லெமன் ரைஸுக்கு மஞ்சள் கலர் எலுமிச்சையிலிருந்து வரவில்லை என்பதை உணரும் போது, நீ பேச்சுலர் ஆகி சமைத்து பழகுகிறாய் என்று பொருள்.
தக்காளி சாதத்திற்கு சிவப்பு கலர் தக்காளியிலிருந்து தான் வந்தது என்பதை உணரும் போது, திருமணம் ஆகி வீட்டில் மூன்று நேரமும் நீதான் சமைக்கிறாய் என்று பொருள்..
ஆடு திருடுனவனுக்கு அரசு வக்கீல் வேலை தந்திருக்கீங்க...
... நான் நல்லா கோழி திருடுவேன்..
கோர்ட் கிளார்க் வேலை தருவீங்களானு... ஒருத்தன் நக்கல் பண்றான் பாஸ்
ஒரு வேலை ..
இந்த திமுக மட்டும் ..
பாஜகவிடம் கைக்கோர்த்தால் ..
இந்த லாட்டரி சீட்டு #ஆதவ்_அர்ஜூனாவின் நிலைமை என்னவாகும் என்று ...
யோசித்து இருக்கிறார் ..
முருகனை யாரும் வழிபடலாம் — அது தடுக்கப்படவில்லை, தடுக்கவும் முடியாது. ஆனால் ஒரு கேள்வி: எந்த மொழி அவனை "தமிழ்க் கடவுள்" என்று நெஞ்சில் சுமந்தது? எந்த இலக்கியம் அவனை மையமாக்கி ஒரு முழு நூலையே படைத்தது? பதில் ஒன்றுதான் — தமிழ். வழிபாடு பலருக்கும்; அடையாளம் தமிழுக்கு மட்டும்.
தினமும் ஒரு அதிமுக எம்எல்ஏ ராஜினாமா பண்ணிட்டு தவெகல இணையுறான், அதை சகஜமாகதான் எடுத்துக்குது பொதுஜனம்.. ஆனா தவெக எம்எல்ஏவை விலை பேசினர்னு ஒரு புரளியை கிளப்பி 5 பேரை கைது பண்ணி களத்தை தங்களுக்கு சாதகமாக வச்சிக்குறானுக..திமுக கூட்டணியையே களீபரம் பண்ணி புது கூட்டணி அமைக்குறானுக, அதை விடுத்து ஸ்டாலினோட பேச்சை பேசுப்பொருள் ஆக்குறானுக.. பொதுஜனமும் அதைதான் பேசுது.. ஓபனாக போதைப்பொருள் யூஸ் பண்ணிருக்கான் அமைச்சர் அதையும் எவனும் கண்டுக்கல..ஸோ இவர்களுக்கு இப்ப இதுதான் தேவை, இவர்களுடைய ஆட்சியைதான் விரும்புகின்றனர்.. போடுற எபோர்ட் பூரா வீண்தான்.. நாலரை வருசம் கம்னு இருந்து கடைசியாக களமிறங்கி ஜெயிக்கலாம்னா நாம ஜெ இல்ல.. சரி இப்பவே குரல் கொடுப்போம்னா எதுனா பண்ணி அதுக்கு எபக்ட் இல்லாம பண்ணிடுறானுக.. டெலிகேட் பொசிசன் ட்டூ டிஎம்கே… வாட் ட்டூ டூ
அமமுக MLA வை நேரடியா தவெக தூக்குனப்ப அது தவறா தெரியல,
அதிமுக MLA க்கள் ரிசைன் பண்ணிட்டு தவெகக்கு வந்தப்ப ஒரு விமர்சனமும் எழல,
குதிரைப்பேரத்தை மறைமுகமா வைகோ தெரிவிச்சப்ப எந்த மீடியாவும் அதை ஆராயல,
2016ல 89 MLA வை வச்சிருந்தும் குறுக்குவழில எதுவும் செய்யாத திமுக, இப்போ 59 MLA வை வச்சு குறுக்குவழில ஆட்சியை பிடிக்க முயற்சி செய்யுதாம்.
அதை நாம நம்பணுமாம்..
தோழமை கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்..
~ மன்னா.. மா..மன்னா
நீ ஒரு மாமாமன்னா..
பூமாரி தேன்மாரி நான்
பொழியும் நீ ஒரு மொள்ளமாரி
அரசியலில்
நீ தெள்ளியதோர் முடிச்சவிக்கி
இந்த அகிலத்தை அடைகாக்கும் அண்டங்காக்கயே..😉
சிலருக்கு நாம அமைதியா தெரிவோம்.
சிலருக்கு திமிரா தெரிவோம்.
சிலருக்கு நாம அறிவாளியா தெரிவோம்.
சிலருக்கு முட்டாளாய் தெரிவோம்.
ஒவ்வொருத்தருக்கும் தகுந்த மாதிரி நாம மாறிட்டு இருக்க முடியாது.
Be Yourself! 😎🫰❣️
எம்ஜிஆரை புதைச்சி 39 வருஷம் ஆகியும் இன்னும் அவர் கையில் கட்டி இருந்த வாட்ச் ஓடுதானு காது வச்சி கேக்கற அதிமுக தொண்டன் இருக்கிற வரைக்கும் நீங்க தாண்ணே இந்த நாட்டுக்கு முதலமைச்சர்..!
ஒரு மனிதனின் வெற்றி மட்டுமே உலகின் கண்களுக்கு தெரியும்
ஆனால் அந்த வெற்றியை அடைய அவன் பட்ட கஷ்டம் நஷ்டம் வேதனை வலி துன்பம் துயரம் எதுவுமே வெளியுலகத்துக்கு தெரியாது..!
~ எனக்கு ஒரு சந்தேகம்
: 1 டன் எடையுள்ள அவ்வளவு பெரிய யானைக்கே 🐘 வெறும் 4 கால்தான்,
1 கிராம் கூட இல்லாத இந்த சிலந்திக்கு 🕷️ மட்டும் எதுக்கு 8 கால்..
இதான் புரியல எனக்கு 🚶🏻😒