மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் - ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதலமைச்சர்.
இந்த பிரச்சினையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று ஒன்றிய அரசிடம் மேகதாதுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் பேசி இருந்தேன்.
கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த #SofaModel முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை - விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை.
இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும்.
எனவே, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#CauveryRights
#Mekedatu
சர்வாதிகார #SofaModel அரசால் பழிவாங்கும் நோக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள கழக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று சந்தித்தோம்.
சிறையில் இருந்தாலும் முன்பை விட இன்னும் வேகமாக கழகப்பணி - மக்கள் பணியாற்றிடும் உத்வேகத்துடன் உள்ள அண்ணன் மார்க்கண்டேயன் அவர்களிடம் நலம் விசாரித்தோம்.
அவரின் விடுதலைக்காக கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக வழக்கறிஞர்கள் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளை எடுத்துக்கூறி ஆறுதல் தெரிவித்தோம்.
மிசா - எமர்ஜன்சியை பார்த்தது தி.மு.கழகம். தத்தித்தாவி ஆட்சிக்கு வந்து தறிகெட்டு அரசு நடத்தும் #Sofa அரசின் கைது நடவடிக்கைகளுக்கு எல்லாம் கழகத்தின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார்கள்.
விமர்சனத்துக்காக செய்யப்படும் ஒவ்வொரு கைதின்போதும் நீதிமன்றத்திடம் குட்டுப்படும் இந்த ஆட்சியாளர்கள், மக்கள் மன்றத்திலும் சரிவைச் சந்திப்பது உறுதி.
@mlavilathikulam@geethajeevandmk@ARROffice@AbdulWahabMLA
Birthday greetings to @ShivSenaUBT_ President Thiru. Uddhav Thackeray.
The extraordinary show of support at Shivaji Park yesterday was a resounding reminder that every attempt to weaken you has only strengthened the people's resolve to stand by you.
Wishing you good health and success in overcoming the challenges with your indomitable fighting spirit.
@OfficeOfUT
#CWG2026-இல் 65 கிலோ பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு என் பாராட்டுகள்.
தென் தமிழ்நாட்டில் இருந்து உலக அளவில் மேலும் பல சாதனையாளர்கள் புறப்பட்டு வர ராஜா முத்துப்பாண்டி அவர்களின் வெற்றி ஊக்கமளிக்கட்டும்! கல்வியோடு விளையாட்டிலும் நம் இளைஞர்கள் சிறக்கட்டும்!
My heartfelt congratulations to Tamil Nadu's Raja Muthupandi on winning the silver medal in the Men's 65kg Weightlifting event at #CWG2026.
His remarkable achievement adds another proud chapter to India's medal tally and reflects the exceptional sporting talent emerging from Tamil Nadu.
May Raja Muthupandi's inspiring success motivate many more young athletes to pursue excellence and bring greater glory to our nation.
NEET தேர்வில் மட்டுமல்ல, #NEET தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது கழகத்தலைவர் @mkstalin அவர்களின் இன்றைய @the_hindu Op-Ed கட்டுரை!
ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே NEET போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்!
அந்தத் தடையை உடைப்பதற்கான படையாக #DMK என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும்.
#BanNEET #AbolishNEET
தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.
போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது.
காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?
#Custodialdeath
சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் #NEET தேர்வுக்கு எதிராக போராடிய SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்யும் #SofaModel அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
#CJP முன்னெடுப்பில் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் போராடுவோரை கைது செய்வது என்பது, NEET விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.
ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தனக்கெதிரான போராட்டமாக கருதி முடக்கும் இந்த அடக்குமுறையை, Sofa Model அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்
#BanNEET
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
NEET was introduced with three principal promises: (1) reduce the burden, (2) eliminate commercialisation, and (3) improve standards.
On every one of these counts, #NEET has failed. It has merely shifted the centre of learning from schools to coaching centres.
The problem with NEET has always been structural, not merely procedural. Recent events have vindicated that concern.
The ongoing student protests must serve as a wake-up call for the Union Government. It's time to trust the states. It's time to abolish NEET.
Read my op-ed in today's @The_Hindu: https://t.co/wFlPB09zUT
You cannot have both fairness and NEET.
NEET is fundamentally unfair.
While I cannot speak for every state, I can certainly speak for Tamil Nadu. Every political party in Tamil Nadu except the BJP opposes NEET. The Tamil Nadu Legislative Assembly has repeatedly passed resolutions and Bills seeking exemption from NEET.
Stop defending the indefensible. #ScrapNEET once and for all.
Look out for my Op-ed in tomorrow's edition of @The_Hindu, where I set out in detail why NEET is fundamentally unfair and why it must be abolished.
