புதிய ஆட்சி அமைந்த நாளில் இருந்து ஆளுங்கட்சி நிர்வாகிகளே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து உள்ளது.
சேலத்தில் தவெக நிர்வாகி மணிகண்டன் என்பவர் பல பெண்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி, வீடியோ எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆளுங்கட்சி தவெக நிர்வாகியால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
அதேபோல், சென்னை ஆலந்தூரில் தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் பாலியல் வழக்கில் தேடப்பட்டு வருவதாகவும், இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் செய்திகள் வருகின்றன.
இன்றைய முதலமைச்சர் பதவி ஏற்கும் போது சொன்ன “எல்லாரும் நல்லா இருப்போம்” என்பது இது தானா?
தன் சொந்தக் கட்சி நிர்வாகிகளால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் போது, எப்படி நல்லா இருக்க முடியும்?
உங்கள் ஆட்சியில் குற்றம் செய்யும் உங்கள் கட்சியினர் மட்டும் தான் நன்றாக இருப்பது போல் தெரிகிறது.
தன் கட்சித் தலைவர் முதலமைச்சராக இருப்பது பற்றியோ, அவர் கையில் இருக்கும் காவல்துறை மீதோ இவர்களுக்கு எந்த பயமும் வராமல் இருப்பது ஏன்?
மேற்கூறிய வழக்குகளில் எந்த வித ஒளிவு மறைவோ, அரசியல் குறுக்கீடோ இல்லாமல் நியாயமான விசாரணை நடைபெற்று, குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்றை பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
மேகதாதுவில் அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக முதலமைச்சர் வேடிக்கை பார்க்கும் த.வெ.க. அரசுக்கு கண்டனம்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
சிவி மனமிகள் மன்ற சண்முகத்திற்கு அதிமுக மீதும், தலைமை மீதும் நம்பிக்கை இல்லை என்றால் தாராளமாக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக வில் இணையலாம்…
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 அன்று திறக்கப்படும் மேட்டூர் அணை நீர், இவ்வாண்டு இன்றைய தினம் திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் ஆளாக்கியுள்ளது.
குறுவை சாகுபடி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர்த் திறப்பை பெரிதும் நம்பி இருப்பதால், இந்த நீர் வெளியீடு என்பது மிகவும் முக்கியமானது.
ஏற்கனவே விவசாயப் பயிர்க் கடன் என்ற பெயரில் 10,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்டு இருக்கும் கடன் தொகைகளை சொன்னபடி தள்ளுபடி செய்யாமல், கடுகளவுக் கடனை மட்டும் அடைப்பதாக கூறி விவசாயிகளை ஏமாற்றி, அவர்களை போராட்டக் களத்திற்கு தள்ளிவிட்டுள்ள இன்றைய பொய்க்கால் குதிரை அரசு, தற்போது நீர்த் திறப்பு செய்யாமல், ரூ. 134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
மும்முனை மின்சாரம் ஏற்கனவே விவசாயிகளுக்கு 24 மணி நேரம் அஇஅதிமுக அரசின் அறிவிப்பின்படி வழங்கப்பட்டு வருகிறது. அதை தற்போது 18 மணி நேரமாக குறைத்து அறிவித்துள்ளது இன்றைய பொய்க்கால் குதிரை அரசு.
ஏற்கனவே அறிவிக்கப்படாத மின்வெட்டால் மாநிலம் முழுக்க மின்சாரம் இல்லாததால் பம்பு செட்டுகள் இயக்க முடியாத நிலை வேறு உள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் வலிகளை, வேதனைகளை கொஞ்சம் கூட புரியாமல் இன்றைய பொய்க்கால் குதிரை அரசு ஒரு வெற்று ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விவசாயிகள் வாழ்வாதாரம் சம்மந்தப்பட்ட விஷயமான இதன் தீவிரத்தை உணர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து கடைமடை வரை சென்றடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறோம்.
@AIADMKOfficial
Link: - https://t.co/I0RYK1ZXpk
"நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அரசியல் பேசுவார்கள் என்கிற காலம் போய்விட்டது. இளைஞர்களும் அரசியல் சார்ந்து படிக்கிறார்கள். ஒரு இயக்கத்துக்கு மூத்தவர்களின் அனுபவம் மிகவும் முக்கியம்தான். ஆனால், எந்தவொரு கட்சியாக, அமைப்பாக இருந்தாலும் புது ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும். அதற்கு, இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். தலைவர்களாக அனுபவம் மிக்கவர்கள் இருந்தால், செயலாளர்கள்போல் செயல்படும் இடத்தில் இளைஞர்கள் வர வேண்டும். அ.தி.மு.கவின் மூத்த தலைவர்களுக்கும் இளைஞர்களின் கைகளில் ஒப்படைக்க வேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. அது நடந்தால், இன்னும் வேகமாக ஓட முடியும்." - காளியம்மாள்
#Kaaliammal | #ADMK | #Vikatan
எடப்பாடியார் தனது இரும்புப்பிடியில் அதிமுகவை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, கட்சியை மிகச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
அவரது உறுதியான தலைமையும், தீர்க்கமான அரசியல் பார்வையும் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களை ஒன்றிணைத்து, அவரை இயக்கத்தின் ஒற்றைத் தலைமையாக மாற்றியுள்ளது.
சமீபகாலமாக கட்சியில் நடக்கும் மாற்றங்கள் அதிமுகவின் பலத்தை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.
சில முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறுவது அவர்களது சுயநல அரசியலை மட்டும் தான் அடையாளம் காட்டுகிறது.
இவர்கள் தங்களின் சொந்த லாபத்திற்காகவும், அதிகாரப் பசிக்காகவும், தற்போதைய டிவிகே (TVK) அரசில் பதவிகளைப் பெற வேண்டும் என்ற பேராசையினாலும் மட்டுமே கட்சி மாறியுள்ளனர்.
தன்னலமற்ற கோடிக்கணக்கான தொண்டர்களின் பலமே அதிமுகவின் உண்மையான அடித்தளம் என்பதை தமிழ்நாடு மக்கள் உணர்ந்ததால்தான் ஒரு கோடிக்கும் அதிகமான ஓட்டுக்களை அதிமுகவிற்கு அளித்தனர்.
சுயநலவாதிகள் வெளியேறுவது கட்சியை மேலும் தூய்மைப்படுத்தியுள்ளது.
புரட்சித் தமிழர் எடப்பாடியாரின் @EPSTamilNadu தலைமையின் கீழ், அதிமுக கட்டுக்கோப்புடன், முன்பிருந்ததை காட்டிலும் அதிக வீரியத்துடன் மக்களின் நலனுக்காக தொடர்ந்து வலுவாகப் போராடும்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
#ADMK#EdappadPalanisamy#News18Tamilnadu
தெலுங்கு அம்மாயி சொல்லுது,
இவுகளை யாரும் கேள்வி கேட்க கூடாதாம். கேட்டால் Cheap Politics ஆம் 😂
அரசியலின் அடிப்படையே கேள்வி கேட்பது தான். ஆட்சியில் இல்லாதப்போ நாங்க எல்லாரையும் கேள்வி கேட்போம், ஆட்சிக்கு வந்த பிறகு எங்களை யாரும் கேள்வி கேட்க கூடாது என்பதெல்லாம் முழுக்க முழுக்க பண்ணையார் Mindset👌