How obsessed are you with cinema??
Me: show poda 7 ticket venum nu sonnan ellathayum vaangi seated for a private screening😭😭
Now watching: #Balantheboy
Director & Actor #PradeepRanganathan's New Start as a Producer
- The Film has Titled as #AaneWalaStar and Music by Sai Abhyankkar
A Promo is Coming....
Dholu bholu
சிறந்த இயக்குநர் - ராம் (பறந்து போ)
ரயிலில், எதிர்சாரியில் அமர்ந்து நம் பயணக் களைப்பு போக, கதை சொல்லும் பெயரற்ற வழிப்போக்கனாய் ‘பறந்து போ’வில் அவதரித்தார் ராம்.
பொருளாதார அழுத்தங்களில் சிக்கி உளையும் அப்பாக்களை அம்புலி மாமாக்களாக மாற்றி இவர் வேடிக்கையாய் கதை பகிர்ந்த விதத்தில், மூத்தவர்களும் கைதட்டி ரசித்தார்கள்.
தாத்தாக்களும் பாட்டிகளும் தொலைந்துபோய்விட்ட தனிக்குடித்தன வாழ்க்கையில், குழந்தைகளின் புவியீர்ப்பு மையமாய் பெற்றவர்கள் மட்டுமே இருப்பதையும், அவ்விசை அறுபடும்போது சின்னஞ்சிறு மனதில் எத்தகைய உளவியல் தாக்கம் ஏற்படுகிறது என்பதையும் பெற்றோரிய கல்வித் திட்டமாக இவர் வகுக்க, அதைக் கற்றுத் தேர்ந்தார்கள் நடுத்தர வயதினர்.
அன்பைக்கூட அழுதே வெளிக்காட்டத் தெரிந்த வாண்டுகளின் வழக்கறிஞராக, ‘பகட்டான பொம்மைகள் தேவையில்லை, தந்தைகளின் பிரத்யேக மணத்தை சட்டைப்பிடியில் முகர்ந்தபடி செல்லும் குட்டி பைக் சவாரியே போதும் மழலைகள் உலகை வென்றதாக உணர’ என இவர் முறையிட, திரையரங்க இருட்டில் பிஞ்சுக்கைகளைத் தேடிப்பிடித்து ஈரம் கசியும் கண்களில் ஒத்திக்கொண்டன முதிர்ந்த கரங்கள்.
வளர்ந்த மகன்களுக்கும், தகப்பன்மார்களுக்கும் இடையில் இயல்பாகவே காலம் ஏற்படுத்திவிடும் இடைவெளியை நிரப்பியது, ‘‘எனக்கு புரியுற மாதிரி நீ பேசுனதே இல்லை’’ என்கிற இவரின் ஒற்றை வசனம்.
கோகுலும் வனிதாவும் பரிமாறிக்கொள்ளாத காதல், சபலமில்லாத நட்போவியமாக மாறியது ராம் ஸ்பெஷல்!
குழந்தைகள் படங்களுக்கு தமிழ்ச் சூழலில் சந்தை இல்லை என்கிற நிலையை மாற்றி, 'சொல்லும்படிச் சொன்னால் சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைக்கும்’ என்று சாலை போட்டுக்கொடுத்த ராம், பேரன்பின் ஊற்று.
#VikatanAwards | #VikatanCinemaAwards2025 | #Ram | #ParandhuPo | #BestDirector
சிறந்த நடிகை - மமிதா பைஜு (டியூட்)
கோபத்தில் தகிக்கும் வெயில், ஆற்றாமையில் பொங்கி அழும் மழை, காதலோடு அரவணைக்கும் குளிர் என நமக்குள் பருவநிலை மாற்றங்களைப் பிறக்கச் செய்துகொண்டேயிருந்தார் மமிதா பைஜு.
கொஞ்சம் பிசகினாலும் மிக மோசமாகச் சித்திரிக்கப்பட்டுவிடக்கூடிய கூர்மையான கதாபாத்திரம் ‘டியூட்’ படத்தில் அவருக்கு.
அதைத் தன் இரண்டாவது தமிழ்ப் படத்திலேயே அளவு கடந்த பக்குவத்தோடு கையாண்டு, ‘கலைக்கு முனைப்பு மட்டுமே முதலீடு’ என நிறுவினார்.
