தமிழ்நாடு முழுவதும் மக்கள் தணிக்கை மூலம் சாலை உயரம் அதிகரிப்பதால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்த அறப்போர் இயக்க ஆய்வறிக்கை வெளியீடு
Report link: https://t.co/WYr6dKrZgr
தமிழ்நாடு முழுவதும் சாலைகளின் உயரம் தொடர்ந்து அதிகரிப்பதால் வீடுகள் பள்ளத்திற்குள் செல்லும் மிகப்பெரிய பிரச்சனையை அறப்போர் இயக்கம் இந்த அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
அறப்போர் இயக்கம் ஜூன் 29 2026, அன்று பொதுமக்கள் மற்றும் அறப்போர் இயக்க தன்னார்வலர்கள் சாலை உயரம் அதிகரித்த இடங்களை படம் எடுத்து பதிவிட ஒரு Google Form இணையதள லிங்கை கொடுத்து இருந்தோம். தமிழ்நாடு முழுவதும் சாலை உயரம் அதிகரிப்பால் ஏற்படும் இன்னல்கள் குறித்து அந்தந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கண்டறிந்து அதன் விவரங்களை அறப்போர் இயக்கத்திற்கு கடந்த 6 வார காலமாக அனுப்பி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 157 ஆர்வலர்கள் அவரவர் பகுதியில் உள்ள சாலை உயரம் அதிகரித்த பகுதிகளை கண்டறிந்து புகைப்படம் எடுத்து இந்த லிங்கில் பதிவு செய்து இருந்தனர்.
ஒட்டு மொத்தமாக 245 சாலை உயரம் அதிகரிக்கப்பட்ட பகுதிகளை தொகுத்து அறப்போர் இயக்கம் இன்றைய தினம் ஆய்வறிக்கையாக வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர், நெடுஞ்சாலை துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், நெடுஞ்சாலை துறை செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் என அனைவருக்கும் புகாராகவும் இந்த அனுப்பியுள்ளோம்.
புதிய சாலை போடும்போது பழைய சாலையைச் சுரண்டி எடுக்க வேண்டும் (Milling) என்ற விதியை ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்து மீறுவதே இந்தப் பிரச்சினைக்கு முக்கியக் காரணம் உள்ளது. இதனால், ஒவ்வொரு முறையும் புதியதாக தார் சாலை அமைக்கும் பொது சாலையின் உயரம் கூடிக்கொண்டே போய், வீடுகள் சாலை உயரத்தை விடப் பள்ளமாகிவிடுகின்றன.
உதாரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தலுக்கில் உள்ள அழிசூர் கிராமத்தில் கடந்த மாதம் ஏக்கனவே உள்ள சிமெண்ட் சாலையை அகற்றாமல் அதன் மேலயே வெட் மிக்ஸ் சாண்ட்யை நிரப்பி அதன் மீது பேவர் பிளாக் பயன்படுத்து சாலை அமைத்துள்ளனர், ஏற்கனவே சிமெண்ட் சாலை அமைத்ததால் சில வீடுகள் பள்ளத்தில் சென்ற நிலையில் தற்போது அதன் மீது பேவர் பிளாக் மூலம் சாலை அமைத்து வீடுகளை ஒரு அடி அளவுக்கு பள்ளத்தில் தள்ளியுள்ளனர்.
மேலும் சென்னை முகலிவாக்கம் பகுதியில் வீடுகள் சாலையின் உயரத்தை விட 2 அடிகளுக்கு மேல் கீயே சென்றுள்ளதை காணமுடிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மழை காலங்களில் வீடுகளுக்குள் மழை மற்றும் சாக்கடை நீர் உட்புகுவதால் அதிக சிரமத்திற்கு உள்ளாகினறனர்.
சாலை உயரம் அதிகரிப்பால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்கள்:
வீட்டுக்குள் புகும் மழைநீர்: சாலைகள் மேடாகிவிட்டதால், மழை பெய்தால் சாலைகளில் ஓடும் தண்ணீரும் சாக்கடை நீரும் நேரடியாகப் பள்ளத்தில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது.
