அன்பார்ந்த விடுதலைச் சிறுத்தைகள் நண்பர்களே அண்ணன்களே.. நம் கட்சி தலைமைகள் ட்விட்டரில் பதிவிடும் செய்தி ட்வீட் டை (tweet) நாம் அனைவரும் retweet and likes செய்து நம் ஆதரவை பெருக்கி தரவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்கிறேன்.
நன்றி
"ஐயுஎம்எல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவுடன் இணைந்து பயணித்தது.. ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிலைமை முற்றிலும் மாறிவிட்டது... ஐயுஎம்எல், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் எடுத்த முடிவை திமுக இப்போது கடுமையாக விமர்சித்து வருகிறது.. இது இயல்பானதே.."
உள்ளாட்சி தேர்தல் குறித்து த.வெ.க மற்றும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.. ஆலோசனைக்கு பின்னரே முடிவு தெரியவரும்.. - விசிக தலைவர் திருமாவளவன்
#Ranipet | #VCK | #Thirumavalavan | #Politics | #PolimerNews
“அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று சொன்னது தவெகவை மிரட்டுவதற்காக அல்ல.. அது எங்களுக்கான சுதந்திரம் என்பதை உறுதிப்படுத்துவதற்காக..” – விசிக தலைவர் திருமாவளவன்
#Thirumavalavan | #VCK | #Minister | #TVK | #CMVijay
திருவண்ணாமலை மாவட்டம் - அய்யம்பாளையம் அஞ்சல், புதூர் கிராமத்தில் குடுகுடுப்பை தொழிலில் ஈடுபட்டு வரும் சுமார் 130க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்களை இன்று (21.06.26) மாலை அவர்களது கிராமத்தில் சந்தித்தோம்.
ஆதார் அட்டை, ரேஷன் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை கொண்டிருக்கும் மக்கள், தங்களுக்கு இன்னமும் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என்றும், இதனால் இளம் தலைமுறையினர் உயர் கல்வி கற்பதற்கு பெரும் தடையாக உள்ளதாகவும் முறையிட்டனர். மற்ற மாவட்டங்களில் தங்கள் சமூகத்திற்கு வழங்கப்படும் பழங்குடியினர் பட்டியலில் (ST) உள்ள கணிக்கர் என்று சான்றிதழ் வழங்கும்படி கோரிக்கை வைத்தனர். மேலும் தங்கள் பகுதிக்கு சமூக நலக்கூடம் வேண்டும் என்றனர். மக்களின் கோரிக்கைகளை துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தேன்.
வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற காட்பாடி சட்டமன்ற தொகுதி விசிக செய்தி தொடர்பாளர் தம்பி அஜித் செல்வராஜ் அவர்களின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.
வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற காட்பாடி சட்டமன்ற தொகுதி விசிக செய்தி தொடர்பாளர் தம்பி அஜித் செல்வராஜ் அவர்களின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.
ஜூன் 18, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொருளாளராகப் பணியாற்றிய தம்பி மதுரை- முடக்காத்தான் பாண்டியன் அவர்களின் நினைவுநாளில் அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கம்.
துணிவும் துடிப்பும் மிக்க போராளி
தம்பி பாண்டியனின் களப்பணிகள் என்றென்றும் நினைவில் நிற்கும் மிகப்பெரும் பங்களிப்பாகும்.
அவரை நினைவுகூர்ந்து அவருக்கு வீரவணக்கம் செலுத்துவதோடு அவர் விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுப்போம்!
- தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர்,
விசிக
நாடெங்கும் பேசப்படும் இளம் அமைச்சரின் துடிப்பான மக்கள் நலப்பணியை நேரில் கண்டேன்.
அவருக்கு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலையை வழங்கி வாழ்த்தினேன். 😍
@RameshOffcl
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உடனான நேற்றைய (16.06.26) சந்திப்பின் போது, திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 65 ஈழத்தமிழர்களின் விடுதலை கோரிக்கையினை முன்வைத்தேன்.
ஈழத்தமிழர்கள் சிறுவழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டாலோ, பிணையில் விடுவிக்கப்படாமல் சிறையிலிருந்து வழக்கை நடத்தி நிரபராதி என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டாலோ அல்லது ஒரு குற்ற வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தண்டனைக்காலம் முடிந்து சிறையிலிருந்து வெளிவரும் பொழுதோ மீண்டும் கைது செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- தங்களை அகதிகளாகப் பதிவு செய்து கொண்ட ஈழத்தமிழர்கள் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
- அகதிப்பதிவு ரத்தானவர்களுக்கும், அகதிப்பதிவு இல்லாதவர்களுக்கும், புதிய பதிவுகள் வழங்கப்பட்டு சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்க வேண்டும்
- திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளி பாஸ்கரன் த/பெ. குமாரசாமி என்பவருக்கு எதிரான நாடுகடத்தல் உத்தரவு திரும்பப்பெறப்பட்டு, அவர் விரும்பும் நாட்டிற்கு செல்வதற்கு ஆவன செய்ய வேண்டும்
- அண்மைக்காலங்களில் ஈழத்தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட கடவுச்சீட்டு வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு அவர்களுக்கு அகதிப்பதிவுகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை சமர்ப்பித்தேன்.
