உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து என பரப்பப்படும் தவறான தகவல் !
பரவும் செய்தி
"நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் போராடிய மாணவர்கள் மீது வழக்குத் தொடுத்தது தவெக அரசு. அந்த வழக்குகளை ரத்து செய்யச் சொன்னது உச்சநீதிமன்றம்" என்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
இது முற்றிலும் தவறான தகவல்.
மாண்புமிகு உச்சநீதிமன்றம் நீட் தேர்வு முறைகேட்டிற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களில் 18 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தால் அவர்களை உடனடியாக காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும், டெல்லி மற்றும் இதர மாநிலங்களில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் புலன் விசாரணையை தொடரலாம் என்றும், தெரிவித்துள்ளதே அன்றி வழக்குகளை ரத்து செய்ய எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவர்களின் நலனையும், எதிர்காலத்தையும் கருதி போராடிய மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தாமாக முன்வந்து ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.
தவறான தகவலைப் பரப்பாதீர் !
#factcheck | #tnfactcheck | #tnfcu
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan
நீதிமன்றமே டிஸ்மிஸ் செஞ்ச வழக்கை கிடப்புல போட்டுட்டு கண்டும் காணாமல் இருந்ததுதான் திமுக அரசு!
ஆனா தவெக தலைமையில் ஆட்சி அமைஞ்சதும், அந்த நீதிமன்றத் தீர்ப்பைக் காட்டி "இடத்தைக் காலி பண்றியா இல்ல ஒழுங்கா வாடகை கட்டுறியா?" எனப் பேசி, அசால்ட்டா வாடகைப் பணத்தை வசூல் செஞ்சிருக்கார் அமைச்சர் ரமேஷ் அவர்கள்! 🔥👏
நீதிமன்றத் தீர்ப்பு கைல இருந்தும் பேசக்கூட திராணியும் தெம்பும் இல்லாத திமுகவுக்கு, இதைப் பத்திப் பேச எந்த அருகதையும் இல்லை! 👊
License Renewal செய்த கதை:
இந்த மாதத்துடன் லைசென்ஸ் renewal செய்ய வேண்டும் என்பதால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இணையத்தில் தேடிய போது ஆன்லைன் மூலமாகவே renewal செய்து கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது. அப்பாடா என்று அதற்குரிய படிவங்களை நிரப்ப ஆரம்பித்தால் போய் மருத்துவர் சான்றிதழ் வாங்கிட்டு வர சொல்லியது. யாரிடம் வாங்க வேண்டும் என்று தேடியதில் திருவான்மியூர் RTO அருகிலேயே இருக்கும் ஒரு மருத்துவர் மற்றும் அந்த பகுதியை சுற்றி இருக்கும் மருத்துவர்கள் பட்டியல் RTO இணையதளத்திலேயே இருந்தது. அது தவிர ஆன்லைன் விண்ணப்பத்தின் போது ஆதார் அட்டையை சரிபார்க்க பயன்படுத்துவதால் அவை இரண்டிலும் ஒரே பெயர் இருக்க வேண்டுமாம். எனக்கு ஆரம்பத்தில் எடுத்த ஆதார் அட்டையில் இனிசியல் போடாமல் விட்டுவிட்டார்கள். ஆகவே அதை மாற்றிக் கொண்டு வந்தால் தான் விண்ணப்பிக்க முடியும் என்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முயற்சிக்கு தடை போட்டுவிட்டார்கள்.
இனி நேரில் போக வேண்டியது தான் என்று படிவங்களை டவுன்லோட் செய்து அதை நிரப்பி, போட்டோ எடுத்து ஒட்டி, அங்கே போனதும் இது சரியில்லை அது சரியில்லை என்று சொல்வார்கள் என்பதால் இன்னொரு படிவத்தையும் தயாராக கையில் எடுத்துக் கொண்டு, பேனா பேப்பருடன் கிளம்பி போய் RTO அலுவலகத்தில் அமர்ந்திருந்த வரவேற்பாளர் பெண்மணியிடம் அனைத்தையும் கொடுத்து நான் லைசென்ஸ் renewal செய்ய வேண்டும் என்று கூறினேன்.