I strongly condemn the TN Government led by @actorvijay for arresting rap singer and my dear brother ‘Therukkural’ Arivu for speaking out against NEET.
His voice reflects the sentiments and demands of not just Tamil Nadu, but millions of people across India.
At a time when the CJP-led rallies and protests against #NEET are gaining momentum across the country, the TVK government has chosen to arrest Arivu.
This sends a troubling message to the youth of Tamil Nadu who are considering taking to the streets in solidarity with the protesting youth in Delhi to oppose NEET.
NEET is not just riddled with discrepancies; it has become a scam.
The voices raised against NEET deserve to be heard, not silenced.
#BanNEET
பழனி கோயில் நில விவகாரத்தில், கழகத்தின் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. அர.சக்கரபாணி அவர்கள் மீது எந்தவித ஆதாரமும் இன்றி அவதூறு பரப்பிவரும் விகடன் குழுமத்தின் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பழனி கோயில் நில முறைகேட்டைத் தமிழகத்தில் முதன்முதலில் சுட்டிக் காட்டியதே தி.மு.க. தான் என்பதையும், நடுநிலையான விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியதும் நமது கழகம் தான் என்பதையும் ஊடகங்கள் வசதியாக மறைக்கின்றன.
நிலத்தை வாங்கியவர்களுக்கும், திரு. அர.சக்கரபாணி அவர்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாத நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயலும் போலிச் செய்திகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை.
மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் பரப்பப்படும் இந்தத் பொய்களை எதிர்த்து, பகிரங்க மன்னிப்பு கோருவதோடு, ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு விகடன் குழுமத்திற்கு எதிராகச் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளுக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
விமர்சனங்களைச் சகித்துக்கொள்ளத் திராணியில்லாமல், பொதுக்கூட்டப் பேச்சிற்காக விளாத்திகுளம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜி.வி. மார்க்கண்டேயன் அவர்களை கைது செய்துள்ள தவெக அரசின் கோழைத்தனமான செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
எதிர்க்கட்சிகளின் குரல்களை அடக்கவும், ஆட்சியின் அவலங்களைப் பற்றி பேசுபவர்களை முடக்கவும் காவல்துறையைத் தங்களது ஏவற்படையாக மாட்டியுள்ளது இந்த கோழை அரசு.
கைது நடவடிக்கைகளால் பயமுறுத்தி தி.மு.க.வினரின் குரலை ஒருபோதும் அமுக்கிவிட முடியாது; மக்கள் மன்றத்தில் இந்த அராஜக ஆட்சிக்கு உரிய பாடம் புகட்டப்படும்.
விளாத்திகுளம் MLA மகன் அக்ஷய் மார்க்கண்டேயனின் பேட்டி பாத்தேன்🖤❤️🔥🔥🔥
ஆளும் அரசுக்கு political science பாடம் எடுத்து இருக்காப்ள
நல்லா தான் decentஆ பேசிட்டு இருந்தாப்ள… என்ன நனைச்சாரு தெரியல..
உங்க பையன் தான் உங்க கூட இல்ல எங்க அப்பா என் கூட இருக்கனும் இந்த விளாத்திகுளம் மக்கள் கூட இருக்கனும்னு சொன்னாரு பாருங்க😂😂
அநேகமா அப்பாவ தூக்குனதுக்கு பதிலா தம்பிய தூக்கிரிக்கணும்னு நினைச்சு ராத்திரியே தம்பியும் சேத்து தூக்குவானுக போல..
விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் மார்க்கண்டேயன் அவர்களை, பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரை விமர்சித்துப் பேசினார் என்று கைது செய்துள்ள Sofa Model அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, ஒரே நாளில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை கைது செய்து இருக்கிறார்கள்.
பொதுக்கூட்டத்தில் பேசினார் என்பதற்காக, மக்கள் பிரதிநிதி என்றும் பார்க்காமல், காலை 6 மணிக்கே காவல்துறையை வீட்டுக்கு அனுப்பி கைது செய்து, விசாரணை என்ற பெயரில் SP அலுவலத்தில் அடைத்து வைப்பது உட்சபட்ச அடக்குமுறை.
இதே தூத்துக்குடி மாவட்டத்தில், கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணாலேயே குற்றஞ்சாட்டப்பட்ட த.வெ.க MLA, கைது ஏதும் செய்யப்படாமல் லாரி டயர்களை ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்.
இந்த சூழலில் கழக சட்டமன்ற உறுப்பினரை மட்டும் குறி வைத்து காவல்துறை கைது செய்கிறது.
