BIO CLOCK என்றால் என்ன?
நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது தான் Bioclock.
நமக்கு தெரிந்த வட்டத்தில் எல்லோரும்
60 - 70 வயதில் இறந்து விடுகிறார்கள். எனவே நாமும் 60-70 வயதில் இறந்து விடுவோம்.
50 வயதில் எல்லா நோய்களும் வந்து விடும் என்று நம்பி நமது Bioclock இல் செட் செய்துவிடுகிறோம்.
அதனால்தானோ என்னவோ 50 வயதில் நோய் வருகிறது.
70 வயதில் செத்து விடுகிறோம். நமக்கு தெரியாமலே நமது Bioclock ஐ தவறாக செட் செய்து விடுறோம்.
சீனாவில் பெரும்பாலோனார் 100 வயது வாழ்கிறார்கள். அவர்களது Bioclock அப்படி செட் செய்யப் பட்டுள்ளது.
எனவே, அன்பான உறவுகளே...
1. நாம் குறைந்தது 100 வயது வரை வாழ்வோம் என்று Bioclock ஐ மாற்றி அமைப்போம்.
2. நமக்கு இந்த சின்ன வயதில் (40 இலிருந்து 60 வயதுக்குள்) எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை என நம்புவோம்.
3. முடியை அழகு படுத்துங்கள் ( முடி இருந்தால் 😂). இளமையாக தோற்றம் அளியுங்கள் . வயதான தோற்றத்தை அனுமதிக்காதீர்கள்.
4. சுறுசுறுப்பாக இருங்கள். வாக்கிங் போங்கள்.
5. வயதாக வயதாக ஆரோக்கியம் கூடும் என்று நம்புங்கள். (அது தான் உண்மை).
6. எல்லாத்துக்கும் இந்த மனசு தான் காரணம். Never, ever allow the bioclock set your ending.
எண்ணங்களே வாழ்க்கை.
முதுமை பாதத்திலிருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது!
உங்கள் கால்களை செயல்பாட்டிலும் & வலுவாக வைத்திருங்கள் !!
Keep your Legs Active and Strong !!!
தினசரி வயதாகிக்கொண்டே இருக்கும்போது, நம் கால்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும். நாம் தொடர்ந்து வயதாகும்போது, நம் தலைமுடி நரைத்து (அல்லது) சருமம் தளர்ந்து (அல்லது) முகத்தில் சுருக்கங்கள் வருவதற்கு நாம் பயப்படக்கூடாது.
நீண்ட ஆயுளின் அறிகுறிகளில், பிரபலமான அமெரிக்க பத்திரிகை வருமுன் தடுப்பு (prevention) மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, வலுவான கால் தசைகள் அனைத்திற்கும் மேலே மிக முக்கியமான மற்றும் இன்றியமையாத ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளன. தயவுசெய்து தினமும் நடந்து செல்லுங்கள்.
உங்கள் கால்களை இரண்டு வாரங்களுக்கு அசைக்கவில்லை என்றால், உங்கள் உண்மையான கால் வலிமை 10 வருடங்கள் குறையும்.
நடந்து செல்லுங்கள்.
டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு, முதியவர்கள் மற்றும் இளைஞர்கள், இரண்டு வாரங்கள் செயலற்ற நிலையில் இருந்தால் கால் தசை வலிமை மூன்றில் ஒரு பங்கு பலவீனமடையலாம் என்கிறது. இது 20-30 வருடங்கள் முதுமையடைவதற்கு சமம் !!
எனவே, நடந்து செல்லுங்கள்.
கால் தசைகள் பலவீனமடைவதால், நாம் மறுவாழ்வு மற்றும் உடற்பயிற்சிகள் செய்தாலும், மீட்க நீண்டகாலம் பிடிக்கும். நடங்கள். அதனால், நடைபயிற்சி போன்ற வழக்கமான உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது.
நமது முழு உடல் எடை/ சுமையை கால்களே தாங்குகிறது.
கால்கள் ஒரு வகையான தூண்கள், மனித உடலின் முழு எடையையும் தாங்கும்.
தினமும் நடைப்பயிற்சி.