சாலையில் இருந்து வீட்டிற்கு அணுகும் தன்மை: முன்பு படியேறி வீட்டிற்குள் சென்ற நிலை மாறி, இப்போது ரோட்டிலிருந்து பள்ளத்தில் இறங்கி வீட்டிற்குள் செல்ல வேண்டியுள்ளது. இதனால் முதியோர்களும், சக்கர நாற்காலி பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளும் தினசரி வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
விபத்து அபாயம்: சாலைகள் மட்டும் உயர்த்துவதால், பாதாள சாக்கடை மூடிகள் (manholes) பள்ளமாகி ரோட்டின் நடுவே குழிகள் போல மாறிவிடுகின்றன. இதில் சிக்கி இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.
பொருளாதார இழப்பு: வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதைத் தடுக்க, மக்கள் தங்கள் வீட்டின் தரைத்தளத்தை உயர்த்த பல லட்ச ரூபாய் (ரூ. 40 லட்சம் வரை) செலவு செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகளின் அலட்சியமும் முறைகேடும்:
மக்களின் வீடுகள் பாழாவது மட்டுமின்றி, உயர்ந்த சாலைக்கு ஏற்ப மீண்டும் நடைபாதைகள், பாதாள சாக்கடை மூடிகள், மின்சாரப் பெட்டிகள் போன்றவற்றை உயர்த்துவதற்காக அரசு மீண்டும் அதற்காக ஒப்பந்தங்களை கோருகிறது இதனால் மக்களின் வரிப்பணம் மிகுந்த அளவில் வீணாக்குகிறது.
திருவள்ளூர் மாவட்ட பகுதியில் பாதிக்கப்பட்ட ஒருவருடன் பேசும்போது அவர் கூறியது "சாலை போடும்போது மக்கள் அதை எதிர்த்துப் போராடினாலும், அதிகாரிகள் அதைக் கண்டுகொள்வதில்லை. தவறு செய்த காண்ட்ராக்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, உங்கள் வீட்டை இடித்துவிட்டு புதிதாகக் கட்டிக்கொள்ளுங்கள் என்று அதிகாரிகளே பொதுமக்களிடம் அலட்சியமாகப் பதில் சொல்கிறார்கள்." என்று அவர் குறிப்பிட்டார். இது பல அரசு அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படையாக நிரூபிக்கிறது.
அறப்போர் இயக்கத்தின் முக்கியப் பரிந்துரைகள்:
இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் இந்த அறிக்கையின் மூலம் வலியுறுத்துகிறது:
1. பழைய சாலையை தோண்டுவது கட்டாயம்: டெண்டர் ஆவணத்தில் சாலை தோண்டப்படும் ஆழத்திற்கே போடப்படும் அளவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பழைய சாலையைத் தோண்டி எடுத்த பிறகே புதிய சாலை போட வேண்டும். சாலையின் உயரம் பழைய அளவிலேயே இருப்பதை முழுமையாக உறுதி செய்யப்பட வேண்டும்.
2. உயரக் கண்காணிப்பு (MSL): சாலை போடுவதற்கு முன்பாக அந்த சாலையின் தற்போதைய உயரத்தை தெளிவாக காட்டும் வகையில் குறியீட்டு கல் வைக்க வேண்டும். சாலை போடுவதற்கு முன்பும் பின்பும் சாலையின் உயரத்தை (கடல் மட்டத்திலிருந்து) அளந்து இணையதளத்தில் வெளிப்படையாகப் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை உயரம் கூடியிருந்தால் ஒப்பந்ததாரருக்குப் பணப்பட்டுவாடா செய்யக் கூடாது.
3. ஆதாரங்கள் கட்டாயம்: பழைய சாலையைத் தோண்டுவது மற்றும் கடல் மட்டத்தில் இருந்து சாலையின் உயர அளவீட்டை புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதை அனைத்து ஒப்பந்தங்களுக்கும் கட்டாயமாக்க வேண்டும்.
