மாசு இல் வெண்துகிலை நீர் தோய்த்து மேல் போர்த்த வண்ணமே போல் - குற்றமற்ற வெள்ளாடையை நீரிலே நனைத்து மேலே போர்த்த தன்மையைப் போல்
காசு இல் மட்டு ஒழுக அழிஞ்சில் பூத்த - குற்றமற்ற தேன் சொரிய அழிஞ்சில்கள் மலர்ந்தன
அழிஞ்சிலின் பூவுக்கு நீரில் தோய்த்த துகில் உவமம்.
#சீவகசிந்தாமணி_1649