எதிர்க்கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்தினால் அங்கே அரசிற்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் எதிர்பார்ப்பது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது.
ஆளும் அரசின் சரி, தவறுகளை சுட்டிக்காட்டுகின்ற - விமர்சிக்கின்ற மாபெரும் ஜனநாயகக் கடமை எதிர்க்கட்சிக்கு இருக்கிறது.
இது புரியாமல், பேசினாலே கைது என்று தொடரும் இந்த அரசின் அராஜகத்தை மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆணவத்தில் இதுபோல் எத்தனை கைதுகளை செய்தாலும் கழக உடன்பிறப்புகள் ஒருபோதும் அஞ்சமாட்டோம்.
மக்கள் மன்றத்திலும் - நீதிமன்றத்திலும் இந்த ஆட்சியாளர்கள் பின்னடைவை சந்திக்கப்போவது உறுதி.
I strongly condemn the high-handedness of the police against CJP youth who were peacefully participating in a rally over the NEET discrepancies.
The visuals from Delhi are shocking.
Instead of addressing their concerns, the government is responding with its police force. This is unacceptable in a democracy.
For more than a decade now, DMK has been advocating abolition of NEET.
Today, Tamil Nadu's voice against NEET is resonating across the nation, including from the national capital.
The demand of the Nation's Youth is clear. Listen to them.
#BanNEET
‘மெட்ராஸ் மாகாணம்’ என்றிருந்த நம் மாநிலத்தின் பெயரை 'தமிழ்நாடு' என மாற்றிட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட வரலாற்றுச் சிறப்புக்குரிய நாள் இன்று.
‘தமிழர்கள் வாழும் பகுதிக்கு தமிழ்நாடு என்று கூட பெயர் சூட்ட முடியவில்லையே’ என்ற தந்தை பெரியாரின் ஏக்கத்தையும், சங்கரலிங்கனாரின் தியாகத்தையும், தமிழ்ப்பெரியோர்கள் பலரின் விருப்பத்தையும் ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களில் நிறைவேற்றிக் காட்டியது நம் திராவிட முன்னேற்றக் கழகம்.
அன்றைக்கு தீர்மானத்தை நிறைவேற்றி, ‘தமிழ்நாடு' என்று அண்ணா அவர்கள் மும்முறை முழங்க, 'வாழ்க... வாழ்க...' என்ற உறுப்பினர்களின் முழக்கத்தால் சட்டமன்றமே உணர்ச்சிப் பெருக்கால் தத்தளித்தது.
அந்த இனிய தினத்தை தமிழ்நாடு நாளாக திராவிட மாடல் ஆட்சியில் நமது கழகத் தலைவர் @mkstalin அவர்கள் அறிவித்தார்கள்.
தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க தமிழ்நாடு நாளில் உறுதி ஏற்போம்!
தமிழ் வெல்க!
தமிழ்நாடு வாழ்க!!
#தமிழ்நாடு_நாள்
“வாழ்த்தாத நாளில்லை வையகம்
மறைமலையடிகள் மறையாத் திருப்பெயர்
வாழ்த்தாத நாளில்லை வையகம்!
பொழுதெல்லாம் தமிழுக் குழைத்த தலைவனை
வாழ்த்தா நாளில்லை வையகம்” – பாவேந்தர் பாரதிதாசன்!
“தமிழ் நன்மங்கையின் அழகிய நன்மேனியில் அம்மைத் தழும்புபோல் வடசொற்களைப் புகுத்தாதீர்கள். தனித்தமிழுக்குப் பாடுபடுங்கள்” என வலியுறுத்தி, தமக்கென வாழாமல் தமிழுக்கென வாழ்ந்த மறைமலையடிகளின் 150-ஆவது பிறந்தநாள் நிறைவுப் பெருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறது கழக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை! மறைமலையடிகளாரின் வாழ்வையும் பணியையும் இன்றைய தலைமுறையினர் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.
வேதாசலம் என்ற தன் பெயரையே மாற்றிக்கொண்டு தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் அடிகளார். “இந்தி பொதுமொழியா?” நூல் உள்ளிட்ட தம் பங்களிப்புகளால் இந்தித் திணிப்பை எதிர்த்தார்.
“தமிழர் அனைவரும் பண்டுபோல் தமக்குந் தம் இல்லங்களுக்கும் தம்மூர்களுக்கும் பிறவற்றிற்கு மெல்லாந் தூய தமிழ்ப் பெயர்களையே அமைத்தல் வேண்டும்” என்ற மறைமலையடிகளின் வேண்டுகோளினை ஏற்று நம் பிள்ளைகளுக்குத் தமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்! வாழ்க மறைமலையடிகள் புகழ்!