4. மக்களுக்கு இழப்பீடு: இனிமேல் முறைகேடாகச் சாலை போடப்பட்டு எந்தவொரு வீடாவது பள்ளத்திற்குள் சென்றால், அந்த வீட்டு உரிமையாளருக்கு அரசு 40 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டும்.
5. நிரந்தரத் தீர்வு: ஏற்கனவே பள்ளமாகிப் போன வீடுகளுக்குத் தீர்வு காணவும், பிரதான சாலைகளின் உயரத்தைப் படிப்படியாகக் குறைக்கவும் அரசு ஒரு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர், நெடுஞ்சாலை துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர், நெடுஞ்சாலை துறை செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் என அனைவருக்கும் புகாராக இந்த ஆய்வறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மக்களின் இன்னல், பொருளாதார இழப்பு மற்றும் பருவ மழை களங்களில் ஏற்படும் வேதனையை அரசு உணர்ந்து உடனடியாக செயல்படுவது மிக அவசியமானது.
Ministers of MAWS, State Highways and Rural Development whoare responsible for road laying needs to take serious note of the road height issue and solve it @Chief_Secy_TN@CMOTamilnadu@AadhavArjuna@BussyAnand
மாநில நெடுஞ்சாலைத் துறையில் போடப்பட்ட 21 லிமிடெட் டெண்டர்கள் ரத்து -
அறப்போர் நேற்றைய தினம் இது குறித்து புகார் எழுப்பி இருந்தது. ஓபன் டெண்டர்களாக இல்லாமல் ஏன் லிமிடெட் டெண்டர்களாக போடப்பட்டு உள்ளது என்ற கேள்வியை எழுப்பியது அறப்போர் ! தொழில்நுட்ப உதவியாளர்களை பணியமர்த்த போடப்பட்ட இந்த டெண்டர்கள் முதலில் தேவையா என்பதையும் ஆராய கோரி இருந்தோம் !
இன்றைய தினம் மாநில 21 லிமிடெட் டெண்டர்களும் ரத்து! தமிழ்நாடு அரசுக்கு நன்றி!
அனைத்து துறைகளிலும் அனைத்து டெண்டர்களும் ஓபன் இணையதள டெண்டர்களாக போடப்பட வேண்டும். மேலும் இது குறித்த மாற்றங்கள் டெண்டர் சட்டங்களில் திருத்தம் மூலம் கொண்டு வரப்பட வேண்டும்!
தவறு செய்யும் பொது ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! அறப்போர் தொடரும் ! @CMOTamilnadu@AadhavArjuna
இன்று 29.08.2026, மதுரை மாவட்டம் காந்தி மியூசியத்தில், அத்தியாபனா பள்ளி நிர்வாகம் ஏற்பாட்டில் நடைபெற்ற “SAY NO TO DRUGS” விழிப்புணர்வு நடைபயணத்தில் கலந்து கொண்டு, போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திய போது.
போதைப்பொருளுக்கு எதிராக ஒன்றிணைவோம்!
போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம்!
வணக்கம் 🙏
@being_nimal உங்களுடைய புகாரின் அடிப்படையில் மின் கம்பங்களை இடமாற்றம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முழுமையான மாற்றுப்பாதை அமைக்கும் பணிகள் சுமார் 3 மாதங்களுக்குள் நிறைவடையும்.
இது உங்கள் அண்ணன் @TVKVijayHQ அவர்களின் அரசு, மக்களின் நலன் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் மட்டுமே தான் இந்த அரசு உள்ளது.
இந்தப் பிரச்சினையை எனது கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி.
