என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. மக்கள் மனத்தில் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கென இருக்கும் முதன்மைச் சக்திக்கான முதலிடமும், நமது மனசாட்சி உள்ள மக்களாட்சி மீதான நம் சொந்தங்களின் ஆழ்மன விருப்பமும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளன.
வாக்குகளுக்கு ஒரு பைசா கொடுக்காமல், யாரையும் பட்டியில் அடைத்து அவமானப்படுத்தாமல், திருமங்கலம், ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்று எந்த ஃபார்முலாவும் இல்லாமல் அன்பு, பாச, உறவு ஃபார்முலா மற்றும் ஜனநாயகம் காக்கும் ஃபார்முலாவை வைத்து வென்ற தேர்தல் இது. தமிழகம், ஊழல் சக்திகளின் கோட்டை இல்லை. மாறாக, மாபெரும் மக்கள் சக்தியின் கோட்டை, மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்ற அன்பு மிக்க தூய சக்தியின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பணநாயகச் சூத்திரத்தையே அடித்து நொறுக்கிப் பெற்றுள்ள வெற்றியே இது.
கண்டகண்ட பேரங்கள் நடந்ததாக அவதூறு பேசிய மிருகக் குணப் பேச்சுக்கு எல்லாம் மக்கள் தகுந்த பதிலடியைத் தரமாகத் தந்துள்ளனர். அப்படிப் பேசியவர்களை மக்கள் வெகுதூரத்தில் ஒதுக்கி வைத்து, அவர்கள் மனத்தில் மீண்டும் தோல்வி பாரத்தை ஏற்றி உள்ளனர்.
இரண்டு தொகுதிகளிலும் நாம் இரண்டு நாள்கள் பிரசாரம் மேற்கொண்டதை நக்கலாகவும் நையாண்டியாகவும் பேசியவர்களுக்குத்தான் இப்போது மக்கள் பதிலடி தந்துள்ளனர். இதேபோல கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும், தமிழகம் முழுக்கப் பிரசாரம் செய்ய அன்றைய தீய சக்தி தி.மு.க., நம்மை அனுமதித்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும்.
நம்மைப் பொறுத்தவரை, என்றைக்கும் நாம் மக்கள் பக்கம்தான் நிற்போம். மக்களோடு மக்களாகத்தான் இரண்டறக் கலந்து இருப்போம். அது நம் கடமை மட்டுமன்று. மக்களுக்கான நமது நன்றிக் கடன் அது. எப்போதும் நம் தமிழக மக்களுக்காக முழுமூச்சுடன் நன்றி விசுவாசத்துடனேயே இருப்போம் என்பது நூறு சதவீதம் உறுதி.
இந்த வேளையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ள நம் சொந்தங்கள் அனைவருக்கும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவாக நன்றி சொல்வதில் மனம் மகிழ்கிறேன். நெஞ்சம் நெகிழ்கிறேன்.
இரண்டு தொகுதிகளிலும் வெற்றிக்காக உழைத்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் மதிப்பிற்குரிய தலைவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், எப்போதும் போலச் சிறப்பாகக் களப் பணியாற்றிய நம் மாண்புமிகு அமைச்சர்களுக்கும் மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை த.வெ.க. நிர்வாகிகளான நம் தோழர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த இடைத்தேர்தலில், வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நம் வேட்பாளர்களான சகோதரி திருமதி மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி), சகோதரி திருமதி சத்தியபாமா (தாராபுரம் தொகுதி) ஆகியோருக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்போதும் சொல்கிறேன். இந்த வெற்றி, தனிப்பட்ட இந்த விஜய்யின் வெற்றியோ, தனிப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோ அல்ல. இது முழுக்க முழுக்கப் பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி. தரம் தாழ்ந்த வகையில் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிரான வெற்றி. அப்பழுக்கற்ற தலைவர்களுக்கும் அவர்களின் தொண்டர்களுக்கும் செய்த துரோகத்திற்கு எதிரான வெற்றி.
