழக மக்களுக்கும் இடையிலான அன்பாலும் பாசத்தாலும் உருவான அரசியல் மாற்றம்.
இந்த பாசப் பிணைப்பு நேற்றோ இன்றோ உருவானது அல்ல.
30 ஆண்டுகளுக்கும் மேலாக தளபதியை பார்த்து, ரசித்து, நேசித்து, அவருடன் வளர்ந்த தலைமுறையின் பந்தம் இது.
அந்த பாசம், பிணைப்பு, பந்தம், அன்பு எல்லாம் எந்த ஒரு astrologist, political consultant, strategist, வேற எந்த ist-ஆலும் உருவானதல்ல. தளபதி விஜய் என்ற ஒற்றை மனிதர் தன்னுடைய மக்களுக்கு காட்டிய அன்பால் பாசத்தால் மட்டுமே உருவானது.
இந்த பாசமும் அன்பும் வெறும் ஒரு தேர்தல் கணக்கு அல்ல. அது உண்மையான, ஆழமான உறவு. 30 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் வாழ்க்கையோடு பயணித்ததால் உருவான பந்தம் இது.
அதனால்தான் தளபதி சொன்னார்:
“நான் எல்லார் வீட்டிலும் ஏற்கனவே இருக்கிறேன்.”
அது வெறும் அரசியல் வசனம் அல்ல. இத்தனை ஆண்டுகளாக மக்களின் மனதிலும், அவர்களின் குடும்பங்களிலும், அன்றாட வாழ்க்கையிலும் தளபதி இருந்ததன் வெளிப்பாடு.
இந்த பந்தத்தை எந்த ஜோதிட சாஸ்த்திர கணக்கும் கணக்கிட முடியாது.
முதலீடுகளின் முன்னணி முகவரியாகத் திகழும் தமிழ்நாட்டின் அடுத்தகட்ட தொழில் புரட்சிக்கு வித்திடும் 23 புதிய அறிவிப்புகள்!
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியைப் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும், தொழில்முனைவோருக்கு வலுவான ஆதரவை வழங்கவும், இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தொழில்துறை மானியக் கோரிக்கையின் கீழ் 23 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளேன்.
புதிய தொழில் மண்டலங்கள் உருவாக்கம் முதல் முதலீடுகளை ஈர்ப்பது வரை, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது முதல் தொழில்முனைவோர் வளர்ச்சியை ஊக்குவிப்பது வரை - தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு புதிய வேகத்தையும், புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் இந்த 23 அறிவிப்புகளும் அமைந்துள்ளன.
#CMJosephVijay
1/6