சுவாரஸ்யமாக, ஒரு நபரின் எலும்புகளில் 50% & தசைகளில் 50%, இரண்டு கால்களிலும் உள்ளன.
நடந்து செல்லுங்கள்.
மனித உடலின் மிகப்பெரிய மற்றும் வலுவான மூட்டுகள் மற்றும் எலும்புகளும் கால்களில் உள்ளன.
10,000 அடிகள் / நாள்
வலுவான எலும்புகள், வலுவான தசைகள் மற்றும் நெகிழ்வான மூட்டுகள் உடலின்
இரும்பு முக்கோணத்தை உருவாக்கி
மனித உடலைச் சுமக்கிறது.
ஒருவரின் வாழ்க்கையில் 70% மனித செயல்பாடு மற்றும் ஆற்றல் எரித்தல்(burning the calories) இரண்டு கால்களால் செய்யப்படுகிறது. இது உங்களுக்கு தெரியுமா?
ஒரு நபர் இளமையாக இருக்கும்போது, அவருடைய/ தொடைகள் 800 கிலோ எடையுள்ள ஒரு சிறிய காரைத் தூக்கும் வலிமை கொண்டவை.
கால், உடல் நடமாட்டத்தின் (locomotion) மையம்.
இரண்டு கால்களும் சேர்ந்து மனித உடலின் 50% நரம்புகளையும், 50% இரத்தக் குழாய்களையும், 50% இரத்தத்தையும் அவற்றின் வழியே பாய்கிறது. இது உடலை இணைக்கும் மிகப்பெரிய சுழற்சி நெட்வொர்க். எனவே தினமும் நடந்து செல்லுங்கள்.
கால்கள் மட்டும் ஆரோக்கியமாக இருக்கும்போது, இரத்த ஓட்டத்தின் வளமையான மின்னோட்டம் சீராக செல்லும். எனவே வலுவான கால் தசைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக வலுவான இதயத்தைக் கொண்டிருப்பார்கள்.
ஒருவரது வயது, பாதத்தில் இருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது. ஒரு நபர் இளமையில் இருப்பது போலல்லாமல் வயதாகும்போது, மூளை மற்றும் கால்களுக்கு இடையே நடைபெறும் ஆணைகள் பரிமாற்றத்தின் துல்லியம் மற்றும் வேகம் குறைகிறது.
தயவுசெய்து நடந்து செல்லுங்கள்.
யாருடையது காவிரி நீர் ?..
பத்து வருடம் முன்பு பெங்களூருவில் நான் வேலை பார்த்த நிறுவனத்தில்,
27 ஊழியர்களுக்கு நான் மேலாளர். 27 பேரும் (ஆண் பெண் உட்பட முப்பது வயதுக்குக் குறைவான இளைஞர்/இளைஞிகள்.
7 கன்னடர்கள், 9 தமிழர்கள், 5 தெலுங்கர்கள், மீதி வடநாட்டவர்.
ஒரு நாள் coffee இடைவெளியில் பேசிக்கொண்டிருக்கும்போது, நந்தகுமார் என்ற இளைஞர் (கன்னடர்- மைசூர் - பிறந்து வளர்ந்தது - MBA பெங்களூரு பல்கலைக்கழகம்) சற்றுத் தயங்கி,
"சார், தப்பா நினைக்கக் கூடாது. நீங்கள் நியாயவாதி என்பதால் உங்களைக் கேட்கிறேன். கேட்கலாமா?" என்றார்.
அப்போது, இன்று போலவே காவிரி நீர்ப் பிரச்னை உச்சம்.
"கேளேன் நந்து" என்றேன். அவர் கேட்டது (ஆங்கிலத்தில்தான்)
"சார், கன்னட மக்கள் உழைப்பில், கர்நாடக அரசின் முதலீட்டில் விஸ்வேஸ்வரய்யா கஷ்டப்பட்டு கட்டிய காவிரியிலிருந்து தமிழக மக்கள் பங்கு கேட்பது எந்த விதத்தில் நியாயம் ?: என்று கேட்டார்.
""அதாவது KRS அணை பற்றிக் கேட்கிறீர்கள் இல்லையா" ? என்றேன்.
"அதுவும்தான்" என்றார். எனக்கு புரை ஏறிவிட்டது.
