“சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர்
திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ளார்.
ஏற்கனவே மேனாள் அமைச்சரும்
திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான திரு. அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல
பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.
மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர மீது சட்டப்பேரவை தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
- வன்னி அரசு
துணைப் பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
"மர்ம காய்ச்சல்" என்று மறைத்தவர்கள், "டெங்கு அரசு" என்று பெயர் பெற்றவர்கள் — இன்று டெங்கு குறித்து பாடம் எடுக்க வருகிறார்கள்!
தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்புகள் பற்றித் தொடர் தோல்விச்சாமி அறிக்கை என்ற பெயரில் அவதூறுகளை அள்ளி இறைத்திருக்கிறார். மக்கள் நலனுக்காக அல்ல, கரைந்து வரும் தனது அரசியல் இருப்பைத் தக்கவைக்கவே இந்த அறிக்கை என்பதை அதன் ஒவ்வொரு வரியும் காட்டுகிறது.
புள்ளிவிவரம் யாருடையது?
அவர் மேற்கோள் காட்டியிருக்கும் 17,348 டெங்கு பாதிப்பு, 4,653 உண்ணி காய்ச்சல், 71 பேருக்கு 21.09.2026 அன்று டெங்கு காய்ச்சல் ஆகிய எண்கள் அனைத்தும் இந்த அரசே அதிகாரப்பூர்வமாக, நாள்தோறும் வெளியிட்டு வரும் எண்கள்.
மறைக்காமல் வெளியிடுவதால்தான் அவரால் அவற்றை மேற்கோள் காட்டவே முடிகிறது. ஆனால் இதே திரு. பழனிசாமி அவர்களின் ஆட்சியில் டெங்கு பாதிப்பை டெங்கு என்று சொல்லக்கூடத் துணிவில்லாமல் "மர்ம காய்ச்சல்" என்று பெயர் சூட்டி மக்களின் உயிரோடு விளையாடினார்.
அதனால்தான் அவரது அப்போதைய அரசு "டெங்கு அரசு" என்று மக்களால் அழைக்கப்பட்டது. அவர் முதலமைச்சராக இருந்த 2017-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 23,294 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு 65 பேர் உயிரிழந்தார்கள் என்பது மத்திய அரசின் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையப் புள்ளிவிவரம். "ஆரம்பக் கட்டத்திலேயே முடக்கிவிட்டோம்" என்று அவர் இன்று கூறுவது வரலாற்றுக்குப் புறம்பான பொய். இதெல்லாம் அவருக்கு மறந்து போயிருக்கலாம். ஆனால் மக்கள் மறக்க மாட்டார்கள்.
பரிசோதனை மையங்கள் 131 ஆக விரிவுபடுத்தப்பட்டு, இதுவரை 2.23 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதால் பாதிப்புகள் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு உரிய சிகிச்சைகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வழங்கப்படுகின்றன. அதனால்தான் உயிரிழப்பு விகிதம் 0.05% என்ற அளவில் கட்டுக்குள் உள்ளது.
“நோயைக் கண்டறிவது குற்றமல்ல; மறைப்பதுதான் குற்றம்”. அந்தக் குற்றத்தைச் செய்தவர் யார் என்பது தமிழக மக்களுக்குத் தெரியும். அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு!
ஓர் இளம் உயிர் இழந்ததை அரசியல் ஆயுதமாக்க முயல்வது கீழ்த்தரமானது. அந்த மாணவருக்கு உண்ணி காய்ச்சல் பாதிப்பு என்று 18.09.2026 அன்று அரசு கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி நுண்ணுயிரியல் ஆய்வகத்தால் உறுதி செய்யப்பட்டது. உண்ணிக் காய்ச்சலுக்கான சிகிச்சை முறை டெங்குவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. எனவே அதற்கான தெளிவான, அறிவியல் பூர்வமான புரிதலை விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது மிக மிக அவசியம். துல்லியமாகக் கண்டறிந்து மக்களிடம் சொல்வதைத் "திசை திருப்பல்" என்கிறார், டெங்குவையே ஒப்புக்கொள்ளத் துணிவின்றி ஆட்சியை நடத்தியவர். ஒரு மருத்துவராக நான் சொல்கிறேன்: ஆய்வக அறிக்கையை அரசியல் அறிக்கையால் மாற்ற முடியாது.
