திமுக அதிமுக சேர்ந்து ஆட்சி அமைக்க உள்ளது என்ற வதந்தியை, அவர்களே கிளப்பி விட்டு, அதனை பேசுபொருளாக்கி அவர்களே உரையாடல் செய்யும் பொழுது...
ஸ்டாலினுக்கு ஏன்ங்க இவ்வளவு பதவி வெறி என்று மூத்த பத்திரிக்கையாளர், வன்மம் மணி, ஒரு பேட்டியில் கூறியிருப்பார்.!
(Mark my words, I may be wrong, Subject to correction என்று ஏதேதோ உளறி) எழுதி வைத்துக் கொள்ளுங்கள், திமுக பாஜகவோடு மத்தியில் கூட்டணி ஆட்சியில் பங்கெடுக்கும். அவர்களால் பதவி இல்லாமல் இருக்க முடியாது, அவர்களுக்கு அவ்வளவு பதவி வெறி என்ற வன்மத்தை கக்கியிருப்பார்.!
சற்றே சிந்தித்து பாருங்கள்...
இந்த வன்மம் மணியை ஊடகங்கள் பேட்டி காணாமல் இருந்தால், விவாதங்களுக்கு அழைக்காமல் இருந்தால், எவருமே கண்டுகொள்ளாமல் விட்டால்..,
கண்டிப்பாக பைத்தியமாகி விடுவார்.!
இவர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதால், உரையாடுவதால் அவருக்கு வேண்டுமானால் பயனுள்ளதாக இருக்கலாம்.
அதனால், இந்த நாட்டிற்கோ, மக்களுக்கோ எந்த ஒரு பலனும் கிடையாது.!
இன்றைய சூழலில் திரு. முக. ஸ்டாலின் அவரிடமும், அவரது மகன் மகளிடமும் இருக்கும் சொத்துகளை கொண்டு சுகபோக வாழ்க்கையை வாழலாம். எந்த ஒரு தொந்தரவுகளும் இருக்காது. எந்த ஒரு Pressureம் இருக்காது. கட்சிப் பணி, மக்கள் பணி என்ற தொந்தரவே இல்லாமல் அமைதியான வாழ்க்கையை தேர்ந்தெடுக்க முடியும்.!
நன்றாக செட்டில் ஆன இரண்டாம் கட்ட தலைவர்களும் அதேபோன்ற அமைதியான வாழ்க்கையை வாழ முடியும். தென்னந்தோப்பு, கயித்து கட்டில், மோட்டார் தண்ணி குளியல், அருகில் உள்ள நகரங்களுக்கு பயணம், வெளிநாடுகளுக்கு இன்பச் சுற்றுலா என்று நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும்.!
அதேபோல் அதிமுக தலைவர்களும்.
அதிகார போட்டியில் இருந்து விலகிக் கொள்கிறோம் என்று திமுக அதிமுக கூறினால்..,
ஒன்றிய அரசின் அடியாட்களான IT, ED, CBI போன்ற பூதங்கள் இவர்களுக்கு எதிராக வேலை செய்யாது.!
ஆனால், திமுக அதிமுக போன்ற கட்சிகள் பதவியில் இல்லையென்றால்...
தவெக போன்ற கொள்கையற்ற, மக்கள் நலன் பற்றிய புரிதல் இல்லாத கோமாளி கட்சிகள் நாட்டை ஆள வந்து விடும்.!
விளைவு, தமிழ்நாடு மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும்.!
மேலும், அவர்களை நம்பி வந்த கட்சி நிர்வாகிகள், அந்த இயக்கங்களின் கொள்கைகளால் வழிநடத்தப்பட்டு வந்த மாநில மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பை பற்றி சற்றே எண்ணிப் பாருங்கள்.!
அறிந்தோ அறியாமலோ தெரிந்தோ தெரியாமலோ (Knowingly or unknowingly) இதனை சுற்றிதான் இந்த ஆட்சி அதிகாரம் எல்லாமே சுழன்று கொண்டு உள்ளது.
ஒரு தனி மனிதர் அவரது தேவைக்காக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 10 ஆண்டுகளில் அவரது தேவைக்கான பணத்தை சம்பாதித்த பிறகும், அவர் பல சிரமங்களை எதிர்கொண்டு அந்த நிறுவனத்தை தொடர்வது அவருக்காக மட்டும் இல்லை. அவர் உருவாக்கிய நிறுவனம் எந்த சூழலிலும் மூடப்பட்டு விடக்கூடாது என்றும் அவரையும் அந்த நிறுவனத்தையும் நம்பி வாழும் குறைந்தது 10 பணியாளர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதாலும் தனது உயிர் உள்ளவரையில் அந்த நிறுவனத்திற்காக உழைத்துக் கொண்டே இருப்பார்.
அதேதான் அரசியல் கட்சிகளும்.
திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளின் அந்த அதிகார போராட்டம்தான் நாட்டை வழிநடத்திச் செல்லும். அதிகார வெறி இல்லையென்றால் கம்யூனிஸ கட்சிகள் போல் காணாமல் போக வேண்டியதுதான்.!
பொறுப்பில்லாமல் அதிகாரத்தை மட்டுமே சுவைக்க வேண்டும் (Power without responsibility) என்று எண்ணினால் அரசியல் கட்சியோ, தொழில் நிறுவனமோ விரைவில் காணாமல் போகும்.
அதுதான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நடந்துள்ளது.!
அரசியல் கட்சிகளிடம் அதிகார போட்டி, வெறி இல்லாமல் அரசியலிலிருந்து விலகி விட்டால், தவெக போன்ற கோமாளிகள் அதிகாரத்திற்கு வருவார்கள்.! அதிகாரிகள் போர்வையில் உள்ள ஃபாசிச கும்பல், அதிகாரத்தை தனது கையில் எடுத்துக் கொள்ளும்.!
இந்த ஆபத்துதான் இப்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது.!
எனவே வன்மம் பிடித்த மணி அவர்களே..,
தமிழ்நாட்டின் நலன் கருதி திரு. முக. ஸ்டாலினின் அதிகார வெறி தொடர வேண்டும். அவர் பாஜகவோடு கூட்டணி ஆட்சியில் பங்கு பெற்றாலும் அது தமிழ்நாட்டிற்கு நல்லதுதான்.
தமிழ்நாட்டின் நலன் கருதி..,
திமுக/ அதிமுக/ பாமக/ தேமுதிக கூட்டாக சேர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதையும் என்னைப் போன்ற தமிழர்கள் அதனை மனதார வரவேற்போம். அதில் எந்த தவறும் இல்லை. குற்ற உணர்ச்சியும் இல்லை. தமிழ்நாட்டின் நலனே முக்கியம்.
எனது suggestion...
திமுக 59 + அதிமுக 41 + பாமக 4 + தேமுதிக 1 + (7 தேர்தல் நடத்தப்பட வேண்டிய இடங்கள்) இதனை வைத்து ஆட்சியை மீட்டெடுக்க முயற்சிப்பது தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லது.
மீண்டும் மீண்டும் சொல்றேன்
கலைஞர் வாழ்வார்
கலைஞர் வாழ்ந்து கொண்டே இருப்பார்
இதை கேட்கும்போது எப்படி சிலிர்க்குதோ அதே போல் 80 வருடம் கழித்தாலும் அன்றும் ஒரு நன்றி உள்ளவன் இருப்பான்
அவன் தூக்கி பிடிப்பான்டா கலைஞரை இன்றும்
தாய் தமிழுக்கும்
கலைஞர்க்கும் சாவே கிடையாதுடா
திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம்.
ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது.
அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, "இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்" என்று எழுதப்பட்டிருக்கிறது!
#KalaignarForever
ராஜ்மோகன், புஸ்ஸி ஆனந்த், RSS நிர்மல் குமார் அப்றம் வண்ணி அண்ணா சொன்ன “பைந்தாகங்கோலி ஓடுகாலி கோழை” முன்னாடி நீங்க போய் ஒக்காருவீங்கடா.?
மானமுள்ள திமுக காரன் ஏண்டா போய் ஒக்காரணும்.🤧
பழனி அருகே மற்றொரு கோவில் நிலம் மோசடி 2கோடி நிலத்தை தனி நபருக்கு பத்திர பதிவு செய்து கொடுத்த அதே சார் பதிவாளர் ஜஸ்டிஸ் மணிகண்டன்.
தொடர்ந்து கோவில் நிலத்தை ஆட்டைய போடும் தனிநபர்கள்... யாருடைய உதவியால் இவ்வளவு தைரியமாக கோவில் நிலத்தை விற்று கொண்டு இருக்கின்றனர் 😡
இந்தியாவில் வேறெந்த அரசியல் கட்சிகளை விடவும் திமுகவிற்கு எதிராக அவதூறு பரப்புவதும், பொய்களை பரப்புவுதும் எளிதானது. இதற்கு திமுக எடுக்கும் எந்த defensive mechanism மும் பெரிதாக எடுபடுவதில்லை. ஏனெனில் இதைப் பரப்புபவர்கள் தெரிந்தே செய்யும் மானமற்றவர்கள், அயோக்கியர்கள்.
ஓரளவு வேலை செய்யும் ஒரே ஒரு கருவி நீதிமன்றம் மட்டும்தான். அதற்குள் பரப்பிவிடப்பட்ட அந்தப் பொய் நீக்கமற நிறைந்து வரலாறு முழுக்க கழகத்தின் தாலியறுக்கும். கட்டை வேகும் வரை இதற்கு பதில் சொல்லியே சாக வேண்டியதுதான்.
