After tenders see negative bidding, #PDS procurement cost too reduces in Tamil Nadu. #TVK govt buys tur dal at Rs 31 cheaper per kg saving Rs 186 crore in three months. Story by @anbu_madras
. @Arappor in the past have flagged major violations and corruption in procurement of PDS in bidding, tendering and inflated costs too.
வெற்றித் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையின் நிறைவு கட்டமாக... சாலை வலம் வந்து தனது சொந்தங்களாகிய மக்களை சந்தித்தார்.
தாராபுரம் காளைகளாக இளைஞர்கள் அணிவகுக்க... வஞ்சியம்மன் வடிவாக நமது தாய்மார்கள் துணையிருக்க... மக்களைத் தேடி வந்து வெற்றி வேட்பாளர் அன்புச் சகோதரி திருமதி சத்தியபாமா அவர்களுக்காக, விசில் சின்னத்தில் வாக்கு சேகரித்தார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
தாராபுரம் காட்டிய அன்பு... தாராபுரம் ஊட்டிய தெம்பு... இவற்றோடு பரப்புரை நிறைவு செய்து புறப்பட்டிருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தேர்தல் முடிவுகளில் வெற்றிக் கனியை பறித்துத் தருவோம்.
மகளிரை இழிவு செய்யும் மறைமுகக் கூட்டணி வீழும்... நம் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியே வெல்லும்!
கொங்கு நாட்டின் பெருமித அடையாளம், நம் தேசியக்கொடி காத்த குமரன்... திருப்பூர் குமரன் அவர்களின் பிறந்த நாளில் அவரது தியாகத்தை போற்றி வணங்குகிறோம்.
இந்திய விடுதலைக்காக, 28 வது வயதில் நம்முடைய மூவர்ணக் கொடி ஏந்தி தொண்டர்கள் அணிக்கு தலைமை வகித்து சென்றபோது, ஆங்கிலேயக் காவலர்களின் தாக்குதலால் மயங்கி விழுந்து தான் சரிந்தாலும், நம் தேசியக் கொடி சரியாமல் காத்த திருப்பூர் குமரன் அவர்களின் தியாகத்தை நினைத்தால் இன்னமும் நெஞ்சம் சிலிர்க்கிறது!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
"மர்ம காய்ச்சல்" என்று மறைத்தவர்கள், "டெங்கு அரசு" என்று பெயர் பெற்றவர்கள் — இன்று டெங்கு குறித்து பாடம் எடுக்க வருகிறார்கள்!
தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்புகள் பற்றித் தொடர் தோல்விச்சாமி அறிக்கை என்ற பெயரில் அவதூறுகளை அள்ளி இறைத்திருக்கிறார். மக்கள் நலனுக்காக அல்ல, கரைந்து வரும் தனது அரசியல் இருப்பைத் தக்கவைக்கவே இந்த அறிக்கை என்பதை அதன் ஒவ்வொரு வரியும் காட்டுகிறது.
புள்ளிவிவரம் யாருடையது?
அவர் மேற்கோள் காட்டியிருக்கும் 17,348 டெங்கு பாதிப்பு, 4,653 உண்ணி காய்ச்சல், 71 பேருக்கு 21.09.2026 அன்று டெங்கு காய்ச்சல் ஆகிய எண்கள் அனைத்தும் இந்த அரசே அதிகாரப்பூர்வமாக, நாள்தோறும் வெளியிட்டு வரும் எண்கள்.
மறைக்காமல் வெளியிடுவதால்தான் அவரால் அவற்றை மேற்கோள் காட்டவே முடிகிறது. ஆனால் இதே திரு. பழனிசாமி அவர்களின் ஆட்சியில் டெங்கு பாதிப்பை டெங்கு என்று சொல்லக்கூடத் துணிவில்லாமல் "மர்ம காய்ச்சல்" என்று பெயர் சூட்டி மக்களின் உயிரோடு விளையாடினார்.
அதனால்தான் அவரது அப்போதைய அரசு "டெங்கு அரசு" என்று மக்களால் அழைக்கப்பட்டது. அவர் முதலமைச்சராக இருந்த 2017-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 23,294 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு 65 பேர் உயிரிழந்தார்கள் என்பது மத்திய அரசின் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையப் புள்ளிவிவரம். "ஆரம்பக் கட்டத்திலேயே முடக்கிவிட்டோம்" என்று அவர் இன்று கூறுவது வரலாற்றுக்குப் புறம்பான பொய். இதெல்லாம் அவருக்கு மறந்து போயிருக்கலாம். ஆனால் மக்கள் மறக்க மாட்டார்கள்.
