"என்னை தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என்னைப் புதைத்துவிடுங்கள். இந்திய மண்ணை ஆண்ட இங்கிலாந்து, தனது ஆறடி மண்ணை ஒரு இந்தியனிடம் நிரந்தரமாக இழந்தது என்ற அவமானம் உங்களை என்றும் துரத்தட்டும்!"
— தியாகச்சிங்கம் மாவீரர் உத்தம் சிங்
ஒரு கணத்தின் கோபம் அல்ல... 21 ஆண்டுகள் கொழுந்துவிட்டு எரிந்த தேசப்பற்று!
1919-ல் ஜாலியன் வாலாபாக் படுகொலையில் ஆயிரக்கணக்கான அப்பாவி இந்தியர்கள் ஆங்கிலேயர்களின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார்கள். அந்த ரத்தக் களத்தை நேரில் கண்ட இளைஞன் உத்தம் சிங், "இந்த அநியாயத்திற்கு நீதி கிடைக்கும் வரை என் உயிர் ஓயாது" என்று சபதம் எடுத்தார்.
அந்த சபதத்தை மறக்கவில்லை...
21 ஆண்டுகள் காத்திருந்தார்...
அவசரப்படவில்லை...
அச்சப்படவில்லை...
தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ஒரே இலக்கிற்காக அர்ப்பணித்தார்.
1940 மார்ச் 13 அன்று லண்டனின் மையத்தில், ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு முக்கிய பொறுப்பாளரான மைக்கேல் ஓ'ட்வையரை சுட்டுக் கொன்று, இந்திய மக்களின் கண்ணீருக்கு பதில் சொன்னார்.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோதும் அவர் கலங்கவில்லை. மாறாக, தனது இறுதி வார்த்தைகளால் கூட ஆங்கிலேய பேரரசின் அகங்காரத்தைச் சவாலிட்டார்.
1940 ஜூலை 31 அன்று, "வந்தே மாதரம்! இன்கிலாப் ஜிந்தாபாத்!" என்ற முழக்கத்துடன் தூக்குக் கயிற்றை முத்தமிட்டு வீரமரணம் அடைந்தார்.
உயிரை இழந்தார்... ஆனால் தேசத்தின் மானத்தை காப்பாற்றினார்.
தியாகியாக மட்டும் அல்ல... வீரத்தின் அடையாளமாக வாழ்கிறார் உத்தம் சிங்!
இன்று அவரது நினைவு நாளில், அந்த மாபெரும் தேசபக்தருக்கு நமது வீரவணக்கத்தை செலுத்துவோம்.
வீரவணக்கம் மாவீரர் உத்தம் சிங்!
வந்தே மாதரம்! ஜெய் ஹிந்த்! 🇮🇳
Kc. திருமாறன் ஜி
நிறுவனத் தலைவர் தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி
The Forgotten Patriot Bina Das
In December 1986, a badly decomposed, unclaimed body was found near a roadside gorge in Rishikesh. After months of investigation, it was discovered that the body belonged to Bina Das one of India’s bravest daughters, a woman who had once risked everything for the nation.
Bina Das was a student of the University of Calcutta and the same fearless revolutionary who opened fire on Bengal’s Governor, Sir Stanley Jackson, in 1932 as an act of defiance against British rule. She was arrested and sentenced to nine years of rigorous imprisonment.
After her release, she did not retreat. She joined the Quit India Movement in 1942 and was imprisoned once again, remaining in jail until 1945 for her unwavering commitment to India’s freedom.
In 1947, she married fellow freedom fighter Jatish Chandra Bhaumik, but even after independence she chose a life of simplicity over recognition. After her husband’s death, she left Kolkata and moved quietly to Rishikesh, living in a small ashram, teaching children for survival, and working in a private school for a meager salary.
Despite living in hardship, she refused to accept the government pension offered to freedom fighters.
A woman who had given her youth, freedom, and comfort for the country was ultimately left to die alone and forgotten on a roadside in the very nation she helped liberate.
We as a nation should feel ashamed that such a heroic woman met such a tragic end.
India may have forgotten her for years, but Bina Das deserves to be remembered with honour, gratitude, and a salute that came far too late.
15 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜீவசமாதி
முஞ்சிகேசர் இந்த பெயரை உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருக்கலாம். சென்னை காளிகாம்பாள் கோவில் அருகே இருக்கும் கச்சாலீஸ்வரர் எனும் பழமையான கோவிலில் முஞ்சிகேச முனிவருக்கு சந்நிதி இருக்கிறது. அதேபோல் தமிழ்நாட்டில் சுமார் 10,15 பழமையான சிவன் கோவில்களில் முஞ்சிகேச முனிவருக்கு சந்நிதி உண்டு. பஞ்ச சபைகளில் மூத்த சபையாக விளங்கும் திருவாலங்காடு ரத்தின சபை சிவன் கோவில் அருகே இவரது ஜீவசமாதி தனி கோவிலாக இருக்கிறது.