குறிப்பாக, ஒன்றிய அரசின் 01.09.2025 தேதியிட்ட Immigration and Foreigners (Exemption) Order, 2025 - (2)படி, ஜனவரி 9, 2015 முன்னர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஈழத்தமிழர்களுக்கு, Immigration and Foreigners Act. 2025 பொருந்தாது என்றும், அவர்களுக்கு அதிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், சிறப்பு முகாமில் உள்ள 15 நபர்கள் உடனடியாக விடுதலை செய்வதற்கு தகுதி பெற்றுள்ளார்கள் என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். எமது கோரிக்கையினை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உறுதி அளித்தார்.
@CMOTamilnadu
பழங்குடியின இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறை மற்றும் கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு சாலைப் போக்குவரத்து நிறுவனம் (IRT) இணைந்து 'தொல்குடி தொடுவானம்' திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 16 பழங்குடியின இளைஞர்களுக்கு "கனரக மோட்டார் வாகன" (Heavy Motor Vehicle. HMV) ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுநர் உரிமத்துடன் பொது வில்லை (PSV Badge) வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சியின் வெற்றியாக கலந்துகொண்ட 16 பயிற்சியாளர்களும் பயிற்சி முடித்தவுடனேயே 100 விழுக்காடு (100%) நேரடி வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (MTC) மின்சாரப் பேருந்து (e-bus) பிரிவிலும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டப் போக்குவரத்துப் பணிமனைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இப்பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கான சான்றிதழை, நேற்று (17.06.2026) சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கி வாழ்த்தினோம். இந்நிகழ்வில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் திரு. கே. சுப்பையன், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் திரு.ச. அண்ணாதுரை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உடனான நேற்றைய (16.06.26) சந்திப்பின் போது, இசுலாமிய ஆயுள் சிறைவாசிகள் 22 பேரின் விடுப்பு மற்றும் முன்விடுதலை கோரிக்கையினை முன்வைத்தேன்.
தமிழ்நாடு அரசின் விடுப்பு விதிகள் [G.O. Ms. No.82 - Home (Prison-V) - Framing of Tamil Nadu Prisons - Release on Furlough Rules, 2026] மற்றும் தமிழ்நாடு தண்டனை தள்ளிவைப்பு விதிகள் 1982, விதி எண். 40-ன்படியும், 'சிறைவாசிகளின் தண்டனைக் குறைப்பு மற்றும் முன்விடுதலை விவகாரத்தில், அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் அவர்கள் கட்டுப்பட வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றம் 02.04.2026 அன்று அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், இசுலாமிய சிறைவாசிகளின் விடுப்பு மற்றும் முன்விடுதலை கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்தேன்.
ஜூன் 17 - ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு கல்வியே பிரதானமானது என்று சொல்லி தொலைநோக்கு திட்டங்களை கொண்டு வந்த தலைவர் எம்.சி.ராஜா அவர்களின் பிறந்தநாள் இன்று..
ஒடுக்கப்பட்ட மக்கள் கோரிக்கை மனுக்களை வழங்குவது மட்டுமல்ல, ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து மக்கள் நல திட்டங்களை தாமே முன்னெடுப்பார்கள் என்று நூறாண்டுகளுக்கு முன்னரே செயல்படுத்தி காட்டியவர் தலைவர் எம்.சி.ராஜா!
மாஞ்சோலை மக்கள் வாழ்வுரிமை மீட்பு குழுவினர் நேற்று (17.06.26) தலைமை செயலகத்தில் சந்தித்து, மாஞ்சோலை மக்களின் மறுவாழ்வு குறித்த கோரிக்கைகளை முன்வைத்து உரையாடினர்.
இச்சந்திப்பில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் திருமதி. அமுதா, திருமதி. ஸ்டெல்லா, திரு. ஸ்டாலின், திரு. ஜான்சன் சாந்தகுமார், திரு. விமல், திரு. சாமுவேல் அற்புதராஜ், வழக்கறிஞர் ராபர்ட் சந்திர குமார், வழக்கறிஞர் C.J.ராஜன், மக்கள் கண்காணிப்பகத்தின் தோழர் இ.ஆசிர்வாதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் உறுதி அளித்தேன்.
விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டம் இன்று நடைபெற்றது. சூம் இணையவழியிலும் இக்கூட்டம் இணைக்கப்பெற்று மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தமிழகம் தழுவிய அளவில் பங்கேற்றார்கள்.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு குறித்து உரையாற்றினேன். நாடாளுமன்ற உறுப்பினர் விசிக பொதுச் செயலாளர் தோழர் இரவிக்குமார் அவர்கள் இக்கூட்டத்தை ஒருங்கிணைத்திருந்தார்.
மனம் பதறுகிறது!
சமீப காலமாக தமிழகத்தில் அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வேதனை அளிக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட மூன்று வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சொல்லொணாத் துயத்திற்கு ஆளாக்கி இருப்பதோடு இது, இச்சமூகம் பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கான அச்சுறுத்தலாகவும் இருப்பது பெரும் கவலையளிக்கிறது.
தேசிய குற்றவியல் ஆவணக் காப்பக அறிக்கையின்படி இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் 8.7 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கிறது. தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துவருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. தமிழக அரசின் சமீபத்திய தரவுகள் 69 சதவீத குழந்தைகள் உடல்ரீதியான பாதிப்பிற்கு உள்ளாகுகின்றனர் என்றும், அதில் 48.7 சதவீதம் குடும்ப உறுப்பினர்களாலும், 34 சதவீதம் பிறராலும் நிகழ்த்தப்படுவதாகச் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும், இந்தியாவில் 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் 96 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக 'Child Rights and You' அமைப்பு சுட்டிக்காட்டி இருக்கிறது. போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சமாகப் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் நிலையில், காவல்துறையின் மெத்தனமான விசாரணை, குற்றவாளிகளுக்கு எளிதில் பிணை கிடைப்பது மற்றும் வழக்குகளின் நீண்டகால தாமதம் போன்றவை தொடர் குற்றங்கள் நிகழ்வதற்கு வழிவகுக்கின்றன. எனவே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியை உறுதி செய்யவும்,
தவெக @TVKVijayHQ
தலைமையிலான தமிழக அரசு @CMOTamilnadu உடனடியாகக் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
1.பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதற்கான சமூகக் காரணிகளைக் கண்டறிய, இத்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் சமூகச் செயற்பாட்டாளர்கள், உளவியல் நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர்களை ஒருங்கிணைத்து ஒரு சிறப்பு ஆய்வுக் குழுவை அமைக்க வேண்டும். அக்குழு அளிக்கும் பரிந்துரைகளைக் காலக்கெடுவுடன் நடைமுறைப்படுத்த தமிழக அரசு உறுதியளிக்க வேண்டும்.
2.‘சிங்கப்பெண்’ திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டவர்களின் அதிகார வரம்பு மற்றும் செயல்பாட்டு பொறுப்புகள் குறித்து அண்மையில் எழுந்துள்ள குழப்பங்களுக்கு அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். அதோடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கையாள ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்புப் பயிற்சி பெற்ற பெண் காவலர்களின் எண்ணிக்கையைக் கணிசமாக உயர்த்த வேண்டும்.
3.பெண்கள் &குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்ப்பு வழங்கும் நடைமுறையை உறுதி செய்ய வேண்டும்.
4. குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான பாதுகாப்பான இணையப் பயன்பாடு, இணைய வழி பாலியல் சுரண்டல், இணைய மிரட்டல் போன்றவற்றைத் தடுக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தொடர்ச்சியான விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.
5.பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைகள் மீண்டும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படாமல், குழந்தை நட்பு விசாரணை மையங்கள் (Child-Friendly Investigation Centres) மாவட்டந்தோறும் அமைக்கப்பட வேண்டும்.
6.பாலியல் வன்முறைகளைத் தடுக்க பள்ளி நிலை முதலே "மரியாதையான உறவுகள்" (Respectful Relationships), சமத்துவம், சம்மதம் (Consent), பாலின மரியாதை மற்றும் வன்முறையற்ற உறவுகள் குறித்த கல்வியைப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்த வேண்டும். ஆஸ்திரேலியாவில் இதற்காக செயல்படுத்தப்படும் Respectful Relationships Education போன்ற திட்டங்கள் பள்ளி சூழலில் பாலின மரியாதை மற்றும் வன்முறைத் தடுப்பு கல்வியை வலுப்படுத்துகின்றன.
கல்வி, சமூக மாற்றம், தொழில்நுட்ப கண்காணிப்பு, மனநல ஆதரவு, விரைவு நீதி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனித கண்ணியத்துடன் மறுவாழ்வு வழங்கும் ஒருங்கிணைந்த அரசுக் கொள்கை அவசியம். உலகின் பல நாடுகள் குற்றத்திற்குப் பிந்தைய தண்டனையை மட்டுமல்ல, குற்றம் நடைபெறாத சூழலை உருவாக்குவதிலேயே அதிக கவனம் செலுத்தி வெற்றி கண்டுள்ளன. தமிழக அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது.
@Neelam_Culture