பரிசோதனை மையங்கள் 131 ஆக விரிவுபடுத்தப்பட்டு, இதுவரை 2.23 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதால் பாதிப்புகள் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு உரிய சிகிச்சைகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வழங்கப்படுகின்றன. அதனால்தான் உயிரிழப்பு விகிதம் 0.05% என்ற அளவில் கட்டுக்குள் உள்ளது.
“நோயைக் கண்டறிவது குற்றமல்ல; மறைப்பதுதான் குற்றம்”. அந்தக் குற்றத்தைச் செய்தவர் யார் என்பது தமிழக மக்களுக்குத் தெரியும். அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு!
ஓர் இளம் உயிர் இழந்ததை அரசியல் ஆயுதமாக்க முயல்வது கீழ்த்தரமானது. அந்த மாணவருக்கு உண்ணி காய்ச்சல் பாதிப்பு என்று 18.09.2026 அன்று அரசு கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி நுண்ணுயிரியல் ஆய்வகத்தால் உறுதி செய்யப்பட்டது. உண்ணிக் காய்ச்சலுக்கான சிகிச்சை முறை டெங்குவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. எனவே அதற்கான தெளிவான, அறிவியல் பூர்வமான புரிதலை விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது மிக மிக அவசியம். துல்லியமாகக் கண்டறிந்து மக்களிடம் சொல்வதைத் "திசை திருப்பல்" என்கிறார், டெங்குவையே ஒப்புக்கொள்ளத் துணிவின்றி ஆட்சியை நடத்தியவர். ஒரு மருத்துவராக நான் சொல்கிறேன்: ஆய்வக அறிக்கையை அரசியல் அறிக்கையால் மாற்ற முடியாது.
"அமைச்சர் கூட்டத்தில் இல்லை" என்ற புலம்பல்!
பொது சுகாதாரத் துறை இயக்குநர் தலைமையில் நடந்தது மாவட்ட அலுவலர்களுடனான தொழில்நுட்பக் கூட்டம். அது தினந்தோறும் நடைபெறும் கண்காணிப்பின் ஒரு பகுதி.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்குச் செல்லும்போதும் அங்குள்ள மருத்துவமனைகளையும், மழைக்கால முன்னெச்சரிக்கை lநடவடிக்கைகளையும் நேரில் ஆய்வு செய்து வருகிறோம். 04.08.2026 அன்று மாநில அளவிலான ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தோம்; கிருஷ்ணகிரி, நாமக்கல், மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களில் நேரடிக் கள ஆய்வு மேற்கொண்டோம்.
பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியவுடன், 20.8.2026 அன்றே அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் விரிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. 26,303 கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்கள் 58.5 லட்சம் வீடுகளில் வீடு வீடாகக் கொசு உற்பத்தி இடங்களை அழித்து வருகின்றனர். 5,677 புகை மருந்து இயந்திரங்கள் பாதிப்புள்ள பகுதிகளில் தொடர்ந்து இயங்குகின்றன. 17,187 காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகளுடன் தனி காய்ச்சல் வார்டுகள் செயல்படுகின்றன. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தில் போதிய மருந்துகள் கையிருப்பில் உள்ளன. இரத்த வங்கிகளில் தட்டணு கையிருப்பு நாள்தோறும் கண்காணிக்கப்படுகிறது. டெங்கு சிகிச்சைக்கான தேசிய வழிகாட்டுதல்கள் குறித்து அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் தமிழக வெற்றிக் கழக அரசு மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. பொது சுகாதாரத்தில் அரசியல் செய்பவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள். அவர் தமது அறிக்கையில் "செய்ய வேண்டும்" என்று பட்டியலிட்டுள்ள ஒவ்வொன்றும் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கி நடைபெற்று வருகிறது. அவரது அறிக்கை, அரசின் நடவடிக்கைகளின் தாமதமான நகல் மட்டுமே.
டெங்குவை கட்டுப்படுத்துவதில் மக்களின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் இன்றியமையாதது. அதற்கான காணொளியும் நாம் வெளியிட்டு மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறோம்.
பொதுமக்களுக்கு….
வீடுகளைச் சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை மூடி வையுங்கள். வாரம் ஒருமுறை "உலர் நாள்" கடைப்பிடியுங்கள். காய்ச்சல் ஏற்பட்டால் சுயமாக வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்ளாமல் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகுங்கள். மருத்துவ உதவிக்கு 104 எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.
