தேர்தல் பரப்புரையில் திமுகவினர் 8000 ரூபாய் கூப்பன் மாதிரியை பொதுமக்களிடம் கொடுத்து வாக்கு சேகரித்த வீடியோ வெளியானது. இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி பெற்றுவிட்டதாக திமுகவினர் அக்கடிதத்தை இணையத்தில் பதிவிட்டனர். அதற்கு தமிழகத் தேர்தல் ஆணையம் ரிப்ளை செய்து, "அந்த சான்றிதழ் மின்னணு ஊடகங்களில் உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதற்காக மட்டுமே வழங்கப்பட்டது. இச்சான்றிதழ் அச்சிடப்பட்ட பிரசுரப் பொருட்கள், குறிப்பாக துண்டுப் பிரசுரங்கள் அல்லது கைப்பிரதிகளுக்கு பொருந்தாது" என தெளிவுபடுத்தியுள்ளது
#DMK | #ECI | #தேர்தல்_களத்தில்_விகடன் | #TNElectionsWithVikatan