யார்? இந்த முஞ்சிகேசமுனிவர்.
சிவனின் கழுத்தில் இருக்கும் கார்கோடகன் எனும் பாம்பு ஒருநாள் சிவனின் கையிலேயே விஷத்தை கக்கி விடுகிறான்.அதனால் சிவனின் சாபத்தை கார்கோடகன் பெற்றான். தனது தவறை பின்னர் உணர்ந்து வருந்தி, திருந்திய கார்கோடகன் ஈசனிடம் மன்னிப்பு கேட்க அந்த சாபத்திற்கு பிராயச்சித்தமாக பூமிக்கு சென்று பல சிவ ஷேத்ரங்களை வழிபட சொல்லி கார்கோடகனுக்கு சிவன் கட்டளை இட்டார். அவ்வாறு பல ஷேத்ரங்களை வழிபட்ட பின்னர் நிறைவாக திருவாலங்காட்டில் என்னை நோக்கி தவமிருக்கும் சுனந்த முனிவர் எனும் மகா முனிவரை நீ பணிந்து வணங்க வேண்டும். அவரின் ஆசியும், கடைக்கண் பார்வையும் உன் மீது பட்ட அந்த நொடியில் உன் சாபம் நீங்கும் அந்த நொடியே நான் அங்கு தோன்றுவேன் என்று சிவபெருமான் சொல்ல அதன் படி கார்கோடகன் கார்கோடக முனிவராக இந்த பூமிக்கு வந்து பல சிவ ஷேத்ரங்களை வழிபடுகிறார்.
கார்கோடகன் வழிபட்ட இடம் தான் கோடன் பாக்கம் ஆகி அது பின்னர் கோடம்பாக்கமாக மாறியது. கோடம்பாக்கத்தின் ஒரு பகுதி பின்னர் வடபழனி ஆனது. கோடம்பாக்கத்தில் இருக்கும் வேங்கீஸ்வரம் கோவில் கார்கோடக முனிவர், பதஞ்சலி, வியாக்ரபாதர் முதலான பல முனிவர்களால் வழிபடப்பட்ட ரொம்ப பழமையான கோவில்.
நிறைவாக திருவாலங்காடு வந்த கார்கோடகனுக்கு சுனந்த முனிவரின் ஆசி கிடைத்து அதனால் கார்கோடகனின் சாபம் நீங்கியது. சுனந்த முனிவர் சரி இந்த முஞ்சிகேச முனிவர் யார்?
சுனந்த முனிவர் கடுந்தவம் செய்து அதனால் அவரின் தலைமீது முஞ்சிபுல் எனப்படும் ஒருவகை புல் படர்ந்து, வளர்ந்தது. இதன் காரணமாக தான் அவர் முஞ்சிகேசர் எனும் பெயர் பெற்றார். கேசம் என்றால் தலை. 20 ம் நூற்றாண்டில் கூட ரமணமகரிஷி போன்ற மகான்கள் உடலில் புற்று மண் மூடும் அளவு தவம் செய்து ஈசனின் தரிசனத்தை பெற்று இருக்கிறார்கள்.
அன்று சிவனுக்கும், காளிக்கும் நடந்த நடன போட்டியை நேரடியாக இருந்து பார்த்தவர் முஞ்சிகேச முனிவர். விஷ்ணு வாமன அவதாரம் எடுத்த பொழுது அவருக்கு நடந்த உபநயன சடங்கில் முஞ்சிகேச முனிவர் கலந்து கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. கார்கோடகனுக்கு ஏற்பட்ட சாபத்தையே போக்கிய அந்த முஞ்சிகேச முனிவர் எத்தகைய ஒரு தபஸ்வியாக, ஆற்றல் மிக்கவராக இருக்க வேண்டும்.
கம்பீரமாக திருவாலங்காட்டில் முஞ்சிகேச முனிவர் வீற்று இருக்கிறார்.
சென்னையில் இருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் தான் திருவாலங்காடு இருக்கு.ராகு, கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முஞ்சிகேச முனிவரின் ஜீவசமாதிக்கு சுத்தமான மரச்செக்கு நல்லெண்ணெய்யை சிறிது காணிக்கையாக கொடுத்து அங்கே சில நிமிடங்கள் அமர்ந்து தியானம் செய்யுங்கள். நிச்சயமாக உங்களின் ராகு, கேது தோஷம் சரியாகும்.