மொத்தத்தில், அரசியல் நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. தனிமனித நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்குக் கிடைத்த வெற்றி. வாக்காளர்களுக்குக் கிடைத்த வெற்றி. இது இனிமேலும் தொடரும். தொடர்ந்தேதான் தீரும். மீண்டும் மீண்டும் இனிவரப் போகும் வெற்றிகளுக்கும் சேர்த்து இப்போதே நன்றி.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
தமிழக வரலாற்றில் / இந்திய வரலாற்றில் இது முதல் முறை !
எந்த முதல்வரும் , எந்த விளையாட்டு வீரருக்காகவும் இதுவரை மண்டியிட்டதில்லை !
பதவி தலைக்கேறாத , மக்களை நேசிக்கிற ஒருவரால் மட்டுமே இது சாத்தியம் !!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் திமுகவின் பங்கு இருக்கிறது என்று கூறியிருக்கும் Dummy Daddy,
மெட்ரோ பணிகள் நடைபெறும் இடத்தின் அருகே சாலையில் ஏற்பட்டுள்ள மெகா பள்ளத்தின் வளர்ச்சியிலும்,
கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாடெங்கும் பரவி வேரூன்றியிருக்கும் போதைப்பொருள் புழக்கத்தின் வளர்ச்சியிலும்,
அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிலும்,திமுகவின் பங்கு இருக்கிறது என்று பொறுப்பேற்பாரா?
எல்லாவற்றிலும் திமுகவின் பங்கு இருக்கிறது என்று Sticker ஒட்டிக்கொள்ளும் Dummy Daddy-ஆல், வெற்றித் தலைவர் “ஊழல் இல்லாத ஆட்சி” நல்குகிறார் என்று மக்கள் கூறுவதற்கு மட்டும் என்றுமே Sticker ஒட்ட முடியாது.
அப்புறம்,
“மற்றும் பலர் செய்த ஆட்சி இலட்சணத்திற்குத்தான் மக்கள், 13 முறை நற்தீர்ப்பளித்து அமர வைத்திருக்கிறார்கள்.”
என்ற தகவலை கொல்லைப்புறக் கூட்டணி WhatsApp குழுவில் Forward செய்து விடுங்கள், Sweet Uncle. 😉
எப்போதும் போல் இப்போதும் அடுத்தவர்களின் உழைப்பை திருடி இருக்கிறார் Ex MLA ஸ்டாலின். தாங்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றது 2021 ஆம் ஆண்டு.
சென்னை மெட்ரோ Phase-II-ன் Corridor-4-ன் ஒரு பகுதிக்கான திட்டமிடுதல் தொடங்கப்பட்டது 2015 ஆம் ஆண்டு.
Phase-II-ன் 3 வழித்தடங்களுக்கான DPR தயாரிக்கப்பட்டது 2017 ஆம் ஆண்டில். Corridor-4-ஐ பூந்தமல்லி வரை நீட்டிப்பதற்கான DPR தயாரிக்கப்பட்டது 2018-ல்.
ஊராம்முட்டு பருப்புல உளுந்து வடை சுட்றீங்களே Ex MLA @mkstalin Sir.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவரில் இந்தியுடன் மும்மொழி இடம்பெற்றதாக தீயசக்திக் கூட்டம் கொதித்துக் குதித்துக் கூப்பாடு போடுகிறது. நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இயங்கும் மனசாட்சி உள்ள மக்களாட்சி இப்படி ஒரு மும்மொழி மோசடியை ஒருநாளும் செய்யாது. மொழிக்கொள்கையைப் பொறுத்தவரை அண்ணாவின் இருமொழிக் கொள்கையே நம் த.வெ.க. அரசின் சமரசமற்ற ஒரே நிலைப்பாடு.
