ஒரு மனிதனை மதிக்கத் தெரியாத எந்தத் தத்துவமும், எந்தக் கோட்பாடும், எந்தப் படைப்பும், எந்தக் கலையும், எந்த ஓவியமும், எந்த இசையும், எந்த வழிபாடும், எந்தப் பண்பாடும், எந்தப் பெருமிதமும், எந்த வாழ்க்கைமுறையும் எனக்கு வேண்டாம்.
@machaofkl@SriramMadras They opposed neet whatever possible a state government can do. They expect Congress government will come in Central,which didn't happen. Then What you expect ?
@DMKITwing ஏண்டா ஆயிரம் பேர் ஓசூரில இருந்து தினம் பெங்களூருக்கு போயிட்டு வந்திட்டு இருக்கோம். நாங்க கூட இவ்வளோ அழுத்ததில்லடா. இவரு போவாராம். அவமானத்த மக்களுக்காக தாங்கிப்பாராம்.
@vasantalic அப்ப இன்னும் ஒரு பத்து தடவ வினாத்தாள கசிய விடு. இன்னும் பத்து தடவ தீவிரமா படிச்சு தேர்வு சிறப்பா எழுதுவாங்க. ஆமா நீ எப்படி எந்த தேர்தலிலும் நிக்காம இத்தன வருஷம் அமைச்சரா இருக்க?
@CommonManTamil ஓசூர்ல நான் 1900 rs sqft பேசி போன மாதம்தான் குடி போனேன். அதே பில்டர் இப்ப 2300/sq ft பண்றாரு. சம்ப், செப்டிக் டேங்க், காம்பவுண்ட், ராம்ப் , இன்டீரியர், போர், EB எல்லாம் இதுல வராது
அதிமுக உருவான பின்னர் பெண்கள் ஓட்டு அதிமுக பக்கம் போனது. அது 2021 தேர்தலில் திமுக பக்கம் வந்தது. இந்த முறை தவெக பக்கம் போயி இருக்கு. மீண்டும் மீண்டும் பெண்கள் விஜய் மீது உள்ள கவர்ச்சியில் ஓட்டு போட்டு விட்டார்கள் என்று சொல்லாமல் ஒரு பெண்கள் குழுமத்துடன் பேசிய போது, எனக்கு அவர்கள் சொன்ன விஷயங்கள் அப்படியே அடித்து உட்கார வைத்தது.
திமுகவை பெண்கள் அவர்களுக்கான அரசியல் பேசும் கட்சியாக பார்க்கவில்லை. ஒரு சேவல் பண்ணையை பார்ப்பதுபோல தான் பார்க்கிறார்கள்.அதிமுகவில் எம்ஜியார், ஜெயலலிதா காலகட்டத்தில் கூட சத்தியாவணி முத்து, வளர்மதி, கோகுல இந்திரா என்று பலர் இருக்கிறார்கள். இன்றைக்கும் சசிரேகா, விந்தியா, CR சரஸ்வதி எல்லாம் இருக்காங்க என்று மக்களுக்கு சொன்னவுடன் தெரிகிறது. ஏன் தவெகவில் கூட கீர்த்தனா, அந்த ஜோசியகார MLA கனிமொழி, பல்லவி, ஜெகதீஸ்வரி என்று பல முகங்கள் தெரிகிறது.
ஆனால் திமுகவில் கீதா ஜீவன் தவிர வேற யாராவது தெரிந்த பெண் முகங்கள் இருந்தார்களா இந்த தேர்தலில்?? அவிநாசி கோகிலா மணி கூட ஆளை காணோம்.
இப்போ ஜெயித்து இருக்க 59 பேரும் கூட ஆண்கள் தான். ஒரே ஒரு பெண் கூட இல்லை. ஆனால் இந்த மோசமான காலகட்டத்திலும் அதிமுகவில் பெண்கள் ஜெயித்து இருக்காங்க. மரகதம் குமரவேல், லீமா ரோஸ், மரகதம் வெற்றிவேல், ஜெயசுதா, உஷாராணி,சத்யபாமா என்று பலர்.
தமிழ்நாட்டில் 51% ஓட்டு வங்கி இருக்க பெண்களுக்கு கட்சியிலும் வேட்பாளர் தேர்விலும் குறைந்தபட்சம் ஒரு 20-30% சதவீதம் கூட கொடுக்காமல் இருந்தால் எப்படி பெண்கள் நம் கட்சி நோக்கி வருவார்கள்? குறைந்தபட்சம் 35 வயதுக்கு உட்பட்ட 15-20 பெண்களை identify செய்து வேலை செய்ய வேண்டும். அவர்களை நம் முன் தளகர்த்தாக்கள் ஆக வேண்டும். குறிப்பாக இளம் பெண்கள், அவர்கள் அனைவரும் நன்கு படித்தவர்களாக இருக்க வேண்டும், பாலிசி குறித்து விவாதிக்க தயாராக இருக்கவேண்டும்.
பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்ததையே நாம் ஆண்களை வைத்து பேசினால் எப்படி அதை பெண்கள் ஏற்பார்கள்? அதை பெண்களை கொண்டு பேசவேண்டும். இஸ்லாமிய பெண்கள், கிறிஸ்துவ பெண்கள், பல்வேறு ஜாதிகளை சேர்ந்த படித்த பெண்கள் என்று பெண்களை கொண்டு முன்னெடுக்க வேண்டும்.
பெண்களுக்கு தேவை representation சார், நாங்க என்ன பேசினாலும் நீங்க சீட் கொடுக்க போறீங்களா இல்லை பிரதிநிதித்துவம் கொடுக்க போறீங்களா, அதை செய்யாம சும்மா 1000 கொடுத்தேன், 5000 கொடுத்தேன் என்றால் எப்படி சார் ஒட்டு போடுவாங்க என்று ஒரு பெண் கேட்டார்.
இதுல ஒரு பெரிய காமெடி என்ன தெரியுமா சார் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு நீங்க TNPSC ல கொடுத்து இருக்கீங்க, அதனால் ஆண்கள் பாதிக்கப்பட்டு இருக்காங்க என்று பலர் சொன்னாங்க, ஆனா உங்க கட்சிக்குள்ளே பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க முடியலை பார்த்தீங்களா என்றார்.
திமுக அமைப்பு ரீதியாக பெண்களை மாவட்ட செயலாளராக, குறைந்தபட்சம் 30-40 MLA சீட்டுகளை பெண்களுக்கு ஒதுக்காமல் அவர்களுக்கு நம்பிக்கை அளித்து தைரியமாக இந்த தொகுதி உனக்கு தான் ,வேலையை செய் என்று குறைந்தபட்சம் 1 வருடம் முன்னரே வேலையை ஆரம்பித்து பல பெண்களை வளர்த்து எடுத்தால் வெற்றி நமதே.
கிட்டதட்ட boys college ஆக இருந்த பச்சையப்பன் கல்லூரியே Co-ed ஆக மாறிவிட்டது. திமுக மாற முடியாதா??