இவரின் ஜீவசமாதி தோராயமாக 15 ஆயிரம் ஆண்டுகள் என்று அறியப்படுகிறது
பொதுவாக உலகியல் வழக்கத்தில் ஒருவர் மிகுந்த திறமைசாலியாகவும், அறிவாற்றல் மிக்கவராகவும், பல ஆண்டுகள் அனுபவம் உள்ளவராகவும் விளங்கினால், அவரை #ஜாம்பவான் என்று குறிப்பிடுவார்கள்.
யார் இந்த ஜாம்பவான்? கரடி வடிவில் வாழ்ந்து, மனிதர்களையும் தேவர்களையும் விட ஆற்றல் மிக்க ஜாம்பவானின் சரித்திரம் என்ன என்பதை விளக்கவே இந்தப் பதிவு.
ராமாயண கதாபாத்திரங்களில் முக்கியமான ஒருவன், ஜாம்பவான் எனும் கரடி. ராமபிரானின் மனைவி சீதையை ராவணன் சிறையெடுத்துச் சென்றபின், அவளை மீட்க ராமனுக்குப் பேருதவி செய்தவர்கள் சுக்ரீவன், அனுமான், ஜாம்பவான் ஆகியோர். ஆனால், வயதான கரடி வடிவில் வாழ்ந்த ஜாம்பவான், ராமாயண காலத்துக்குப் பல யுகங்கள் முன்பே தோன்றி, கிருஷ்ணாவதார காலத்திலும் பங்கேற்று, மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டிருந்தவன் என்பது பலருக்குத் தெரியாத விஷயம்.
வலிமையும் திறமையும், அறிவாற்றலும் மிக்க ஜாம்பவான், ராம- ராவண யுத்தத்தில், களத்தில் முன்நின்று போரிட முடியாமல் தவித்தான். மூன்று யுகங்களில் வாழ்ந்த வலிமைமிக்க வீரனான ஜாம்பவான் மரணத்தை வென்ற அதே வேளையில் முதுமையை வெல்லமுடியாமல் போனதுதான் அதற்குக் காரணம்.
ஏன் இப்படி நிகழ்ந்தது?
பகவான் ஸ்ரீமகாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களில் முதல் அவதாரம் மச்சவதாரம். இது நிகழ்ந்தது சத்ய யுகத்தில்! இன்றைய கலியுகம், இதற்கு முந்தைய துவாபரயுகம், அதற்கும் முந்தைய திரேதாயுகம் ஆகியவற்றுக்கும் முந்தையது இந்த சத்ய யுகம். அதாவது, பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவம். ஸ்ரீமத் பாகவதம், வால்மீகி ராமாயணம், வியாச பாரதம் போன்ற புராண இதிகாசங்களின் அடிப்படையில், ஜாம்பவான் தோன்றியது சத்ய யுகத்தில். வால்மீகி ராமாயணத்தில், கிஷ்கிந்தா காண்டத்தில் ஜாம்பவான் தோன்றிய வரலாறு குறிப்பிடப்படுகிறது.
ஒருமுறை பிரம்மதேவன், பல ஆண்டுகள் சிருஷ்டியில் ஈடுபட்ட களைப்புத் தீர, பிராணாயாமம் செய்தார். அப்போது அவர் வெளியிட்ட மூச்சுக்காற்றில், ஒரு கரடி வடிவில் தேவன் தோன்றினான். மிகவும் நல்ல சுபாவம் கொண்ட, வலிமைமிக்க அந்தக் கரடியை 'ஜாம்பவான்’ என்று பிரம்மதேவன் அழைத்தார். அந்த பிரம்ம புத்திரன்தான் ஜாம்பவான் என்பது ஒரு வரலாறு.
ஆனால், விஷ்ணு புராணத்திலோ ஜாம்பவான் தோற்றம் குறித்து வேறு ஒரு வரலாறு குறிப்பிடப்படுகிறது. மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் பிரம்மனிடமிருந்து உருவான வேதங்களை எடுத்துச்செல்ல முயன்றபோது, பிரம்மனின் வியர்வைத் துளிகளில் இருந்து தோன்றிய கரடி வடிவ தேவனே ஜாம்பவான். வியர்வைத் துளிகளில் தோன்றியதால், முதலில் அவன் 'அம்புஜதா’ என்று பெயர் பெற்றான். பிரம்மனின் சிருஷ்டியில் தோன்றிய ஜம்புத்வீபம் என்ற கண்டத்தில் முதலில் காலடி எடுத்து வைத்ததால் 'ஜாம்பவான்’ எனப் பெயர் பெற்றான்.