உண்மை என்னவெனில், வெற்று விளம்பர மாடல் தி.மு.க. ஆட்சியில்தான் கடந்த 2025 டிசம்பர் மாதம் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பாக வழங்கப்பட்ட ஆணை மூலம் ஈரோடு கூட்டுறவு சங்க அச்சகத்தில் அச்சடிக்கப்பட்ட மாத்திரை கவரில்தான் இந்தியும் இடம்பெற்றுள்ளது. அதை மூடி மறைத்து, தாய்மொழி காப்பதுபோல முகமூடி வேடம் போட்டு தீயசக்தி தி.மு.க. மொழிகாக்கும் மூலசக்திபோல குதித்து நாடகம் ஆடுகிறது. இந்த உண்மையை, சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரே தெளிவுபடுத்தி உள்ளார்.
1996ல் ஆட்சி அமைத்த தீயசக்தி தி.மு.க., அப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருக்கும்படியான இந்திய அரசியல் சாசனப் புத்தகம் தரப்பட்டது என 2001ல் ஆட்சிக்கு வந்தபோது, சட்டமன்றத்திலேயே அப்போதைய முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் அவர்கள் அந்தப் புத்தகத்தையே அவையில் காட்டி தீயசக்தி தி.மு.க.வின் முகத்திரையைச் சுக்கு நூறாகக் கிழித்ததுதான் சட்டமன்றப் பேரவை வரலாறு. அன்றைக்கு தி.மு.க. சார்பாகப் பதிலளித்த மதிப்பிற்குரிய மாண்புமிகு பேராசிரியர் அன்பழகன் அவர்கள் அப்படி நடந்திருந்தால் அது தவறுதான் என்று கூறியதும் சபைக்குறிப்பில் இருப்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது.
ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் இந்திக்குப் பக்க வாத்தியம் வாசித்துவிட்டு, ஆட்சி பறிபோனதும் மண்,மொழி,இனம், மானம் காக்கும் உத்தமர் போல வேடம் போட்டுக் குதிப்பதும், பின்னர் குட்டு உடைந்து குப்புற விழுந்து மூக்குடைபடுவதும் வாடிக்கை என்பதுதான் தீயசக்தி தி.மு.க.வின் வரலாறு.
4 மாதங்கள் தான்… மாற்றத்தின் வேகம் மிரள வைக்கிறது! 🔥
🔹விவசாயிகளுக்கு ₹6,000 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி
🔹மகளிருக்கு இலவச பேருந்துப் பயணம் – “வெற்றி பயணம்”
🔹200 யூனிட் வரை இலவச மின்சாரம்
🔹வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம்
🔹பால் கொள்முதல் விலை உயர்வு – பால் உற்பத்தியாளர்களுக்கு நேரடி பயன்
🔹முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு ₹5 லட்சத்திலிருந்து ₹25 லட்சமாக உயர்வு
🔹சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை – பெண்கள் பாதுகாப்புக்கான புதிய அமைப்பு
🔹காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் – ₹710 கோடி ஒதுக்கீடு
🔹தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்
🔹வெற்றி மடிக்கணினித் திட்டம் – ₹2,000 கோடி ஒதுக்கீடு
🔹11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன மிதிவண்டி திட்டம்
🔹அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் நலத்திட்டங்கள்
🔹புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகத்திற்கான அறிவிப்பு
🔹அண்ணன் சீர் திட்டம்
இது வெறும் அறிவிப்புகளின் பட்டியல் அல்ல…
4 மாதங்களில் மக்கள் வாழ்க்கையைத் தொடும் மாற்றங்களின் பட்டியல்! 🔥
தனி மெஜாரிட்டியுடன் முழுமையான ஆட்சி அதிகாரம் கிடைத்தால், முதலமைச்சர் விஜய் இன்னும் வேகமாகவும், இன்னும் வலிமையாகவும் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவார் என்ற நம்பிக்கையை இந்த 4 மாத செயல்பாடுகள் ஏற்படுத்துகின்றன.
தாராபுரம் & மதுராந்தகம் மக்களே…
நாளை நன்கு சிந்தித்து, உங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுங்கள்.
மக்களின் தீர்ப்பு - தமிழகத்தின் அடுத்த பாதையை தீர்மானிக்கட்டும்!
#CMJosephVijay @TVKVijayHQ