மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் 'UmagineTN 2024' மாநாட்டை துவக்கி வைத்து சிறப்பித்தமைக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாவேன். தலைவர் அவர்களின் பாராட்டும், அவர் அளித்து வரும் அசைக்க முடியாத ஆதரவும் எனது பொது வாழ்வு முழுவதும் மிகுந்த உத்வேகத்தை அளித்து வருகிறது . உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் மனித வளத்திற்கான முன்னணி மையமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்கிற முதலமைச்சரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க ��தவும் மாற்றங்களைச் செயல்படுத்த எங்களது தகவல் தொழில்நுட்பத் துறை அயராது பாடுபடும்.
நாடும் நமதே, நாற்பதும் நமதே என்ற இலக்கோடு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான கழகப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதன் ஒருபகுதியாக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டங்கள் மக்களவைத் தொகுதி வாரியாக தொடர்ந்து நடைபெற்றுவருக��ன்றன. இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற #கரூர் மக்களவைத் தொகுதி கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இன்று (05-02-2024) கலந்து கொண்டேன்.
இக்கூட்டத்தில் தொகுதியின் களநிலவரம், மக்களின் மனநிலை, கழக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லுதல், நிர்வாகிகளை ஒருங்கிணைத்தல், தேர்தல் முன்னேற்பாடு பணிகள், பாக முகவர்களின் பணிகள் உள்ளிட்டவை குறித்து விரிவாகக் கேட்டறிந்தோம். மேலும் கரூர் தொகுதியின் வெற்றிக்காக இரவு பகல் பாராது அயராது உழ��க்கவும் நிர்வாகிகளிடம் வலியுறுத்தினோம்.
இக்கூட்டத்தில் கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் மாண்புமிகு அமைச்சர்கள் @Udhaystalin, @evvelu, @TThenarasu மற்றும் கழக அமைப்புச் செயலாளர் @RSBharathiDMK ஆகியோருடன் மாண்புமிகு அமைச்சர்கள் @Anbil_Mahesh, @IPeriyasamymla, @r_sakkarapani, @regupathymla, மாவட்டச் செயலாளர்கள், தொகுதி மேலிடப் பார்வையாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
#DMK | #MKStalin | #INDIA | #LokSabhaElection2024| #Karur
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் முன்னிலையில், சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமான ஹபக் லாய்டு (Hapag-Lloyd) நிறுவனம் ரூ. 2500 கோடி முதலீட்டில் தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்த���் மேற்கொண்டது.
@TRBRajaa
#CMStalinInSpain
தமிழ்நாடு பேரிடரை சந்தித்த போதெல்லாம் தேவையான நிவாரண நிதியை அளிக்காமல் ஏமாற்றி வந்துள்ளது ஒன்றிய பாஜக அரசு.
ஒரே நாடு என்பது வெறும் வார்த்தையில் மட்டும் தானா பிரதமரே?
#OurTax_OurRights
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையினால் பாதிக்கப்பட்ட திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பெஞ்சமின் காலனி பகுதியில், மாண்புமிகு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஆகியோருடன் இணைந்து வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினோம்.
#களத்தில்_திமுக | #DMK | #MKStalin | #KNNehru | #SouthTNRains
மகத்தான அரசின் முதன்மையான திட்டம்.!
அரசை தேடி மக்கள் சென்ற காலம் மாறி, மக்களை தேடி முதல்வரின் அரசு செல்கின்ற காலம் இது.!
#மக்களுடன்_முதல்வர் எனும் உன்னத திட்டத்தை அறிமுகப்படுத்தினார், நம் முதல்வர் @mkstalin அவர்கள்.!