விஷ்ணுவின் பத்து அவதார காலத்திலும் பங்கேற்றவன் ஜாம்பவான். இவன் தோன்றிய போது அபாரமான உடல் வலிமை யும், வியக்கத்தக்க அறிவாற்றாலும் பெற்றிருந்தான். அவனது அற்புத ஞாபக சக்தியால், எல்லா யுகங்களிலும் நிகழ்ந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து அவனால் சொல்ல முடிந்தது. அவனது ஞான திருஷ்டி அவனை சப்த ரிஷிகளுக்குச் சமமானவன் ஆக்கியது.
ஜாம்பவான், கரடிகளுக்கு அரசனாகத் திகழ்ந்தவன் என்று கூறும் புராணங்கள், அவன் குரங்குகளின் இனத்தைச் சேர்ந்தவன் என்றும் குறிப்பிடுகின்றன. 'கபி ஸ்ரேஷ்டன்’ என்று குறிப்பிடப்படுவதால், இது தெரிய வருகிறது. 'கபி’ என்றால் குரங்கு, ஸ்ரேஷ்டன் என்றால் சிறந்தவன் என்று பொருள். ஜாம்பவான் பல பெயர்களால் அறியப்படுகிறான். ஜாமவந்தா, ஜாம்பவந்தா, ஜாம்பவாத், ஜம்புவான் ஆகியவை அவனது பெயர்கள்.
மந்திரகிரியை மத்தாக்கி, வாசுகிப் பாம்பை கயிறாக்கி, தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறப் பாற்கடலைக் கடைந்த காலத்தில் ஜாம்பவான் இருந்ததாகவும், மந்திரகிரியை வலம்வந்து வணங்கியதாகவும் பாகவத புராணம் கூறுகிறது.
வாமன அவதார காலத்தில், மகாவிஷ்ணு திரிவிக்ர மனாகி மூன்று உலகங்களையும் தன் திருவடிகளால் அளந்து, மண்ணுக்கும் விண்ணுக்கும் வியாபித்து விஸ்வரூபனாகக் காட்சி தந்தபோது, அவரைப் பலமுறை வலம் வந்து, எல்லா உலகங்களையும் பக்திப் பரவசத்தோடு பிரதட்சிணம் செய்தான் ஜாம்பவான். அவ்வாறு வலம் வருகையில், விஷ்ணுவைத் தவிர, வேறு எதுவும் அவன் கண்ணில் படவில்லை.
எனவே, அவன் பாதங்களின் கூரிய நகம், மகாமேரு மலையைக் கீறிவிடவே, அதன் சிகரம் வெடித்துச் சிதறிவிட்டது. இதனால் கோபமடைந்த மகாமேரு, ''உன் இளமை மற்றும் வலிமையின் செருக்கால் நீ இந்தத் தவற்றைச் செய்ததால், நீ மரணமில்லாமல் வாழ்ந்தாலும், உன் வலிமையை இழந்து, ஒரு வயோதிகக் கரடியாகவே வாழ்வாய். உன் அறிவாற்றல் மற்றும் மனோவேகத்துக்கு உன் உடல் வலிமை ஈடுகொடுக்காமல் போகட்டும்'' என்று சாபமிட்டு விட்டது.
/ 1
Dear Jio, Airtel,
It is a Duopoly, Unfortunately. BSNL is trying hard to get some good plans. But their slow service has led to a Duopoly in India. Most towers are with both of you now.
On behalf of all of us, I have two Suggestions:
- Most Indians have Wifi access. Senior Citizens use Wifi mostly. Please provide an affordable 1 GB per day plan with options to choose (28 days onwards). Also a yearly plan.
- Provide affordable Voice only plans for less than ₹100 every month. Anything above this is forcing people to take data, even if they don't need it.
There are many who use only voice and also less than 1 GB per day. Need inclusive plans. Let users decide.
Urging my audience to repost this (if you also feel this way) until @JioCare & @Airtel_Presence ACTUALLY Cares 👍
#FI
தந்தி டிவி நடத்திய மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் சிறுபான்மையினரின் பாதுகாவலர் யார்? என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் திமுகவின் போலி சிறுபான்மையின பாதுகாப்பு முகமூடியை கிழித்து தொங்க விட்ட சகோதரர் @syedibrahimbabl 👏👏
#Annamalai |#DMKFailsTN |#NDA4TN