விண்ணப்பத்தையும் எண்ணையும் பார்த்த அவர் இதெல்லாம் இப்போ ஆன்லைன்ல தான் சார் செய்யணும். இங்கேலாம் அதை செய்வதில்லை என்று சொல்லிவிட்டார். பிறகு எனக்கு ஆன்லைன்ல ஏற்பட்ட பிரச்சனையை விளக்க, இது கொஞ்சம் பெரிய பிரச்சினை தான் என்று அவரும் சொல்லிக் கொண்டார். பிறகு நீங்க வெளியில் ஆன்லைன் மூலம் அப்ளை செய்யும் கம்ப்யூட்டர் சென்டர் போய் கேளுங்க என்றார். E சேவை மையமா என்று நான் கேட்க திரும்பவும் என்னை பார்த்துவிட்டு இல்லை இல்லை வெளியே கம்ப்யூட்டர் சென்டர் இருக்கும் போய் பாருங்க என்றார். எங்கே இருக்கும் என்று கேட்டதற்கு எனக்கு தெரியாது சார் என்று சிரிப்பை அடக்கிக் கொண்டே சொன்னார். இங்கேயும் செய்ய மாட்டீர்கள், எங்கே போக வேண்டும் என்றும் சொல்ல மாட்டீர்கள் என்றால் எப்படி என்று கேட்டதற்கு இப்போலாம் இங்கே எதுவும் பாக்கறது இல்லை என்று பதில் கூறி முடித்துக் கொண்டார்.
சரி இதை விடுங்க நான் எங்கே போய் மருத்துவ சான்றிதழ் வாங்கணும், அதையாவது சொல்லுங்க என்றால் அதுவும் அவருக்கு தெரியாது என்று சொல்லிவிட்டார். போட்டு வைத்த renewal திட்டம் போச்சு கண்மணி என்று சோகத்துடன் வெளியே வந்தால் அங்கே மூன்று பேர் வரிசையாக தங்கள் பைக் மீது விண்ணப்பங்கள் வைத்து விற்றுக் கொண்டு இருந்தார்கள். அதில் ஒருவரிடம் (சுரேஷ் - 9884633334, தேவைப்படுபவர்கள் அவருடைய சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்) போய் இங்கே மருத்துவ சான்றிதழ் எங்கே வாங்க வேண்டும் என்று கேட்க, உங்களுக்கு நான் renewal கூட சேர்த்தே வாங்கி தருகிறேன் அதற்கு 1500 ரூபாய் ஆகும் என்றார். என்னுடைய ஆதார் பிரச்சினை பற்றி சொல்ல வாங்க பாத்துக்கலாம் என்று அருகே இருந்த அய்யன் ஓட்டுநர் பயிற்சி பள்ளி அலுவலகத்துக்கு கூட்டி சென்றார். அங்கே என்னுடைய லைசென்ஸ் வாங்கி கொடுத்து இதில் எதாவது பிரச்சனை இருக்கா பாருங்க என்றார். அங்கே இருந்த பெண்மணி எதையோ தட்டி பார்த்துவிட்டு எல்லாம் கிளியர் பண்ணிடலாம் என்று சொல்லவே, அவங்க கிட்ட 1500 கொடுத்துவிடுங்கள் முடித்து கொடுத்து விடுவார்கள் என்றார். மருத்துவர் எங்கே இருப்பார் என்று நான் அப்பாவியாக கேட்க அதெல்லாம் அவங்க பாத்துப்பாங்க என்றார்.
சரி என்ன தான் நடக்குது பார்க்கலாம் என்று வெய்ட் செய்ய, உங்களுக்கு ஒரு மருத்துவர் அழைப்பார், அதற்கு பிறகு ஒரு ஓடிபி வரும், அதை அவரிடம் சொல்லுங்க என்றார். போனிலேயே செக்கப் செய்வார்கள் போல என்று காத்திருக்க அந்த மருத்துவரும் (அகிலா குமார் - 9342948142) அழைத்தார். என்னை அவர் அழைத்த மொபைல் நம்பரை கொடுத்திருக்கிறேன். சிகிச்சை தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். போனில் நிறைய கேள்வி கேட்டு செக் செய்ய போகிறார் என்று நான் தயாராக அவர் முதலில் otp கேட்டார். நானும் பார்த்து சொல்ல அவர் ஓகே என்று சொல்லிவிட்டு போனை கட் செய்து விட்டார். திரும்ப அழைப்பாரா என்று அங்கிருந்த பெண்மணியிடம் கேட்க அவளோ தான் சார் முடிந்தது. எனக்கு form அனுப்பி விடுவார்கள் என்று சொல்லிவிட்டார். அப்புறம் ஒரு 10 நிமிடங்கள் கம்ப்யூட்டரில் கிளிக் செய்து கொண்டு இருந்தவர் இப்போவே உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் போட்டாச்சு நீங்க RTO போய் போட்டோ எடுத்துக்கோங்க. ஒரு வாரத்தில் உங்களுக்கு லைசென்ஸ் வந்துவிடும் என்று சொன்னார். நானும் அங்கே போக ஒரு 10 பேர் வரிசையில் நின்றார்கள். வெய்ட் ப்ண்ணி ஒரு படம் எடுத்து (வழக்கம் போல கொடூரமாக தான் இருந்தது) முடித்து கிளம்பி வந்து விட்டேன். அவர்கள் சொனந்து போல அடுத்த 4 நாட்களில் லைசென்ஸ் வந்துவிட்டது.
