Mamata Banerjee’s constituency:
51k votes deleted. She lost by 15k.
M.K. Stalin’s constituency:
1 lakh votes deleted. He lost by 9k.
Arvind Kejriwal’s constituency:
40k votes deleted. He lost by 4k.
Was this the real reason behind the introduction of SIR?
சிறுமிகளுக்கு எதிரான மனிதத்தன்மையற்ற இழிவான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதில் வீரமணியும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள் எவராயினும், எத்தகைய பொறுப்பில் இருந்தவர்கள் ஆயினும் தப்பிக்க கூடாது. அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தர வ��ண்டும். இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு. இந்த வழக்கின் முடிவு, இனி இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணமே எவருக்கும் வராத வகையில் அமைய வேண்டும் என்பதுதான் ஓர் அரசியல் இயக்கத்தின் தலைவனாகவும், ஒரு குடும்பத்தலைவனாகவும், மனசாட்சி உள்ள மனிதனாகவும் எனது விருப்பம்.
ஆனால், இந்த வழக்கில் தேவையே இல்லாமல், குறுகிய அரசியல் நோக்கத்துடன் தி.மு.கழகத்தின் மீது பொய்ய��க அவதூறுகளைப் பரப்பி, ஒரு கூட்டம் குளிர்காய்ந்து வருவது மிகவும் அருவெறுப்பான செயலாகும். வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் கழக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை.
பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாரபட்சமின்றி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, தண்டனை பெற்றுத் தரப்பட்டது. இவை அனைத்தும் பொதுவெளியில் இருக்கும், மறுக்க முடியாத உண்மைகள் ஆகும். எவரையும் காப்பாற்ற வேண்டிய தேவை கழக ஆட்சிக்கு இல்லை.
தற்போதைய த.வெ.க. ஆட்சியில் நடப்பதுபோல, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது அனைத்துப் பத்திரிகைகளின் முன்பும் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பின்னரும், நடவடிக்கை எடுக்காமல், சமரசம் பேசி வழக்கை முடித்து வைக்கும் இழிசெயல்கள் கழக ஆட்சியில் நடைபெறவில்லை.
எனவே, சிறுமிகளுக்கு ஏற்பட்ட துயரத்தை இடைத்தேர்தலுக்கான கருவியாகப் பயன்படுத்தும் இழிவான செயலையும், முற்றிலும் பொய்யான அவதூறுகளை ஊடகங்கள் மூலமாக பரப்புவதையும் ஆளும்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி பெற்றுத் தருவது மட்டுமே நம் அனைவரின் நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
விழுந்த மனிதர்கள்
ஜெம் வீரமணியின் ஆசிர்வாதத்தில் நடந்த “விழுந்த மனிதர்கள்” புத்தக வெளியீட்டு விழா கடந்த ஜூலை ஆறாம் தேதி சென்னையில் நடந்தது… இந்த புத்தகத்தை எழுதினது ஊர் அறிந்த ...... பத்திரிக்கையாளர் பிரகாஷ் எம்.ஸ்வாமி….
இதுல நம்ம TVK அமைச்சர் வெங்கட்ரமணன் மற்றும் அமைச்சர் லோக��ஷ்… கலந்துகிட்டு விழாவை சிறப்பித்து இருக்கிறார்கள்…. இத பத்தி யாருமே வாயை திறக்காமல் சைலன்டா இருக்குறாங்க…..
இந்த நிகழ்ச்சி குறித்தான எல்லா செய்தியும் மறைக்கப்பட்டிருக்கே அது ஏன்?
கழக மூத்த முன்னோடி, முன்னாள் அமைச்சர், கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் அண்ணன் திரு. ஆற்காடு நா. வீராசாமி அவர்கள் மற்றும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினோம்.
சென்னை, தலைமைச் செயலகத்தில், “சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா” நடத்துவது குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டோம்.
இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர்.க.மணிவாசன், இ.ஆ.ப., கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் திருமதி.ச.வளர்மதி, இ.ஆ.ப., மற்றும் துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் கலந���து கொண்டனர்.
#MKStalin #UdhayStalin #MPSaminathan #DMKforTN
#MGNREGA-வை மீட்டெடுக்கவும், தங்களது வாழ்வாதாரத்தைக் காத்துக்கொள்ளவும் தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்கள்!
இது தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என்பதை, அண்ணல் காந்தியின் மீது வெறுப்புணர்வோடு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்கள் உணர வேண்டும்! ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும்!
#SaveMGNREGA #RevokeVBGRAMG
ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்!
மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை!
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!
ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரைநூற்றாண்டாகக் கவர்ந்திழுக்���ும் என் நண்பர் #SuperStar @rajinikanth அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, மக்களின் அன்போடும் ஆதரவோடும் தங்கள் வெற்றிக்கொடி தொடர்ந்து பறக்கட்டும்!
#HBDSuperStarRajinikanth
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சட்டமன்ற தொகுதி, காங்கேயம் பழனியப்பா மஹாலில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு நலத்தி��்ட உதவிகளை வழங்கினோம் மற்றும் காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு மின்கல வாகனங்களின் சேவையினை துவக்கி வைத்தோம்.
