மேடை ஏறியதும் காலணியை கழட்டி விட்டு தரையில் விழுந்து வணங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்திய அண்ணாமலை.. ஆரவாரம் செய்த தொண்டர்கள்..!
#WeTheLeaders | #Annamalai | #Pollachi | #PolimerNews
தமிழகம் முழுவதும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள, டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட வலியுறுத்துவோம்.
சென்னை நகரின் சில பகுதிகளில் நாம் மேற்கொண்ட கள ஆய்வின்படி, பல டாஸ்மாக் மதுக்கடைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாகவே இயங்கி வருகின்றன.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், இது போல, பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாக இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட, மக்கள் நேரடியாகவோ, அல்லது நமது We the Leaders அமைப்பின் மூலமாகவோ, மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுப்போம். மது அரக்கனை ஒழிக்க ஒன்றிணைவோம். தமிழ்நாட்டைக் காப்போம்.
மாறுவோம், மாற்றுவோம்!
#WTL_WhiteBandMonth
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் திரு @imrajmohan அவர்களுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன.
ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்.
தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நிலையில், தற்போது ₹75,000 வரையிலான கடன் தொகை மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யவோம் என்று அறிவித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக, தங்களைச் சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
கடந்த 1970 ஆம் ஆண்டு, இதே நாளில்தான், விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து, மூன்று விவசாயிகள் கொல்லப்பட்டனர். 56 ஆண்டுகள் கடந்தும், அதே நாளில், மீண்டும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக தங்களையே வருத்திக் கொள்ளும் நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது.
கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவதே அரசின் கடமை. இது போன்று கடந்த ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் மாற்றம் வேண்டி தவெக அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், பெயரில் மட்டுமே மாற்றம் இருப்பது துரதிருஷ்டவசமானது.
உடனடியாக, தவெக அரசு, தங்கள் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளை மேலும் வருத்த வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறேன்.
``மாணவர்கள் பயப்பட கூடாது''
"தமிழகத்தில் 51% மாணவர்கள் கல்லூரிக்கு செல்கின்றனர். ஸ்பேஸ் எக்ஸ் தொடங்கும்போது எலான் மஸ்க் சந்திக்காத தோல்விகள் இல்லை. AI வளர்ச்சியை கண்டு மாணவர்கள் பயப்பட கூடாது. GenZ இளைஞர்கள் அனைத்து டேட்டாக்களையும் கையில் வைத்துள்ளனர். மாணவர்கள் உயர்ந்த எண்ணத்தை கொண்டு செயல்பட வேண்டும்"
- கோவையில் பட்டமளிப்பு விழா ஒன்றில் அண்ணாமலை பேச்சு
#kovai #annamalai #studentmotivations
``பெரிய பதவிகள் வரும், போகும்..''
"பெரிய பதவிகள் வரும், போகும். நாம் கற்றுக்கொண்டவை மட்டுமே நம் கூடவே இருக்கும். பதவி என்பது சட்டை, காலணி போன்றது, நிரந்தரமற்றது"
- கோவை பட்டமளிப்பு விழா ஒன்றில் அண்ணாமலை பேச்சு
#annamalai#kovai#ThanthiTV
Heartiest congratulations to our Hon. PM Thiru @narendramodi avl on becoming the longest-serving elected Prime Minister in India’s history, completing 4,399 days in office today.
May the almighty bless him with immense strength and good health in continuing his service to our nation.
குறிப்பிட்ட மூன்று ஊடகங்களின் ஒளிபரப்பும் தடைப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்டமைக்கு முதலில் நன்றி. அது எப்படி, தவெக ஆட்சியின் அவலநிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு மட்டும், செட்டாப் பாக்ஸில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் வரும்?
பொய்களையும், புரட்டுகளையும், மக்கள் மத்தியில் உண்மை என நம்பவைக்க, கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த TN Fact Check வலைத்தளக் கணக்கு, தவெக ஆட்சியிலும் அதே வேலையைத் தொடர்கிறது.
இது மாற்றம் இல்லை. கன்னத்தில் மரு மட்டும் ஒட்டிக் கொண்டு வந்த, அதே டெய்லர் அதே வாடகை ஏமாற்று வேலை.
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, @polimernews, @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை?
குறிப்பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது.
ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
நேராக பார்த்து விடைபெறுவது தான் தமிழர் பண்பு, அந்த அடிப்படையில்தான் அமித்ஷாவை சந்தித்து விடைபெற்றேன் - அண்ணாமலை
WATCH LIVE : https://t.co/n1hGsgTDF7
#Annamalai#BJP#Amitsha#News18Tamilnadu