இறுதியாக, மக்கள் அளித்த மகத்தான ஆணையோடு அமைந்த அரசை "டம்மி" என்று சொல்லும் தகுதி, தேர்தலுக்குத் தேர்தல் மக்களால் நிராகரிக்கப்பட்டவருக்கு இல்லை. மக்களின் ஆணையை அவமதிப்பது, மக்களையே அவமதிப்பதாகும். மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக இதுபோல் உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் அரசியல் செய்ய முற்பட்டால் மக்களால் மீண்டும் மீண்டும் தொடர்ந்து நிராகரிக்கப்படுவார்கள் .
@CMOTamilnadu | @HM_Tamilnadu | @TVKVijayHQ | @TVKHQITwingoffl
#டெங்கு_விழிப்புணர்வு | #DenguePrevention | #TVKvijay | #ArunraajTVK
"வெற்றிப் பயணம்" திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் "வெற்றிப் பயணம்" திட்டத்தை 2.10.2026 அன்று தொடங்கி வைக்கிறார்.
#CMJosephVijay
A special guest will be waving the green flag at Silverstone this weekend! 👉 C. Joseph VIJAY
The Indian actor and Chief Minister of Tamil Nadu @actorvijay, will be joining us to support our Indian drivers in the UK and officially start the #SilverstoneRound in front of the 44-car grid. 🏁
We can’t wait to go racing this Saturday! 👊
#LMC #Michelin
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (8.9.2026) தலைமைச் செயலகத்தில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
#CMJosephVijay
ராஜன் ஐ கேர் மருத்துவமனையும், தி.நகர் ரோட்டரி
கிளப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த...
கண் தான விழிப்புணர்வு பேரணியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்... இன்றைய தினம் காலை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கொடியசைத்து துவக்கி வைத்தோம்.
திரை கலைஞர்கள் சாந்தனு, கீர்த்தி சாந்தனு ஆகியோரும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற நிகழ்வில் ரோட்டரி மாவட்ட கவர்னர் டாக்டர் ஸ்ரீராம் துவ்ரி முன்னிலை வகித்தார்.
நமக்கு பின்னாலும் நம் கண்கள் இந்த உலகத்தை காணட்டும்.
காண முடியாதவர்களுக்கும் இந்த உலகம் ஒளிரட்டும்!
@CMOTamilnadu | @HM_TamilNadu | @imKBRshanthnu | @KikiVijay
#கண்தானம் | #EyeDonationAwareness | #ArunraajTVK
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (7.9.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 2026-2027 ஆம் ஆண்டிற்கான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றினார்.
#CMJosephVijay
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்... ரோட்டரி சங்கத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகளை இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தொடங்கி வைத்தோம்.
ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களின் திறமைகளை கண்டறிந்து, ஊக்கமும் பயிற்சியும் அவர்களுக்கு அளித்தால் அவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை இந்த நிகழ்ச்சிகள் உறுதிப்படுத்தின.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக Cerebral Palsy எனும் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் தாய், மனம் தளராமல் தன் குழந்தைக்கு பயிற்சி கொடுத்து வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற வைத்து உதவி மேலாளராக ஆக்கியுள்ளார்.
அந்த தாயாரின் விடா முயற்சியையும், அந்தக் குழந்தையின் சாதனையையும் பாராட்டி கேடயம் வழங்கினோம்.
சிறப்பு குழந்தைகளுக்கு இது போன்ற விளையாட்டுப் போட்டிகளை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தினால் இன்னும் பல சிறப்பு குழந்தைகள் பயன்பெறுவார்கள். இதற்கான முன்னெடுப்புகளை நமது மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான அரசு உறுதியாக மேற்கொள்ளும்!
@CMOTamilnadu | @HM_TamilNadu
#CMJosephVijay | #SpecialChildren | #InclusiveSports | #ArunraajTVK
1/2
திண்டுக்கல்லைச் சேர்ந்த யுவ சஞ்சித், சூர்யா, மதுரையைச் சேர்ந்த பிரசன்னா, சேலத்தைச் சேர்ந்த விஷ்வா, சந்தோஷ், ஜோஸ்வா உள்ளிட்ட ஏழு கல்லூரி மாணவர்கள் கேரள மாநிலம் திருச்சூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த தகவல் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது.
இதேபோல கடந்த வியாழக்கிழமை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது பெற்றோரிடம் பேசுவதற்கே நம்மால் தாங்க முடியவில்லை.
நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு சமர்ப்பித்த விவரங்களின்படி இந்தியாவில் கடந்த 2025 ஆம் ஆண்டு சாலை விபத்துகளில் 1,83,434 உயிர்களை நாம் இழந்திருக்கிறோம்.
