இதே வள்ளிக்கும்மியை ஒருவேளை அதிமுக பயன்படுத்தியிருந்தாலோ, நாம் தமிழர் கட்சி பயன்படுத்தி இருந்தாலோ, பாஜக பயன்படுத்தி இருந்தாலோ இந்நேரம் "சாதியவாதிகளை ஆதரிக்கும் கட்சிகள், சாதியை வளர்க்கும் கட்சிகள்" என்ற முத்திரையை குத்தி இருப்பார்கள்.
Breaking
சட்டப்பேரவை அனுப்பி வைக்கும் மசோதாக்களின் மீது அரசியல் சாசனம் வழங்காத அதிகாரங்களை பயன்படுத்தி தன்னிச்சையாக செயல்பட மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என உச்ச நீதிமன்றம் மிக முக்கிய தீர்ப்பு
Last week, Senthil Balaji and Sabareesan went to Delhi.
This week, the judges who were supposed to probe the ₹1,000C TASMAC scam have stepped aside.
Like @TVKVijayHQ said, DMK and BJP have a secret understanding, scam grows and when questioned, the system shields them 🤝
Varisu maari oru kuppaiya vachi Ajith aiye clash la left right vaangitaan SK lam emathuram kadaisi padam vera Parasakthi release aana thadaiyame illama panna poraan.
@TVKVijayHQ அவர்கள் இதைத்தான் கூறினார்.
"அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் என்ன பாயாசமா.??" என்று கூறினார். விஜய் அவர்கள் கூறியதை கொஞ்சம் அண்ணன் கோபி நயினார் அவர்களுடைய கருத்தோடு ஒப்பீடுகள் செய்து பார்ப்போம்
பாசிசம் என்பது கட்சியோ அமைப்போ அல்ல. அது ஒரு சிந்தனை. குறிப்பாக ஆதிக்க சிந்தனை. என்னை எவனும் கேள்வி கேட்க கூடாது என்ற சர்வாதிகார சிந்தனை. அந்த சர்வாதிகாரத்தை நோக்கி நாம் கேள்விகளை முன் வைக்கும் பொழுது அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் நிகழ்த்தப்படும். மீறி கேட்கும்பொழுது அரச பயங்கரவாதங்கள் நிகழ்த்தப்படும்.
எனவே இதுபோன்ற சிந்தனையை கொண்ட ஒரு கட்சி தான் பாஜக.. அதே Political Statergy'ஐ திமுகவும் கையாளுகின்றதா.??? அதாவது பாசிச போக்கை கையாளுகின்றதா.? என்ற கேள்வி எழும்புகின்றது. இங்கு சிலவற்றை நாம் ஒப்பீடுகள் செய்து பார்ப்போம்.
பாஜகவை பாதுகாப்பதற்காக எவ்வாறு Rss சங்பரிவார் கும்பல்கள் இயக்கங்களாக இயங்கி கொண்டிருக்கின்றதோ, ஏறக்குறைய திமுகவை பாதுகாப்பதற்காக தி.க உள்ளிட்ட சில பெரியாரிய அமைப்புகளும் இயங்கி கொண்டிருக்கின்றன. RSS கும்பல்கள் தங்களை மக்களுக்கானவர்கள் என்று காட்டிக் கொண்டாலும், அவர்கள் மக்கள் பக்கம் நிற்காமல் பாஜகவின் எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்வதை மட்டும் செயல் திட்டமாக வைத்திருப்பார்கள். இங்கே திக உள்ளிட்ட ஒரு சில பெரியார் இயக்கங்களும் அப்படித்தான். நாங்கள் மக்களுக்கானவர்கள் என்று இவர்கள் கூறிக் கொண்டாலும் திமுகவை யார் எதிர்த்தாலும் விமர்சனம் செய்வார்கள். ஆனால் திமுகவை நோக்கி கேள்விகளை முன்வைக்க மாட்டார்கள்.
பாஜக எவ்வாறு இஸ்லாமியர்களை எதிரிகளாக காட்டிக்கொண்டு, இந்து பெரும்பான்மை வாதத்தை முன் நிறுத்துகின்றார்களோ, இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளை கண்டும் காணாமல் செல்கின்றார்களோ, ஏறக்குறைய திமுகவும் அதேபோன்று தலித் அல்லாதவர்கள் என்ற பெரும்பான்மைவாதத்தை காப்பதற்காக, பட்டியல் சமுதாய மக்கள் மீது நிகழ்த்தப்படுகின்ற சாதிய வன்கொடுமைகளை கண்டு கொள்வதில்லை.
இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மதக் கலவரங்கள் ஏற்பட்டால் ஆதிக்கவாதிகளை தக்க வைப்பதற்காக பாஜக இந்துக்களுக்கு ஆதரவாக தான் நிற்கும். ஏறக்குறைய திமுகவிலும் இதே போன்று தான் இடைநிலை சாதியினருக்கும் பட்டியல் சமுதாய மக்களுக்கும் பிரச்சனைகள் என்றால் இடைநிலை சாதி என்ற ஆதிக்கத்தை தங்களுடைய அரசியலுக்கு தக்க வைப்பதற்காக திமுக ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாக தான் நிற்கும், நிற்கின்றது. அதை வேங்கைவயல் உட்பட பல உதாரணங்களில் நாம் காணலாம்.
இஸ்லாமியர்களுக்கான மௌலானா ஆசாத் திட்டம், சிறுபான்மை மக்களுக்கான Pre-Metric ஸ்காலர்ஷிப் போன்ற திட்டங்கள் இருந்தபோதிலும் கூட பாசிச பாஜக அரசு அதை நடைமுறைப்படுத்தாது, அவர்களுடைய வளர்ச்சி சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்தாது. திமுகவிலும் இதே நிலைமைதான் பட்டியல் சமுதாய மக்களுடைய வளர்ச்சிக்கான ஆதிதிராவிடர் நிதியை 5000 கோடியை திருப்பி அனுப்பியது. பட்டியல் சமுதாய மக்களுக்கு என்று இயங்கும் விழிக்கண் மற்றும் கண்காணிப்பு குழுவை கடந்த மூன்று வருடமாக முதல்வர் கூட்டவில்லை. ஆதிதிராவிடர் நலக்குழுவுக்கு உறுப்பினர்களே இன்னும் நியமிக்கவில்லை. ஆனால் ஆட்சியும் முடியப்போகின்றது.
தனக்கு எதிராக போராட்டம் செய்பவர்களை பாசிச பாஜக அடக்குமுறைகளை ஏவி விட்டு அடக்கப் பார்க்கும். மக்களுக்கு ஆதரவாக நிற்காமல் தனியாருக்கு ஆதரவாகவே நிற்கும். இதை திமுகவோடு ஒப்பீடு செய்து பாருங்கள் samsung போராட்டத்தில் போராட்டக்காரர்கள் ஒடுக்குமுறை செய்யப்பட்டார்கள். பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து போராடும் மக்கள் ஒடுக்குமறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி அரசு ஊழியர்கள் போராட்டம் செய்தால் சம்பளம் கட் செய்யப்படும் என்று எச்சரித்தார்கள். கரடிபுத்தூரில் கல் குவாரிக்கு மணல் எடுக்கக் கூடாது என்று போராடிய கோபி நயினார் உட்பட 40 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தார்கள் எனவே திமுகவும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக தான் நின்றது.
இன்னும் இது போன்ற ஒப்பீடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்
எனவே பாஜக ஒரு பாசிச கட்சி என்று தீவிரமாக விமர்சிக்கும் திமுக, பாஜகவுடைய அதே Political Statergy'ஐ திமுகவும் கையில் வைத்துக் கொண்டு தன்னை ஜனநாயக கட்சி என்று எவ்வாறு காட்டிக்கொள்ள முடியும்.
இதைத்தான் விஜய் அவர்கள் அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் பாயாசமா.?? என்று கூறினார். அதையேதான் கோபி நயினார் அவர்களும், "அவன் சனாதனம் என்ற பாசிசமாக அடக்கு முறையை மேற்கொள்கின்றான். நீங்கள் திராவிடம் என்ற பெயரில் பாசிசமாக அடக்கு முறையை மேற்கொள்கின்றீர்கள்" என்று கூறுகின்றார். இனி வரப்போகும் காலங்களில் எல்லோரும் இதை பேசுவார்கள்.
இருட்டும் திருட்டும் ஒரு நாள் விடிவுக்கு வரும்.
- இரா.இளம்பெருவழுதி
25 நாட்களில் முழு நேர அரசியலில் விஜய்
25 நாட்களுக்கு பிறகு தீவிர அரசியலில் களமிறங்கும் விஜய்
படப்பிடிப்பை முடித்த கையோடு பூத் கமிட்டி மாநாடு, சுற்றுப்பயணம், மண்டல மாநாடு, பொது கூட்டங்களை நடத்த விஜய் திட்டம் என தகவல்
தவெக தலைவர் விஜய் தற்போது நடித்து வரும் ஜனநாயகன் படப்பிடிப்பு இன்னும் 25 நாட்களில் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது
படப்பிடிப்பு முடிந்ததும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறப்படும் நிலையில் ஏப்ரல் இறுதியில் பூத் கமிட்டி மாநாட்டை நடத்த திட்டம்
#tvk #TVKVijay #ThanthiTV