Delimitation குறித்த விவாதம் நாடெங்கும் எழுந்த நொடியே திமுக சொன்னது ‘Fair Delimitation’ தான். தமிழ்நாட்டின் பிரதிநித்துவ விகிதாச்சாரம் குறையாமல் இருக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் ஒரே நிலைப்பாடும். இதில் கழகத்திற்கு எந்தக் குழப்பமும் இல்லை. ‘No delimitation’ என்ற அரசியல் ஞானசூனியங்களின் வாதம், வலதுசாரிகளின், தெற்கை powerless ஆக மாற்றும் சூழ்ச்சிக்குத்தான் வலுசேர்க்கும்.
மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம் என்று பெரியார் சொன்னது இதைத்தான்.
முந்தாநாள் நடந்ததுக்கே திமுக இன்று தீக்குளித்து நிரூபிக்க வேண்டியுள்ளது. 70 வருடங்களாக தீக்குழியிலேயே இருப்பதால்தான் சூரியனாகிவிட்டது போல திராவிட முன்னேற்றக் கழகம்!🤧
உண்மையில் கலைஞர் அப்படி சொன்னாரா?
இல்லை.
அவர் பொது வெளியில் அப்படி பேசி இருந்தால் அவர் பேசிய அந்த விஷயம் தமிழ்நாட்டில் உள்ள எல்லா நாளேடுகளில் வந்து இருக்கும் தலைப்பு செய்தியாக. அப்படி எதுவும் வரவில்லை.
அவர் சட்டமன்றத்தில் அப்படி பேசினார் என்று சொல்வோருக்கு ஒரு சம்பவம் ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
27/2/2008 நாள் வெளியான குமுதம் வார இதழுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு பேட்டியில் #பாவாடை_நாடா பொய்யை தெரிந்தோ தெரியாமலோ சொல்லி விடுகிறார்.
அதற்கு எதிராக இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் கழக மூத்த வழக்கறிஞர், தலைவர் கலைஞர் அவர்களால் "இவர் Wilson அல்ல Winson" என்று அவருடைய வழக்கு வெற்றிகளுக்காக போற்ற பட்ட அண்ணன் வில்சன் அவர்கள் ஒரு சட்ட நோட்டீசு விடுகிறார்.
அதன் சாராம்சம் என்னவென்றால்..
தலைவர் கலைஞர் சொல்லாத ஒன்றை சொன்னதாக பதிவிட்ட #குமுதம்_ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் #ராமச்சந்திரன் மற்றும் #செல்வரங்கம் ஆகிய இருவரும், மற்றும் பேட்டி அளித்த விஜயகாந்து இரண்டு நாட்களுக்குள் அப்படி நான் சொல்லி இருந்தால் அதற்கு ஆதாரம் கொடுக்கவேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
சட்ட பிரிவுகள் IPC 499, 500, 501 மற்றும் 502.
குமுதம் தான் விஜயகாந்த் சொன்னதை அப்படியே பதிவிட்டு விட்டோம் என்று வருத்தம் தெரிவித்து நகர்ந்து கொண்டது. காரணம் அவர்களுக்கு தெரியும் அப்படி ஒன்று நடக்கவில்லை என்று.
விஜயகாந்த் சட்டமன்ற குறிப்புகளை தேடும் முயற்சியில் இறங்கினார். காரணம். அப்படி ஒரு விவாதம் நடந்திருந்தால் அது அவைக்குறிப்பில் இருக்கும். அப்படியே அவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு இருந்தால். இந்த உறுப்பினர் இப்படி பேசினார் அது அவையின் மாண்பிற்கு எதிரானது என்ற குறிப்புடன். இது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது என்று ஒரு குறிப்பு உடன் அது அவைக்குறிப்பில் இருக்கும். தேடிய விஜயகாந்திற்கு அவைக்குறிப்பில் பேசியதாகவோ, பேசிய பின்பு குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாகவோ எதுவுமே கிடைக்கவில்லை.
அதன் பின் விஜயகாந்த் தான் கலைஞர் மீது அதீத மரியாதை வைத்திருப்பதாகவும், தன்னை விஜி என்று முதன்முதலில் அழைத்தவர் அவர் தான் என்றும் கூறி மன்னிப்பும் கோரினார்.
உண்மையில் விஜயகாந்த் தலைவர் கலைஞர் மீது மிகப்பெரிய பாசமும் மரியாதையும் வைத்து இருந்தார்.
இதை நான் இங்க பதிவிட காரணம் தலைவர் கலைஞர் மீது எப்போதும் இதுபோல பல வதந்திகள் வந்துகொண்டே இருக்கும்.
நன்றி @pudugaiabdulla 🙏
#கலைஞர்_103
‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever