தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும், ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை உருவாக்கவும் தொடர்ந்து களமாடிவரும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவரும் என் அன்புக்குரிய நண்பருமான @draramadoss அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். எண்ணியவை ஈடேறட்டும், மக்கள் பணி சிறக்கட்டும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான அண்ணன் மருத்துவர் திரு @draramadoss அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் திரு @draramadoss அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகளைத் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்,
முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர்
திரு. அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு
எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
தாங்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல்நலத்துடனும், தொடர்ந்து மக்கள் தொண்டாற்றிட வாழ்த்துகிறேன்.
@draramadoss@AIADMKOfficial
அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ள தென்னாப்பிரிக்கத் தமிழர் நவநீதம் பிள்ளைக்கு வாழ்த்து!
2026-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக நோபல் அறக்கட்டளை அறிவித்திருக்கிறது. உலகம் முழுவதும் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கும் நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவது மிகவும் பொருத்தமானது. நவநீதம் பிள்ளை அம்மையார் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக இப்பரிசு அவருக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவராக பணியாற்றிய போது, இலங்கை போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக நவநீதம் பிள்ளை அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை நான் அறிவேன். இந்த விஷயத்தில் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
அமைதிக்கான நவநீதம் பிள்ளை அவர்களின் பணிகள் தொடர எனது வாழ்த்துகள்!
டில்லி சரோஜினி நகரில் தமிழர்கள் நிர்வகிக்கும் விநாயகர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு..
#Delhi#BJP#NarendraModi#VinayagarTemple#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/fKuhMnLnfy
விடுதலைப் போராட்ட வீரரும், சமூகத்தில் பின்தங்கிய அடித்தட்டு மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து போராடியவருமான எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் என அரை நூற்றாண்டுகால பொதுவாழ்க்கையில் சமத்துவம், சமூகநீதி மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டு பாடுபட்ட எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் அவர்களின் அரும்பெரும் பணிகளை இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.
அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் குடமுழுக்குத் திருநாளில், மதுரையை தன் பேரருளால் ஆளும் அங்கையற்கண்ணியை போற்றி வணங்கி,
அனைத்து பக்தர்களுக்கும்,
மதுரை மண்ணில் இருந்து என்னுடைய வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்னை மீனாட்சி அம்மனின் திருவருளால் அனைவரது வாழ்விலும் நலமும் வளமும், அமைதியும் மகிழ்ச்சியும் பெருகட்டும்.
#MaduraiMeenakshi
@AIADMKOfficial
சுதந்திரப் போராட்ட வீரரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து உழைத்த சிறந்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான, போற்றுதலுக்குரிய திரு. S.S. ராமசாமி படையாட்சியார் அவர்களின் 109-ஆவது பிறந்த நாளான இன்று, அவர்தம் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
அவரது பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தது மட்டுமின்றி அவரின்
திருஉருவப்படத்தை தமிழக சட்டப்பேரவையில் திறந்து வைத்ததும் மாண்புமிகு அம்மாவின் அரசு என்பதை பெருமையுடன் இந்நாளில் நினைவுகூர்கிறேன் .
சென்னை, கிண்டி, ஹால்டா அருகில் அமைந்துள்ள திரு. S.S. ராமசாமி படையாட்சியார் அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், எனது அறிவுறுத்தலின் படி, தலைமைக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்தும்; சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
@AIADMKOfficial
சமூக நீதிக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்கும் அயராது பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது மகத்தான மக்கள் பணியை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.
மக்களின் உரிமைகளுக்காகக் களம்கண்டு, கல்வி, சமூக முன்னேற்றம், சம உரிமை ஆகியவற்றை முன்னிறுத்தி அவர் ஆற்றிய தொண்டும், முன்னெடுப்புகளும், தமிழக அரசியல் களத்தில் அழியாத தடம் பதித்துள்ளன. இந்நாளில் அவரது மக்கள் நலப்பணிகளைப் போற்றிடுவோம்.
#CMJosephVijay
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 76-ஆம் பிறந்தநாளில் அவருக்கு எனது உளப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து பொதுவாழ்க்கையில் புதிய சாதனைகளைப் படைக்கவும், நாட்டிற்கு சேவையாற்றவும் வேண்டும் என்று வாழ்த்துகிறேன். @narendramodi
தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் நிறுவனர், பெரியவர் எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் அவர்களின் 109-வது பிறந்த நாளையொட்டி, சென்னை - கிண்டியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய போது.!
விநாயகப் பெருமானின் திருவருளால் 'நாடெங்கும் நலமும்; வீடெங்கும் வளமும் பெருகட்டும்' என்று மனதார வாழ்த்தி; அனைவருக்கும் அன்பும் அமைதியும், நலமும், வளமும் நிறைந்த வாழ்வை அருள வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து,
வினை தீர்க்கும் தெய்வமாகவும்;
முழுமுதற் கடவுளாகவும் விளங்கும், விநாயகப் பெருமான் அவதரித்த
#விநாயகர்சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். @AIADMKOfficial
Presented President Putin with a Russian translation of the Thirukkural, which carries the eternal wisdom of the great Thiruvalluvar across languages and borders.
ரஷ்ய அதிபர் புதினுக்கு தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பு பிரதியை பரிசளித்தேன். திருக்குறள் தேச எல்லைகள், மொழிகளைக் கடந்த திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தைப் பறைசாற்றுகிறது.
ரஷ்ய அதிபர் புதினுக்கு தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பு பிரதியை பரிசளித்தேன். திருக்குறள் தேச எல்லைகள், மொழிகளைக் கடந்த திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தைப் பறைசாற்றுகிறது.
கொச்சைப் பேச்சு, ஜால்ரா அடிப்பது இதை மட்டுமே செய்யும் mla கள் நடுவில் மக்கள் பிரச்சினையை, பெண்கள் குரலை, அரசின் கடமையை தெளிவாக எடுத்துரைக்கும் @Sowmiyanbumani .
Excellent. சட்டமன்றத்தில் தனக்குக் கிடைக்கும் நேரத்தை மிகச் சரியாகவும், துல்லியமான தகவல்களோடும் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தும் சகோதரி @Sowmiyanbumani அவர்களைப் பாராட்டுகிறேன்.