சட்டமன்ற மாண்பு பற்றி இன்று பேசிக் கொண்டு இருக்கும் கூட்டத்தின் சட்டமன்ற வரலாறு எப்படி இருந்தது என்று மக்களுக்கு தெரிய வேண்டாமா? ஒரு முதல்வர் அவர் தாடையில் கை வைத்ததற்கே போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று நாடகம் போடும் இந்த கரகாட்ட கும்பல், சட்டமன்றத்தில் ஒரு பெண்மணியின் தாடையை பதம் பார்த்த கதையை மக்களுக்கு சொல்ல வேண்டாமா?
ஆனா இதை எல்லாம் செய்ய வேண்டிய எடப்பாடி & கோ பல்லை காட்டிட்டு முதல் வரிசையில் போஸ் கொடுத்துட்டு இருக்கிறார்கள்.
நல்ல நோக்கத்திற்காக உளப்பூர்வமாய் ஒரு அடியை நாம் எடுத்து வைத்தால், அந்த இலக்கும் நம்மை நோக்கி நகர்ந்து வரும் என்பதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்.
அப்படித்தான், திருச்சி மக்களின் 16 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றி பொன்மலைப்பகுதியில் G Corner சந்திப்பில் உயர்மட்ட சுழற் பாலம் அமைக்க முயற்சி மேற்கொண்டேன் என்று சொல்வதைவிட, தீவிரமாக போராடினேன்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்ட வேண்டிய பாலம் என்றாலும், இடம் இரயில்வே நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இத்தனை ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இத்திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றித் தர வேண்டும் என்று தொடர்ந்து முயற்சித்தேன்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்திடம் பாலம் கட்ட ஒப்புதல் பெற்றேன், இப்போது இரயில்வே அமைச்சகத்திடமிருந்து அவர்களின் நிலத்தில் கட்டிக்கொள்ள தடையில்லா சான்றையும் கடந்த 13.03.2026 கிடைக்கப்பெற்றோம்.
அதனால், நூற்றுகணக்கான உயிர்களை காவு வாங்கிய பகுதியில் உயர்மட்ட சுழற் சாலை அமையப்போவது உறுதியானது! திருச்சி மக்களின் 16 ஆண்டு கால கோரிக்கைக்கு விடியல் கிடைத்தது! தங்கள் நிலத்தில் உயர்மட்ட சுழல் சாலையை தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைத்துக் கொள்ள இரயில்வே நிர்வாகம் முழு ஒப்புதல் அளித்து தடையில்லா சான்றிதழை வழங்கி எனது தொடர் முயற்சிக்கு மகுடம் சூட்டியது! சென்னையில் இருந்து திருச்சி வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து மக்களின் பயணமும் சீராகவும் பாதுகாப்பாகவும் அமையப்போகிறது என் மக்கள் பணியில் இந்த உயர்மட்ட ஜி கார்னர் சுழற் பாலம் ஓர் சாதனையாக எனக்கு நிறைவை தருகிறது என்று நான் நேற்று பதிவிட்டேன்.
இந்த நல்ல தருணத்தில், இன்று (16.03.2026) காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள இரயில்வே அமைச்சரின் அலுவலகத்தில், மாண்புமிகு ஒன்றிய இரயில்வேத்துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்னவ் அவர்களை சந்தித்து, மின்னும் பொன்னாடை அணிவித்து, தித்திக்கும் இனிப்பு பலகாரங்களை வழங்கி, திருச்சி பொன்மலைப்பகுதியில் G Corner சந்திப்பில் உயர்மட்ட சுழற் பாலம் அமைக்க இரயில்வே நிலத்தை பயன்படுத்திக்கொள்ள தடையில்லா சான்றை வழங்கி, எனது திருச்சி மக்களின் 16 ஆண்டுகால கோரிக்கைக்கு நல்ல தீர்வை வழங்கியமைக்கும், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தும் தமிழ்நாட்டு மக்களின் பயண பாதுகாப்பை உறுதி செய்தமைக்கும் எனது திருச்சி மக்களின் சார்பிலும், அனைத்து தமிழ் மக்களின் சார்பிலும் எனது கோடான கோடி நன்றிகளை இதயப்பூர்வமாய் தெரிவித்துக்கொண்டேன்.
அத்தனையும் ஏற்றுக்கொண்டு அமைச்சர் அவர்கள், “இது உங்கள் இடைவிடாத முயற்சிக்கு கிடைத்த வெற்றி; வாழ்த்துகள்” என்றார். அகமகிழ்ந்து அதனை ஏற்றுக்கொண்டேன்.
எனது ஒவ்வொரு முயற்சியும், அதனால் கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியும் மக்களுக்கானது என்பதில்தான் என் மகிழ்ச்சி பொதிந்திருக்கிறது.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
16.03.2026
புதுடெல்லி
நாட்டின் விடுதலைக்காக போராடியவர், ஒடுக்கப்பட்ட மக்களாகிய விவசாயிகள், தொழிலாளர்கள், பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்களின் உரிமைகளுக்காக தன் வாழ்நாளெல்லாம் போராடியவர். தியாக சீலர் தோழர் ஐயா இரா. நல்லகண்ணு அவர்களின் மறைவையொட்டி அவரின் பூதவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு தலைவர் வைகோ அவர்கள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அளித்த பேட்டி.
#MDMK #Vaiko #trichymp #DuraiVaiko #CPI #comradenallakannu
சூத்திர பட்டத்தை நம் மீது சுமத்திய ஆரிய பார்ப்பனியத்தை எதிர்த்து பெரியார் காலம் முழுக்க போராடினார்,
ஜாதியை எதிர்த்து இந்திய அரசியல் சட்டத்தை எரித்து சிறைக்கு சென்ற தோழர்களின் கால் முடிக்கு கூட இந்த எச்ச பையன் சீமான் வர மாட்டான்,
இந்த எச்ச பையன் சீமானும் அவனது கேடுகெட்ட கூட்டமும் இந்த மண்ணில் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக இருந்த தோழர்களின் கால் தூசுக்கு கூட இணையாக மாட்டானுக.
திருப்பரங்குன்றம் விவகாரத்தையொட்டி, (05.12.2025) அன்று நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்புத் தீர்மானத்தை முன்னெடுக்க முடிவு செய்தேன்.
திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், மறுமலர்ச்சி திமுக சார்பில் நான் என் தீர்மானத்தை சமர்ப்பித்தேன். ஆனால், அவைத் தலைவர் அதனை நிராகரித்துவிட்டனர்.
அப்படியிருந்தும், இந்த முக்கியமான விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற உறுதியோடு, போராட்ட குணமும் குரல் வளமும் மிக்க திமுக, காங்கிரஸ், பொதுவுடமை இயக்கம் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து, அவைமுன்நின்று
“தூண்டாதே! தூண்டாதே! மதவெறியைத் தூண்டாதே!
காப்போம்! காப்போம்! ஜனநாயகத்தைக் காப்போம்!”
We want Justice;
We want Justice!
Yes to Democracy
No to Fascism என்ற முழக்கங்களை சுமார் 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக ஓங்கி முழங்கினேன் .
எங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு, விவாதத்திற்கான அனுமதியைப் பெற்ற பின்னரே முழக்கத்தை நிறுத்தினேன்.
ஆழ்மனதிலிருந்தும், என் அடிவயிற்றிலிருந்தும் எழுப்பிய அந்த 45 நிமிட போராட்டக் குரலால், அதன் திறனை முற்றிலும் இழந்தேன். அதே குரல் வளமின்மையுடன் வெளியே வந்து ஊடக நேர்காணல்களை எதிர்கொண்டேன். என் நேர்காணலை காண்போர் அதை உணரக்கூடும்.
