திரிஷா வழக்கு தொடர்ந்தாரா அல்லது புகார் அளித்தாரா? உதயநிதியின் இரட்டை அர்த்தப் பேச்சை திரிஷா புரிந்துகொண்டாரா? அந்த இரட்டை அர்த்தம் என்ன? எனக்கு அது புரியவில்லை... தனிப்பட்ட பழிவாங்கும் நோக்கத்திற்காகப் பெண் பாலினத்தைக் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக காவிரி விவகாரத்தைத் திசைதிருப்ப.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில், நாகப்பட்டினம் மாவட்டக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
#AIADMK
தமிழ் நாட்டில் நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்திடவும்; அன்றாடம் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவும்; தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வது சம்பந்தமாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடவும், த.வெ.க. அரசை வலியுறுத்தி செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்!
நாள் : 20.6.2026 - சனிக்கிழமை மாலை 5 மணி
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு
தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு அண்டை மாநிலங்களுக்குப் படையெடுக்கும் தொழில் நிறுவனங்கள் – தொழில் வளத்தைப் பெருக்குவதில் ஆர்வம் காட்டாத தவெக அரசால் மாநிலத்தின் பொருளாதாரம் எப்படி உயரும்?
தூத்துக்குடியில் 29 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் முதலீடு செய்வதற்காக கடந்த ஆட்சியில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டிருந்த Mazagon Dock Shipbuilders Limited (MDL) எனும் நிறுவனம் தற்போது ஆந்திர மாநில அரசுடன் ஒப்பந்தம் போட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த கவலையைத் தருகிறது.
பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தமிழக முதல்வர் மற்றும் தொழில்துறை அமைச்சரை சந்தித்து பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கையெழுத்திடுவதாக INSTA வில் REELS கள் வருகிறதே தவிர, ஆக்கப்பூர்வமான எந்தவொரு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவோ, அதனால் எந்தவித முதலீடுகளும் வேலை வாய்ப்புகளும் உருவானதாகவோ இதுவரை தெரியவில்லை.
தொழில்நுட்ப ரீதியிலும், உட்கட்டமைப்பு வசதிகளிலும் எப்போதுமே இந்தியாவின் தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் தமிழ்நாட்டில், தொழிலைத் தொடங்க முன்வந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்ட பன்னாட்டு நிறுவனங்கள், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் திடீரென அண்டை மாநிலங்களை நோக்கிப் படையெடுப்பதன் மூலம் முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதிலும் தவெக அரசு முனைப்புக்காட்டத் தவறியுள்ளதாக இளைஞர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பைப் பெருக்குவதிலும் கூடுதல் கவனம் செலுத்தி, புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதோடு, ஏற்கனவே தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு திட்டமிட்ட படி தமிழகத்தில் தொழில் தொடங்கிடுவதை உறுதி செய்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதி, எடப்பாடி பேருந்து நிலையத்தில், தமிழகத்திலேயே அதிகமான வாக்கு வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெறச் செய்த எடப்பாடி சட்டமன்ற தொகுதி வாக்காள பெருமக்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து சிறப்புரையாற்றினார்.
Hi ரத்தத்தின் ரத்தங்களே….
ரொம்ப நாளா Online Membership பத்தி கேட்டுட்டு இருக்கீங்க… நம்ம side-ல இருந்து ஒரு சின்ன Clarification…
கழகத்தில் இணைய விருப்பம் உள்ளவர்களுக்கான பதிவு லிங்க் சில ஆண்டுகளாகவே Active-ஆக தான் உள்ளது
https://t.co/rl0iR19O2r
இந்த Link-ல் பதிவு செய்த உறுப்பினர் அல்லாத நண்பர்களை தொடர்பு கொண்டு Coordinate செய்திருக்கிறோம்.
But, நம் கழக Bylaw-படி நம்மால் இதுவரை Online Membership Drive Initiate செய்ய முடியவில்லை.
இதுகுறித்து தொடர்ந்து தலைமையிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். செயற்குழுவில் Submit செய்து நிறைவேற்றி, பொதுக்குழு Ratify பண்ணி Bylaw Update செய்தால் தான் இதை சாத்தியப்படுத்த முடியும்.
So, மீண்டும் மீண்டும் வைக்கக்கூடிய உங்கள் Request-ஐ மீண்டும் ஒரு முறை நம்முடைய கழகத் தலைமைக்கு கண்டிப்பா கொண்டு செல்கிறோம்.