*******************************************
Based on your @being_nimal twitter complaint dated on 23.08.2026, regarding poles erected in the lake, the details are hereby furnished:
Name of Substation feeding the 11KV feeder in the lake area
110/11 Kv Athirampattinam Substation and Name of Feeder 11 KV Pudhukkottai ullur feeder
1) Athirampattinam section
Total no.of poles - 9 Nos &
1 No DT (1 No.Agricultural service only )
Estimate sanctioned, 5 Nos pole erected , balance
Work will be completed within 30 days
2) East pattukkottai section
Total nos of poles : 52 Nos, DT-1 no &1 no-ABSwich
Estimated work will complete in 3 months.
*******************************************
காவிரி பாயும் தமிழ் நிலத்தை ஆட்சி செய்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களால் வணங்கப்பெற்ற, போருக்கு செல்லும் போது வழிபட்டு வாகைப் பூவை சூடிச்செல்லும் அவரது குல தெய்வமாக அறியப்பட்ட, காலப்போக்கில் மறைந்த நேமம் ஊராட்சி மாகாளத்து காளாபிடாரி கோயிலை மீண்டும் கட்டுவதற்காக நடத்தப்பட்ட அடிக்கல் நடும் விழாவில் மாண்புமிகு முன்னாள் குடியரசுத் தலைவர் @ramnathkovind ஐயா அவர்களுடன் இணைந்து கலந்துகொண்டேன்.
@CMOTamilnadu | @TVKVijayHQ
நேற்று (22.08.2026) சின்ன சொக்கிகுளத்தில் ரூ.4.06 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலகக் கட்டடத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டேன்.
மக்களுக்குத் தேவையான அரசு சேவைகள் எளிதாகவும், விரைவாகவும் கிடைக்கும் வகையில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது நமது அரசின் முக்கிய நோக்கமாகும்.
மக்கள் நலன் சார்ந்த பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் திரு. விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து முன்னெடுப்போம்.
இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மதுரை சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்/துணை மேயர், மாநகராட்சி ஆணையர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இன்று (23.08.2026) மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூத்தான்குளம் கிராமத்தில், சுமார் 60 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில், அப்பகுதி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை கேட்டறிந்து, இன்று மூத்தான்குளம் கிராமத்திற்கு புதிய பேருந்து சேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்த போது.
பொய்யான வரலாறுகளைப் பேசும் இந்நபரை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறுப்பிலிருந்து நீக்க #தவெக விஜய் அரசுக்கு துணிச்சல் இருக்கா?
பாலகிச்சணன் என உன் பேர நாங்க கூப்பிட்டா,உன் பேர நீ மாற்றிக்கொள்வாயா?
அடுத்தவன் வாயில #தமிழ் என நுழையாவிட்டா நாங்க என்னடா பன்றது?
செந்தில் பாலாஜி வீட்டில் இருந்து வேலை செய்த காசி!
இன்று லஞ்ச ஒழிப்பு துறையால் சோதனை செய்யப்படும் காசி டிரான்ஸ்பார்மர் , கண்டக்டர் போன்ற ஊழல்கள் நடக்கும் பொழுது ஒரு பைனான்சியல் கண்ட்ரோலர். ஒரு Middle லெவல் பொது ஊழியர். அவர் தினமும் TNEB அலுவலகத்தில் இருந்து தான் வேலை செய்ய வேண்டும். அவர் டெண்டர் முடிவு செய்யும் ஆய்வு குழுவில் இருப்பவர். காசி அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளரும் இல்லை. ஆனால் தினமும் அவர் தற்பொழுது ரெய்டு செய்யப்படும் தேனாம்பேட்டை வீட்டில் இருந்து காலை 10.40 மணிக்கு கிளம்பி 10.50 முதல் 11 மணி அளவில் அப்போதைய மின்சார துறை அமைச்சர் வசிக்கும் கிரீன்வேய்ஸ் சாலை செந்தில் பாலாஜி வீட்டிற்கு சென்று அங்கு தான் முழு நாளும் செலவு செய்வார்.