கேள்விகள்:
1. நான் கொடுத்த 1500 ரூபாய் பணம் ரசீது இல்லாத சேவை கட்டணமா இல்லை மறைமுக லஞ்சமா? (அரசு கட்டணம் வெறும் 550 ரூபாய் என்று அந்த பெண்மணி விண்ணப்பிக்கும் போது சைடுல பார்த்துவிட்டேன்)
2. மருத்துவரையே பார்க்காமல் மருத்துவ சான்றிதழ் கொடுப்பது சரியா?
3. ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று சொல்லி அடிப்படை சந்தேகங்களுக்கு கூட தனியார் கம்ப்யூட்டர் சென்டர்க்கு அனுப்பும் RTO அலுவலர்களின் செயல் சரியா தவறா?
4. இந்த தனியார் கம்ப்யூட்டர் சென்டர்கள் டிரைவிங் லைசென்ஸ் renewal செய்வதற்காக அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்களா?
5. ஒரு முக்கியமான ஆவணமான லைசென்ஸ் renewal கொடுப்பதில் RTO அலுவலகம் அலட்சியம் காட்டுகிறதா?
6. இது வரை இப்படித்தான் நடந்தது என்றால் இனியும் இப்படித்தான் நடக்குமா?
7. தமிழ்நாடு சாலை விபத்துகளில் முதலிடத்தில் இருப்பதற்கு RTO அலுவலங்கள் காட்டும் அலட்சியம் தான் காரணமா?
பல மாற்றங்களை முன்னெடுக்கும் தவெக ஆட்சியில் இந்த RTO அவலத்திற்கும் மாற்றம் வருமா?
@CMOTamilnadu@TVKVijayHQ@AadhavArjuna@imrajmohan@TamilanParthib1
17 வயசு சிறுமி தன்னுடைய காதலனை காப்பாற்ற போக்சோ வழக்கில் வேற ஒரு அப்பாவிய சிக்க வைத்தகொடுரம் இவர் இந்த புகாரின் பேரில் 2 வருஷம் சிறைல இருக்க காரணமான அந்த சிறுமி அவருடைய காதலன் அப்பறம் வழக்கை ஒழுங்கா விசாரிக்காத போலிஸ் அதிகாரி எல்லாரும் தண்டிக்கபட வேண்டும்🙏
#JusticeForKarthick
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
இது sofa மாடல் அரசு தான் - வன்னியரசு
S social justice
0 organized action
F freedom
A anti corruption & caste
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி விமர்சனத்திற்கு சமுக நீதி அமைச்சர் வன்னியரசு விளக்கம்.
திமுக த.வெ.க ஆட்சி இடையே பெரிய அளவு கொள்கை வித்தியாசம் இல்லை
புதிய தலைமுறைக்கு அமைச்சர் வன்னியரசு பேட்டி
@TVKVijayHQ@CMOTamilnadu@VanniTamizhVCK
CMDA is fundamentally a planning authority. However, during his tenure as Member Secretary, Anshul Mishra IAS initiated the idea of CMDA directly undertaking construction projects, following which @PKSekarbabu exercised significant influence over these activities. Substantial funds were diverted through these projects. Subsequently, Prakash IAS also continued the same model, he made unimaginable money in just one year. Only during his tenure, Baashyam managed to exchange temple land which he encroached in Koyambedu to some other piece of land.
A comprehensive probe into CMDA’s activities over the past five years is essential. Such an investigation could uncover serious irregularities and establish accountability wherever wrongdoing is found.
Particular attention should be paid to the activities of a ‘One Letter Real Estate Firm” that is holding investments worth hundreds of crores linked to Sabareesan. (More about it later.)
Appointment of consultants across virtually every CMDA project also warrants close scrutiny to determine whether public funds were used appropriately and transparently.
The responsibility now lies with the @CMOTamilnadu to ensure that anyone found to have misappropriated public money is brought to justice. While action against lower-level officials for petty bribery is important, equal—if not greater—attention must be directed toward allegations of corruption at the highest levels of government and administration.
@Dr_Ezhilan Regularly reviewing existing schemes, improving them, and ensuring they continue to benefit the people effectively is equally an important part of governance.