"காவிரியை விச்வேஸ்வரய்யா கட்டினாரா?" என்றேன்.
அவர் குழப்பத்துடன் "பின்னே" என்றார்.
அவரிடம் இருந்த குழப்பமே, மீதி இருந்த ஆறு MBAக்களிடமும் இருந்தது.
நான் உடனே சொன்னேன், "நந்து, இதற்குப் பதில் பின்னால் சொல்கிறேன். முதலில் உங்களுக்கு அரை நாள் விடுமுறை தருகிறேன். உங்கள் வேலையை நான் செய்து கொள்கிறேன். நீங்கள் கூகிள் இல் உட்காருங்கள். நான் இப்போது எழுதிக்கொடுக்கும் பத்து வார்த்தைகளைத் தேடி, விக்கிபீடியாவில் அவை எல்லாம் முழுதாகப் படித்து விட்டு, மாலை என்னிடம் வரவேண்டும்" என்றேன்.
"சரி சார்" என்றார். நான் எழுதிக் கொடுத்தேன்.
Cauvery River, Chola Kingdom, Kallanai, Karikaal Chola, Raja Raja Chola, Tanjore, Coorg, Upper Riparian State, Lower Riparian State, KRS Dam
மாலை தொங்கிப் போன முகத்தோடு வந்தார். "எல்லாம் படித்து விட்டேன். நீங்கள் சொல்ல ஏதும் இல்லை சார். சாரி" என்று சென்று விட்டார்.
"ஒரு நிமிடம்.... நந்து, நீங்கள் படித்ததையெல்லாம் உங்கள் மீதி நண்பர்களுக்கும் சொல்லுங்கள்" என்றேன்.
நான் மேலே சொன்னதை நம்புபவர்கள் நம்புங்கள். நம்பாதவர்கள், கர்நாடகாவில் யாரிடமாவது காவிரி பற்றிப் பேசிப் பாருங்கள்.
-----
நிறைய பேருக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை.
குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்கிருந்து நேரடியாக ஓடி வந்து தமிழகத்தின் வழியாக ஓடிப்போய் கடலில் கலந்துவிடுவது போலவும், அப்படி கடலில் கலக்க விட்டுவிட்டு ஏதோ கர்நாடகக்காரன் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரில் பங்கு கேட்டு தமிழகம் தகராறு செய்வது போலவும் சிலர் பேசிட்டு இருக்காங்க.
அவங்க பேசுவதை பார்த்தால் காவிரி ஆறு உற்பத்தியாகி 200 ஆண்டுகள்தான் ஆனதுபோல இருக்கு.
ஒரு விஷயம் அவுங்களுக்கு புரியவே இல்லை, பூகோள ரீதியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நதி கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக ஓடி கடலில் கலந்துகொண்டுதான் இருந்தது.
அப்போது காவிரி டெல்டாவில் முப்போகம் விவசாயம் நடந்துகொண்டேதான் இருந்தது.
ஆனால் பிரச்சனை ஆரம்பித்ததே 1932ல் காவிரியின் நீர்பிடிப்பு பகுதியில் கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டப்பட்ட பிறகுதான்.
அதுவரை தடையின்றி ஓடிக்கொண்டிருந்த நதி காவிரி டெல்ட்டாவை தாண்டி தினமும் பல மில்லியன் லிட்டர் தண்ணீரை கடலுக்குள் கொண்டுபோய் சேர்த்துக்கொண்டே இருந்தது.
KRS அணை கட்டப்பட்ட பிறகு காவிரியில் ஒரு சொட்டு நீர்கூட வர முடியவில்லை. காரணம் காவிரியை தடுத்து கட்டப்பட்ட KRS அணையில் நீர் அடைபட்டது.
அந்த அணை நிரம்பும் தருவாயில் உபரி நீர் மட்டும் வெளியேறிக்கொண்டிருக்கும். அதாவது இயற்கையான போக்கில் ஓடின நதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
(KRS அணையை தொடர்ந்து கபினி,ஹேமாவதி,ஹாரங்கி அணைகள் கட்டப்பட்டபோதும் அப்படித்தான்)
நம்முடைய நதி நீரை கேட்பது நமது உரிமை. சிலர் அதை என்னமோ யாசகம் போல நினைத்துக்கொண்டு மழை நீரை சேகரிக்க கூடாதா? கடல் நீரை குடி நீராக்கி குடிக்க கூடாதா என்கிறார்கள்.
அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. நதி நீர் என்பது நிலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல, கடலுக்கும் சொந்தமானது.
நதி நீர் கடலில் கலந்தேயாக வேண்டும். அது கட்டாயம். அதுதான் இயற்கை.
புவியியல் வல்லுநர்களிடம் கேட்டுப்பாருங்கள் இதற்கான விளக்கத்தை தருவார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் சீனா மஞ்சளாற்றின் குறுக்கே உலகின் மிகப்பெரிய ஒரு அணையை கட்டியது.
அந்த தண்ணீரை பாலைவனத்தின் பக்கம் திருப்பி பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை சோலைவனமாக்கியது. ஆனால் அந்த ஆறு கடலில் சேரும் பகுதியில் நதி நீர் ஓடாததால் உப்பு நீர் நிலத்தடி நீருக்குள் ஊடுறுவியது. அந்த பகுதி கடற்கரையின் உப்பு அளவு அதிகரித்தது.
1/2
#NTKfightsforCauvery
அரசு பேருந்துகள் நிறுத்தும் உணவகங்களில் டெண்டர் விதிமுறைகள் மீறப்படுவது குறித்து அறப்போர் இயக்கம் புகார் அளிக்க துவங்கிய பிறகு தற்பொழுது பல உணவகங்களில் இது வரை பின்பற்றப்படாத விதிமுறைகள் பின்பற்றப்படுவதாக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் மக்கள் தொடர்ந்து தகவல் தெரிவித்து வருகிறார்கள்.
ஆனாலும் சில உணவகங்கள் தொடர்ந்து விதிகளை பின்பற்றாமல் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக இலவசமாக அனுமதிக்க வேண்டிய கழிவறைகளை பயன்படுத்த 5 முதல் 10 ரூபாய் வரை வசூல் செய்து வருகின்றனர்.
இது போன்ற உணவகங்களுக்கு நீங்கள் செல்ல நேர்ந்தால் கழிவறைக்கு கட்டணம் வசூல் செய்வதை படம் எடுத்து அறப்போர் இயக்கத்தின் Whatsapp எண்ணிற்கு 7200020099 அனுப்புங்கள். SETC புகார் எண்ணை 18005991500 அழைத்து புகார் பதிவு செய்யுங்கள்.
மேலும் தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் நிற்க அங்கீகாரம் பெற்ற உணவகங்களின் பட்டியலை திமுக அரசாங்கம் இணையதளத்தில் வெளியிட வேண்டும். அறப்போர் இயக்கம் RTI மூலம் கேட்ட தகவலுக்கு வெறும் 31 உணவகங்களின் பட்டியலை மட்டுமே அனுப்பியுள்ளனர். முழு பட்டியலை வெளியட என்ன தயக்கம்?
SETCக்கு மக்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் புகார்களை அளிக்க பிரத்யேக டிவிட்டர் கணக்கு துவங்கப்பட வேண்டும். தினசரி லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் அரசு போக்குவரத்து கழகம் மக்களிடம் நேரடி தொடர்பில் இருக்க வேண்டாமா?
We are Watching.
#Arappor | #SETC | #TNGovt
@sivasankar1ss@mkstalin@CMOTamilnadu
12 UNESCO World Heritage Sites in India which are a must visit for Everyone!
1. The Kailasa Temple in Ellora - The largest Monolithic Structure of the World.
இன்னைக்கு 'விக்ரம் வேதா' படத்தோட ஹிந்தி வெர்ஷன் பார்த்தேன்.. படத்துல ஒரு சீன்ல 'பிறப்பால எவனும் நல்லவனோ கெட்டவனோ இல்ல'ன்னு சொல்ற ஒரு வசனம் வரும். தமிழ் வெர்ஷன்ல வேதா விக்ரமை பார்த்து 'போலீஸ்காரன் புள்ள போலீஸ்.. கிரிமினலோட புள்ள கிரிமினல்.. அதானே சார் உன் லாஜிக்? கேவலமா
1/N