நாயகத் துதி பாடுபவர்கள், புனிதப்படுத்தப் பட்ட சூப்பர்வுமன்கள் என இருமுனைக் கதாநாயகிகளையே பார்த்துச் சலித்த பெண்களுக்கு, தங்களைப் போன்ற அத்தனை ஆசாபாசங்களோடும் திரையில் நிகழ்ந்த குறளின் வருகை பரவசமான புத்தெழுச்சி.
‘‘கடைசியா கேக்குறேன்… இது பிராங்க் இல்லைல்ல?’’ என நப்பாசையாய் குறள் வினவும் இடத்தில் காதலே வேண்டாம் என வெறுக்கும் தேவதாஸ்களுக்கும் காதல் பூத்திருக்கும்.
ஒருபக்கம் தான் விரும்பும் பாரி, மறுபக்கம் எதிர்பார்ப்பில்லாமல் தனக்காக உலகத்தோடு போரிடும் அகன்… மூளைக்கும் இதயத்துக்கும் இடைப்பட்ட இந்தப் போராட்டத்தில் இருதலைக்கொள்ளியாய் குறள் தவித்த போது முன்தீர்மானங்களெல்லாம் உடைந்து, இம்மியளவு தயக்கமும் இன்றி அவர் தோளோடு தோள் நின்று ஆதரவு கொடுத்தார்கள் பார்வையாளர்கள்.
முற்போக்கு என்றாலே முகம் சுளிக்கும் பொதுச் சமூகம், குறள் தரப்பு நியாயத்தையும் பரிசீலிக்கத் தொடங்கியதே மமிதாவின் திறமைக்குக் கிடைத்த வெகுமதி.
பத்தாயிரம் வாலா எனர்ஜியோடு திரையில் மின்னும் மமிதா, தமிழ்க் குடும்பங்களின் டார்லிங்!
#VikatanAwards | #VikatanCinemaAwards2025 | #MamithaBaiju | #Dude | #BestActress
சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் - டிராகன்
தமிழ் சினிமாவுக்கு அவசியத் தேவையாய் இருந்த பெருவெற்றியை முதல் காலாண்டிலேயே கொடுத்து சுவாசமூட்டியது ‘டிராகன்.’
வணிக சினிமாவில் கருத்தைப் பொதித்து கதை சொல்வது வெகு சிலருக்கு மட்டுமே கைவரும் கலை.
அதுவும் மொத்தக் கதையையும் சுருக்கி, மூன்று நிமிட ரீல்களாக நுகரும் இந்தக் காலகட்டத்தில் மூன்று மணி நேரத் திரைப்படத்தில் பார்ப்பவர்களை இருக்கையோடு கட்டிப்போடுவது அசகாய வித்தை.
அதைக் கற்றுத் தேர்ந்திருந்தார் அஷ்வத் மாரிமுத்து.
‘குறுக்குவழி அந்தந்த நேரத்து ஆசுவாசம், ஆனால் ஆயுட்கால அவஸ்தை’ என எளிய மொழியில் இவர் திரைப் பாடமெடுக்க, நூற்றுக்கு நூறு போட்டார்கள் பார்வையாளர்கள்.
கதைக்கு பீமனைப்போல, இவர் கதைக்கு பிரதீப் ரங்கநாதன்.
சாமானிய ராகவனாக அறிமுகமாகி, தில்லு முல்லு டிராகனாக பிரதீப் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தபோது சரவெடியாய் அதிர்ந்தன திரையரங்குகள்.
காதலின்போது கைவிடவேண்டிய ஈகோ மோதல்களை கயாடு லோஹரும், காதலுக்குப் பின்னும் கடைப்பிடிக்கவேண்டிய கண்ணியத்தை அனுபமாவும் தங்கள் கதாபாத்திரங்கள் வழி உணர்த்த, அவர்களுக்கு வழித்துணையாய் பலம் சேர்த்தது லியான் ஜேம்ஸின் இசை.
ஒருபக்கம், நாம் நினைக்க மறந்த நல்லாசான்களின் மொத்த உருவமாய் மிஷ்கின் சிலிர்ப்பூட்ட, மறுபக்கம் நமக்காக அத்தனையையும் இழந்த அப்பாக்களின் முழுத் தொகுப்பாய் உருமாறி நின்றார் ஜார்ஜ் மரியன்.
ரசிகர்களுக்குப் பொங்கி வழியும் கண்களையும், மென்முறுவல் பூக்கும் முகத்தையும் பரிசாய் கொடுத்த டிராகன், கோலிவுட்டின் கொண்டாட்டக் கையேடு.
#VikatanAwards | #VikatanCinemaAwards2025 | #Dragon | #AshwathMarimuthu | #BestEntertainingFilm