அதற்கான இங்கே பார்க்கும் ஆதாரங்களை அறப்போர் இயக்கம் விசாரணை அமைப்புகளுக்கு கொடுத்தும் உள்ளது. டெண்டர் அதிகாரி காசி TNEB அலுவலகத்தில் வேலை செய்யாமல் அமைச்சர் வீட்டில் இருந்து வேலை செய்து தான் பல டெண்டர்களை முடிவு செய்தார். இதனால் தான் டிரான்ஸ்பார்மர் போன்ற ஊழல்களில் அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜியும் விசாரிக்கப்பட வேண்டியவர்!
Dr சுரேஷ் தலைமையிலான அறப்போர் இயக்கம் நியமித்த தன்னிச்சை நிபுணர் குழு திருநெல்வேலி மற்றும் சுற்று வட்டாரங்களில் சட்டவிரோத கல் குவாரிகளால் மக்கள் எதிர்கொள்ளும் பாதிப்பு குறித்த ஆய்வறிக்கையை நேற்றைய தினம் அறப்போருக்கும் வழங்கி பொது மக்கள் பார்வைக்கும் முன் வைத்தார்கள். நிபுணர் குழுவிற்கு அறப்போர் இயக்கத்தின் நன்றி! ஆய்வு முடிவுகளை விளக்கும் பத்திரிகை சந்திப்பு வீடியோ இதோ !
அந்த அறிக்கையை இங்கே படிக்கலாம்
https://t.co/gD2F2s8dWX
ஏற்கனவே 600 கோடி கல்குவாரி ஊழல் மீது ஆதாரம் கொடுத்தாச்சு ! எவ்வளவு ஆதாரங்கள் தான் வேண்டும் ? எப்பொழுது தான் நடவடிக்கை பாயும் ? @CMOTamilnadu
தலைமைச் செயலக திராவிட #தெலுங்கு,பிறமொழி லாபிகள்,அரசுத்தேர்வுக்கான அரசாணைகளில் வேண்டுமென்றே குளறுபடிகளைச் செய்வது.எவனையாவது நீதிமன்றத்துக்கு அனுப்பி
தடையாணையைப் பெறுவது.
காரணம் அரசுத் தேர்வுகளில் தமிழர்களின் பங்கேற்பு,தேர்ச்சி விகிதம் அதிகம் ஆவதால்.
ரூ 8 கோடி அளவில் மண் திருட்டில் ஈடுபட்டு ஊழல் செய்து தன் குடும்ப நிலத்தில் அந்த மண்ணை கொட்டி நிலத்தை சமப்படுத்தி திமுக இளைஞர் அணி மாநாடு நடத்திய முன்னாள் அமைச்சர் எ வ வேலு, அவர் மகன் குமரன் மற்றும் அதிகாரிகள் மீது அறப்போர் இன்றைய தினம் கொடுத்த ஊழல் புகார் . அறப்போர் திரட்டிய ஆதாரம் என்ன ? முன்னாள் அமைச்சர் ஏரி மண்ணை விழுங்கியது எப்படி.?
பாருங்கள் இந்த வீடியோவை!
எ வ வேலு மற்றும் அவர் மகன் மலைப்பாம்பாடி ஏரியில் இருந்து ஏழு பக்கமும் மண் எடுத்தது எப்படி ?
முழமையாக புரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்!
https://t.co/1Sy7nX3YCZ
தமிழ்நாடு அரசின் இன்றைய பட்ஜெட் செய்தி - சேவை பெறும் உரிமை சட்டம் கொண்டு வருவோம் - வரவேற்கிறோம் !
இதற்காக அறப்போர் தயாரித்த மாதிரி சட்ட வரைவையும் அரசுக்கு அனுப்பி வைக்கிறோம் ! மக்களுடைய கருத்துக்களையும் கேட்டு வலுவான சட்டமாகவும், செயல்படும் சட்டமாகவும், லஞ்சத்தை ஒழிக்கும் சட்டமாகவும், தன்னிச்சையாக இயங்கும் சேவை ஆணையத்துடன் கூடிய சட்டமாகவும் கொண்டு வரப்பட வேண்டும்!