@Dr_Ezhilan Mr. Ezhilan, by that logic, can we also call you a copycat ? This visionary scheme was originally introduced by Ponmanachemmal Dr. M.G. Ramachandran. Successive governments merely continued and expanded the same initiative.Good governance is not just about introducing new scheme
தமிழ்நாட்டின் அடிமடியில் கைவைத்துச் சுரண்டிய தீய சக்தியும், ஊழல் சக்தியும் 15 நாள் தூய ஆட்சிக்கே ஆடிப்போய் இருக்கிறார்கள்.
ஒரு நிர்வாகத்துப்புரவை நடத்திக் கொண்டிருக்கிறார் வெற்றித்தலைவர் விஜய்.
அந்தத்துப்புரவில் 60 ஆண்டுகளாய் அகப்படாத ஆவணங்களும் சிக்கிக்கொண்டிருக்கின்றன; அகலவாய்த் திருடர்களின் சுரண்டல்களும் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
டாஸ்மாக் ஊழல் துர்நாற்றம் களையப்பட்டு வருகிறது. இதுவரை அடித்த கொள்ளை, மக்கள் முன் விளக்கப்பட்டு வருகிறது.
மின் துறையில் எரிபொருள், உபகரணம், மின் மாற்றி, துணை மின் நிலையம், மின் உற்பத்தி, மின் பகிர்மானம், மின் கொள்முதல், மின் துறை ஊழியர்கள் என ஷாக்கடிக்கும் ஊழல்களை சலவைக்குப்போட்டு வெளுத்து எடுத்துக்கொண்டிருக்கிறது வெற்றிக்கழக அரசு.
புகைப்படக்கலைஞர் முதல் உயர்நிலை அரசு செயலாளர் வரை அத்தனை நியமனங்களும் ஒழுக்கமான, நேர்மையான நிர்வாகம் என அசைக்க முடியாத வரையறைக்கு கீழே கொண்டுவரப்பட்டுள்ளன.
தலை சுத்தமாக இருந்தால் தான், உடல் சரியாக இயங்கும். தலைமைச்செயலகம் என்கிற தமிழ்நாட்டின் நிர்வாகத்தலையை, மூளையை பீடித்திருந்த 'ப்ரோக்கர்' கலாச்சாரத்தை வெற்றித்தலைவர் அரியணையில் ஏறிய அடுத்து சில நாட்களுக்குள் அடியோடு ஒழித்திருக்கிறார்.
இனி வரும் எந்தக்காலத்திலும் ஊழல், கமிஷன், கையூட்டு இந்த வார்த்தைகளுக்கே இடமில்லை என்ற நிலையை தமிழ்நாட்டை நகர்த்திக்கொண்டிருக்கிறார் மனசாட்சியுள்ள மக்களாட்சியின் முதலமைச்சர்.
இந்த களையெடுப்பு நிர்வாகம், ஊழலிலும் சுரண்டலிலும் ஊறித்திளைத்து மாறி மாறி ஊழல் டீலிங் ஆட்சி நடத்தியவர்களின் தூக்கத்தையும், கனவுகளையும் குலைத்துப்போட்டிருக்கிறது.
விரைவில் தமிழ்நாடு நிர்வாகம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டிருக்கும்.
விஜய் முதல்வர் ஆக கூடாது என்பதற்காக, 2 பெரிய கட்சிகளை ஒன்று சேர்க்க முயற்சிக்க செல்லும் அளவுக்கு நான் தரங்கெட்டவன் கிடையாது. விஜய் முதல்வராவதை தடுப்பதற்காக மு.க.ஸ்டாலினை சென்று பார்த்தேன் என வரும் விமர்சனத்திற்கு ரஜினிகாந்த் மறுப்பு
கடந்த 15-05-2026 அன்று திருவரங்கம் அரசு மருத்துவமனையில் நான் மேற்கொண்ட திடீர் ஆய்வில், நோயாளிகளிடம் இருந்து மருத்துவமனை ஊழியர்கள் கையூட்டு பெறுவதாக எழுந்த புகாரை அடுத்து, நான் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், 4 பணியாளர்கள் கையூட்டு பெற்றது அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு முதல்வர் அவர்களின் அரசு மக்களுக்கானது!
மக்கள் நலனுக்கானது!!
-
Following the surprise inspection I conducted at the Government Hospital, Srirangam on 15 May 2026, serious complaints were received from patients alleging that certain hospital staff were demanding and accepting bribes.
Based on the findings of the inquiry initiated pursuant to my inspection, the government officers has officially confirmed that four staff members were involved in receiving illegal gratification, following which appropriate disciplinary action has been taken. Two government employees have been transferred, while two temporary staff members have been dismissed from service.
The Government led by the Hon’ble Chief Minister stands firmly for the welfare of the people and remains unwavering in its commitment to transparent, accountable, and people-centric governance.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம்