அஇஅதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தில் “கழக ஊடகபிரிவு” துவக்கி அதில் மாநில செயலாளர் எனும் பதவியை வழங்கிய கழக பொதுச் செயலாளர் #எடப்பாடியார் அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்று கொண்டேன்.
அறிவிப்பு வந்த நொடி முதல் என்னை அலைபேசி மற்றும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
@EPSTamilNadu@AIADMKOfficial
என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளே!
புரட்சித் தலைவரின் தியாகத்தால் உருவாகி, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தீரத்தால் கட்டிக் காக்கப்பட்ட நம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 54 ஆண்டுகாலப் பெருமைமிகு வரலாற்றை நிறைவு செய்து, 55-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தப் பொன்னான தருணத்தில், என் பேரன்பிற்குரிய கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்!
“இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்!” என்று நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முழங்கிய வரலாற்றுப் பிரகடனத்தை நனவாக்கும் உறுதியோடு, நமது வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்!
இதற்கு முன்பு எத்தனையோ எதிரிகளையும், துரோகிகளையும் எதிர்கொண்டு வெற்றிகண்ட என் அன்பிற்குரிய கழகத் தோழர்களே! புரட்சித் தலைவரின் இரத்தத்தின் இரத்தங்களே!
இன்றைக்கு நம் முன்னால் எழுந்திருக்கும் புதிய அரசியல் சவால்களையும், ஜனநாயக விரோத சக்திகளையும், மக்கள் விரோத ஆட்சியையும் ஜனநாயக வழியில் எதிர்கொண்டு வீழ்த்திட, ஒற்றுமையோடும், உறுதியோடும் களமிறங்கிட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறேன்!
புரட்சித் தலைவர் காட்டிய பாதையில் ! புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வகுத்துத் தந்த இலட்சிய வழியில்! தமிழகத்தின் உரிமைகளைக் காத்து, மீண்டும் நல்லாட்சி மலர்ந்திட ஒன்றுபட்டு உழைப்போம்!
#55YrsOfAIADMK
#என்றென்றும்_அஇஅதிமுக
@AIADMKOfficial
#JUSTNOW | மதுராந்தகம் தொகுதிக்கு நாளை இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், மோச்சேரி என்ற பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வந்த தவெகவினரை விரட்டிய அதிமுகவினர்
சம்பவ இடத்திற்கு பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் உள்ளிட்டோர் வருகை
#SunNews | #Madhurandhagam | #ByElection | #TVK | #ADMK
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளப் பெருமக்களுக்கு அன்பு வேண்டுகோள்!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
நான் பெரிய அரசியல்வாதியின் வாரிசோ, மிகப் பெரிய சினிமா நட்சத்திரமோ கிடையாது.
நான் உங்களில் ஒருவன். உங்க ஊருல, தெருவுல, வீட்டுல, நீங்க தினசரி சாதாரணமா பாக்குற அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா மாதிரி, எளிய மனிதன், இந்த எடப்பாடி பழனிசாமி.
எனக்கு நம்ம மக்கள் படுற கஷ்டம் தெரியும், நம்ம ஜனத்தோட அன்றாட வாழ்க்கை தெரியும், நம்மளோட பிரச்சனைகளை தெரியும்.
ஆனா எனக்கு அதுக்கு மொழியில் பக்கம் பக்கமாக, ரசிகர்களை மயக்குற மாதிரி, போலி வசனங்கள் பேசத் தெரியாது.
ஏன்னா, நான் கீழ இருந்து வந்தவன். அதனாலதானோ என்னவோ, மற்ற எல்லா கட்சி தலைவர்களை விட, இந்த விவசாயி பழனிசாமிக்கு எதிரா, அத்தனை சூழ்ச்சிகள்.
எனக்கு பின்னால், 100 வருடத்திற்கு இந்த இயக்கம் இருக்கும்ணு சொன்ன, புரட்சி தலைவி அம்மாவின் சின்னம், இந்த இரட்டை இலை.
இதை காப்பாத்த நினைச்சது நம்முடைய தவறா? இல்ல, உங்களை போல சாதாரண குடும்பத்தில் பிறந்தது என்னோட தவறா?
புரட்சி தலைவரும், புரட்சித் தலைவியும், கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாதுன்னு, இந்த நிமிடம் வரை நானும், தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், போராடிட்டு இருக்கிறோம்.
ஆனால்... அதற்கு எதிராக எத்தனை சோதனைகள்?
எத்தனை சூழ்ச்சிகள்?
எத்தனை துரோகங்கள் ?
இந்த இயக்கத்தை சூறையாட எத்தனை நாடகங்கள்?
இன்று இந்த இரட்டை இலையை விமர்ச்சனம் செய்ய நினைக்கிற தமிழக வெற்றிக் கழகத்துக்கு கூட, நாம கரூர் விவகாரத்துல நல்லதுதானே நினைச்சோம்?