நம்ம கழகப் பொதுச் செயலாளர் @EPSTamilNadu அவர்கள் உறுதியாக நமக்கு Online Membership Enable பண்ணி தருவார்!
Until then, we are always one family. Register in the link and… See you soon!
-Team @AIADMKITWINGOFL@EPSTamilNadu@AIADMKOfficial@satyenaiadmk
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து - ரீல் விட்டு ஆட்சியைத் தொடரலாம் என்ற முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களின் பகல் கனவு இனி பலிக்காது.
@TVKVijayHQ@TVKPartyHQ
அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து புதிய தலைமுறை செய்தி சேனல் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
“திமுக ஆட்சிக்கும், இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சிக்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க” என கேட்டால் யாராக இருந்தாலும் கண்டுபிடிக்க முடியாது.
ஆட்சிக்கு வந்தவுடனே சமூக வலைதள பதிவுகள் மீது வழக்குகள், எதிர்கட்சியினரின் சமூக ஊடகக் கணக்குகளை முடக்க காவல்துறை வாயிலாக X, Meta ஆகிய நிறுவனங்களுக்கு கடிதங்கள், அரசை விமர்சித்த நபர் கைது, தற்போது செய்தி சேனல் முடக்கம்… இது அப்பட்டமான திமுக மாடல்!
அப்படி எதற்காக புதிய தலைமுறை Blackout செய்யப்படுகிறது என்று பார்த்தால், டெல்லியில் இன்றைய முதல்வர் செய்தியாளர்களை சந்திக்காமல் தெறித்து ஓடிய செய்தியை வெளியிட்டது என சொல்லப் படுகிறது.
டெல்லியில் மட்டுமல்ல, கட்சி ஆரம்பித்த நாள் முதல் ஒருமுறை கூட செய்தியாளர்களை இவர் சந்திக்கவே இல்லையே? கரூர் துயரம் நடந்த போது கூட, “30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்” என்று செய்தியாளர்கள் கூறிய போது கூட அதை கண்டுகொள்ளாமல் ஓட்டம் பிடித்தவர் தானே இவர்?
மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு இருந்து, தனக்கென ஒரு போலியான Demigod இமேஜ் உருவாக்கிக் கொள்ள இவர்கள் செய்யும் தந்திரம் தான் ஊடகங்களில் இருந்து ஒதுங்கி நிற்பது. ஆனால், இது சினிமா அல்ல; பொதுவாழ்க்கை! மக்களின் கேள்விகளை கேட்கும் எதிர்கட்சிகள், ஊடகங்களை நேருக்கு நேர் சந்தித்து பதில் சொல்லத் திராணி இருக்க வேண்டும். அது இன்றைய முதல்வருக்கு இருக்கிறதா? இனியாவது வருமா?
உங்கள் பக்கம் இருக்கும் தவறை ஒரு ஊடகமோ, தனிநபரோ சுட்டிக் காட்டினால், அதை திருத்திக்கொள்ள பாருங்கள்; அல்லது, மறுத்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள். அதை விடுத்து ஊடகத்தை முடக்குவது, தனிநபர்களை கைது செய்வது என ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்காதீர்கள்.
புதிய தலைமுறை மீண்டும் அரசு கேபிளில் பழைய வரிசை எண்ணிலேயே ஒளிபரப்பு செய்திட வேண்டும் என இவ்வரசை வலியுறுத்துகிறோம்.
@PTTVNewsX@CMOTamilNadu
பதவி விலகிய 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் த.வெ.கவில்
இணைந்தது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும்
எதிரானது: மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது!
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களின் பதவிகளில் இருந்து விலகி ஆளும் த.வெ.க.வில் சேர்ந்திருப்பது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் ஆகும். அவர்களின் செயலும், அவர்களை சேர்த்துக் கொண்ட ஆளும் கட்சியின் நடவடிக்கையும் கண்டிக்கத்தக்கவை ஆகும்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு 20 நாள்கள் மட்டுமே ஆகின்றன. அதற்குள்ளாக 3 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவி விலக வேண்டிய தேவை என்ன? காவிரி பிரச்சினைக்காகவோ, தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவோ அவர்கள் தங்களின் பதவிகளை தியாகம் செய்யவில்லை. மாறாக, ஆளும் கட்சியில் சேர்ந்து அதிகாரத்தை சுவைக்க வேண்டும் என்ற துடிப்பு தான் அவர்களின் இந்த நடவடிக்கைக்கு காரணம் ஆகும்.
தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தூய அரசியலை முன்னெடுக்கப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய் அவர்கள், இதையெல்லாம் எவ்வாறு அனுமதிக்கிறார் என்பது தான் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் வினா ஆகும். முதலமைச்சரின் அனுமதி இல்லாமல் அவர்கள் ஆளும் கட்சியின் இணைய வாய்ப்பு இல்லை.
த.வெ.க.வின் இணையும் மூவரும் எதையும் எதிர்பார்க்காமல் இணைந்திருக்க வாய்ப்பில்லை. அந்தத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு, அதில் வெற்றி பெற்ற பின் ஆளுங்கட்சி உறுப்பினராக இருப்பதால் கிடைக்கும் பயன்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் சேர்கின்றனர். இதை அனுமதிப்பது எந்த வகையில் தூய அரசியல்?
அதிமுகவிலிருந்து விலகிய மூவரும் அரசியல் வல்லுனர்கள் என்பதாலோ, பல்துறை வித்தகர்கள் என்பதாலோ அவர்களை த.வெ.க. தலைமை சேர்த்துக் கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால் அவர்களை நிறுத்தி வைத்து வெற்றி பெறச் செய்தால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை பெரும்பான்மை வலிமையை நோக்கி முன்னேறும் என்பது தான் இதற்கான காரணம். இதன் மூலம் முதலமைச்சர் விஜய் அவர்கள் கூறி வந்த தூய அரசியல் மடிந்து விட்டது.
ஆளும் கட்சியில் இணைந்த 3 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வெற்றியில் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களின் கடுமையான உழைப்பு அடங்கியிருக்கிறது. அதற்கு மதிப்பளிக்காமல், வாக்களித்த மக்களின் தீர்ப்பை அவமதித்து விட்டு பதவி சுகத்திற்காக இன்னொரு கட்சியின் சேர்வது மக்கள் தீர்ப்புக்கும், ஜனநாயகத்தும் எதிரானது. தூய்மையான, நேர்மையான அரசியலை செய்வதில் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு நம்பிக்கையிருந்தால் அவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; குறைந்த பட்சம் அவர்களுக்கு கட்சியில் பதவியோ அல்லது இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்போ வழங்கக் கூடாது.
@TVKVijayHQ
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான அன்பிற்குரிய சகோதரர் திரு.எடப்பாடி K பழனிசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் திரு.எடப்பாடி K பழனிசாமி அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தனது மக்கள் பணியைத் தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @EPSTamilNadu@AIADMKOfficial
2021 : முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று @mkstalin வாக்குறுதி கொடுத்தார்,
2026 : திமுக ஆட்சியின் கடைசி ஆண்டிற்கான #NEET தேர்வு அறிவிப்பு கூட வெளியாகிவிட்டது,
மதுவிலக்கு வாக்குறுதி போல் 2026 தேர்தலிலும் நீட் ரத்து வாக்குறுதி மீண்டும் இடம்பெறுமா?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் திரு. தடா ரஹீம் அவர்கள், அக்கட்சியின் நிர்வாகிகளோடு நேரில் சந்தித்து, சட்டமன்றத்தில் தங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வைத்து மனு அளித்தனர்.
செங்கோட்டையன் எவ்வளவு பெரிய தலைவர் தெரியுமா? அவரை எப்படி #EdappadiPalaniswami நீக்கலாம் என்கிறார்கள் சிலர். அரங்கநாயகம் தெரியுமா? பண்ருட்டியார்? இவர்களை செல்வி.ஜெயலலிதா எப்படி கையாண்டார் என்று தெரியுமா? #AIADMK#Sengottaiyan
அதிமுகவில் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக அப்போது அறியப்பட்ட திருநாவுக்கரசு அவர்கள் கராத்தே வீரர்களை கொண்ட பாதுகாப்பு படை ஒன்றை ஏற்படுத்தியிருந்தார். அந்த பாதுகாப்பு படையை அப்புறப்படுத்தியவர் சசிகலா அம்மையார். மறைந்த நடராஜன் அவர்கள் அதற்கு மாற்றாக ஒரு கறுப்பு பூனைப்படையை உருவாக்கினார், அதுவும் யார் தலைமையில்? திவாகரன் தலைமையில்...