2025-ல் தமிழ்நாட்டில் மட்டும் சாலை விபத்துகளால் 18, 505 பேர் உயிரிழந்துள்ளனர். 2024 ஆம் ஆண்டில் 18,449 உயிர்கள் சாலை விபத்து காரணமாக பறிபோன நிலையில், அதைவிட 2025 ஆம் ஆண்டில் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
2026 ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை தமிழ்நாட்டில் 43, 529 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 11,019 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் இதே காலகட்டத்தில் 2,340 சாலை விபத்துகளில் 308 பேர் இறந்துள்ளனர். இந்த தகவல்கள் மாநில குற்ற ஆவணக் காப்பக பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான பயணம் பற்றிய விழிப்புணர்வும் எச்சரிக்கை உணர்வும் நமக்கு அதிகம் தேவை என்பதையே மேற்கண்ட தரவுகள் எடுத்துக் காட்டுகின்றன.
அதிக விபத்துகள் நடக்கும் பகுதிகள் மாநில நெடுஞ்சாலைகளில் ஹாட் ஸ்பாட் எனவும், தேசிய நெடுஞ்சாலைகளில் பிளாக் ஸ்பாட் எனவும் அடையாளம் காணப்பட்டு விபத்து நடக்காத வண்ணம் அவற்றை சீரமைக்கும் பணிகள் ஒவ்வொரு அரசிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதையெல்லாம் கடந்து சாலையில் பயணிக்கும் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் செயல்படுவோம்! விபத்துகளையும் உயிரிழப்பையும் தடுப்போம்!
1859-ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்டக் காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும் காவலர் நாளை முன்னிட்டு, சமூகத்தில் அமைதி நிலவிடவும், சட்டத்தின் ஆட்சி நிலைபெறவும் தன்னலமின்றிப் பணியாற்றிவரும் காவல்துறையினர் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த காவலர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது மாநிலத்தில், குற்றங்களைத் தடுத்து, சட்ட ஒழுங்கைப் பேணுவதுடன், ஆபத்தான சூழல்களிலும், பேரிடர் காலங்களிலும் மக்களின் உயிர், உடைமை மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் துணிவுடன் நின்று களப்பணி ஆற்றிவரும் காவல்துறையினரின் வீரமும் தியாகமும் என்றும் போற்றத்தக்கவை.
காவல்துறையினரின் பணிச்சுமையைக் குறைத்து, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அவர்களின் பணித்திறனை மேம்படுத்தி, காவலர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான நலத்திட்டங்களை உறுதிசெய்வதற்கும் நமது அரசு முன்னுரிமை அளிக்கும்.
மக்களும் காவல்துறையுடன் கரம் கோர்த்து, நம்பிக்கையுடனும் நல்லிணக்கத்துடனும் பயணித்து, அமைதியும் பாதுகாப்பும் நிறைந்த உன்னதத் தமிழ்நாட்டை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்!
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி,
நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி மக்களும், மக்களின் பிரதிநிதிகளும் தங்கள் கிராமங்கள் மேம்பட கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கிராம சபை சிறக்கட்டும்!கிராமங்கள் செழிக்கட்டும்!!
#Gramasabai
இன்றைய தினம் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு மற்றும் சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ சேர்க்கை ஆணைகளை வழங்கினோம்.
இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் மாற்றுத் திறனாளி மாணவர்களை குறிப்பிடும்போது... வழக்கத்திலிருந்து நாம் தவிர்க்க வேண்டிய வார்த்தையை தவறுதலாக பயன்படுத்தியமைக்காக மிகவும் வருந்துகிறோம்.
மாற்றுத் திறனாளிகள் மீது பெரும் அன்பும் மரியாதையும் கொண்டிருக்கிறோம்.
அன்புச் சகோதர சகோதரிகளுக்கு நமது மனப்பூர்வமான வருத்தத்தினை இதன் மூலம் பதிவு செய்கிறோம்.
நம்பிக்கையின் வெளிச்சமாக, மாற்றத்தின் முகவரியாகத் திகழும் இளைய சமுதாயத்திற்கு எனது உளங்கனிந்த சர்வதேச இளைஞர் நாள் வாழ்த்துகள்!
புதிய எண்ணங்கள், அஞ்சா நெஞ்சம், முடிவில்லா ஆற்றலால் உலகை நேர்மறையாக மாற்றும் வல்லமை இளைஞர்களாகிய உங்களிடம் மட்டுமே உள்ளது. சோதனைகளை வென்று, சாதனைகள் படைத்து தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்!
உலகரங்கில் அனைத்துத் துறைகளிலும் நமது இளைஞர்கள் வெற்றியடைய எனது உளமார்ந்த வாழ்த்துகள்!
கனவுகள் நனவாகட்டும்!
சாதனைகள் தொடரட்டும்!
#CMJosephVijay
#InternationalYouthDay