அதான் நாம செய்த குற்றமா ? அதுக்கான பிரதிபலனாதான் நம்ம MLA-க்களை பேரம்பேசி திருடிட்டு போக பாக்குறாங்களா?
உயிரை கொடுத்து உழைத்த 6,000 கட்சி நிர்வாகிகளைப் பற்றியோ, இவங்களை நம்பி வெற்றிபெற வைத்த லட்சக்கணக்கான மக்களைப் பத்தியோ ஒரு நிமிடம் யோசிச்சிருந்தாகூட, இப்படி செய்ய மனசு வந்துருக்குமா?
அன்பு மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி மக்களே, நாங்க நியாயம் கேட்கிறோம்.
அன்பு பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர-சகோதரிகளே, உங்ககிட்ட நியாயம் கேட்கிறோம்.
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி சார்பில் உங்களிடம் நியாயம் கேட்கிறோம்.
இதற்கான தீர்ப்பை நீங்களே கொடுங்க. நீங்க கொடுக்கப்போற தீர்ப்பு, இனி MLA-க்களை, குதிரை பேரத்தில் விலை பேசும் த.வெ.க-வுக்கும், விலை போக நினைச்ச துரோகிகளுக்கும், வாழ்நாள் பாடமாக, இந்த பச்சை துரோகத்துக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும்.
எனவே, அக்.6 அன்று,
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை 🌱
#வெல்லட்டும்_இரட்டைஇலை
@AIADMKOfficial
இடைத்தேர்தல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, காவல்துறையை கொண்டு அருவருக்கத்தக்க அத்துமீறலை செய்கிறது ஜோசப் விஜய் கும்பலின் அரசு.
அஇஅதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. APR.செல்வக்குமரன் அவர்கள்,
எவ்வித முகாந்திரங்களும் அற்று போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
காரணங்கள் எதுவும் சொல்லாமல் தாராபுரம் காவல் நிலையத்தில் தற்போது காக்க வைக்கப்பட்டுள்ளார்.
ஆளும் அராஜகம் காணீர்.
போலீஸின் அராஜகம் பாரீர்.
தேர்தல் ஆணையம் தூங்குகிறதா..!?
When the police harassed Vijayan, a senior journalist and anchor with Puthiya Thalaimurai TV, in the name of an “inquiry,” making him run from pillar to post and even confiscating his mobile phone, Shabeer chose to remain silent.
So why is Shabeer getting so worked up over this news card now?
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், வெறும் 107 MLA-க்களுடன், மைனாரிட்டி ஆட்சி நடத்தும் கட்சியின் கொள்கையும் செயல்பாடும் என்னவென்று பார்ப்போமா?
பிச்சை:
தீயசக்தி தீயசக்தி என்று வாய்கிழிய பேசிவிட்டு, அந்த கட்சிக்கு அளித்த வாக்குகளால் வெற்றி பெற்ற அவர்களின் கூட்டணி கட்சிகளை, அதான்…. கல்லாப்பெட்டி கூட்டணி என்று கூறிய அதே கட்சிகளில் அலுவலகங்களுக்கு “யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே” என்பது போல, “சோபா வந்தது முன்னே, தவெக வந்தது பின்னே” என்று படியேறி பிச்சை எடுத்து ஆட்சி அமைத்தது.
திருட்டு:
சொந்தமாக நின்று ஜெய்க்க வக்கில்லாமல், அடுத்த கட்சி MLA-க்களை “கீழே ராஜினாமா, மேலே இணைப்பு” என தலைமைச் செயலகத்தை குதிரை பேரக் கூடாரமாக மாற்றி, திருட்டுத்தனமாக ஆட்சியை காப்பாற்ற நினைப்பது.
ஓட்டம்:
செய்தியாளர்களைக் கண்டால் ஓட்டம்,
சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் ஓட்டம்,
கரூரில் மக்கள் கொத்து கொத்தாக மடிந்த போது ஓடு ஓடு ஓடு ஓடு என்று ஓட்டம் பிடித்தது எல்லாம் தமிழ்நாடு மறக்குமா?
தமிழினத்தை அழிக்கத் துணிந்து, ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளை இலங்கையில் கொன்றுக் குவித்த வரலாற்றுத் துரோகி காங்கிரசோடு,
நீட் என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப் படுத்தியதோடு, சுப்ரீம் கோர்ட் வரை அதை நிலைநாட்டி, என்று தமிழக மாணவர்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் முதல் காரணமான காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்து நிற்கும் நீங்கள் எல்லாம், எங்கள் கூட்டணியைப் பற்றி பேச கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா என்பதை யோசியுங்கள் தற்குறிகளே!
நேருக்கு நேர் நின்று பிரச்சனைகளை சந்திக்க துணிவு இல்லாமல், 72 நாட்கள் வீட்டுக்குள் முக்காடு போட்டு ஒளிந்துகொண்ட சூரரின் சுண்டெலிகள்… மன்னிக்க… அணில்கள் சற்று ஓரமாக போய் விளையாடவும்!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்