உடன் காங்கேயம் வட்டாட்சியர் திரு.மோகனன் அவர்கள், கழக நிர்வாகிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உள்ளனர்.
#MKStalin #UdhayStalin #MPSaminathan #TiruppurDMK
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், தம்மரெட்டிபாளையம், அருள்மிகு தங்கம்மன் கோவில் அருகில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை - SSAP - Phase I 2025-2026 திட்டத்தின் கீழ் தங்கம்மன் கோயில் சாலை முதல் கொடுமணல் செல்லும் சாலையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணியினை தொடங்கி வைத்தோம். உடன் கழக நிர்வாக��கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இருந்தனர்.
#MKStalin #UdhayStalin #MPSaminathan #TiruppurDMK
காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், உலக புகழ்பெற்ற காங்கேயம் காளை சிலை அமைக்க ஏற்பாடு செய்த தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, காங்கேயம் காளை சிலை அமைப்பு சங்கத்திற்கு ரூ.1,00,000 நன்கொடை வழங்கினேன்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினோம்.
உடன் மாண்புமிகு மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., அவர்கள், துணை மேயர் திரு.ரா.பாலசுப்பிரமணியம் அவர்கள், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் திரு.இல.பத்மநாபன் அவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.
#MKStalin #UdhayStalin #MPSaminathan #TiruppurDMK
கழக ஆக்கப்பணிகள், தேர்தல் செயல்திட்டங்கள் குறித்து கலந்தாலோசிக்க இன்று முதல் ஒவ்வொரு தொகுதியைச் சார்ந்த கழக உடன்பிறப்புகளுடன் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து உரையாட இருக்கிறார்!
#உடன்பிறப்பே_வா
கும்பகோணத்தில் அமைகிறது ‘கலைஞர் பல்கலைக்கழகம்’!
போராடிக் கல்விச் சாலைக்குள் காலடி எடுத்து வைத்த நாம், உயர்கல்வியில் உயர உயரப் பறக்கிறோம்! நானிலமெங்கும் தமிழ்நாட்டினர் உயர் பொறுப்புகளில் பணியாற்றுகிறோம்!
இந்தப் பெருமைகளுக்கு அடித்தளமிட்ட முத்தமிழறிஞர் கலைஞர் செய்த சாதனைகளில் சில:
💪 பள்ளிகளில் தமிழ்க் கட்டாயப் பாடம்
👩🏫 ஆரம்பப் பள்ளிகளில் பெண் ஆசிரியைகள் நியமனம்
🍛 வாரத்தில் ஐந்து நாட்கள் முட்டை என உண்மையான சத்துணவு
🔷 தமிழில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை
👨🎓 முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்களுக்குக் கல்விக் கட்டணச் சலுகை
📝 தேர்வு முறையில் செமஸ்டர் முறை அறிமுகம்
👩💻தமிழ் வழியில��� பொறியியல் படிப்பு
🚎 இலவச பஸ் பாஸ்
💻 இந்தியா��ிலேயே முதன்முதலாகப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கணினிப் பாடம் அறிமுகம்
📑 பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நீக்கம்
🏥 மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள்
🏢 பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விக்குத் தனித்தனி துறைகள் மற்றும் அமைச்சகங்கள்,
📚 அண்ணா நூற்றாண்டு நூலகம்,
உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை உருவாக்கி,
🎓 கோவை பாரதியார் பல்கலைக்கழகம்
🎓 திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்
🎓 நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
🎓 சேலம் பெரியார் பல்கலைக்கழகம்
🎓 கோவை வேளாண்மை அறிவியல் பல்கலைக்கழகம்
🎓 சென்னை அண்ணா தொழில்நுட்ப அறிவியல் பல்கலைக்கழகம்
🎓 டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்
🎓 டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்
🎓 உலகத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
🎓 தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்
ஒன்றிய அரசை வலியுறுத்தி,
🎓 திருவாரூரில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்,
🎓 திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம்
-என நீளும் இந்தப் பட்டியலால் நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய தலைவர் கலைஞர் தமிழ்நாட்டு மக்களின் உயர்வில் என்றும் வாழ்வார்!
��ப்ரல் 15: தேசிய திருநங்கையர் நாள்!
புறக்கணிப்புக்கும், ஏளனங்களுக்கும் ஆளான திருநர் உடன்பிறப்புகளின் சுயமரியாதையைக் காக்கும் பெயர் தந்து, நாட்டிலேயே முதன்முதலாக அவர்களுக்கென நலவாரியம் அமைத்தார் தாயுமான தலைவர் கலைஞர்!
கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், திருநர்களின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும், புதுமைப்பெண் திட்டம் திருநங்கையருக்கும் விரிவாக்கம், ஊர்க்காவல்படையில் திருநர்கள் என அதனை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்கிறது நம் #DravidianModel அரசு...
திருநர்களின் கல்வி, வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, சமூகத்தில் அவர்களின் மாண்பை உறுதிசெய்வோம்!
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக பாதிக்கப்படக்கூடிய இந்தியாவின் பல்வேறு மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றம்!
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக பாதிக்கப்படக்கூடிய இந்தியாவின் பல்வேறு மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் முக்��ியத் தீர்மானங்கள் நிறைவேற்றம்!