அப்போது நாவலர் நெடுஞ்செழியன், பண்ரூட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, அரங்கநாயகம், எஸ்.டி.எஸ் உள்ளிட்டோர் குழுவாக இருந்து ஆலோசனைகளை செல்வி.ஜெயலலிதாவுக்கு வழங்கிய போது, அந்த இடத்தில் செல்வி.ஜெயலலிதாவின் ஆலோசகராக நடராஜன் உருமாறி, கருத்துக்களை சொல்ல, அதுவும் கேட்கப்பட்டது. ஒவ்வொரு அரசியல் தலைவருக்கும், ஒரு ஆலோசகர் தேவை. அதுவும் ஒரு கட்சியின் தலைமை பொறுப்புக்கு புதிதாக வந்த பிறகு, அந்த ஆலோசனை தான், அந்த தலைவரின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு உதவும். நடராஜன் அவர்களின் ஆலோசனைகள் ஆரம்பத்தில் உதவியது. ஆனால் அதை மூத்த தலைவர்கள் யாரும் ரசிக்கவில்லை. கட்சியின் சீனியர், அமைச்சர், மூத்த எம்.எல்.ஏ என பதவி வகித்த தங்களுக்கு முன்பு, நடராஜன் எப்படி அமர்ந்துக்கொண்டு ஆலோசனை வழங்கலாம் என எதிரத்தார்கள். அப்போது தான், செல்வி.ஜெயலலிதாவுக்கு எதிராக களம் அமைத்துக்கொண்டு இருப்பவர்கள், அவரின் தீவிர ஆதரவாளர்கள், நேரம் கிடைத்தால் தாவிவிடலாம் என எண்ணிக்கொண்டு இருப்பவர்கள் என ஒரு பட்டியலை நடராஜன் தயாரித்து, அதை அவரிடம் கொடுத்திருந்தார். நாவலர் நெடுஞ்செழியன், பண்ரூட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, அரங்கநாயகம் ஆகியோர் தனியாக நால்வர் அணியாக செயல்படுகிறார்கள் என்பது தான் அந்த பட்டியலின் ஹைலைட் தகவல். இதை எல்லாம் பார்த்த பிறகு தான், அந்த நால்வர் அணியினர் தனக்கு எதிராக எப்போது வேண்டுமானாலும் திரும்பலாம் என முடிவெடுத்து, முக்கிய முடிவுகளில் எல்லாம் நடராஜன் அவர்களின் கருத்துக்களை பெறத் தொடங்கினார் செல்வி.ஜெயலலிதா.
இந்த பட்டியலை நால்வர் அணியினர் எதிர்த்தார்கள். சசிகலாவையும், நடராஜனையும் கட்சியை விட்டு வெளியேற்றுங்கள் என கோரிக்கை வைத்தார்கள். முதன்முதலாக அத்தகைய கோரிக்கையை கொண்டுபோய் செல்வி.ஜெயலலிதாவிடம் பேசியவர் திருநாவுக்கரசு அவர்கள் தான். அதற்கு செல்வி.ஜெயலலிதா சொன்ன பதில் என்ன தெரியுமா? அவர்கள் என் நலம் விரும்பிகள். எனக்காக தங்களின் நேரத்தை முழுமையாக செலவிடுபவர்கள். அவர்களை கட்சியை விட்டு நீக்கும் பேச்சுக்கே இங்கு இடமில்லை. நான் தான் தலைவர். நான் சொன்னதை கேட்டு நீங்கள் நடந்துக்கொள்ளுங்கள் என்பது தான் அவர் சொன்னது.
அந்த சமயத்தில் தான் நமது எம்.ஜி.ஆரும் தொடங்கப்பட்டது. கட்சியின் பொருளாளராக திருநாவுக்கரசு அவர்கள் இருந்தபோதும், கட்சி நிதிகளை நடராஜன் அவர்களை தான் நிதிகளை கையாளவும், நமது எம்.ஜி.ஆர் பத்திரிக்கையை நடத்திடவும் அதிகம் நம்பினார் செல்வி.ஜெயலலிதா. தலைமை என்ன செய்தாலும், அது கட்சி நல்லதுக்காக தான் என்பதை உணர்ந்த பலர் அமைதியாக இருந்தனர். ஆனால் நால்வர் அணியினர் அதை ரசிக்கவில்லை. நாவலரும், பண்ருட்டியாரும் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்கள், ஆனால் காங்கிரஸ் தலைமை அவர்களை கட்சியில் சேர்க்க கூட அன்று விரும்பவில்லை. அந்த அணியின் ஓர் அங்கமாக இருந்த சேலம் கண்ணன், செல்வி.ஜெயலலிதாவை தரக்குறைவாக பொது இடங்களில் பேசி வந்தார். இதனால் அவர்களை எல்லாம் ஒதுக்கி வைக்கத் தொடங்கினார் செல்வி.ஜெயலலிதா.
