அறப்போர் இயக்கம் இன்றைய தினம் மின்சாரம், ஊழல் தடுப்பு மற்றும் சட்ட அமைச்சர் திரு R . நிர்மல் குமார் அவர்களை சந்தித்து அறப்போர் இயக்கம் இதுவரை லஞ்ச ஒழிப்பு துறையில் கொடுத்துள்ள 40 புகார்களின் விவரங்களை அளித்துளோம். ஏற்கனவே இதை தபாலில் 11/06/2026 அன்று அமைச்சருக்கு அனுப்பி உள்ளோம். இன்று நேரில் சந்தித்து புகார்கள் குறித்து விவரித்தோம். இதில் கடந்த காலங்களில் 9 புகார்கள் மீது மட்டுமே FIR பதிவு செய்யப்பட்டு விசாரணை துவங்கி உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக திமுக ஆட்சிகளில் நடந்த நிலக்கரி மற்றும் தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கிய ஊழல், ரேஷன் ஊழல், கே பி பார்க் கட்டுமான ஊழல், பத்திரப்பதிவு துறை ஊழல்கள், அரசு நிலம் அபகரிப்பு ஊழல்கள், உயர்கல்வித்துறை ஊழல்கள், உள்ளாட்சி துறை ஊழல்கள், மாநில நெடுஞ்சாலை துறை ஊழல்கள் போன்ற 30 க்கும் மேற்பட்ட ஊழல்கள் மீது உடனடியாக FIR பதிவு செய்து துரிதமாக விசாரணை செய்ய கோரி உள்ளோம். ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவது முக்கியம். இதுவே பொறுப்புடைமையையும் மற்றவர்கள் ஊழல் செய்யாமல் தடுப்பதற்கும், ஊழலை ஒழிக்கவும் உதவும்.
அமைச்சர் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
❌மோசடி செய்த ஸ்டாலின்❌
முன்னாள் அதிமுக அமைச்சரை காப்பாற்றிய அறிவாலய வாஷிங் மெஷின்.
#️⃣2013ம் ஆண்டு ஸ்ரீராம் நிறுவனம் பெருங்களத்தூரில் 1450 வீடுகள் கட்ட CMDAவிடம் அனுமதி கோரி விண்ணப்பம் செய்கிறது.
#️⃣2015-16 ஆண்டில் வைத்திலிங்கம் மகன் இயக்குனராக உள்ள Muthammal Estates Pvt Ltd நிறுவனத்திற்கு ஸ்ரீராம் குரூப்பின் Bharath Coal Chemicals Ltd நிறுவனத்திடம் இருந்து கடனாக (Unsecured Loan) 27.9 கோடி கொடுக்கப்படுகிறது.
#️⃣2014ம் ஆண்டு 36 லட்சம் பங்கு மூலதனத்துடன் துவக்கப்பட்ட Muthammal Estates Pvt Ltd நிறுவனத்திற்கு 2020 வரை எந்த வருவாயும் (பூஜ்ஜியம்) இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#️⃣2016ல் CMDA கட்டிட அனுமதி கொடுக்கிறது. அதே ஆண்டில் Muthammal Estates Pvt Ltd திருச்சியில் நிலம் வாங்க 18 கோடி அட்வான்ஸ் கொடுக்கிறது.
#️⃣2017-19 ஆண்டுகளில் ஸ்ரீராம் நிறுவனத்திடம் இருந்து கடனாக வாங்கிய தொகையில் Muthammal Estates Pvt Ltd மூலம் திருச்சியில் 24.2 கோடியில் 4.5 ஏக்கர் நிலத்தை வைத்திலிங்கம் மகன் வாங்குகிறார்.
#️⃣இதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் திரட்டி அறப்போர் இயக்கம் 2022 மே மாதம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகாராக அளிக்கிறது. இரண்டு வருடங்கள் மீண்டும் மீண்டும் திமுக அரசுக்கு அழுத்தம் கொடுத்த பிறகு 2024ம் ஆண்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு செய்கிறது. ஆனால் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. எந்த ரெய்டும் நடத்தப்படவில்லை.
#️⃣2025ம் ஆண்டில் இந்த FIR அடிப்படையில் அமலாக்கத்துறை வைத்திலிங்கம் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி மேலும் 100 கோடி சொத்துக்களை இணைக்கிறது. இதற்கு பிறகும் திமுக அரசு அசைந்து கொடுக்காமல் அமைதி காக்கிறது.
#️⃣2026ம் ஆண்டில் தான் திமுக அரசின் அமைதிக்கான காரணம் தெரிந்தது. வைத்திலிங்கம் திமுகவில் இணைகிறார். திமுக அரசு அவருக்கு எதிராக பதிந்த FIR அடுத்த ஒரே மாதத்தில் ரத்து செய்யப்படுகிறது. ஊழல் எல்லாம் ஒரு பிரச்சினையா என்ற அறிவாலயத்தின் வாஷிங் மெஷின் உள்ளே போட்டு வைத்திலிங்கத்தை புனிதர் ஆக்கி விடுகிறார்கள்.
ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இந்த வழக்கை மூட போகிறோம் என்பதை லஞ்ச ஒழிப்புத்துறை புகார் தாரரான அறப்போர் இயக்கத்திற்கு சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அறப்போர் இயக்கத்திற்கு தெரியாமல் FIR ரத்து செய்ய பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்துள்ளனர் . மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியை மட்டும் புகார் தரராக காட்டி அவருக்கு இதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று நீதிமன்றத்தில் புதிய ஆட்சியில் ஜூன் நான்கு அன்று லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது. இன்றைய தினம் அறப்போர் இயக்கத்திற்கு இந்த மோசடி தெரியவந்துள்ளது.
🔲அறப்போர் இயக்கம் உடனடியாக நீதிமன்றத்தை நாடி இந்த வழக்கை மூடக்கூடாது என்று வாதிடும்.
அதிமுக ஆட்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த போது கட்டிட அனுமதிக்கு வைத்திலிங்கம் லஞ்சம் வாங்கிய ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் கொடுத்த புகார் பற்றி விரிவாக பார்க்க - https://t.co/vh9w54CMXd
தமிழக வெற்றி கழகம் மாநில வழக்கறிஞர் அணி சார்பாக வழக்கறிஞர் இந்திரா தன்ராஜ் அவர்கள் தலைமையில்
இலவச சட்ட ஆலோசனை மையம் மற்றும் வேலைவாய்ப்பு முகாம்கள் தளபதியின் உத்தரவின் பெயரில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது @ActorVijayTeam@TVKHQITWingOffl#TVKVijay#JanaNayagan
The I&B Ministry’s attempt to block ‘Jana Nayagan’ is an attack on Tamil culture.
Mr Modi, you will never succeed in suppressing the voice of the Tamil people.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில், உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைந்து, நலமும் வளமும் பெருகட்டும்.
அனைவருக்கும்
வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
Everyday 6 to 8 hours Power cut that at night time. (Before Rain, During Rain, After Rain) Only power cut is the solution because it's a village.
Villupuram to gingee main road
Location: Senjipudur, Kozhipannai.
@News18TamilNadu@SunTV@CMOTamilnadu@TANGEDCO_Offcl