மிக முக்கியமாக – NDTV நேர்காணலில் நான் உரக்கச் சொன்னேன்:
“இல்லை; இல்லை; இல்லவே இல்லை. திராவிட இயக்கம் ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான இயக்கம் அல்ல; அது எப்போதும் சமத்துவத்திற்கான, சமூக நீதிக்கான இயக்கம் என்றேன்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
07.12.2025
புது டெல்லி
#DuraiVaiko #Vaiko #trichymp #MDMK #socialjustice
இன்று(11.12.2025) நாடாளுமன்ற மக்களவையில் பூஜ்ய நேரத்தில் கலந்துகொண்டு எனது திருச்சிக்கான முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்தேன்.
அதில், எதிர்வரும், 2026 ஜனவரி முதல் சந்தைபடுத்தப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் BIS - Bureau of Indian Standards தரச்சான்றிதழ் கட்டாயம் ஆகிறதை சுட்டிக்காட்டி,
இதனால் அனைத்து தொழில்களுக்கு இது மிகப் முக்கிய தேவையாக இருக்கும் என்பதை எடுத்துரைத்து,
ஆனால் இன்றைக்கு திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு மாவட்ட மக்கள், தங்கள் பொருட்களுக்கு BIS தரச்சான்று பெற, சென்னை அல்லது கோவைக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் நேரவிரையமும், கூடுதல் செலவும் ஏற்படுகிறது என்பதை விளக்கி,
திருச்சி, தமிழ்நாட்டின் மையப்பகுதியில் உள்ளதாலும், தென் தமிழ்நாட்டு மாவட்ட மக்களுக்கும் பயனாக அமையும் வகையில்,
திருச்சியில், ஒரு BIS அலுவலகம் அமைக்க வேண்டும் என்றும், இது, தமிழ்நாடு முழுக்க உள்ள தொழில்துறையினருக்கு மிக பெரிய உதவியாக இருக்கும் என்றும் எனது கோரிக்கையை முன்வைத்து உரையாற்றினேன்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
11.12.2025
புதுடெல்லி
#MDMK #Vaiko #trichymp #DuraiVaiko #ParliamentSession #parliamentsession2025 #BIS
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில்,
எனது ஓராண்டுப் பணிகளை தொகுத்து கழக இணையதள அணி வெளியிட்டுள்ள காணொளி காட்சித் தொகுப்பை பகிர்கின்றேன்.
அன்புடன்
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
நாடாளுமன்ற உறுப்பினர்
மறுமலர்ச்சி திமுக
24.09.2025
#DuraiVaiko#Vaiko#MDMK#trichymp
#Watch | "மனிதநேயத்திற்காகவும், மனித விடுதலைக்காகவும் பயன்படாவிட்டால், நாங்கள் பிரபலமான நடிகர்களாக இருந்து ஒரு பயனும் இல்லை..."
காசா மீதான போரை நிறுத்த வலியுறுத்தி நடைபெற்ற பேரணியில் நடிகர் சத்யராஜ் ஆவேசம்.
#SunNews | #Gaza | #Palestine | #Satyaraj
தந்தைப் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினேன்
பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார் அவர்களின் 147-ஆவது பிறந்த நாளையொட்டி, திருச்சி - காட்டூரில் உள்ள அய்யாவின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினேன்.
"மதவாதம் மாயட்டும்
சாதியவாதம் தொலையட்டும்
மனிதநேயம் பரவட்டும்" என்றும், அய்யா பெரியாரின் புகழ் ஓங்கிடவும் அனைவருடனும் இணைந்து முழக்கம் எழுப்பினேன்.
இந்த நிகழ்வில் என்னுடன் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா, திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி இரா.சோமு, திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் டி.டி.சி.சேரன், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.கலியமூர்த்தி, அரியலூர் மாவட்டச் செயலாளர் இராமநாதன், மாநில விவசாய அணிச்செயலாளர் வாரணவாசி கி.இராசேந்திரன் மற்றும் கழக முன்னோடிகள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
அன்புடன்
துரை வைகோ
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர்
திருச்சி
17.09.2025
#DuraiVaiko #Vaiko #MDMK #trichymp #ThanthaiPeriyar