கட்சியின் தலைமையாக செல்வி.ஜெயலலிதா கட்சி அலுவலகத்தில் கூட்டிய கூட்டத்திற்கு கூட அவர்கள் நால்வரும் செல்லவில்லை. உடனடியாக அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து தான், அவர்கள் அதிகாரப்பூர்வமாக தனி அணி ஒன்றை ஏற்படுத்தினார்கள். ஆனால் செல்வி.ஜெயலலிதா இல்லாமல் அவர்களால் அரசியல் செய்ய இயலவில்லை. நாவலர் - செல்வி.ஜெயலலிதா இடையே அதன்பிறகு ஒரு சந்திப்பு நடந்தது. ஆனால் அது எந்த மாற்றத்தையும் அப்போது ஏற்படுத்தவில்லை.
இப்படி எல்லாம் பல இன்னல்களை சந்தித்து தான், அதிமுகவை ஒருங்கிணைத்து, பல போராட்டங்களுக்கு மத்தியில் கட்சியை நடத்தினார் செல்வி.ஜெயலலிதா. தஞ்சையில் ஒரு கூட்டத்தில் அதன்பிறகு, கட்சியில் இருந்து பிரிந்துபோன நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், அரங்கநாயகம், திருநாவுக்கரசு போன்றவர்கள் உதிர்ந்த ரோமங்கள். தலையில் இருந்துவிட்டு ரோமங்கள் உதிர்ந்துவிட்டால் அவற்றுக்கு எந்த மதிப்பும் இருக்காது. அதுபோலத்தான் அந்த நால்வர் அணிக்கும் இப்போது அரசியலில் எந்த மதிப்பும் இல்லை என்று கூறியிருந்தார்.
கடைசியில் என்ன நடந்தது தெரியுமா? திருநாவுக்கரசு அவர்கள் நால்வர் அணியில் இருந்துக்கொண்டு அரசியல் செய்ய முடியாது என்று ஜெ அணிக்கு திரும்பினார். எம்.பி சுப்பிரமணியன் அவர்களும் ஜெ அணிக்கு திரும்பினார்.
இது எல்லாம் அதிமுகவின் வரலாறுகள். செங்கோட்டையன் போய்விட்டார், ஓ.பி.எஸ் போய்விட்டார் என்று அழுதுக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒன்று தெளிவாக புரிய வேண்டும். கட்சியின் தலைமை யார் என்பதை பெரும்பான்மையான தொண்டர்கள் முடிவெடுத்துவிட்டார்கள். பெரும்பான்மையான தொண்டர்களின் முடிவை மாற்ற நினைத்தால், தோற்றுத்தான் போவீர்கள். அதற்கு சிறந்த உதாரணம் அந்த நால்வர் அணி. கடைசியில் அந்த நால்வர் அணியில் ஒருவர் கூட மிஞ்சவில்லை. கட்சியை உடைத்து, எப்படி அணிகள் கட்டமைக்கலாம் என்பதில் கைத்தேர்ந்தவர் பண்ருட்டியார். அவரை வைத்து அரசியல் செய்துக்கொண்டு இருக்கிறார் ஓ.பி.எஸ்.