"அமைச்சர் கூட்டத்தில் இல்லை" என்ற புலம்பல்!
பொது சுகாதாரத் துறை இயக்குநர் தலைமையில் நடந்தது மாவட்ட அலுவலர்களுடனான தொழில்நுட்பக் கூட்டம். அது தினந்தோறும் நடைபெறும் கண்காணிப்பின் ஒரு பகுதி.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்குச் செல்லும்போதும் அங்குள்ள மருத்துவமனைகளையும், மழைக்கால முன்னெச்சரிக்கை lநடவடிக்கைகளையும் நேரில் ஆய்வு செய்து வருகிறோம். 04.08.2026 அன்று மாநில அளவிலான ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தோம்; கிருஷ்ணகிரி, நாமக்கல், மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களில் நேரடிக் கள ஆய்வு மேற்கொண்டோம்.
பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியவுடன், 20.8.2026 அன்றே அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் விரிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. 26,303 கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்கள் 58.5 லட்சம் வீடுகளில் வீடு வீடாகக் கொசு உற்பத்தி இடங்களை அழித்து வருகின்றனர். 5,677 புகை மருந்து இயந்திரங்கள் பாதிப்புள்ள பகுதிகளில் தொடர்ந்து இயங்குகின்றன. 17,187 காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகளுடன் தனி காய்ச்சல் வார்டுகள் செயல்படுகின்றன. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தில் போதிய மருந்துகள் கையிருப்பில் உள்ளன. இரத்த வங்கிகளில் தட்டணு கையிருப்பு நாள்தோறும் கண்காணிக்கப்படுகிறது. டெங்கு சிகிச்சைக்கான தேசிய வழிகாட்டுதல்கள் குறித்து அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் தமிழக வெற்றிக் கழக அரசு மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. பொது சுகாதாரத்தில் அரசியல் செய்பவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள். அவர் தமது அறிக்கையில் "செய்ய வேண்டும்" என்று பட்டியலிட்டுள்ள ஒவ்வொன்றும் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கி நடைபெற்று வருகிறது. அவரது அறிக்கை, அரசின் நடவடிக்கைகளின் தாமதமான நகல் மட்டுமே.
டெங்குவை கட்டுப்படுத்துவதில் மக்களின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் இன்றியமையாதது. அதற்கான காணொளியும் நாம் வெளியிட்டு மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறோம்.
பொதுமக்களுக்கு….
வீடுகளைச் சுற்றி நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை மூடி வையுங்கள். வாரம் ஒருமுறை "உலர் நாள்" கடைப்பிடியுங்கள். காய்ச்சல் ஏற்பட்டால் சுயமாக வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்ளாமல் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகுங்கள். மருத்துவ உதவிக்கு 104 எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.
இறுதியாக, மக்கள் அளித்த மகத்தான ஆணையோடு அமைந்த அரசை "டம்மி" என்று சொல்லும் தகுதி, தேர்தலுக்குத் தேர்தல் மக்களால் நிராகரிக்கப்பட்டவருக்கு இல்லை. மக்களின் ஆணையை அவமதிப்பது, மக்களையே அவமதிப்பதாகும். மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக இதுபோல் உண்மைக்கு புறம்பான தகவல்களுடன் அரசியல் செய்ய முற்பட்டால் மக்களால் மீண்டும் மீண்டும் தொடர்ந்து நிராகரிக்கப்படுவார்கள் .
@CMOTamilnadu | @HM_Tamilnadu | @TVKVijayHQ | @TVKHQITwingoffl
#டெங்கு_விழிப்புணர்வு | #DenguePrevention | #TVKvijay | #ArunraajTVK
வருமுன் காப்பதே சிறந்தது.
