என் உலகம் அழகாகும்
என்னோடு நீ இருந்தால்
என் மனதில் பூ பூக்கும்
என் மடியில் நீ அமர்ந்தால்
என் விழிகள் கவி வடிக்கும்
என் தோளில் நீ சாய்ந்தால்… ❤️
- பாலா தமிழ் கடவுள்
💕..
சிலர் மேல்
வைக்கும்
#அன்பு
விசித்திரமானது
அதற்கு பெயர் இல்லை.
விளக்கம் இல்லை..
ஆனால்
மனசுக்குள் மட்டும் அவர்களுக்கென
தனி இடம் இருக்கும்
ஏனென்று கேட்டால்
பதில் இருக்காது...
அது அன்பு
அவ்வளவுதான்.... 💜
அவள் ஒரு #பௌர்ணமி.
என் பயணம் தொடர்கிறது.. 💜
❤️💜❤️