2016ல் செல்வி.ஜெயலலிதா அவர்கள் உடல்நிலை மோசமான நிலையில் இருந்தும் கூட, பிரச்சாரம் செய்து, ஆட்சியை அமைத்துக் கொடுத்தார். அவர் மறைவுக்கு பிறகு, இடைக்கால முதல்வராக ஓ.பி.எஸ் அமர்த்தப்பட்டார். ஆனால் அதன்பிறகு கட்சிக்குள் குழப்பம் ஏற்படாமல் இருக்க சசிகலா அம்மையார் கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமை வகிப்பது நல்லது என்று தீர்மானிக்கப்பட்டவுடன், அம்மாவின் ஆன்மாவோடு பேசினேன் என்று கூறி, ஆடிட்டரிடம் பேசிவிட்டு, கட்சியை முதன் முதலாக உடைத்தார் ஓ.பி.எஸ். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, ஆட்சிக்கு எதிராகவும் அவர் வாக்களித்தார். ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வந்தது. ஓ.பி.எஸ் தனக்கு செல்வாக்கு இருப்பது போல காட்டிக்கொண்டார், ஆனால் செல்வாக்கு சசிகலா-ஈ.பி.எஸ் தரப்புக்கு தான் இருந்தது. இதை புரிந்துக்கொண்டு, தேர்தலை நிறுத்த வேண்டும் என்று டில்லியில் போராடினார் ஓ.பி.எஸ். இதை பற்றி அப்போதைய மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் பேசிய வீடியோ இன்னமும் இணையத்தில் இருக்கிறது. ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. ஒரு பக்கம் எப்படியாவது கட்சியில் மீண்டும் இணைந்துவிட வேண்டும் என்று முயன்றாலும், இன்னொரு பக்கம் சசிகலா, தினகரனை சகட்டு மேனிக்கு விமர்சித்து வந்தார் ஓ.பி.எஸ். சசிகலா குடும்பத்தை நீக்கினால் தான் இணைவேன் என்றார், சசிகலாவை நீக்க முடியாது, அவரிடம் விளக்கம் கேட்க கூட முடியாத நிலையில் அவர் சிறையில் உள்ளார் என்பதை ஓ.பி.எஸ் தரப்புக்கு புரிய வைத்த பிறகு, கட்சி இணைய தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினரை மட்டும் ஒதுக்கி வைப்பதாக அன்றைக்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கு நடுவே இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாகி டில்லி சென்ற தினகரன், கட்சி ஒன்றிணைய தான் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று சொன்னாலும், அதை செய்ய தயாராக இருப்பதாக சொன்னார். ஏதோ தியாகம் செய்வது போல பேசினார். கட்சி ஒன்றிணைந்தது. ஆனால் அதன்பிறகு தினகரன் தனது ஆட்டத்தை ஆடினார். சசிகலா அம்மையாரை சந்தித்துவிட்டேன், பேசிவிட்டேன் என்று இவர் சொன்னார். பெங்களூரு புகழேந்தி இன்னொரு பக்கம், அவர் சசிகலாவை சந்திக்கவே இல்லை என்று உண்மையை உடைத்துவிட்டார். அதிமுகவில் இருந்து என்னை எப்படி நீக்கலாம் என்று சொல்லி, 18 எம்.எல்.ஏக்களை ஆட்சிக்கு எதிராக மாற்றினார் தினகரன். கடைசியில் 18 பேரையும் நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டு, தான் மட்டும் எம்.எல்.ஏவாக 2021 வரை சொகுசா வாழ்ந்தார்.
இப்படி அரசியல் செய்த ஓ.பி.எஸ் மற்றும் தினகரனுடன் தான், இன்றைக்கு செங்கோட்டையன் இணைந்திருக்கிறார். இது நால்வர் அணியா, மூவர் அணியா என்று தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக இவர்கள் எல்லாம் செல்வி.ஜெயலலிதா பாணியில், உதிர்ந்த ரோமங்கள் என்றே கணக்கிடப்படுவர். அதிமுக இல்லையெனில், இவர்களுக்கு ஏது செல்வாக்கு? எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒன்றும் அதிமுக இல்லை தான். ஆனால், அவர் தான் தலைமை என்று பெரும்பான்மையான தொண்டர்கள் ஏற்றுக்கொண்ட பிறகு, ஜானகி அம்மையார் விட்டுக்கொடுத்தது போல, விட்டுக்கொடுத்து, கட்சியை ஒன்றுப்படுத்தி, அதிமுக ஆட்சியை கொண்டுவர மனமில்லாத அதிகாரப் பேய்கள் தான் இப்போது இணைகிறார்கள் என்பதை மட்டும் மறந்துவிடக் கூடாது. இந்த அதிகாரப் பேய்களிடம் சசிகலா அம்மையார் மாட்டிக்கொண்டு இருக்கிறாரே என்பது தான் எனக்கு இருக்கும் ஒரே வருத்தம். @AmmavinVazhi@EPSTamilNadu@AIADMKOfficial