டெங்கு நோய் பரவாமல் தடுப்பதில் மக்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது. சுகாதாரத்துறை சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் இந்த விழிப்புணர்வு காணொளியை அனைவரும் பார்த்து பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Vote Chori,
One Nation One Election
இப்டி எல்லாத்தையும் பத்தி ஏற்க்கனவே CM Vijay பேசிட்டாரு.
Sun News மட்டும் பாக்குற கூட்டம்..
விஜய் ஏன் Vote Chori பத்தி பேசலன்னு கடிச்சிட்டு இருக்கு 😭
என்னத்த சொல்ல
🔴V.s பாபு 15 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். நேரடியாக முதலமைச்சர் விஜய் அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை கேட்டு அறிந்தார்.
தற்குறி கூட்டம் சொல்லுற எல்லாரையும் கிழித்து விட்டார் அமைச்சர் CTR நிர்மல் 🔥
எங்க மக்களை இவ்வளவு நாள் அரசியல் கற்றுக்கொள்ள விடல ஆனால் எங்கள் ஆட்சியில் எங்க மக்கள் எங்க பசங்க எல்லாரும் உங்களை விட நல்லவே இனி அரசியல் பேசுவாங்க
30-40 வருடங்களாக வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்காமல் வைத்துள்ளது இரு திராவிட அரசுகளும்
25 முதல் 30 லட்சம் வீடுளுக்கு
மின் இணைப்பு கொடுத்துள்ளது தவெக அரசு 💪🏻
@CMOTamilnadu ண்ணே உன்னை முதலமைச்சராகியதற்கு இந்த நாடே பெருமைப்படும் 🫶🏻
நாடே அதிர்ந்த ஒரு கொடூர வழக்கில், கடந்த திமுக ஆட்சியில் விசாரணையே இல்லாமல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக எழும் கேள்விகளுக்கு இன்று வரை தெளிவான பதில் இல்லை.
யாரைக் காப்பாற்ற இந்த மௌனம்?
உங்கள் ஆட்சியில் ஏன் விசாரணை முடக்கப்பட்டது?
தொடர்பு இல்லை என்றால், வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டியதுதானே?
#வாயத்_தொறங்க_ஸ்டாலின்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (23.9.2026) சென்னை, அண்ணா சாலையிலுள்ள தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்திற்கு நேரில் சென்று அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
#CMJosephVijay
முன்னாள் உள்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே...
பச்சிளம் சிறுமிகளைப் பாழாக்கிய ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் மூடி மறைத்தது ஏன்?.
#வாயத்_திறங்க_ஸ்டாலின் சார்...
மணி கொடுத்தால் எந்த மணியையும் காப்பாற்றும் அறிவாலய அறங்காவலரான
மு.க.ஸ்டாலின், பாலியல்
பாதகன் வீரமணி மீது நடவடிக்கை எடுக்காமல் , வழக்கை புதைகுழியில் தள்ளியது ஏன்?
நாடே அதிர்ந்த ஒரு கொடூர வழக்கில், கடந்த திமுக ஆட்சியில் விசாரணையே இல்லாமல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக எழும் கேள்விகளுக்கு இன்று வரை தெளிவான பதில் இல்லை.
இவ்வழக்கில் சாட்சியத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட வீடியோ ஆதாரம் தெளிவில்லை என்று முடிவெடுத்த அப்போதய சட்ட அமைச்சர் ரகுபதி, யாருடைய அழுத்தத்தால் இந்த வழக்கின் விசாரணை நீர்த்துப்போக துணை போனார், காரணம் என்ன ?
யாரைக் காப்பாற்ற இந்த மௌனம்?
உங்கள் ஆட்சியில் ஏன் விசாரணை முடக்கப்பட்டது?
தொடர்பு இல்லை என்றால், வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டியதுதானே?
#வாயத்_தொறங்க_ஸ்டாலின்